சப்த தீவுகள்.............
================
யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01
இலங்கை தீவு இந்து
சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படுகின்றது .இந்த சிறு தீவு நாடு இன்று
உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது .இந்த முத்தான இலங்கை தீவு
எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து
நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கபடவில்லை
.ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது
என்ற கருத்தையும் ,கடல்
அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால்
முன்வைக்கபடுகின்றது .நானும் கடல் அழிவால் இலங்கை தனி தீவாக பிரிந்தது என்ற
கருத்தை ஏற்றுகொள்ளும் அதே வேளை அது எப்பொழுது நடந்து இருக்கலாம் என்ற ஒரு ஆதார
சிறு குறிப்பை உங்கள் முன் வைத்து இந்த கட்டுரையை தொடர்கின்றேன்.
1898 இல் அத்திலாந்து சமுத்திரம் என்ற ஆய்வு நூல் எழுதிய மேலைத்தேச
ஆய்வாளர் பெர்டினண்ட் கித்டேல் குறிப்பிட்டுள்ள கருத்தின் படி 11481 ஆண்டுகளுக்கு முன்னம்
மிகப்பெரிய கடல் அழிவு வந்தது அந்த கடல் அழிவின் பின்னரே பல நாடுகள் புதிதாக
உருவாகியது என்று அவர் கருத்தொன்றை முன்வைத்து சென்று இருக்கின்றார்.இதே கருத்தை
பேரறிஞர் எலியட் என்பவரும் lost lemuria (லொஸ்ட் லெமுரியா) என்ற நூலில்
மேற்கோள் காட்டி இருக்கின்றார்.எனவே இரண்டும் சமகாலத்தில் ஏற்பட்ட ஒரே மிக பெரும்
கடல் அழிவாக இருக்கலாம்.
அத்திலாந்து சமுத்திரம்
எழுதியவரின் கருத்தின் படி எனது கணிப்பு இன்றைக்கு/2013/ ,,,11596 வருடங்களுக்கு முன்னம் அந்த
கடல் அழிவு வந்ததாயின் அதுவே இன்றைக்கு சர்சைக்கு உரிய விடயமாக இருக்கும்
முற்காலத்தில் இருந்ததாக பல ஆய்வாளர்கள் உறுதிபடுத்தும் இரு பெரும் கண்டங்களான
அத்லாந்திக் மற்றும் குமரிகண்ட கடல் அழிவாக கருத இடமுண்டு.இந்த கடல் அழிவில் இந்த
கண்டங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்கி போக உலகில் பல புதிய சிறிய நாடுகள்
தோன்றியதாக கூறப்படுகின்றது.அவ்வாறே இலங்கையும் இந்தியாவும் குமரி கண்டத்தில்
இருந்து தனியாக பிரிந்தது என்று கருதலாம் .அதாவது கி மு 9583 இல் இலங்கையும் இந்தியாவும்
குமரி கண்ட பகுதிகளின் அழிவின் பின்னர் பிரிந்தது என்று ஒரு கருத்தை
முன்வைக்கலாம்.
================
யாழ் தீவுகள் உருவான
வரலாறு – பகுதி 02
யாழ் தீவுகள் 7 என்றும் அவற்றை சப்த தீவுகள்(சப்த என்றால் 7) என சிறப்பு பெயர் கொடுத்தும் எம் முன்னோர்கள் சிலரும்
தற்கால எழுத்தாளர் சிலரும் பல கருத்துக்களை எழுதிவைத்து இருக்கின்றார்கள்
.சிலவேளைகளில் முற்காலத்தில் 7 ஆக இருந்து பின்னர் பிரிந்தும்
இருக்கலாம் .ஏழாக இருந்த பொழுது எழுதிய குறிப்பை வைத்து இன்றும் ஏழு என்று
எழுதிக்கொண்டு இருப்பதை பார்த்து அதில் பிழை இருந்தாலும் அப்படியே எழுத வேண்டும்
என்ற விதி இல்லை. அவ்வாறான தேவையும் நாளைய சமுதாயத்துக்கு இல்லை. நிரூபிக்க தகுந்த
சான்று என்னிடம் இருக்கும் பட்சத்தில் நான் அதை மறுத்தும் எனது கருத்தை வைக்க
பின்னிற்பதில்லை.
