'பாட்டியிடம் பழைய விஷயங்களைப் பற்றி பேச்சு கொடுப்பதுடன், தினமும் பத்து
நிமிடமாவது சிரிக்க வச்சுடுவேன். இதனால், அவங்களுக்கு
நினைவுத் திறன் நன்றாக இருப்பதுடன், ரொம்ப
சந்தோஷமாகவும் இருப்பாங்க. அதோட, தினமும் அவரது
காலில் விழுந்து வணங்கி, என் நெற்றியில் திருநீறு பூசப் சொல்வேன். அவரும் மனம்
நிறைந்த ஆசி வழங்கி, திருநீறு பூசி விடுவார்...'
எல்லோர்க்கும்
இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே................பலதும் பத்தும் படித்ததில்
பிடித்தது உங்களுடன்.........................
மூத்தவர்களை
கவனித்துக் கொள்ளும் விதம்!
சமீபத்தில், மும்பையிலுள்ள
எங்கள் குடும்ப டாக்டரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில், 90 வயதான அவரது
பாட்டியும் இருந்தார். எங்களைப் பார்த்ததும் அப்பாட்டிக்கு ரொம்ப சந்தோஷம்.
அவருக்கு, எங்களை அறிமுகப்படுத்திய டாக்டர், பின், தன் பாட்டியை
கலாய்க்க ஆரம்பித்தார்...
'பாட்டி... இவங்க சொல்றாங்க... நீ ஐஸ்வர்யா ராய் மாதிரி
இருக்கியாம்... உன் திருமணத்தில் நடந்ததை இவங்களுக்கு சொல்லு...' என்றும், 'நான்
சின்னக்குழந்தையா இருந்தப்போ ஒரு பாட்டு பாடுவியே... அதை இவங்களுக்கு பாடிக்
காட்டு...' என்றும் கூறி, அவரது பழைய
நினைவுகளை நினைவுபடுத்தினார்.
சிறிது
நேரத்திற்கு பின், 'பாட்டி... நீ ஒரு கோலம் போடு; இவங்களையும் ஒரு
கோலம் போடச் சொல்லலாம். யாரோடது அழகா இருக்குன்னு நீயே பார்த்து சொல்லு...' என்று கோலப்பொடி
டப்பாவை பாட்டியிடம் நீட்ட, பாட்டியும்
சரியாக புள்ளி வைத்து, அதைக் கணக்கிட்டு அழகாக கோலம் போட்டார்.
பின், அங்கிருந்த
தொப்பியை எடுத்து, பாட்டி தலையில் மாட்டி, அவரை சிரிக்க
வைத்தும், பொம்மைகளைக் கொடுத்து, 'இதை நீ கையில்
வச்சுக்கோ, போட்டோ எடுக்கலாம்...' என்று பேச்சுக்
கொடுத்தபடியே இருந்தார். அவரது கலாட்டா சற்று அதிகமோ என்று நினைத்து, மெதுவாக அதுபற்றி
கேட்டேன்.
'பாட்டியிடம் பழைய விஷயங்களைப் பற்றி பேச்சு கொடுப்பதுடன், தினமும் பத்து
நிமிடமாவது சிரிக்க வச்சுடுவேன். இதனால், அவங்களுக்கு
நினைவுத் திறன் நன்றாக இருப்பதுடன், ரொம்ப
சந்தோஷமாகவும் இருப்பாங்க. அதோட, தினமும் அவரது
காலில் விழுந்து வணங்கி, என் நெற்றியில் திருநீறு பூசப் சொல்வேன். அவரும் மனம்
நிறைந்த ஆசி வழங்கி, திருநீறு பூசி விடுவார்...' என்றார்.
வயதானலே
தொல்லையென சலித்துக்கொள்வோருக்கு மத்தியில், இவரைப்
போன்றோரும் இருக்கின்றனரே... என எண்ணி, அவரை பாராட்டி
விடைபெற்றேன்.
