காரைநகர் (Karainagar)..........
========================================
காரைநகர் (Karainagar) இலங்கையின் வடக்கு
மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த
தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில்
இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும்.
இவ்வூரில்
அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும்
பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு
நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற
வற்றும் தன்மையுள்ள பரவைக்
கடலாலும் சூழப்பட்டுள்ளது.
பிரித்தானியரின் ஆட்சியில் 1869 அம் ஆண்டில் அப்போது அரசாங்க
அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து
காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத்
தொடர்பினை அடுத்து சேர்
பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர்
என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.
இங்கே
வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள்
உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது.
மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த
கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்
உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல்
தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா
கடற்கரை உள்ளது
கசூரினா கடற்கரை
இலங்கை
திரு நாட்டின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் எனும் இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் யாழ்
மாவட்டத்தில் காரைநகா் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காரைநகா் ஊரில்
அமைந்துள்ள அழகிய கடற்கரையே கசூரினா கடற்கரை ஆகும்.
தினமும்
வெளிறாட்டு உல்லாச பிரையாணிகளையும் தென்னிலங்கை மக்களையும் கவா்ந்து மக்கள்
வந்துபோகும் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் கசூரினா கடற்கரை பிரபலமானதற்கு
காரணங்கள் இங்கு அளவான அலையுடன் சரிவு குறைவான கடல் மண்ணும் அமைந்திருப்பதால்
கடலில் குளிப்பவா்களுக்கு இது இதமான அனுபவமாக அமைந்துள்ளது.
கடற்கரை
மணற்பரப்பில் அழகிய வடிவங்களில் சிப்பி, சங்கு, கடற்கல் போன்றவை கிடைக்கும்
என்பதால் இங்கு வரும் உல்லாச பிரையாணிகள் நினைவாக இவற்றை சேகரித்து செல்லுவா்.
2004 சுனாமியின் போது இந்த கடற்கரை பிரதேசம் முற்றாக நீரால்
நிரம்பியது என்றபோதும் யாருக்கும் சேதங்கள் இல்லை. அதே நாள் இந்த கடற்கரைக்கு மிக
அருகில் அமைந்துள்ள ஈழத்து சிதம்பரம் எனப்படும் காரைநகா் சிவன்கோவில் தோ்
திருவிழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றிருந்தனா்................
இந்த
கடற்கரைபில் நின்று பாா்க்கும் போது ஆங்கிலேயரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்
கடற்போக்குவரத்து அடையாளமாக கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் எனப்படும் வெளிச்ச வீடு
தென்படும்.
கசூரினா
என்பதற்கு சவுக்கு மரம் என்ற அா்த்தம் இருப்பதாகவும் சவுக்கு மரங்கள் நிறைந்து
காணப்படும் பகுதியாக இந்த கடற்கரை காணப்படுவதால் இந்த பெயா் ஏற்பட காரணமாக
இருந்தது எனவும் செவிவழி தகவல்கள் உண்டு.
யாழ்ப்பாண
மாவட்டத்தின் பிரதான சுற்றுலாதுறை வருவாய்க்கு கசூரினா கடற்கரை மிகமுக்கியமான
பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
========================================
ஈழத்துச் சிதம்பரம் என
சிறப்பிக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் அல்லது சுந்தரேசுவரர் கோயில் அல்லது காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10 மைல் தொலைவில்
உள்ள காரைநகரிலே திண்ணபுரம்
பிரிவிலே அமைந்துள்ளது. சிதம்பரத்திலே நடைபெறுவது
போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் இந்த திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.
வரலாறு...................
இது 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது. ஈழத்துச்
சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சுந்தரேசுவரர்
என்றும் அம்பிகைக்குச் சௌந்தராம்பிகை என்றும் பேர். இக்கோயில் தொடக்கத்தில் ஆண்டி
கேணி ஐயனார் கோயில் என்றே அழைக்கப்பட்டது[1]. ஐயனார் கோயிலை
அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோயிலை
அமைப்பதிலும் முன்னின்றவர்.
கோயில் அமைப்பு..............
இங்குள்ள ஐயனார்
பூரணை, புட்கலை சூழ அமர்ந்துள்ளார். சிவனுக்கு அளிக்கப்படும்
முக்கியத்துவம் ஐயனாருக்கும் அளிக்கப்படுகின்றது. சிவனுக்குக் கோபுரம், சித்திரத்தேர் உள்ளது போல ஐயனாருக்கும் தனியே கோபுரம், சித்திரத்தேர் உள்ளன. கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திக்குப்
பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர்,
சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர்.
சிறப்பு உற்சவங்கள்................
இத்திருக்கோயிலில்
நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது திருவெம்பாவை உற்சவமாகும்.
நடராஜர் இரதாரோகணமும் ஆர்த்திராபிஷேகமும் குறிப்பிடத்தக்கவை. அபிஷேகத்தன்று
மாலையில் திருவூடல் நடைபெறும். பங்குனி
உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத்
தினங்களும் ஆடிப்பூரத்தில் நிறைவடையும் படி
அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன. தைப்பூசம், மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத்
தீபம் என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.
ஈழத்துச் சிதம்பரம் மீதான பிரபந்தங்கள்................
·
ஆண்டி கேணி ஐயனார் புராணம்
·
திண்ணபுர வந்தாதி - காரைநகர் மு. கார்த்திகேய ஐயர்
பாடியது
·
சுந்தரேசர் திருப்பதிகமும் திருவூஞ்சலும் - காரைநகர்
த. நாகமுத்துப்புலவர் பாடியது
·
திண்ணபுர வெண்பா - காரைநகர் ச. பஞ்சாட்சரக்குருக்கள்
பாடியது.
சிறப்புகள்...................
கொழும்புத்துறை சிவயோக சுவாமிகள் இத்தலைத்தை
வழிபட்டுள்ளார். அவர் இக்கோயிலைச் சுட்டிக் காட்டி இவ்வாலயம் சிறப்பான ஆலயம், இதனைக் கூத்துக் கொட்டகை ஆக்கி விடாதீர்கள் என ஆணையிட்டார்[1].
