Give up all your desires and meditate on the Lord. When the mind is focussed, your goal will be achieved...
கருணைக்கடலான ஸாயீநாத குரு கேலியும் ஹாஸ்யமும் (நகைச்சுவையும்) செய்வதன் மூலமாக எவ்வாறு போதனையளித்தார் என்பதை இப்பொழுது விவரமாகச் சொல்கின்றேன்; கேளுங்கள்.
To say that, we shall state such and such in the next or this Chapter, is a sort of egoism. Unless, we surrender our ego to the feet of our Sad-guru, we will not succeed in our undertaking. If we become egoless, then our success is assured.
By worshipping Sai Baba, we attain both the objects, worldly and spiritual, and are fixed in our true Nature, and get peace and happiness. Therefore, those who want to gain their welfare, should respectfully hear Sai Baba's Leelas or stories and meditate on them. If they do this, they will easily attain the object of their life and get Bliss.
கருணைக்கடலான ஸாயீநாத குரு கேலியும் ஹாஸ்யமும் (நகைச்சுவையும்) செய்வதன் மூலமாக எவ்வாறு போதனையளித்தார் என்பதை இப்பொழுது விவரமாகச் சொல்கின்றேன்; கேளுங்கள்.
2 'நான் சொல்லப்போகிறேன்ஃ என்று விளம்புவதே அஹங்காரந்தான். குருபாதங்களில் அஹங்காரமற்றவனாக இருக்க வேண்டும். கதை அப்பொழுதுதான், கேட்பவர்களின் இதயத்தைத் தொடும் சக்தி பெறும். பயபக்தியுடன் கதையைக் கேளுங்கள்.
3 ஸாதுக்களும் ஆன்றோர்களும் மஹாபுருஷர்களும் எப்பொழுதுமே தூயவர்கள்; குற்றமற்றவர்கள். நிர்மலமான, மேகமற்ற ஆகாயத்தைப் போன்று சுத்தமானவர்கள்; தோஷமற்றவர்கள்.
4 ஸாயீ மஹராஜின் புகழைப் பாடுவது இகத்திலும் பரத்திலும் நன்மை பயக்கக்கூடிய ஸாதனையாகும். 'நான் யார்ஃ எனும் சிந்தனை செழிக்கும்; மனம் ஒருமுகப்படும். ஆகவே எல்லா ஆசைகளையும் படிப்படியாக விட்டு என் மீது தியானம் செய் நீ நினைத்த்து நிறைவேறும்.
5 ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமென்று நினைப்பவர் இக் கதைகளை பயபக்தியுடன் கேட்கவேண்டும். வேறு முயற்சி ஏதுமில்லாமலேயே அவர் பரமானந்தத்தை அனுபவிப்பார்; வாழ்க்கையை அர்த்தமுடையதாக உணர்வார்.
6 கதை கேட்பவர் மன அமைதி பெறுவார்; உலகவாழ்வுபற்றிய பிராந்தி (ஆதாரமில்லாத மனக்கலக்கம்) விலகும்; பரமானந்த மெய்துவார்; நற்கதி சிரமமின்றிக் கிடைக்கும்.
7 பக்தர்களின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் ஸமர்த்த ஸாயீ மனக்கண்ணால் அறிவார். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து தமது உறுதிமொழியை நிறைவேற்றுவார்.
8 ஸமர்த்த ஸாயீ என் புத்தியைத் தூண்டிவிட்டு அவருடைய வார்த்தைகளை என்னைச் சொல்லவைக்கிறார். உலகியலாகவும் ஆன்மீகமாகவும் சாதனைகள் புரியவல்ல அவருடைய செய்தியின் சாரத்தை என்னுடைய முழுத்திறமையையும் உபயோகித்துச் சொல்கிறேன்.
9 மக்கள் எவரும் குருடரல்லர்; அவர்களுக்கு மாலைக்கண் நோயும் இல்லை. 'தேஹமே நான்ஃ என்று நினைத்துக்கொண் டிருப்பவரும் தமக்கு எது நன்மையளிக்கும் என்று அறிந்துகொள்ளாதவரும் கண்ணிருந்தும் குருடர் அல்லரோ?
10 மேலும், இவ்வுடல் சாசுவதமாக இருக்கும் என்று ஒரு கணமும் நினைப்பதற்கில்லை. ஆகவே, இக் கதையின் இனிமையைச் சுவைக்குமாறு நான் உங்களை இரு கைகளையும் கூப்பி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் 24வது அத்தியாயத்தில் தொடர்கிறது...
ஓம் குருவே சரணம்.......
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமால்
வேறொன்றறியேன் பராபரமே!
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.
===================================
No comments:
Post a Comment