நாமும், நம் வீட்டில்
உள்ள பெரியவர்களுடன் அமர்ந்து, தினமும் சிறிது
நேரமாவது அவர்களது பழைய நினைவுகளை கிளறி, சிரித்து
பேசுவதன் மூலம், அவர்கள் உற்சாகமாக இருப்பதோடு, நமக்கு அவர்களது
நல்லாசியும் கிட்டும் என்பதை கூறவும் வேண்டுமோ!
— எஸ்.சீதாலட்சுமி, முகலிவாக்கம்.
=====================================
நல்லதை எடுத்துக்
கொள்வதே...
புது வீட்டில்
குடியேறிய என் தோழியைக் காண, குடும்பத்தோடு
சென்றிருந்தோம். வீட்டைச் சுற்றிப் பார்த்த போது, ஹால் மட்டுமே
நவநாகரிக முறையில் இருந்தது. மற்றபடி, சமையலறையில், அழகிய கயிற்றில், உறி ஒன்று
தொங்கியது. மற்றொரு புறம், தண்ணீர் ஊற்றப்பட்ட தாம்பாளத்தின் மீது, ஒரு பாத்திரம்
இருந்தது. மேலும், அவர்கள் வீட்டில் மிக்சி, கிரைண்டர்
மற்றும் வாஷிங் மிஷின் போன்ற உபகரணங்கள் இருந்த போதிலும், அம்மி, உரல் மற்றும்
துணி துவைக்கும் கல்லும் இருந்தன.
இதனால், ஆச்சரியமடைந்த நான், 'என்னடி... உன்
வீடு பொருட்காட்சி மாதிரி இருக்கு...' என்றேன். அதற்கு
தோழி, 'இந்த வீட்டை வடிவமைக்கும் போது, என் மாமனாரும்
சில யோசனைகள் கூறினார். பால், தயிர், நெய் வைக்க உறி; எறும்பு ஏறாமல்
இருக்க தண்ணீர் தாம்பாளம்; மின்சாரம் இல்லாத போது அரைக்க, அம்மி, உரல் என்று அவர்
கூறியதில், நல்ல விஷயங்கள் இருக்கவே, அதற்கும்
முக்கியத்துவம் அளித்துள்ளோம்...' என்றாள்.
வீட்டின்
பின்புறம் செடி, கொடிகளுக்கு நடுவில் கூண்டில், வான்கோழி ஒன்றும்
இருந்தது. அதற்கு தோழி, 'தோட்டத்தில், புழு, பூச்சிகள், பூரான், பாம்பு போன்ற
விஷ ஜந்துகள் வந்தால், வான்கோழி ஒரு கை பார்த்துவிடும் என்பதால் இதுவும் என்
மாமனார் சாய்ஸ் தான்...' என்றவள், 'விவசாயியான என்
மாமனார், கடுமையாக உழைத்து, என் கணவரை படிக்க
வைத்தார். இன்று நாங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், எந்த ஒரு
விஷயத்திற்கும், அவரை கலந்து கொள்ளாமல், நாங்களாகவே
முடிவெடுப்பதில்லை. வீட்டுப் பெரியோர் சொல்லும் நல்ல விஷயங்களை நாம்
ஏற்றுக்கொண்டால், அது, நம்
குழந்தைகளுக்கும் பயன்படும்...' என்றாள்; பிரமித்துப்போனேன்.
என்ன தான்
நாகரிகத்தின் பாதையில் சென்றாலும், பழமையான
பாரம்பரியத்தில் உள்ள அருமையான விஷயங்கள்
அழிந்து விடாமல் பின்பற்றுவது சிறப்பு தானே!
— எஸ்.கார்த்திகா, மதுரை.
========================================
மனதை படித்த
மருத்துவர்!
சமீபத்தில், எலும்பு முறிவு
மருத்துவரை பார்க்க அவருடைய கிளினிக்கிற்கு சென்றிருந்தேன். நாங்கள் பேசிக்
கொண்டிருக்கும்போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவரை தூக்கி வந்தனர். முழங்காலுக்கு
கீழ், எலும்பு உடைந்திருந்ததால், வலியில்
துடித்தார். அவரை பரிசோதித்த டாக்டர், 'கவலைப்படாதீங்க...