காரைநகர் மண்
செய்த தவப் பயன்! இலங்கைத் திருநாட்டின் கலங்கரை விளக்கு!
அமரர் கலாநிதி
சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் (1916.09.22-2015.04.25)
உத்தரகோசமங்கை
என்னும் திருத் தலத்திலிருந்து காரைநகர் வியாவில் ஐயனார் கோயிலிற்கு இறைபணி
யாற்றவென 1518இல் குளக்கோட்டு மன்னனால் வரவழைக்கப்பட்ட சிவத்திரு
மங்களேஸ்வரக் குருக்கள் பரம்பரை வழிவந்த கலாநிதி சிவத்திரு க.
வைத்தீசுவரக்குருக்கள் சைவத்துக்கும் தமிழுக் கும் சமூகத்திற்கும் ஆற்றிய அரும்பணி
தமிழ் கூறும் நல்லுலகால் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும்.
கலாநிதி க.
வைத்தீசுவரக் குருக்கள் தேவார திருவாசகங்களில் கொண்டிருந்த உயரிய மதிப்பு
பெருவியப்பைத் தருகிறது. தேவார திருவாசகங் களை அவர் வேதங்களாகவே போற்றினார். அவர்
தம் இளமைக் காலத்திலே அவருடன் நட்புப் பூண்டவர்கள் பெரும் பேறுற்றவர்களே யாவர்.
ஐயாவினது 99 ஆவது வயதிலே
இயலாத போதும் நீங்கள் எவராவது அவரிடம் சென்று தமிழ் சமயம் பண்பாடு அல்லது வாழ்க்கை
நெறியுடன் தொடர்புடைய சந்தேகம் கேட்டால் பதில் தருவார். இல்லையேல் தன்னிடம் இருந்த
பேரகராதியை அல்லது ஒரு நூலை எடுத்து வந்து காண்பித்து சந்தேகத்தைத் தெளிவுப் படுத்துவார்.
அனைவருடனும்
தாயிற் சிறந்த தயவான அன்போடும் மிகுந்த மரியாதையோடும் உரையாடுவார். படிக்க என்ன
வேண்டும் என்று கேட்பார். வீட்டு வாயில் வரை வந்து வழியனுப்பும் பெருந்தகை.
அவரிடம் நூல்களைப் பெற்றுப் பயனடைந்தோர் பன்னூறு பேர். பல ஆய்வு மாணவர்களுக்கு
வழிகாட்டிய நடமாடிய கலைக் களஞ்சியம்.
தென்கோவை
கந்தையாப்பிள்ளையிடமும் வித்துவசிரோமணி கணேசையாவிடமும் இலக்கணம் பயின்றவர்
வித்தகம் கந்தையா
பிள்ளையவர்களது உண்மை முத்தி நிலையை சைவசித்தாந்தத்தின்பால் ஈடுபாடுள்ளோருக்கு
அறிமுகப்படுத்துவார். பல்லோரும் காணப்பரவெளியில் தேகம் ஒளியாக மறைதலே உண்மை
முத்திநிலை என்ற கந்தையா பிள்ளையவர்களது சித்தாந்தக் கருத்தோடு பெரிதும்
உடன்பாடுள்ளவர்.
மலத்தன்னையுடைய
உடல் அழுக்குகள் நீங்கி அமலத்தன்மை பெற்று பரவெளியிலே சோதியாக மறைதலே உண்மை
முத்தி. இதனையே சீவகசிந்தாமணியும் வலியுறுத்துகிறது என்பார்.
சுத்தமாம்
சோதிநாளில் சுந்தரர் கயிலை சேர்ந்ததைக் கூறி சமய குரவர்கள் பட்டினத்தார்
முத்துத்தாண்டவர் தியாகராஜ சுவாமிகள் முதலானோர் பரவெளியில் சோதியாக மறைந்ததையும்
நினைவு படுத்துவார்.
ஈழத்திலே இருந்து
ஒரு அறிஞர் கையெழுத் துப் பிரதியாக வித்தகத்தை தமிழ்நாட்டுக்கு அனுப்பி
புதுச்சேரியிலே அச்சிட்டு யாழ்ப்பாணத் திற்கு கொணர்ந்திருக்கிறார். அவர்தான்
வித்தகம் கந்தையா பிள்ளை. கலாநிதி வைத்தீசுவரக் குருக்கள் கந்தையாபிள்ளைக்கு
கையெழுத்துப் படியாக வித்தகத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார்.
வேல்ஸ் இளவரசன்
ஐந்தாவது ஜோர்ஜ் மன்னர் முடிசூட்டியதை முன்னிட்டு தென் கோவை கந்தையா பிள்ளையவர்கள்
பாடிய ஜோர்ஜ் மன்னர் இயன்மொழி வாழ்த்தை கலைமகள் பதிப்பாகப் பதிப்பித்து
வெளியிட்டவர் கலாநிதி வைத்தீசுவரக் குருக்கள் ஆவர். 1957இல் ஸ்ரீலங்கா
இதழிலும் ஜோர்ஜ் மன்னர் இயன் மொழி வாழ்த்து வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
ரா. சு.
நல்லபெருமாள் எழுதிய பிரும்ம இரகசியம் ஐயாவுக்குப் பிடித்தமான நூல்களில் ஒன்று.
மெத்தத் திறமான புத்தகம் என்பார். இதை ஐயாவிடம் பெற்றுப் படித்து பயனடைந்தவர்கள்
அநேகர். இதை ஐயா தொலைத்து விட்டார். அண்மையில் ஓர் அன்பர் மூலம் புதியதொரு நூலை
வாங்கி படிக்கத் தந்தார். கேள்வி பதில் வடிவில் அமைந்த இந்நூல் நசிகேதனுக்கும்
சித்தாந்திகளுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வடிவில் அமைந்துள்ளது. நசிகேதன்
புத்தரை சந்திக்கிறார் மகாவீரரை சந்திக்கிறார். இவ்வாறு சந்தித்த பலருடைய பதிலும்
திருப்தி தரவில்லை.