நாளைய சமுதாயம் சிவமேனகையும்
இவ்வாறான குறிப்பை ஆதரித்தே தனது கருத்தை எழுதி இருக்கின்றார் என்ற பழி சொல்லை
நான் கேட்கவும் விரும்பவில்லை. அதனால் யாழ் தீவுகள் ஏழு இல்லை இப்பொழுது மொத்தம் 9 தீவுகள் என்பதை குறிப்பிடுவதோடு அவற்றிலும் 5 தீவுகள் தான் இன்று தீவுக்கான முழுமையான வரைவிலக்கணத்தை
கொண்டு இருக்கிறது என்பதையும் குறிப்பிடுகின்றேன்.ஏனைய நான்கு தீவுகளும் இன்றைய
நிலையில் ஏதோ ஒரு வகையில் தரையால் இணைக்கப்பட்டு உள்ளது. நான்கு பக்கமும் கடலால்
சூழப்பட்டு உள்ளது என்ற தீவுக்கு உரிய முழுமையான அர்த்தத்தில் இருந்து விலகியே
இருக்கிறது.
அந்தவகையில் முதலில் சப்த தீவுகள் என்று அழைக்கப்படும் தீவுகளாக வேலணைத்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடும்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைதீவு(காரைநகர்) இவற்றோடு ஏனையதீவுகளாக மண்டைதீவு, கச்சைதீவு இவற்றில் மண்டைதீவும், வேலணைத்தீவும், காரைதீவும், புங்குடுதீவும் தரைவழி பாதையால் ஏதோ ஒருவழியில் யாழ்பாணத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏனைய 5 தீவுகளும் இன்னும் நான்குபக்கமும் கடலால் சூழப்பட்டு எந்தவொரு தரை வழி பாதைகளாலும் இணைக்கப்படாத நிலையில் இருக்கிறது.
அடுத்து சப்த தீவுகள் எவை
என்பதிலும் பல இடங்களில் தெளிவில்லாத கருத்துகள் இருக்கிறது ,மண்டைதீவு சப்த தீவுகளுக்குள் அடங்கின்றதா .காரை நகர் ஒரு
தீவா? காவலூர் என்று அழைக்கப்படும்
ஊர்க்காவர்துறை ஒரு தனித்தீவா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கிறது .ஒல்லாந்தர்
பிற்காலத்தில் பெயரிட்ட 7 தீவுகளாக நெடும்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, புங்குடுதீவு, காரைதீவு, வேலணைத்தீவு என்பவை இருக்கிறது
.இதில் வேலணை தீவுக்குள் ஒரு கிராமமாக காவலூர் வருகின்றது இந்த காவலூர் தான்
பிற்காலத்தில் ஈழத்து பூர்வீக துறைமுகம் (நயினாதீவு) சம்பு கோவளம் அழிவுக்குள்ளான
பின்னர் இந்த காவலூரில் துறைமுகம் ஒன்று பாவனைக்கு வந்தது அந்த வேளையில் காவலூர்
என்று அழைக்கப்பட்ட இந்த இடம் ஊர்காவற்துறை என்று பெயர் மாற்றம் பெற்றது .
ஆனாலும் இது வேலணைதீவில்
அடங்கும் 10 கிராமங்களில் ஒரு கிராமம்
ஆகும். அடுத்து மண்டைதீவு இது ஒரு தனிதீவாகவே அடையாளம் காட்டப்பட்டுள்ளது .இதை 8 தீவாக பின்னர் ஏற்றுகொள்ளபட்டு இருக்கிறது. அதனால் இது அந்த
சப்த தீவுகள் என்ற 7 தீவுக்குள் அடக்கம் இல்லை.
பின்னர் 1974 இல் இலங்கைக்கு இந்தியாவால்
இலங்கையின் சொத்து என்று வழங்கப்பட்ட கச்சை தீவும் சேர்த்து ஈழத்தின் யாழ் தீவுகள்
9 ஆகும்.