சிறிய எலும்பு முறிவு தான்; ஒரு வாரத்தில
குணமாகிடும்...' என்று கூறி, சிகிச்சை
அளித்தார். பின், அறைக்கு வந்தவரிடம், 'என்ன டாக்டர்...
எலும்பு முறிஞ்சு தொங்குது; எழுந்து நிக்கவே
ஆறு மாசம் ஆகும் போல இருக்கே... நீங்க என்னடான்னா, நோயாளியிடம்
சின்ன பிரச்னை தான்னு சொல்றீங்க...' என்றேன்.
அதற்கு அவர், 'நீங்க சொல்ற
மாதிரி அது, பலமான எலும்பு முறிவு தான்; ஆனா, நான் சொன்ன அந்த
வார்த்தைகள், அவருக்கு நம்பிக்கைய ஏற்படுத்தும். மருத்துவர்கள், நோயாளிகளுக்கு
தரும் முதல் மருந்தே, நம்பிக்கையான வார்த்தைகள் தான். அதிலேயே அவங்களுக்கு பாதி
நோய் குணமாகிடும்...' என்றார்.
அவர் கூறியதைப்
போலவே, கால் முறிந்த அந்த நபர், அழுவதை நிறுத்தி, சகஜமாக
மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
நோயாளிகளிடம்
அச்சத்தை ஏற்படுத்தி, பணம் பிடுங்கும் டாக்டர்களுக்கு மத்தியில், இவர் எனக்கு
வித்தியாசமாக தெரிந்தார்.
இதை மற்ற
மருத்துவர்களும் செய்யலாமே!
— வே.செந்தில்குமார்,கொங்கணாபுரம்.
=======================================
மும்பையை சேர்ந்த
ஓட்டல் அதிபர் ஒருவர், அசிஸ்டென்ட் கமிஷனர் ஒருவர், சாலை
கான்ட்ராக்டர் ஒருவர், நான் மற்றும் லென்ஸ் மாமா என, அந்த ஓட்டலில்
குழுமி இருந்தோம்.
'பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல்
இண்டஸ்ட்ரியில் இறங்கியபின், உங்கள் தொழில்
எப்படி இருக்கு?' எனக் கேட்டேன், மும்பையிலிருந்து
வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்!
'அதை ஏம்ப்பா கேட்கறே... ரொம்ப, 'டல்' அடிக்குது. இதுல, அரசு அதிகாரிகள்
தொல்ல வேறு...' என்று அவர் கூறும் போதே, 'கர்நாடகாவை
சேர்ந்தவங்க நீங்க; உங்க முந்தைய தலைமுறையினர் எப்போ, எப்படி மும்பை
சென்றனர்... ஓட்டல்கள் ஆரம்பிக்க எது தூண்டுதலாக இருந்தது?' எனக் கேட்டேன்.
'தென் கனரா மாவட்டத்திலிருந்து, (கர்நாடக மாநிலம்)
1940களில் கோபால ராவ் என்ற பிராமணக் குடும்பத்தினர், மும்பை சென்று, 'வெல்கம் ஓட்டல்ஸ்' என்ற பெயரில், ஓட்டல்கள் ஆரம்பித்தனர்.
அவர்கள் தான், 'தாலி மீல்ஸ்' என சொல்லப்படும்
எட்டு விதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினர். 1958களில், அதன் விலை, 50 காசு. இப்போது, இதுவே, 200 ரூபாய்!
'உடுப்பியைச் சேர்ந்த காமத் இனத்தவர் தான், 60 ஆண்டுகளுக்கு
முன், மும்பையில், 'உடுப்பி' ஓட்டல்களை
ஆரம்பித்தனர். 1970வது வரை பாப்புலராக இருந்த, 'ஈரானிய
ரெஸ்டரன்டுகள்' மறைய ஆரம்பித்திருந்ததால், உடுப்பி
ஓட்டல்கள் வேகமாக, 'பிக் -அப்' ஆக ஆரம்பித்தன.