இறுதியில்
நசிகேதன் உமாபதி சிவத்தைச் சந்திக்கிறார். உமாபதிசிவம் அளித்த பதிலாலே நசிகேதன்
திருப்தியடைகிறார். ஒரு தகவல் ரா.சு. நல்லபெருமான் எழுதிய கல்லுக்குள் ஈரம்’ நாவல் ஒரு
வரலாற்று நாயகனின் மனதையும் ஈர்த்து வழிகாட்டியிருந்தது.
கலாநிதி
வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் தான் படித்து இன்புற்ற புத்தங்களை தன்னைநாடி வரும்
அன்பர்களுக்கும் அறிமுகப்படுத்தும் சான்றோன். இவ்வாறு அனேகர் படித்துப் பயன்பெற்ற
புத்தகம் சிந்திப்போம்.
ஐயா அவர்கள் ‘அசோகன்’ என்ற பெயரில்
தினகரன் பத்திரிகையில் அரசியற் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இன்று உள்ள தமிழ்
அரசியற் கட்சிகளை யெல்லாம் கலைத்து விட்டு புதிய கட்சி தொடங்க வேண்டும் என்பார்.
கட்சிசாரத ஒருவர் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் ஒரு பொதுவான கொள்கை
அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் கூறு வார். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா
அதற்குப் பொருத்தமானவர் என்பதும் ஐயாவின் கணிப்பு.
ஐயா அவர்கள்
பாடிய நாவலர் இன்றிருந்தால் என்னும் விருத்தம் க. வைத்தீசுவரன் என்ற பெயரில்
ஈழகேசரியில் பிரசுரமாகியிருந்தது.
நூல்களை
பத்திரிகைகளை அவர் பேணிய விதம் பெரும் பண்பாட்டை எமக்குச் சொல்கிறது.
புத்தகத்தையோ
பத்திரிகைகளையோ நிலத் தில் வைக்க மாட்டார். பழைய பத்திரிகையைக் கூட எரிக்க விட
மாட்டார். நிலத்திலே புதைக்க அனுமதிப்பார். குப்பையிலே கூட ஒரு காகி தத்தை எரிக்க
விட மாட்டார். நிலத்திலே ஒரு பத்திரிகையைக் கண்டால் தொட்டு வணங்குவார். அப்பளம்
சுற்றி வரும் தாளில் உள்ள பிள்ளையார் படத்தைக் கவனமாக எடுத்து வைப்பார்.
புதுவருடம்
பிறந்தது என்றால் நல்ல நேரம் வரும் வரை பிள்ளைகளைப் பத்திரிகை கூட படிக்க
விடமாட்டார். 30 வருடங்களுக்கு முன்னல் அவ்வாறே நவராத்திரி விஜயதசமி
நாள்களில் ஈழத்துச் சிதம்பரத்திலே ஊர்ப் பிள்ளைகள் எல்லோரும் காலைப் பூசை முடித்து
புத்தகம் படித்த பின்னர் தான் பள்ளிக் கூடம் செல்ல ஐயா ஒழுங்குகள் மேற்கொண்டதை
அவர்தம் பிள்ளைகள் இன்றும் நினைவுகூர்வர்.
ஐயா சேகரித்த
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடப்பெயர்வாலும் இயற்கை மற்றும் செயற்கை
அனர்த்தங்களாலும் அழிந்து போயின. வியாவில் ஐயனார் தேவஸ்¡தான அறங்காவலர்
மகாராணி சோமசேகரம் பராமரிப்பின்றி இருந்த ஐயாவின் அரிய நூற்றுக்கணக்கான நூல்களைப்
பொறுப் போற்று குருக்கள் ஐயாவின் தந்தையார் பெயரில் அமைக்கப்பட்ட கணபதீஸ்வரக்
குருக்கள் நூலகத்தில் நல்ல முறையில் பேணிவருகின்றார்.
கலாநிதி
வைத்தீசுவரக்குருக்கள் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பணியை ஆயிரம் தலையுடைய
ஆதிசேடனாலும் கூறிவிடமுடியாது என்பார் சபாரத்தினம் ஆசிரியர் அவர்கள். அவரது
பதிப்பு முயற்சிகள் பலவற்றுக்குத் தனித்தனி கலாநிதிப் பட்டம் கொடுக்கத் தகும்
என்பார் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள்.
பா. துவாரகன்...-
====================================
மேற்கோள்கள்...........
1.
↑ இங்கு மேலே தாவவும்:1.0 1.1 புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம், வீரகேசரி, சூன் 4, 2011
2. கட்டற்ற
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
===========================================
தமிழர்
வரலாற்றுத் தொடக்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் தீவுகளில் ஒன்றான
காரைநகரில் இருந்துதான் இந்த கந்தப்பு நடராஜா ஐயாவின் குரல் ஒலிக்கிறது. வளமும்
செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது.................
வாழும் முதுசொம்!
கைவிடப்படும்
நிலையிலுள்ள காரைநகரில்…
JERA
வளமும்
செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல
நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும்
இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும்
மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில்
படித்திருப்போம்.
“இந்தா இந்த
வெண்கல குத்துவிளக்கு 3 சதத்துக்கு (00.03)வாங்கினது. இதை வாங்கும்போது எனக்கு 12 வயசு. அப்பதான் யப்பான் ஆர்மிக்காரர்
காங்கேசன்துறைக்கு குண்டுபோட்டவங்கள்.” என்ற கூறும் கந்தப்பு நடராஜ ஐயா 85 வயதைக் கடந்த வாழும் முதுசொம்.
இலங்கையின் வட
பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தை சூழ காணப்படும் தீவுக்கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான்
வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார் பேராசிரியர்.பொ.ரகுபதி.
