Followers

Wednesday, February 12, 2020


"உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட
முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்.
(By experience their life becomes better, not bitter!)"


எல்லோர்க்கும் இனிய வணக்கம் சகோ தோழமை களே.........


பட்டதாரியான நான், என் வாழ்நாளில் இதுவரை நேர்மையான மனிதர் ஒருவரைக் கூட சந்திக்கவில்லை. அனைவருமே சந்தர்ப்பவாதிகள், சுயநல பேய்கள். உலகமே வெறுத்து விட்டது. எந்த மனிதரையும் பார்க்கவே பிடிக்கவில்லை, மனம் நொந்த நிலையில் இருக்கும் நான் ஆறுதல் அடைய என்ன வழி?........................


வி.பாண்டீஸ்வரி, அவினாசி: பள்ளியில் படிக்கும்போது இருந்த, 'சின்சியாரிட்டி' கல்லூரியில் படிக்கும் போது இருப்பதில்லையே... என் தோழிகள் பலருக்கும் இதே, 'பீலிங்' தான்...
அனுபவித்து உணர்ந்ததில்லை. இருப்பினும், ஊகத்தில் சொல்கிறேன்... பள்ளி ஆசிரியர்களிடம், கல்லூரி ஆசிரியர்களை விட கண்டிப்பு அதிகம். தவிர, பள்ளியில் படிக்கும் போது வயதும் குறைவாக இருப்பதால், பயம் இருக்கும். அத்துடன், ஒவ்வொரு கிளாசும் ஒரு ஆண்டு தானே... 'கோட்' அடித்தால், ஒரு ஆண்டு வீணாகி விடுமே என்ற அச்சம் இருக்கும். இதனால், 'சின்சியராக' படிப்பதாக நினைத்து, வெறுமனே உருப் போட்டு பரீட்சையில், 'வாமிட்' செய்வோம்.




ஆனால், கல்லூரியில் படிக்கும் போது வயது கூடி, உலகம் பெரிது என்பதை அனுபவத்தில் உணர முடிகிறது. ஒரு முறை படித்தாலே மனதில் இருத்திக் கொள்ளும் திறன் வந்து விடுகிறது. 'மக்' செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 'மக்கிங்' இல்லாததால் அல்லது மேற்கூறிய காரணங்களால், சின்சியாரிட்டி குறைந்தது போன்ற மாயத் தோற்றம் உங்களிடமும், உங்கள் தோழியர்களிடமும் ஏற்பட்டுள்ளது!


எம்.திவ்யா, கொளத்தூர்: பக்கத்து வீட்டு பெண்களுடன் எப்போதும் சினேகத்துடன் இருக்க சிறந்த வழி?
அவர்கள், அவ்வப்போது கேட்கும், ஓ.சி.,கள் அனைத்தையும் முகம் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். அவர்கள் வாங்கிய புதுச்சேலை, பிளவுஸ் ஆகியவற்றை நன்றாக இல்லாவிட்டாலும், 'ஆஹா... ஓஹோ...' என்று புகழ்வதுடன், 'உங்களால் தான் இவ்வளவு, 'சீப்'ஆக அடித்து பேசி வாங்க முடியும் என்று சொல்ல வேண்டும். இப்படி பல பல கயிறு திரிக்க வேண்டும். முடியுமா உங்களால்?


பி.எடிசன், சூலூர்: இளவயது பெண்கள், அவர்களது வயதை உடைய வாலிபர்களை விட்டு, நடுத்தர வயதினரை விரும்ப காரணம் என்ன?
பதினைந்து வயது பெண்ணுக்கு உள்ள அறிவு முதிர்ச்சி, 15 வயது பையனுக்கு இருப்பதில்லை. அது, அவனுக்கு, 18 - 20ல் தான் ஏற்படுகிறது. 15 வயது பெண், 15 வயது பையனை விடலையாகத்தான் நோக்குகிறாள்; அதுதான் உண்மையும் கூட! எனவே, புற அழகு, இளமையை விரும்பாத பெரும்பாலான பெண்கள், நடுத்தர வயதினரை விரும்புவது இயற்கை தானே!


எஸ்.செல்வரசி, குயவர்பாளையம்: காதலித்து, வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்ளலாமா?
காதலிக்கும் ஆசாமியின் மனநிலை, பணநிலையைப் பொறுத்து எடுக்கப்பட வேண்டிய முடிவு!


