Followers

Thursday, February 6, 2020



Abandon lust, wrath and avarice as they lead to self-destruction................

கட்டுக்கடங்கா காமம், கடுங்கோபம் குரோதம், பேராசை, இவைகள் யாவும் எம்மை எம் அழிவை நோக்கி இட்டுச் செல்லும்.
Listen to the stories of Sai Samarth which will bring you the highest purification.
''சாமா; - நான் ஒன்று சொல்லுகின்றேன், கேள். யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன் முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.-- என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.”
Make Me the sole object of your thoughts and actions and you will, no doubt, attain Parmartham.
உடல், பொருள், ஆவி,மனம்,வாக்கு,காயம் யாவும் என்னை நோக்கியே குவிக்கபட்டால் சந்தேகமே வேண்டாம்; பேரானந்தப் பெருவாழ்வு வாழ்ந்து மோட்ஸ வீடு பேறு பெறுவீர்கள்.
There exists in you a sense of being that is Myself.
எம் நாமத்தையும், உருவத்தையும் அகற்றிப் பார்த்தால் எம் உள் உறையும் ஆத்மா சற்குருவாகிய இறைவனே என்றறிக.
Be entirely prideless and egoless and your spiritual progress will be rapid.
ஸாயீயின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. 'அதுவே நான்ஃ என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாமல் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. எவர் ஓங்கார பிரம்மத்தை தியானம் செய்தவாறு இறைவனை நினைத்துக்கொண்டே தேகத்தை உதறுகிறாரோ, அவர் பிறவி எடுத்ததன் பயனை அடைகிறார். இவ்வுலகம் மாயையின் சந்தை. அசலும் போலியுமான பொருள்கள் அபாரம். போலியை அசல் என்று நம்பிப் பொருள்களை வாங்கும் மனிதர்களும் அநேகம்.
அசலையும் போலியையும் அடையாளம் கண்டுகொள்வதில், திறமைமிக்கவர்களும் தடுமாறுகின்றனர். ஆகவே, வஞ்சத்தின் லட்சணங்களைப் (அடையாளங்களைப்) புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கென்றே ஒரு நிபுணரைத் துணையாகக் கொள்ளவேண்டும். அவர் (ஸத் குரு), போலி எவ்வாறு அசல்போலத் தோற்றமளிக்கிறது என்பதை, பார்த்தவுடனே காட்டிக்கொடுப்பார். அஞ்ஞானம் இவ்வாறாக அழியும்.ஆகவே அகம்பாவம்,தற்பெருமையற்று வாழ்ந்தால் விரைவாக சற்குருவின் கிருபையால் ஆன்மீக ஞானம் கைகூடும்.
இக் காவியத்தைச் சிலர் தூஷணம் (நிந்தை) செய்யலாம். சிலர் இதை எனக்குப் பெருமை சேர்க்கும் பூஷணமாகக் (அணிகலனாகக்) கருதலாம். எது எப்படியிருப்பினும், இருசாராருமே என்னுடைய வந்தனத்திற்கு உரியவர்கள்; அவர்கள் அனைவரும் நாராயணரின் வடிவங்கள். —

================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...