அவரின் தொல்லியல் ஆய்வு நூலான நுயசடல ளுநவவடநஅநவெ ழக துயககயெ என்பதில் இந்த விடயம்
ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருப்பதைக் காணலம்.
தமிழர்
வரலாற்றுத் தொடக்கத்தில் இவ்வளவு முக்கியத்துவம் பெறும் தீவுகளில் ஒன்றான
காரைநகரில் இருந்துதான் இந்த கந்தப்பு நடராஜா ஐயாவின் குரல் ஒலிக்கிறது. வளமும்
செழிப்பும் கொண்டு வாழ்ந்த இந்த ஊர், இப்பொழுது தமிழர்களால் கைவிடப்படும் நிலையில் உள்ளது. போர் மக்களை மட்டுமல்ல
நிலத்தையும் தின்று தீர்த்துள்ளது. கைவிடப்பட்ட நிலங்களும் அங்கொன்றும்
இங்கொன்றுமாக பாழடைத வீடுகளே எஞ்சியுள்ளன. அங்கு எச்சசொச்சமாகத் தங்கியிருக்கும்
மக்கள் குடிநீருக்காகவே பெரும் போராட்டம் நடத்துவதை அண்மைய செய்திகளில்
படித்திருப்போம். இவ்வளவு சிரமம் மிகுந்த சூழலுக்குள்ளும் தன் ஊர், வரலாறு, அவற்றை ஆவணப்படுத்தி அடுத்த சந்ததிக்கும்
எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் என்ற பேரார்வத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும்
மனிதர்தான் இந்த கந்தப்பு நடராஜா.
கந்தப்பு நடராஜா.
1930 ஆம் ஆண்டு, காரைநகர், களபூமி பொன்னாவெளி கிராமத்தில்
பிறந்திருக்கிறார். சுந்தரமூர்த்தி பாடசாலை, காரைநகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில்
கல்வியைக் கற்ற இவர், சுவாமி
விபுலானந்த அடிகளாரின் விருப்புக்குரிய மாணவனாகவும் இருந்திருக்கிறார். தற்போது
தமிழர்களின் பழம்பெரும் பொருட்கள் சேகரிப்பாளராக மாறியுள்ளார்.
“எனக்கு இந்த
விசயங்களில் முதல் ஒன்றும் தெரியாது. சண்டையள் ஓய்ஞ்ச பிறகு தெற்கு பக்கமிருந்து
வாற யாவாரியளுக்கு எங்கட வீட்டுப் பழைய சாமானுகள நிறைய வித்திருக்கிறன். பிறகு ஏன்
இவங்கள் இதுகள வாங்குறாங்கள் என்று யோசிச்சன். அப்பிடி காரணத்த தேடிக்கொண்டு
போகேக்கத்தான் எங்கட அன்றாட பாவனைப் பொருட்களின்ர முக்கியத்துவமும், தனித்துவமும் விளங்கினது. அதுக்குப் பிறகு
என்னதான் கஸ்ரம் வந்தாலும் ஒரு பொருளையும் விற்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்தன்.
எங்கட தோட்டந்துரவு, வயல் எண்டு
கிடந்த பழைய சாமானுகள் எல்லாத்தையும் பாதுகாக்க தொடங்கினன்.
என்ன செய்ய….!
இந்த அறிவு எனக்கு வயசான
பிறகு தான் வந்தது. இந்தப் பொருட்கள என்னால பராமரிக்கிற அளவுக்கு வலு இல்ல. ஆனா
இதையாவது என்னோடயே பத்திரப்படுத்தி வச்சிருக்கிறனே என்ற பெருமை இருக்கு..” எனத் தொடர்ந்தவரின் வார்த்தைகளில் வயதின்
இயலாமையும், அதையும் தாண்டி
இயலுமையை வரவழைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்ற துடிப்பும் தெரிந்தது.
அப்படியே தன் ஒரு
அறைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பழைய பொருட்களை காட்டுவதற்கு நுழைந்தார்….ஐயா.
அது ஒரு
ஆவணக்காப்பகத்தின் பிரதான இயல்புகளைக் கொண்டிருக்கவில்லைத்தான். சிலந்திகளின்
வசிப்பிடமாகியிருந்த அந்த அறையில் வெண்கலப் பொருட்களிள். ஆன்றாடம் பாவனையில்
இருந்து இன்று காணாமல் போயிருக்கும் பாத்திரங்கள், பூசைப்பொருட்கள் என அறை நிறைந்திருந்தது.
ஒவ்வொன்றையும் அவர் தன் கையால் எடுத்து எங்களுக்கு காட்டும்போது கூடவே அந்தப்
பொருளோடு தொடர்புட்ட நினைவின் வரலாற்றையும் பேசிக்கொண்டார்
ஆதில் பேசப்பட்ட
ஒன்றுதான் 3சதத்திற்கு
வாங்கிய வெண்கல குத்துவிளக்கு.
“இங்க இந்த
காரைநகர் துறைமுகம் அந்த நேரம் மிக பிரபலமாக இருந்தது. அதனால இதால தான்
யாழ்ப்பாணத்துக்கு எல்லா சாமானுகளும் போகும். அப்பிடித்தான் இந்தப் பொருட்களும்
அந்த நேரம் குறைஞ்ச விலைக்கு வாங்கினது. இது மட்டுமில்ல, தட்டுமுட்டு சாமானுகள், துணிமணிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலயிருந்து கொண்டு வந்த வடக்கன்
மாடுகள் எல்லாமே இந்தத் துறைமுகத்துக்குள்ளால தான் வரும். வடக்கன் மாடுகள் நல்லா
வேலை செய்யும். காரைநகர் முழுவதுமே அப்ப ரெண்டு போக ( நெல் விதைப்பு பருவ
காலங்கள்) விதைப்பு செய்வினம். மரக்கறி செய்வினம். இப்ப இதை சொன்னால் நம்புவியளே.