'இப்போது, வெளிநாட்டு
ரெஸ்டரன்டுகளின் வரவு, கையேந்தி பவன்கள் அதிகரிப்பு, உடுப்பி
பகுதியில், கல்வி அறிவு அதிகமாகி விட்டதால், வேலைக்கு ஆள்
கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமம், ஓட்டல்
அதிபர்களின் வாரிசுகள் மெத்தப் படித்து விட்டதால், குடும்பத்
தொழிலான ஓட்டல் தொழிலுக்கு வர தயக்கம், அரசு தரும்
தொல்லைகள் என, ஓட்டல் தொழில் நசிந்து வருகிறது.
'இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் உடுப்பி ஓட்டல்கள், மும்பையில்
இருந்து மறைந்து விடும் அபாயம் உள்ளது...' என முடித்தார்.
அடுத்து, சாலை
கான்ட்ராக்டரிடம் பேச்சு கொடுத்தேன். அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், 'கவனித்த' பின், டெண்டர் தொகையில், 85 சதவீதம் தான், சாலை போடுவதில்
செலவு செய்ய முடிகிறது என்றும், இந்த, 85 சதவீதத்தில், தம் லாபத்தையும்
பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
========================================
அடுத்து, ஏ.சி., ஒருவர், 'இப்போ புதுசா
வரும் போலீஸ்காரங்க, சினிமா படத்தைப் பார்த்துட்டு, அதிலே வர்ற
போலீஸ்காரன் மாதிரி நடந்துக்கிடணும்ன்னு நெனைக்கிறாங்க...' என்று சொல்லி, அது தொடர்பாக ஒரு
சம்பவத்தையும் சொன்னார்...
'இந்த நகரத்துல செல்வாக்கான ஒரு பேமிலி... அரசியல் குடும்பம்
இல்லே... பெரிய பிசினஸ் செய்றவங்க. அந்த குடும்பத்த சேர்ந்தவங்களோட, 'கெஸ்ட்' சிலர், வெளியூரில்
இருந்து வந்து இருக்காங்க... அவர்களை, டின்னருக்கு
அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
'நகரில் மிகவும் பேமசான ரோட் சைட் ரெஸ்டாரன்ட் ஒன்றில், டின்னர் அளித்து
இருக்கின்றனர். அசைவ உணவுகள், எண்ணெய் தோசை, பரோட்டா, சுக்கா போன்றவை
அங்கே ரொம்ப ஸ்பெஷல்!
'இரவு, 11:00 மணிக்கு, டின்னர் முடித்து
கிளம்பும் நேரம், போலீஸ் ரோந்து ஜீப் ஒன்று வந்திருக்கிறது... கைகழுவி
கிளம்பிக் கொண்டிருந்தவரிடம், போலீஸ் தோரணையைக்
காட்டி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர்
ஒருவர்.
'இவர்கள் மிக கண்ணியமாக, 'கிளம்பி விட்டோம்
சார்... பில் செட்டில் செய்துட்டு இருக்காங்க...' எனக் கூறியதையும்
கேளாமல், வானத்திற்கும், பூமிக்குமாகக்
குதித்திருக்கிறார்.
'விருந்தளித்தவர் தம் மொபைல் போனை எடுத்து, எவருக்கோ பேசவும், 'என்ன... கமிஷனர்
கிட்டே பேசுறியா... டி.ஜி.பி.,கிட்ட
வேணும்ன்னாலும் பேசு... என்னை ஒண்ணும் செய்ய முடியாது. பெரிய காரில் வந்தால்
பயந்துடுவோமா?' என்று கத்தி, பணக்காரர்கள்
என்றால் தனக்கு அலர்ஜி என்று தன்னிடமும், தன்
குடும்பத்தாரிடமும் வசதி இல்லையே என்ற தன், 'காம்ப்ளக்சை' யும்
வெளிக்காட்டி உள்ளார்.
'இவ்வளவுக்கும் அந்தப் பகுதியின் ஏ.சி., அன்று மாலையில்
தான், 'பயிற்சி எஸ்.ஐ.,களை இரவு நேர
ரோந்துக்கு அனுப்பாதீர்கள். இன்னும் அவர்கள் பக்குவப்பட வில்லை...' என்று கூறிச்
சென்றுள்ளார்; அதையும் மீறி, இவர் ரோந்து
வந்துள்ளார்.
