Followers

Friday, February 28, 2020

Image may contain: plant, tree, grass, outdoor and nature

கணவன்மார்களே...
சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்த போது, தோழியிடம், அவள் கணவர், 'இந்த வாரம் வியாபாரத்துக்காக இந்த முகவரியில் உள்ள நண்பனிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கேன். தவிர, நம் கம்பெனித் தொழிலாளர்களோட, 'போனஸ்' பிரச்னையை சுமுகமா தீர்த்து வைச்சுருக்கேன்...' என்று, தன் பணப் போக்குவரத்து மற்றும் வியாபாரத்தில் ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

இல்லத்தரசியான என் தோழியை, ஏதேனும், புதிய தொழிலில் களம் இறக்கத் தான் இப்படியெல்லாம் விளக்குகிறாரோ என்ற எண்ணத்தில், அது குறித்து விசாரித்தேன்.

'
அதெல்லாம் ஒண்ணுமில்லங்க; நாம வாழுற இந்த இயந்திர வாழ்க்கையில, கணப்பொழுதில ஏதேதோ நடந்து முடிஞ்சுடுது. அதனால தான், வியாபாரம் மற்றும் பண விஷயங்கள நம் மனசுக்குள்ளே போட்டு மூடி வைச்சுக்காம, நம்மை சார்ந்தவங்ககிட்ட சொல்லி வெச்சுட்டா, நமக்கு எதாவது நேர்ந்தா அவங்க நிலை குலைஞ்சு போயிடாம தொழிலையும், குடும்பத்தையும் காப்பாத்த முடியும்...' என்றார்.

அவரின் இந்த வாழ்வியல் அணுகுமுறையை, மனதாரப் பாராட்டினேன்.
வாசகர்களே... தொழிலில் பணம் கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களை, உங்கள் வாழ்க்கை துணைவியிடமோ அல்லது டைரியில் எழுதியோ வைத்திடுங்கள். அப்போதுதான் நமக்கேதும் விபரீதம் நேர்ந்தாலும், நம்மை சார்ந்துள்ளவருக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும்.
பி.சுகுணாதேவி, திண்டுக்கல்.

மாமியார் - மருமகள்ன்னா இப்படித்தான் இருக்கணும்!
சில மாதங்களுக்கு முன், என் தோழியின் மகள் திருமணம் நடந்தது. அத்திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், சமீபத்தில், நண்பரின் மகளைப் பார்க்க, அவளது மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்புடன் வரவேற்ற அவ்வீட்டினர், மாலை நேரமானதால், டிபன் சாப்பிடுமாறு கூறினர். 'அம்மா... டிபன் நான் செய்யுறேன்...' என்றாள் நண்பரின் மகள்.
ஆனால், மாமியாரோ, 'நீ பேசிக்கிட்டு இரும்மா; நான், 10 நிமிஷத்துல தயார் செய்துடுறேன்...' என்றார். உடனே, 'ஆன்ட்டி... எங்க மாமியார் கைப்பக்குவமே தனிதான்; அந்த வாசனையே ஆளை தூக்கும்...' என்றார் மருமகள். மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்!

சிறிது நேரம் சென்றதும், மாமியார் ஓய்வாக வந்து அமர, நான் இருப்பதையும் பொருட்படுத்தாமல், வலி நீக்கும் தைலத்தை எடுத்து, மாமியாரின் கால் முட்டிகளில் பூசி, 'இன்னிக்கு உங்களுக்கு வேலை அதிகம்; கால் வலிக்குமே அம்மா...' என்று சொல்லி, கால்களை நீவி விட்டார் நண்பரின் மகள். இதைப்பார்த்த எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதைப்போலவே எல்லா மாமியாரும், மருமகளும் இருந்து விட்டால், சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை தானே!
வீ.மாலதிசேகர், கும்மிடிப்பூண்டி.
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! உரித்தாகுகபடித்ததில் பிடித்தவை..............................

=========================================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...