காரைநகர் விவசாயத்தில சிறந்திருந்த காலம் அது. இப்ப குடிக்கிறதுக்குகூட தண்ணியில்ல…“
என ஆதங்கப்படும் நடராஜா
ஐயாவின் பேச்சில் வரலாறு கலந்திருக்கிறது.
ஐயாவின் வீட்டில்
இருக்கும் பொருட்கள் அத்தனையும் நூறாண்டுகள் கடந்தவை. கிடைத்தற்கரிய நூல்கள் பலவற்றையும்
வைத்திருக்கிறார். குறிப்பாக யாழ்ப்பாணத்தின் சுதேசிய மருத்துவக் குறிப்புக்கள்
அடங்கிய நூல்களும் உள்ளன.
பாவனைப்
பொருட்கள் தொடக்கம் வீட்டின் சுவர் கதவுகள், யன்னல்கள் என அனைத்திலும் யாழ்ப்பாணத்துக்கே
உரித்தான கட்டடவியலின் பண்பாட்டுக்கூறுகள் நிறைந்திருக்கின்றன. வீடமைப்பில்
யாழ்ப்பாண குறிப்பாக தீவக சூழலுக்கு எல்லாவிதத்திலும் பொருந்திவரும் நுட்பம்
இயல்பாகவே கையாளப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் நடராசா ஐயாவின் வீட்டை
வடிவமைத்தவர் கட்டிடவியலாளரோ, இயந்திரவியலாளரோ
அல்ல. நடராசா ஐயாவின் தந்தையார் கந்தப்புவும் அவர்தம் நண்பர்களும் தான். அவர்கள்
மரபார்ந்த விவசாயிகள்.
தமிழர்களின்
பண்பாட்டுக் கூடமாக இருந்திருக்கும் அந்த வீடு இப்போது மிச்சம் பிடித்து
வைத்திருப்பவற்றை பார்த்து நிமிர்கையில், “எப்பிடி இருக்கு“ என்ற கேள்வியை
கேட்கிறார்.
பெரும்
பிரமிப்பைத்தவிர நம் வாய்பேசவில்லை.
போர்
சப்பித்துப்பிய கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனாலும் இவர் இரண்டாம் போர் பற்றிய
நினைவுகளையும் மறக்கவில்லை.
“ ரெண்டாம் உலகப்
போர் காலத்தில காப்பிலிகள் வரத் தொடங்கினதிலயிருக்கு மக்கள் இங்கையிருந்து
இடம்பெயரத் தொடங்கினவை. அந்த நேரம் எனக்கு தெரிய 40 ஆயிரம் பேர் அளவில் இங்க இருந்திருப்பினம்.
அப்ப அப்பிடி இடம்பெயர்ந்த ஆக்கள் பதுளை, பண்டாரவளை, கொழும்பு என்று
குடியேறிச்சினம். இப்ப நடந்த போரால இலங்கையிலேயே இருக்கமுடியாம வெளிநாடுகளுக்கல்லே
போயிற்றினம். அவே எல்லாம் எப்ப திரும்பிவாறது? இந்த நிலம் இப்பிடியே பாழடைஞ்சு போகபோகுது..”
என்ற கவலை கொள்ளும்
நடராஜா எந்ப்போருக்கும் இடத்தவி;டடு அசையாம
இருக்கிறார்.
“இறுதிப்போர்
நடக்கேக்க இங்க இருந்து நான் போகேல்ல. நடக்கிறது நடக்கட்டும் என்று இருந்திட்டன்.
என்னோட சேர்த்து 900 பேர் இங்க
தங்கினவ. பிறகு இங்க வீட்டு திறப்புகள கதவிலயே விட்டிற்று வெளிய போங்கோ, குறிப்பிட்ட ஒரு கட்சிக்காரரின்ர பெயரைச்சொல்லி
நாங்க நிர்வாகத்த நடத்த அவர்களிடம் குடுக்கப்போறம் என்று கட்டளை வந்தது. நாங்களும்
நம்பி வெளியேறினம். 3, 4 நாள் கழிச்சி
போய் வந்து பார்த்தால் வீடுகளில இருந்த பெறுமதியான கனக்க சாமானுகள் களவு
போயிருந்தது.” என்ற
இறுதிப்போரில் மிஞச்சியிருந்ததையும் களவுகொடுத்த நிலைகளை விளக்கினார்.
இப்ப மிஞ்சி
இருந்த சனம் ஊரைவிட்;டு
வெளியேறினதுக்கு தண்ணீரும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது என பலரும் கருத்துத்
தெரிவித்தனர்.
“அப்பெல்லாம்
கிணறுகளில துலா போட்டு இறச்சி விவசாயம் செய்தம். குடிக்கவும், விவசாயத்துக்கும் அளவா தண்ணீர பாவிச்சம். நல்ல
தண்ணீர் அப்பிடியே இருந்தது. ஆனால், என்றைக்கு எங்கட விவசாயிகள் பம்ப் போட்டு நிலக்கீழ் தண்ணீர இறைக்க
தொடங்கிச்சினமோ அண்டையில இருந்து கடல் தண்ணீர் நல்ல தண்ணீரோட கலக்க தொடங்கீற்றுது.
இப்ப தண்ணீருக்காக போராடவேண்டியிருக்கு. மழை பெய்தால் மட்டும்தான் விவசாயம்….ம் எண்ட நிலமைதான்.” நீண்ட பெருமூச்சோடு தன் உரையாடலை
முடித்துக்கொண்டார் கந்தப்பு நடராஜா. ஆனால் இந்த வரலாறு பதியப்படாமலே
அழிந்துபோகிறது.
ஜெரா
சுயாதீன
ஊடகவியலாளர்,
யாழ்ப்பாணம்
-------------------------------------------------------------------------------------
courtesy https://thecatamaran.org/ta/?p=7397
tq ayya.