பொ.தாமரைச்செல்வி, மரக்காணம்: பட்டதாரியான நான், என் வாழ்நாளில் இதுவரை நேர்மையான மனிதர் ஒருவரைக் கூட சந்திக்கவில்லை. அனைவருமே சந்தர்ப்பவாதிகள், சுயநல பேய்கள். உலகமே வெறுத்து விட்டது. எந்த மனிதரையும் பார்க்கவே பிடிக்கவில்லை, மனம் நொந்த நிலையில் இருக்கும் நான் ஆறுதல் அடைய என்ன வழி?
உங்கள், 'ஏஜ் - குரூப்'பில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இதே புலம்பல் தான்! உங்களின் கருத்து ஒரு மாயத் தோற்றம்; வயதுகூடும் போது, திருமணம் முடிந்த பின், இந்த உலகம், இதில் வாழும் மக்கள் எவ்வளவு அன்பானவர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் பக்குவம் வந்து விடும். சுயபச்சாதாபம் கொள்வதை, இந்தப் பதிலை படித்த உடனே நிறுத்துங்கள்!
==========================
அன்பு நன்றி சகோ அந்துமணி................
==========================
வணக்கம் என் அன்புறவுகளே...........................


இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்
இழந்தது எவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயம் இழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்
வயதாக ஆக ஆக உடல் நலம் இழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும் தா என்றேன்.
அழகாகச் சிரித்தான் இறைவன்
கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய்"
"உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்"
"உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய்"
"நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்"
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறு தான்
இழந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்..


tq sri
அன்பு நன்றி சகோ...................
-------------------------------------------------------------------------------------
கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை!


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...


உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும்.
படியுங்கள்மீண்டும் மீண்டும் படியுங்கள்பல வரிகள் மிக மிக
ஆழமான பரந்த பொருளை கொண்டவை.


சுவாமி விவேகானந்தர் : "நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?"


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை."


சுவாமி விவேகானந்தர் :" நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும்
துன்பம் ஏன்?"


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "உரசாமல் வைரத்தை பட்டை தீட்ட
முடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல மாட்டார்கள்.
(By experience their life becomes better, not bitter!)"


சுவாமி விவேகானந்தர் : "அப்போது, சோதனைகள் நன்மைக்கு
என்று சொல்கிறீர்களா?"


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "ஆம். அனுபவத்தை விட பெரிய
ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையை
கொடுத்துவிட்டு பிறகு தான் பாடத்தை போதிக்கும்."


சுவாமி விவேகானந்தர் : "கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கித்
தவிப்பதால் நாங்கள் எங்கே போகிறோம் தெரியவில்லை"….


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "வெளியே பார்த்தால் எங்கே
போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும்.
கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான்
வழியை காட்ட முடியும். (Eyes provide sight. Heart provides the way.)"


சுவாமி விவேகானந்தர் : "சரியான பாதையில் போகும்போதும்
தோல்வி அடிக்கடி ஏற்படுகிறதே?"


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "செல்லும் பாதையில் வெற்றி என்பது
பிறரால் அளக்கப்படுவது. ஆனால் அதில் கிடைக்கும் திருப்தி என்பது உன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது."


சுவாமி விவேகானந்தர் : "கடினமான சூழ்நிலைகளில் எப்படி நீங்கள்
உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?"


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "எப்பொழுதும், இனி எப்படி போகப்
போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி
வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.
உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை
அல்ல".


சுவாமி விவேகானந்தர் : "இந்த மக்களை நினைத்து நீங்கள் வியக்கும் விஷயம் எது?"


இராமகிருஷ்ண பரமஹம்சர் : "துன்பப்படும்போது எனக்கு ஏன்?
என்னை மட்டும் ஏன்??” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது
அந்தக் கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான்
வியக்கிறேன்”.


சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை நான் அடைவது எப்படி?”


இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள்.
எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.


சுவாமி விவேகானந்தர் :கடைசியாக ஒரே ஒரு கேள்வி. சில
நேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன்
கேட்கவில்லையோ என்று தோன்றுகிறது.


இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள்
என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!)
அச்சத்தை விடு.நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்னை அல்ல.
எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால்
வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.


இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்


=====================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
===============================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...