அன்புறவுகள்... எல்லோர்க்கும்....
என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுக…
ஒரு
ரசிகை, மனைவியானார்!
சில
சம்பவங்கள், சிலர் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளை
ஏற்படுத்துவதுண்டு. இப்படித் தான், பாடகர்
ஜேசுதாஸ் வாழ்க்கையிலும், நடைபெற்றது. கறுத்த கை
என்ற மலையாள படத்தில், ஜேசுதாஸ் பாடிய, 'பஞ்சவர்ண
தத்தபோலெ கொஞ்சி வன்ன பெண்ணே...' (பஞ்சவர்ணக்
கிளி போல் கொஞ்சி வந்த பெண்ணே...) என்ற பாடல் பிரபலமானது.
இந்நிலையில், 1966ல் ஒரு நாள், திருவனந்தபுரத்தில், மேடையில் சினிமா பாடல்களை பாடிக் கொண்டு இருந்தார் ஜேசுதாஸ்.
மேடைக்கு முன் உட்கார்ந்திருந்த
பிரபா என்ற ரசிகைக்கு, 'பஞ்சவர்ணக்கிளி' பாடல் கேட்க ஆசை.
அதனால், தன் சகோதரரும், ஜேசுதாசின் நண்பருமான பேபியிடம், 'அந்த பாடலை பாடும்படி சொல்லுங்க...' என்றார். அவரோ தன்னிடமிருந்த ஐந்து
ரூபாயில், அந்தப் பாட்டின் ஆரம்ப
வரிகளை எழுதி, மேடைக்கு அனுப்பினார். அதை
கண்ட ஜேசுதாஸ், அந்த பாடலின் வரிகளை மாற்றி, 'அஞ்சு ரூபா நோட்டு கொண்டேன் நெஞ்சு
தகரணு பெண்ணே...' என்று பாடி, ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
'இந்த
சம்பவம் தான், எங்கள் திருமணத்துக்கு
காரணமாக அமைந்தது...' என்கிறார்
ரசிகையாக இருந்து, ஜேசுதாசின் மனைவியான பிரபா.
நன்றி சகோ— ஜோல்னாபையன்.
===============================
No comments:
Post a Comment