=======================================================
காரைநகரில், கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள இராசாந்தோட்டத்தில் யாழ்ப்பாண
அரசர்களுக்குச் சொந்தமான இருப்பிடமொன்று இருந்திருக்கிறது. இதற்கும்,
முன்னர் குறிப்பிடப்பட்ட வேரப்பிட்டிக்கும் இடையில்,
வியாவில் என்ற இடத்தில், ஐயனார்
கோயிலொன்று யாழ்ப்பாணத்து அரசர் ஒருவரால் போர்த்துக்கேயர் இறுதியாக
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாகக் கட்டப்பட்டது. இக்கோயில்,
போர்த்துக்கேர் காலத்தில் இடிக்கப்படாவிட்டாலும் ஒல்லாந்தர்
காலத்தில் இடிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டது. இவை,
காரைநகர் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகள் அறியத்தரும்
செய்திகள். (கணபதீஸ்வரக் குருக்கள் நினைவுமலர்:1967)
காரைநகர்ச்
சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகளில் இருந்து...
வியாவில்
ஐயனார் கோவில் கும்பாபிஷேகஞ் செய்த தினம் கலியப்தம் நாலாயிரத்து ஏழு நூற்று மூன்று,
சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தைஞ் நூற்றுப் பதினெட்டு,
பிரபாவாதி வருஷம் முப்பத்தைந்தாவது பிலவ வருடம் வைகாசி மாசம் 25ந் திகதி
நடைபெற்றது........ (மங்களேஸ்வரக் குருக்கள்)
நானுமெனது
தமையனாரும் கோயிற் ப+சை செய்து வரும் காலத்தில் தமிழ் இராச்சியம் போய்விட்டது.
முத்துமாணிக்கம் செட்டியாரும் இறந்துவிட்டார். போர்த்துக்கீசர் என்னும் பறங்கியர்
கிறிஸ்து வருஷம் 1618 ம் ஆண்டு காலயுத்தி வருஷம் ஊர்காவற்றுறைக்கு
வந்தார்கள். அநேக வைசசமயக் கோயில்களை இடித்துப் போராட்டார்கள். இங்கேயுள்ள ஐயனார்
கோயிலை இடிக்க வந்து கோபுரவாசலிற் கதவைத் திறக்கப்போனார்கள். அவர்களின்
வாயிலிருந்து இரத்தம் புறப்பட்டு இறந்துவிட்டார்கள் அந்தப் பயணத்தினால் மறுபடி கோயிலை
இடிக்க வரவில்லை....
(---சூரியநாராயணக்
குருக்கள்)
------ பின்னர்
போர்த்துக்கீசராச்சியம் போய் ஒல்லாந்தராச்சியம், வந்தது.
அவர்கள் கிறிஸ்து வருஷம் 1858 ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம்
ஊர்காவற்றுறையைப் பிடித்தனர். ஊர்காவற்றுறை பிடிபட்ட ஒரு மாசத்திற்குள் அநேக
சைவசமயக் கோயில்களையும் இடித்துவிட்டு இந்த ஐயனார் கோவிலை யும் இடிக்க வந்தபோது
நாலுபேர் கண் தெரியாதவர் களாயும், இரண்டு பேர்
நடக்கமாட்டாதவர்களாயும் போனார்கள். இது நடந்து கொஞ்சக்காலத்தின் பின் எங்களைப்
ப+சை செய்யாது தடுத்தனர். அவர்கள் போனபிற்பாடு விக்கிரகங்கள் எல்லாவற்றையும் நில
அறையில் வைத்து இரகசியமாய்ப் ப+சை செய்து வரும்போது ஒரு நாள் வந்து கோவிலையும்
இடித்து கடலுக்குள்ளே ஓர் கோட்டையையும் கட்டினார்கள்.. (கனகசபாபதிக் குருக்கள்)
(ஆன்ம தர்சநம்,
கணபதீசுவரக்குருக்கள் நினைவு மலர் 1967)
வரிசையாக
ஆட்களை நிறுத்தி, கற்களைக் கைமாற்றித் தூக்கிச் சென்று,
கடற்கோட்டையைப் ப+தத்தம்பி முதலியார் ஒல்லாந்தருக்காகக் கட்டிக்
கொடுத்தார் என்பதும் அந்தச் செல்வாக்கால் வந்த பொறாமை அவரது வாழ்வுக்கு உலை வைத்த
காரணங்களுள் ஒன்றென்பதும் நாட்டார் இலக்கியத்தில் இடம்பெற்ற விடயங்கள்.
அழிபாடுகளில்
இருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் கடற்கோட்டையைக் கட்டப் பயன்பட்டிருக்கலாம் என்பதை,
கோட்டைக்குள் காணப்படும் வேலைப் பாடமைந்த சில கற்களை வைத்து
ஊகிக்கலாம். இவற்றுள் இரு கற்களில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியப்பட்டுள்ளன.
ஒன்று மாத்திரமே படிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் பெரும்பாகம் சாந்தினால்
மூடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்கப்படவில்லை. படிக்கப்பட்ட கல்வெட்டு முதலாம்
இராஜேந்திரசோழன் காலத்தது. இலங்கையை வெற்றி கொண்ட சோழத் தளபதியின் பெயரை
அறியத்தருகின்றது.
நன்றி: எரிமலை, ஜனவரி
2006
மூலம்: எரிமலை
பிரசுரித்த நாள்: Aug 10, 2006 2:12:54 GMT
பிரசுரித்த நாள்: Aug 10, 2006 2:12:54 GMT
courtesyhttp://www.tamilcanadian.com/article/tamil/33
tq ayya.
======================================================
அம்மையார் அவதரித்து 91 ஆண்டுகள் நிறைவு
சிவத் தமிழ்ச் செல்வி அம்மையாரின் 91 வது பிறந்த நாள் இன்றாகும்.
அதனை முன்னிட்டு அறக்கொடை விழா நடைபெறுகின்றது. அம்மையாரவர்கள் தமக்கென வாழாதவர்.
இதேபோன்றவர்தான் காரைநகர் தந்த வைத்தீஸ்வரக் குருக்கள் ஐயா.
சிவத்தமிழ் செல்வி அம்மா
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலை இந்திய ஆதீனங்களுக்கு இணையாக
பெருந்தேவஸ்தானமாக மாற்றியவர்.