காரைநகர் தீவா நகரா என்ற பலரது
கேள்விக்கு விடையாக பின்வரும் கருத்தை முன் வைக்கின்றேன் ,தீவுகள் யாழில் இருந்து பிரிந்த பொழுது பிரிந்து காரை
தீவும் உருவானது. பிரித்தானியர் ஆட்சிகாலத்தில்1869 ம் ஆண்டு அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக்
கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து
காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இந்த இணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன்
இராமநாதனின் பரிந்துரைப்பின்படி காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றி அழைக்க தொடங்கினர்.
=========================================
யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03
காவலூர் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும்
வேலணைத்தீவின் ஒரு அதி முக்கியம் வாய்ந்த கிராமம் ஆகும். வேலணை தீவின் ஏனைய கிராம
மக்களை அன்னிய படை எடுப்புக்களில் இருந்து காக்கும் காவல் கிராமமாக இந்த கிராமம்
முதன்மையில் இருந்ததால் காவலூர் என்று அழைக்கப்பட்டது.
கடல்கோளின் போது யாழில் இருந்து தீவுகள் பிரிந்த வேளையில்
சம்பு நகரில் இருந்த துறைமுகம் பேரழிவை சந்தித்த பின்னர் காவலூர் துறைமுகமானது.
அதற்கு பின் இந்த கிராமத்தை ஊர்காவல்துறை என்ற பெயர் மாற்றி கொண்டு அழைக்க
தொடங்கினார்கள்.
மகாவம்சத்தில் வழமை போல் எம் வரலாற்றை கீழ்மைபடுத்த
பன்றிகள் ஏற்றிய துறைமுகம் என்று வர்ணித்து ஊறா தோட்ட என்றும் குறிப்பிடபட்டு
உள்ளதும் இங்கு குறிப்பிடதக்கது. போர்த்துகேய மொழியில் கெயிஸ் என்றால் துறை முகம்
என்று அர்த்தம். இதை வைத்து போர்த்துகேயரால் அவர்கள் ஆண்ட காலத்தில் இந்த இடம்
துறைமுகம் சார்ந்த பகுதியாய் இருந்ததால் கெயிஸ் என்று அழைக்கப்பட்டு இருக்கலாம்.
பின்வந்த ஆங்கிலேயர் அதில் தங்கள் உச்சரிப்பை புகுத்தி பின்னர் கயிற்ஸ் என்று
அழைக்க தொடங்கி இருக்கலாம். நாம் தான் ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்பதால் நாமும்
நாகரீகமாக இந்த இடத்தை இன்று கயிற்ஸ் என்று அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவுடனும் ஏனைய தெற்காசிய நாடுகளுடனும் சில அரபு
நாடுகளுடனும் கடல்வழி வர்த்தக தொடர்புகளை கொண்டு இருந்த ஈழ மக்கள் இந்த
துறைமுகத்தில் இருந்து, ஆரம்பத்தில் யானைகளை ஏற்றுமதி செய்தும், குதிரைகள், மாடுகள், ஆடுகள், கால்நடைகளை
மாற்றீடாக இறக்குமதி செய்ததாகவும் குறிப்புக்கள் உள்ளது. ஈழத்தை கைபற்றி, எம்மை ஆண்ட
அன்னியர்களான போர்துகேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர், ஈழத்தில்
சூறையாடிய பொருட்களை இந்த துறைமுகம் ஊடாக தங்கள் நாடுகளுக்கு நாடு கடத்தியதாகவும்
குறிப்புக்கள் உள்ளது.
அன்னிய ஆட்சியாளர்கள் தங்களுக்கான உணவுபொருட்களை தங்கள்
ஏனைய காலணி நாடுகளில் இருந்தும் தங்கள் நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யவும்
இந்த துறைமுகத்தை பயன்படுத்தினார்கள். அவ்வாறே பர்மா தற்போதைய மியான்மார் இல்
இருந்து முதல் முதலில் ஆங்கிலேயர் அரிசியை இறக்குமதி செய்ய இந்த துறைமுகத்தை
பயன்படுத்தியதாக குறிப்புக்களில் கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் பட்டுகோட்டை
செட்டிமார் தங்கள் வியாபாரத்துக்கு இந்த துறைமுகத்தை பெருதும் பயன்படுத்தினர்.
