Followers

Sunday, February 23, 2020




அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.


(திரு ஏகம்பமாலை)


சாக்கடையில் பிறக்கின்ற புழுவும் கூட உண்டு, உறங்கி(?) இனப்பெருக்கம் செய்து பின் மடிகிறது. அதை விட எந்த வகையில் நம்முடைய இந்த பிறவி உயர்ந்ததாகிறது ?..............


..............................................
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய் தேவராய்ச்
சொல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.... (சி்வபுராணம்)


என்று மாணிக்க வாசகர் இறைவன் படைப்பின் தன்மை குறித்தும் மனிதனின் குறிக்கோள் குறித்தும் ஒருங்கே சொல்லிவிடுகிறார்.


சங்கரரைப் போல பிறவியிலேயே ஞானியாக இருக்க முடியாதுதான். அட ராமானுஜரைப் போலவோ, இராகவேந்திரரைப் போலவோ இல்லறத்தில் இருந்து பின் குரு சேவையால் உயர்ந்து வழிகாட்டிகளாக முடியாவிட்டாலும் பரவாயில்லை. நந்தனார் போலவோ ஆண்டாள் போலவோ பக்தி செய்ய இயலாவிட்டாலும் போகட்டும். வயதுக்கேற்ற முதிர்ச்சியே இல்லாமல் 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காத பிறவி' களைப்பற்றி என்ன சொல்வது ?


கழிந்துபோன இளமை, ஆனால் முடிவில்லாத புதுப் புது ஆசைகள். பிறப்பென்னும் பிணியை தொடர வைக்கும் சங்கிலி. நம்முடைய இந்த நிலை கண்டு பெரியவர்கள் வேறென்ன செய்ய முடியும் ? கபீர் போலவும் பட்டினத்தார் போலவும் ஒரு பாட்டை பாடி வைத்துவிட்டு போகத்தான் முடியும்.


அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே.
(திரு ஏகம்பமாலை)


==============================
அன்றே என்றன் ஆவியும்
உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னைஆட்
கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய்
நானோ இதற்கு நாயகமே
================================


நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை உனக்கே பரம் எனக்கு உள்ளதெல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் அழியாத குணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே


=======================================


=இக்கலியில் சொந்த சகோதரங்களுக்கிடையே எவ்வளவு வெறுப்புணர்வு, ஓரே குடும்பத்தினுள் ஒற்றுமையுடன் வாழமுடியவில்லையெனில் எவ்வாறு உலகத்தைத் திருத்துவது.


பல மேடைப்பேச்சாளர்கள் மேடையில் சகோதர சகோதரிகளே என உதட்டளவில் முழங்குகின்றனர்.
ஆனால் நடைமுறையில் எல்லா உயிரிலும் ஓரே பரமாத்மா தான் உறைந்துள்ளதை மறக்கின்றனர்.


ஒருவரும் ஒருவருக்கும் உங்கள் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென பயம் கொள்ள வேண்டாம்.


எல்லோரிலும் குடிகொண்ட இறையை உணரின் போதுமானதே
இறைவன் மகிழ்ந்து அருள் புரிவான்...அருளுகின்றார் அன்பு பகவான்......ஓம் ஸ்ரீ சாயி ராம்.........சுவாமி.


In public, many often address each other as brother and sister. What is the significance of such a practice? Bhagawan explains to us and encourages us to introspect.


In the present Age of Kali, there is so much hatred between brothers. When there is no unity within the family, is it possible to bring about unity amidst all persons in this world? In many platform speeches, people address each other as brothers and sisters. We must ask ourselves whether such words are coming from the depths of our hearts or whether we are simply reading them from a piece of paper. If you truly mean the words ‘brothers and sisters’ from the depths of your heart, you most definitely will win the grace of the Lord and good consequences will follow. Never worry or fear that you may have to distribute your ancestral property, or share wealth with those whom you address as brothers and sisters. It is necessary and sufficient if you realise and accept that one common Divine is present in every one of you and is the basis for brotherhood amongst all of humanity.


- Divine Discourse, Summer Showers in Brindavan 1974, Ch 13.


Baba


Love and service are powerful instruments to help transform you into God.


பாபா.
=============================


==========================
இணையங்களிலிருந்து........


================================
ஓம் சாய் நமோநமஹ
ஸ்ரீசாய் நமோநமஹ
ஜெய ஜெய சாய் நமோநமஹ
சத்குரு சாய் நமோநமஹ..........................
=================================
==================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...