குருக்கள் ஐயா… இவர் பல ஆயிரக்
கணக்கானவர்களை சான்றோர்களாக்கிய அறிவுக்கடல். இவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாாணப்
பல்கலைக்கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்து தனக்கு பெருமை சேர்த்தது.
சிவத்தமிழ் செல்வி அம்மையார் தாம்
எழுதிய அறிவொளி காட்டிய சான்றோர் வரிசையில் என்ற நூலில் குருக்கள் ஐயா பற்றி ஒரு
அத்தியாயத்தில் மிகவும் விரிவான கட்டுரை எழுதியுள்ளார். இங்கு குருக்கள் ஐயாவின்
அருமை பெருமைகளை எல்லாம் அக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
நாவலர் என்றால் நாவலர் பெருமானையும்
பண்டிதமணி என்றால் பண்டிதமணி சி. கணபதிப்பி்ள்ளையும் குறிப்பிடுவது போல சிவத்தமிழ்
செல்வி என்றால் பண்டிதை தங்கம்மா அப்பாக்குடியையே குறிப்பிடுகின்றது.
இதனை குருக்கள் ஐயா பண்டிதை
அம்மையாருக்கு ‘சிவத்தமிழ்
செல்வி’ பட்டம்
வழங்கிய வரலாறு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“காரைநகர் மணிவாசகர்
சபையினர் நடத்திவருகின்ற மணிவாசகர் விழாவிலே 1957 ஆம் ஆண்டு தொடக்கம்
தொடர்ந்து ஆண்டு தோறும் சொற்பொழிவு நிகழ்த்திவரும் பாக்கியம் செல்வி தங்கம்மா
அப்பாக்குட்டி அவர்களுக்கே கிடைத்துள்ளது.
===============================
பிரதிபலன் கருதாது சேவையாற்றி வரும்
பெரியாரைப் பாராட்டுவது அத்தியாவசியமானதும் சேவையாற்ற வேண்டுமென்ற எண்ணம்
மக்களிடம் உண்டாவதற்குத் தூண்டு கோலாக அமையக்கூடியது. மாதலின் பண்டிதை
அவர்களுக்குப் பாராட்டு விழா எடுத்து அன்னாருக்குப் பட்டமளிக்க வேண்டுமென்று
சபையினர் தீர்மானித்தனர்.
காரைநகர் மக்களும் அவரைக் கௌரவிக்க
வேண்டுமென்று சபையினரை வற்புறுத்தி வந்தனர். எனவே 1970 ஆம் ஆண்டு சபையினர்
ஒன்றுகூடி பண்டிதை அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்துவதென்றும்
பட்டமளிப்பதென்றும் ஏகமனதாக முடிவு செய்து அளிக்கப்பட வேண்டிய பட்டத்தின் பெயரைப்
பற்றி ஆலோசித்தனர்.
பல பெயர்கள் கூறப்பட்டன. ஆனால்
எதுவும் சபையினரின் ஏகமனதான சம்மதத்தைப் பெறவில்லை. ஆகவே அவர்கள் பட்டத்தின்
பெயரைத் தீர்மானிக்கும் பாரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்னர். நான் பல முறை
சிந்தித்தேன். அறிஞர்கள் பலருடனும் ஆலோசித்தேன். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
மாதங்கள் நான்கு சென்றுவிட்டன. சபையினர் என்னை நெருக்கிக் கொண்டே இருந்தனர். யான்
எனது இயலாமையை அவர்களுக்குத் தெரிவித்த பின்னர் ஒதுங்கி விட்டேன்.
நான் ஒவ்வொரு நாளும் ஈழத்துச்
சிதம்பரத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த பின்னர் ஆலயத்தில் சில நிமிடங்கள்
இருப்பது வழக்கம். இவ்விதமாக இருக்கு:ம்போது ஒருநாள் பண்டிதை தங்கம்மா
அப்பாக்குடடி அவர்களுக்கு வழங்க வேணடிய பட்டம் தொடர்பாக இறைவனை வேண்டி நின்றேன்.
அப்பொழுது என் மனதில் ‘சிவத்தமிழ்ச்
செல்வி” என்ற
பெயர் தோன்றியது.
எனக்கு உண்டான ஆனந்தத்துக்கு அளவே
இல்லை. பிறவிக் குருடன் கண் பெற்ற நிலையினை அடைந்தேன். பின்னர் சபையினரிடம் சென்று
விடயத்தைத் தெரிவித்தேன். அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து பண்டிகை அவர்களுக்கு
ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானத்தில் 19.08.1970 அன்று பாராட்டு விழாவை
மிகச் சிறப்பாக நடத்தி “சிவத்தமிழ்ச்
செல்வி” என்ற
பட்டத்தையும் வழங்கினர்.
ஆயினும் ஆழமாகச் சிந்திக்கும் போது
சபையினர் வாயிலாக இறைவனே இப்பட்டத்தை வழங்கினான் என்பது நன்கு புலப்படும்.
இதனாலேதான் பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு உள்ள துர்க்காதுரந்தரி, செஞ்சொற்செம்மணி, சித்தாந்த ஞானாகரம், சைவதர்சினி, திருவாசக் கொண்டல், முதலான மற்றைய பட்டங்களைவிட
சிவத்தமிழ்ச் செல்வி என்னும் இப்பட்டம் முன்னணியில் திகழ்கிறது. இப்பட்டத்தை
உடையோர் இலங்கையிலோ தமிழகத்திலோ வேறு எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த சிவஸ்ரீ க.
வைத்தீஸ்வரக் குருக்கள் ஐயா அவர்களின் புதையலை அண்மையில் சிவத்தமிழ்ச் செல்வி
அம்மையார் பற்றிய தேடலில் கண்ணுற்றேன். இதனை யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
என்னும் நோக்கமாகக் கருதுகின்றேன். தேடிக் காண முடியாத சிவத்தமிழ்ச் செல்வி
அம்மையாரை யாம் காண முடியாத நிலையில் இருக்கும் போது குருக்கள் ஐயா தந்த புதையலை
அம்மையாரின் 91 வது பிறந்த நாளில் சிந்திப்போமாக.
