நிர்மமோ நிரஹங்கார சம துக்க சுக: க்ஷமி
நீங்களும் நானும் விடைதெரியாத கேள்விகளும்!!!!
விடை தெரியாத ஆறு கேள்விகள் :?
1.எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென அகால மரணம் அடைவது ஏன் ?
2. யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாக காயப்படுத்தப்படுவது ஏன் ?
3. சுற்றமும் நட்பும் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?
4. இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?
5. எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?
6. அகம்பாவமும் ஆணவமும் அலட்சிய மனோபாவமும் கொண்ட சிலர் செலவந்தராக இருப்பது ஏன் ?
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே விடை நம் ப்ராரப்த கர்மா.
இது சாமானியர் அனைவருக்கும் பொருந்தும். விசேஷமாக சரணாகதி செய்து மோக்ஷத்தை எதிர்பார்த்திருக்கும் முமுக்ஷூவுக்கு இதன் மூலம் பகவான் நம் கர்மாவை கழித்துக் கொடுக்கிறார் என்று அர்த்தம்.
இன்னொரு பிறவி எடுத்து கழிக்க வேண்டியதை பகவான் பரம கருணையோடு இப்பிறவியிலேயே கழித்து விட்டு தன்னை வந்து அடையும் படி செய்கிறான்.
இதன் காரணமாக சரணாகதி பண்ணியவனின் துன்பங்கள் பல்மடங்கு பெருகியது போல் தோன்றலாம். ஆனால் அதுவும் பகவானின் பெருங் கருணையே. இது புரிந்த சரணாகதனுக்கு இந்த துன்பங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் பெற ஒரு விளையாட்டு வீரர் எத்தனை தியாகங்கள் செய்கிறார்?
ஒரு நாலு வருடம் தான் அதற்கு மதிப்பு. அதன் பிறகு உலகம் அவரை மறந்தே போகும். இந்த அல்ப விஷயத்துக்கே இந்தப் பாடுபட மனம் இசைகிறது என்றால் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெற ஏன் சிறு துன்பங்களை மனம் ஏற்றுக் கொள்ளக் கூடாது?
இந்த கண்ணோட்டத்தில் தான் கண்ணன் கீதையில் சுகத்தையும் துக்கத்தையும் சமமாக பாவிப்பாய் .........
மகிழ்வித்து மகிழுங்கள்
---------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
courtesy;வாத்தியார்ayya tq.
=============================================================
கீதையில் கண்ணன் யார் தனக்குப் பிடித்த பக்தன் என்று சொல்லிக் கொண்டு வரும்
போது சொல்லும் இந்த இரு சுலோகங்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. அடிக்கடி
பொருளுடன் எண்ணிக் கொள்ளும் சுலோகங்கள். இவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்று பல
நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். இன்று இதற்கு நேரம் வந்தது.
அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார சம துக்க சுக: க்ஷமி
சந்துஷ்ட சததம் யோகி யதாத்மா த்ருட நிச்சய:
மய்யர்ப்பித மனோ புத்திர் யோ மத் பக்த ச மே ப்ரிய:
அத்வேஷ்டா - (யாரிடமும்) வெறுப்பு (துவேஷம்) இல்லாமல்
சர்வ பூதானாம் - எல்லா உயிர்களிடமும்
மைத்ர: - நண்பனாகவும்
கருண ஏவ ச - கருணையுடனும்
நிர்மமோ - தன்னுடையது என்ற எண்ணம் இல்லாமலும்
நிரஹங்கார - தான் என்ற கருவம் இல்லாமலும்
சம துக்க சுக: - இன்ப துன்பங்களில் ஒரே மாதிரியாகவும்
க்ஷமி - பொறுமை கொண்டவனாகவும்
சந்துஷ்ட சததம் - எப்போதும் மகிழ்வுடனும்
யோகி - பிறர்க்குதவும் யோகத்தில் ஆழ்ந்தவனும்
யதாத்மா த்ருட நிச்சய: - மனத்தில் திட நம்பிக்கையுடனும்
மய்யர்ப்பித மனோ புத்திர் - என்னிடம் அர்ப்பணிக்கப்பட்ட மனமும் புத்தியும்
கொண்டு
யோ மத் பக்த - யார் எனக்கு பக்தனாக இருக்கிறார்களோ
ச மே ப்ரிய: - அவர்கள் எனக்குப் பிரியமானவர்கள்.
கண்ணன் இங்கே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறான் யார் தனக்குப் பக்தர்கள்; யார் தனக்குப் பிரியமானவர்கள் என்று. எல்லோருக்கும் இந்த சுலோகங்களில் செய்தி
இருக்கிறது. எனக்கான செய்தியை இந்த சுலோகங்கள் சொல்லும் போது மனத்தில் இருத்த
முயன்று கொண்டிருக்கிறேன்.
courtesy; குமரன் (Kumaran)
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
==================================
No comments:
Post a Comment