========================================
யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 04
பருத்தியடைப்பு......
பருத்தியடைப்பு என்று இன்று அழைக்கப்படும் இந்த பிரதேசம்
வேலணை தீவின் ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த பிரதேசம் ஒரு காலத்தில் தேவன்கணை
என்று அழைக்கப்பட்டு இருக்கலாம். இதன் அயல்கிராமங்கள், வீரநாராயணன்
படைத்தளபதிகளான நாராயணன் வேலன், சரவணன் ஆகியோரின் தானை நின்ற இடம் என்று
கூறப்பட்டு படைத்தளபதிகளின் பெயரை முதன்மையாக கொண்டு, நாரந்தனை, வேலணை, சரவணை என
அழைக்கபடுவதால் இங்கும் தேவன் எனும் தளபதியின் படை நின்று இருக்கலாம் அதனால் இந்த
இடமும் தேவன் கணை என்று அழைக்கபட்டு இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அதற்கு ஒரு
ஆதாரமாக இன்று உள்ள தேவன் கணை பிள்ளையார் கோவிலை கூறலாம் .
பருத்தியடைப்பு என்ற பெயர் போர்த்துகேயர்காலதுக்கு பின்னர்
வந்ததாகவே கருதப்படுகின்றது. இந்த பெயர் எவ்வாறு வந்தது என்பதை பற்றி
பார்ப்போமானால், போர்த்துகேயர் தெற்காசிய
நாடுகளை ஆக்கிரமித்த பொழுது பருத்தி ஒரு முக்கிய பணப்பயிர் என்ற உண்மையை
உணர்ந்தார்கள். அனேகமாக தமது ஐரோப்பிய நாடுகளில் செம்மறி ஆட்டு கம்பளி உடைகளை
பயன்படுத்திய அவர்கள் பருத்தி மூலம் செய்யப்படும் ஆடைகளின் முக்கியத்துவத்தை
உணர்ந்தார்கள். அதனால் தாம் ஆக்கிரமித்த பகுதிகளில் நெசவு தொழில்சாலைகளை அமைத்து
பருத்தி செடியை பயிருட்டு அந்த பணபயிர் மூலம் பெரும் செல்வம் ஈட்ட
முயற்சித்தார்கள்.
அந்த வகையில் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் ஊர்காவற்துறையில்
ஒரு நெசவு தொழில்சாலையை அமைத்து பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள். அந்த நெசவு
நிலையத் தேவைக்கான பருத்தி பஞ்சு மூலம் பெறப்பட்ட நூலினை பெற்றுகொள்வதற்காக தங்கள்
காலனித்துவ நாடுகளில் இருந்து பரித்தி செடியை கொண்டு வந்து காவலூருக்கு அண்மையில்
இருந்த இந்த கிராமத்தில் பயிரிட்டார்கள்.
அந்த காலத்தில் வேலணை தீவின் சகல கிராம மக்களும் கால் நடை
வளர்ப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாய் இருந்ததால் பருத்தி செடியை கால் நடைகள்
தாக்கி உணவாக உண்டு சேதம் விளைவிக்கும் என்பதால் இந்த பெரும் பிரதேச பகுதியை வேலி
அடைத்து பாதுகாத்து பருத்தி பயிர் இட்டதால் இந்த இடம் பிற்காலத்தில்
பரித்தியடைப்பு என்று பெயர்பெற்றது. இங்கு பருத்தியை பயிரிட்டு அதன் பஞ்சில்
இருந்து நூலினை தயாரித்து, பல்வேறு வகையான ஆடைகளை இங்குள்ள தொழிலாளர்களின் உழைப்பினை
சுரண்டி தயாரித்து தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரும் செல்வம்
ஈட்டினார்கள். அத்துடன் ஆழ்கடல் மீன்பிடிக்கான வலைகளையும் வடிவமைத்து கடல்
வளங்களையும் சுரண்டி செல்வம் ஈட்டி தங்கள் நாடுகளுக்கு அனுப்பினார்கள்.