==========================================================
courtesy ETR.NEWS tq ayya.
==========================================================
Karainagar (Tamil: காரை நகர்) (pronounced Kaarai-Nagar) is located
20 km from Jaffna, Sri Lanka, on the Karaitivu (Island).
In Tamil, means a
place with abundant Kaarai trees.
Karainagar island is about 10-square-mile (26 km2) area
and the registered voters 20,000 voted in 1977 national election. The current
population stands at 11,000. 30% of this land is used for paddy cultivation.
Karainagar,
Karainagar is an island which is located 15km from Jaffna, Sri Lanka. It is
surrounded by Indian Ocean and Jaffna Lagoon.
The area of Karainagar is approximately 22Sq Km with 10Km from North to South
and 2.2Km from East to West.
History
According to oral history the name Karainagar was a
derivative from Karai chedigal (plants) found there or because Karainagarans
are descendents of settlers from Karaikkudi. Kaarai is also the name of a kind
of fish. It is only a conjecture to associate the place name with migrations
from places of similar names on the opposite coast of Tamil Nadu, such as
Kaaraikkudi or Kaaraikkaal. All these names might have originated independently
from the natural vegetation. The validity of these propositions has so far not
been tested.
Kaarai chedigal can still be found widely in the island
along hedges and in thickets. Elders in the island still remember the
ritualistic significance of the shrub. Twigs of Kaarai leaves are presented to
the Brahmin priest who officiates ancestral rites during anniversaries. Kaarai,
Musuddai (Iponoea candicans) and Pira’ndai (Vivitis quardrangularia) are part
of the offerings on those occasions.
Elders in Kaarainakar also remember making Champal from the
leaves (a side dish made by grinding the leaves along with scraped coconut,
onions and chillies).
There is also an early Buddhist site, known today as
Vearap-piddi (the stupa mound), on the western side of the island. The Kings of
Jaffna maintained an establishment in this island, near the harbour, which is
called Raasaavin Thoaddam.
The Dutch renamed the island as New Amsterdam during their
rule. They also built a small fort called Hammanhiel, off the Southwest corner
of the island to guard the sea routes. The continuity of the strategic
recognition can be seen in the location of the northern headquarters of the Sri
Lanka Navy at this island.
Administrative
Karainagar is part of
Jaffna district of Northern Province and elevated as an Assistant Government
Agent (AGA) division from 07th April 2003.
It is divided into nine Grama Niladari (GN) divisions. AGA’s office is
situated near Valanthalai junction.
Karainagar is belonging to Voddukoddai electorate in Jaffna
electoral district.
Karainagar Local governance body known as Pradeshiya Sabha,
which establish from 2005. The Pradeshiya Sabha consists of five members who
are elected by the people of Karainagar.
Population
Population of
Karainagar is variously estimated at about 4,000 in 1900, 16,000 in 1950,
45,000 in 1990 and 9,000 in 2007.
According AGA’s office recent statistics there are 10,564
people residing in karainagar. Population is staidly growing since 2009. Many
Karainagarans are now living outside since 1990.
Poonalai Causeway
A 4 km long causeway linking the island to the mainland was
built during the period when Sir W Twynham was the Government Agent of Jaffna
(1867 – 1884). An engraved stone plaque in the Sayambu Hall (founder of
Karainagar Hindu College) gives the date of the bridge as 1869. The causeway
ended the geographic isolation of Karainagar. Sir P Ramanathan after a visit to
the island in 1922 had Karaitivu officially renamed Karainagar on 12.09.1922.
The network of roads linking the settlements within Karainagar was built after
that.
Vernon bund was purpose built to preserve the rain water
instead of allowing it to run to the sea and that reduce the scarcity of water
in the surrounding area.
Climate
Climate of Karainagar
is fall into low country dry zone of Sri Lanka. Temperature is ranging from 230
to 300c. Rainfall is received between October to January. Rainfall is the main
source to obtain water. Water received during rainy season is percolated into
the soil and stored as underground water, which is used for agriculture and
other purposes during dry seasons. To obtain drinking water is very much
difficult. Water is cultivated from wells and ponds ( Kulam). Currently there
are number of water bowsers distribute drinking water fetched from Chunnakam.
Economy
Agriculture and
fisheries are the major sources of the income in the area. Approxomately
500Hec. Area was used for paddy cultivation in 2008.
Karainagar were once flourishing due to maritime trade,
declined during late 1990’s and 2000.
Many Karainagarans
are involved in business through out Sri Lanka and are many living in
oversea. There is a well known phrases describing Karainagarans “Kaakam pa’rakkaatha idamillai; Kaaraitheevan
poakaatha oorillai”(There is no place on earth where the crow and the
Kaaraitheevu islander cannot be seen).
Place of Interest
Casuarina Beach: Casuarina beach is considered as the best
beach in the Jaffna peninsula. The beach
is pretty different to a normal Sri Lanka beach In stead of coconut trees there
casurina tree are growing along the beach.The colour of the sand is also a bit
different and it was very soft making it a pleasant experience. The greatest
thing about the casurina beach is the ability to walk towards the sea for
miles. The shallowness of the beach combined with no waves makes it an ideal
bathing place and it is also place of relax.
Temples: Temples are dotted in the Karainagar landscape and
temple going was the main leisure activity for the people. There are 43 temples
in Karainagar most dating back to the 19th century or earlier. The more popular
deities were Pillaiyar, Murugan, Amman and Vairavar. The famous temple is Sivan
temples known as Eelaththu Chidambaram.
Important Contact
Details in Karainagar ...
go to;----- http://www.karainagar.org/karainagar/
============================================
மூலப்பதிவாளர்களுக்கு
என்றும் அன்பும் நன்றியும்.
இன்பமே சூழ்க எல்லோரும்
வாழ்க.
============================================
No comments:
Post a Comment