அன்புறவுகள்...
எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக

இந்தியாவின் நைட்டிங்கேல்......இந்திய சுதந்திர போராட்ட
வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
சரோஜி சட்டோபாத்யாயாவாக வங்கத்தில் பிறந்து தெலுங்கு மொழியை
தாய்மொழியாக கொண்ட டாக்டரை மணந்ததால் சரோஜினி நாயுடுவாக அறியப் பட்டவர். இவர் 1879ஆம் ஆண்டு
பிப்ரவரி 13ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று
அழைக்கப் பட்ட இவர் சுதந்திர போராட்ட வீராங்கனை மட்டுமல்ல ஒரு சிறந்த கவிஞரும்
ஆவார்.
அதோடு போராட்டக்களத்தில் இருந்த இந்திய தேசிய காங்கிரசின்
இரண்டாவது பெண் தலைவரும் இவரே. மேலும், சுதந்திர
இந்தியாவில் அமைந்த உத்தரபிரதேச மாநில முதல் பெண் ஆளுநராகவும் தடம் பதித்தவர்.
இத்த கைய அவரது பிறந்த நாளே இந்தியாவின் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இவரது தந்தை விஞ்ஞானியாகவும், தத்துவஞானியாகவும், கல்வியாளராகவும்
விளங்கிய அகோர்நாத் சடோபாத்யாயா. இவரது தாய் பரத சுந்தரி ஒரு பெண் கவிஞர். இவரது
தந்தை நிசாம் கல்லூரியின் நிறுவனர். சரோஜினி நாயுடு தனது 12ஆவது வயதில்
மெட்ரி குலேசன் தேர்வில் சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றார்.
அவர் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 1891 முதல் 1894 வரை அவர்
தன்னுடைய படிப்பில் சிறு இடைவெளி விட்டு, புத்தகங்களை
படிப்பதில் செலவிட்டார். 1895ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில், முதன் முதலாக
லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் படிப்பதற்காக
சென்றார். தாய் மொழி பெங்காலியுடன் உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீக
மொழிகளையும் கற்றுத்தேர்ந்தார்.
1905இல் வங்காளம்
பிரிக்கப்பட்டதை கண்டு கொதித்தெழுந்து முதன்முதலில் அரசியல் களத்தில் கால்
பதித்தார். இக்காலக்கட்டத்தில் கோகலே, ரவீந்திரநாத்
தாகூர், முகமதுஅலிஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராம சுவாமி, காந்தியார், நேரு ஆகியோரின்
நட்பை பெற்றார். தொடர்ந்து 1942 வெள்ளையனே
வெளியேறு உட்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.
இவரை காந்தியடிகள் செல்லமாக ஆங்கிலத்தில் மிக்கி மவுஸ்
என்று அழைத்தார். நாடு சுதந்திரம் பெற்றதும், அப்போதைய
அய்க்கிய மாகாண முதல் ஆளுநராக பொறுப்பேற்றார். ஆளுநராக
பொறுப்பில் இருந்த போதே 1949 மார்ச் 2இல் அவர்
மறைந்தார்.
No comments:
Post a Comment