====================================================
courtesy https://www.velanai.com/
tq Sir.
================================================
சப்த தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான
விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்த தீவுகள்
உட்பட்ட யாழ் மாவட்டத்திலுள்ள பிற தீவுகள்
சப்த தீவுகள் என்பது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின்
தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும்
சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு
இப்பெயர் வழங்கிவருகின்றது. அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
2. புங்குடுதீவு
4. காரைநகர்
5. நெடுந்தீவு
6. அனலைதீவு
7. எழுவைதீவு
யாழ் தீவுகள்
இவற்றுள்
லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச்
சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய
நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு
யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப்
போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. இவை தவிர யாழ் குடாநாட்டை அண்டியுள்ள
சில மனிதர் வாழாத தீவுகளும், கச்சதீவும் இதற்குள் அடங்குவதில்லை.
முன்னர்
ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.[1] அவ்வாறு பிரிந்த தீவுகளாக மண்டைதீவு உட்பட, 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு
ஒப்பந்தப்படி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு வரை சிறிய தீவுகள் யாழ்
தீபகற்பத்தில் அமைந்துள்ளன. ஆகவே ஏழு தீவுகள் என்ற பெயரில் கருத்தியல் சிக்கலை
உருவாக்குகின்றன.[2] யாழ் குடாவில் காணப்படும் பிற
தீவுகள் பின்வருமாறு:[3]
·
சிறு தீவு
====================================
சப்த தீவுகள்
நெடுந்தீவு
இலங்கையின் வட
மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு
தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
லைடன் தீவு
(வேலணைத்தீவு)
புங்குடுதீவு
நயினாதீவு
நெடுந்தீவு
அனலைதீவு
எழுவைதீவு
ஊர்காவல் துறை
இவற்றுள் லைடன்
தீவு புங்குடுதீவு காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக்
குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு நெடுந்தீவு
நயினாதீவு அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப்
போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு.
பொருளடக்கம்:
1. தீவுகளின் பெயர்
விபரங்கள்
2. வரலாறு
3. சமூகம்
4. பொருளாதாரம்
5. அரசியல்
6. புலம்பெயர்ந்தோர்
ஊர் ஒன்றியங்கள்
7. எதிர் காலம்
8. துணை நூல்கள்
9. வெளி இணைப்புகள்
1. தீவுகளின் பெயர்
விபரங்கள்
சப்த தீவுகள்
கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின்
முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம்
பின்வருமாறு:
பெயர்
ஆங்கிலத்தில் ஒல்லாந்தர் பெயர் கந்தபுராண பெயர்
வேலணைத்தீவு Velanaitivu
Leiden (லைடன்) சூசை
புங்குடுதீவு Punkudutivu
Middleburgh கிரவுஞ்சம்
நயினாதீவு Nainativu
Harlem சம்பு
காரைநகர் Karaitivu
Amsterdam சாகம்
நெடுந்தீவு Neduntheevu
Delft (டெல்ப்ற்) புட்கரம்
அனலைதீவு Analaitivu
Rotterdam கோமேதகம்
எழுவைதீவு Eluvaitivu
Ilha Deserta இலவு
2. வரலாறு
தீவுகளில்
மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை
ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை
வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில்
படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும்
ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும் தீவு
மக்களின் உணவு மொழி போன்ற சில அம்சங்கள்கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.
போர்த்துகேயர் (1505
- 1658), ஒல்லாந்தர் (1656
- 1796) ஆகியோரின் காலனித்துவ
ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை
தழுவினார்கள்.
3. சமூகம்
யாழ் சமூகத்தை
ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்"
என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர் வயல்களிலிலும் மேற் சாதி வீடுகளிலும் கூலி
வேலைக்குநிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும் சம ஆசனம் சம போசனம்
மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு
பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக
இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம் பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும்
வலுவற்று இருக்கின்றது.