'பயிற்சி எஸ்.ஐ.,யுடன் வந்த
பக்குவப்பட்ட போலீசார், எஸ்.ஐ.,யின் வேகத்தை தணிக்க
முயன்றுள்ளனர். ஆனால், உ.பா., சாப்பிட்டிருந்த
எஸ்.ஐ., கேட்கவில்லையாம்!
'விருந்தினர் முன் அவமானப்பட்ட தொழில் அதிபர், பேச
வேண்டியவர்களிடம் இரவோடு இரவாகப் பேசி இருக்கிறார். அடுத்த நாள் காலை, இரண்டு, மூன்று
திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், புறப்பட்டு
சென்று விட்டார் தொழில் அதிபர்.
'காலையில் ஸ்டேஷன் சென்றுள்ளார் பயிற்சி எஸ்.ஐ., வாசலில்
நின்றிருந்த, 'பாரா' 'ஐயா உங்களை
ஸ்டேஷனுக்குள் விட வேண்டாம்ன்னு உத்தரவு போட்டு இருக்காங்க... (ஒரு உயர்
அதிகாரியின் பெயரைச் சொல்லி) அவரைப் போய் பார்க்கச் சொன்னாரு...' எனக் கூறி
இருக்கிறார்.
'இதனிடையே போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், தொழிலதிபரை
சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அவர் தான் திருமணங்களில் கலந்து
கொள்ள சென்று விட்டாரே... மூன்று மணி நேரம் காத்து இருந்திருக்கின்றனர்.
'இதனிடையே விஷயம் அறிந்த பயிற்சி எஸ்.ஐ., தாம் திருமணம்
செய்ய உள்ள பெண் வீட்டார், உள்ளூரில் செல்வாக்கான பத்திரிகை தலைமை நிருபருக்கு தூரத்து
சொந்தம் என்பதை அறிந்து, அவரிடம், 'இப்போது
நடவடிக்கை ஏதும் எடுத்து விட்டால், என் கேரியர்
பாதிக்கப்படும். மீண்டும், ஒரு வருடம், பயிற்சியிலேயே
போட்டு விடுவர். ஏதோ தப்பு நடந்து போச்சு... தொழிலதிபரிடம் பேசுங்கள்...' என, தன், 'உட் - பீ' மூலம், 'பிரஷர்' கொடுத்துள்ளார்.
'ஒரு வழியாக போலீஸ் உயர் அதிகாரிகளும், பயிற்சி எஸ்.ஐ.,யும், தொழிலதிபரை
சந்தித்தனர். பயிற்சி எஸ்.ஐ., 'சாரி...' கேட்க, 'தம்பி...
கிரிமினலுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள். உங்க உயர்
அதிகாரி, சற்றுமுன் என்னிடம் கூறியது போல, சினிமா போலீஸ், சினிமாவுல தான்
இருக்க முடியும்...' என்று கூறி, மன்னித்து
அனுப்பியுள்ளார்...' எனக் கூறி முடித்தார் ஏ.சி.,
'சரி தான் போ... இனி, அந்த எஸ்.ஐ., 'நமக்கேன் வம்பு'ன்னு
ஒருத்தரையும் பிடிக்கப் போறதில்லே...' எனக் கூறி, கோப்பையில்
இருந்த, 'அங்கிள் ஜானி' பிளாக் லேபிளை
இன்னொரு மடக்கு ஊற்றி, 'டேய் தம்பி... அந்த ரஷ்யன் சேலடை கொண்டா...' என்றார் லென்ஸ்
மாமா; என் அறையை நோக்கி நடந்தேன் நான்!
அன்பு நன்றி சகோ
அந்துமணி..
====================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
Gurur Brahma,
Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat
Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I
shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart
is filled with good thoughts and feelings, all that comes out of the senses -
your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம்
நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும்
இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of
divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You
All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்...
எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும்
அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை /
சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும்
சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும்
அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை
எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!
ஓம் சாயி நமோ நம!
ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ
நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி...............
=============================================================
No comments:
Post a Comment