யாழ் சமூகத்துடன்
ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி
தீவுகளில் கல்வி வசதி குறைவு அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக்
கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு
விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில் (இத்தகைய) கல்வி வசதிகள்
பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள்
நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர்
புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக
விளங்கினார்".
இலங்கையின் வட
மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில்விவசாயக்
குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர்
தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே.
"திரைகடல் ஓடியும்
திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள்
பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த
வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான
புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி
வாழுகின்றார்கள்.
4. பொருளாதாரம்
விவசாயம்
மீன்பிடி வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை.நில வளம்
நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல் தோட்ட செய்கை மற்றும்
வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத்
தீவுகளின்புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக
மக்கள் கொழும்பு தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை
பேணியும் வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர்
வருகின்றனர். இங்கும், யாழிலும்
உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும்
சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக உயர்
கல்வி தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம்.
5. அரசியல்
தீவுகள் அரசியல்
முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான் இந்திய
அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும் இலங்கை அரசு தீவுப்பகுதிகளை
ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை[1].
எனினும் நயினா தீவில்
உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம் ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்தவை.
6. புலம்பெயர்ந்தோர்
ஊர் ஒன்றியங்கள்
இத் தீவுகளில்
இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ அல்லது அத்தீவுகளில் உள்ள
கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது
வருகின்றார்கள். ஆபத்து உதவிகள் வைத்திய உதவிகள் பாடசாலைகள் மீள் கட்டமைப்பு
சனசமூக நிலையங்கள் பராமரிப்பு தொழில் வள உதவிகள் (படகுகள் மீன் வலைகள் இழுவை
இயந்திரங்கள்விதைகள் விவசாய நுட்பங்கள் மர வேலை கருவிகள்) பொருள் சந்தைப்படுத்தல்
ஏற்றுமதிஉதவிகள் போக்குவரத்து மேம்படுத்தல் மின்சத்தி வழங்குதல் கணணி கல்வி
ஊக்குவிப்பு தொலை தொடர்பு மேம்படுத்தல் குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர்
பராமரிப்புகோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள்
பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும்
மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர்.
இவ் அமைப்புகள்
தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன. அவற்றின் விபரம்
பின்வருமாறு:
லைடன் தீவு
(வேலணைத்தீவு)
கரம்பொன் மக்கள்
ஒன்றியம் - www.karampon.com
காவலூர் - கனடா
மக்கள் ஒன்றியம்
நாரந்தனை மக்கள்
ஒன்றியம் - கனடா
சுருவில் மக்கள்
ஒன்றியம்
புளியங்கூடல்
மக்கள் ஒன்றியம்
சரவணையூர் மக்கள்
ஒன்றியம்
வேலணை மக்கள் ஒன்றியம்
- www.velanai.com
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் (சுவிற்சர்லாந்து)www.pungudutivuswiss.com
புங்குடுதீவு
மக்கள் ஒன்றியம் (பிரான்ஸ்)www.pungudutivufrance.com
புங்குடுதீவு
அபிவிருத்தி ஒன்றியம் (ஜேர்மனி)
புங்குடுதீவு
பழைய மாணவர் சங்கம் (கனடா)
புங்குடுதீவு
நலன்புரி சங்கம் (பிரித்தானியா) www.pungudutivu.org
நெடுந்தீவு
ஒன்றியம் (ஐக்கிய ராட்ஷியம்)
நெடுந்தீவு
மக்கள் ஒன்றியம் (கனடா )
சர்வதேச
நெடுந்தீவு ஒருங்கிணைப்பு மையம் www.neduntheevu.com
நயினாதீவு கனடிய
அபிவிருத்தி சங்கம்
அனலைதீவு கலாசார
ஒன்றியம் - கனடா - Analaitivu
கனடா காரை
கலாச்சார மன்றம் - www.karainagar.com
================================================
courtesy Posted by www.pungudutivuswiss.com .
=====================================
எல்லா மூலப்பதிவாளர்க்கும் என்றும் அன்பும் நன்றியும்.
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.============================================
No comments:
Post a Comment