Followers

Saturday, January 25, 2020



'யோக ஸாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.--இவ்வாறு என்னை உணர்ந்தோர் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியசாலிகள். பாபா, அத்;19.

''இதுவே குருவின் மஹத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்துகொண்டவன் மூவுலகங்களிலும் தன்னியனாவான் (பேறு பெற்றவனாவான்).ஃஃ

ஓ குருவரா கருணாகரா என்னைக் காப்பாற்றுங்கள். இவ்வுலக வாழ்வு எந்த நிம்மதியையும் அளிப்பதில்லை. போதும், போதும், போதும் இந்த ஜனனமரணச் சுழற்சிõ
புலனின்பங்களை நாடிக் கட்டவிழ்ந்து ஓடி அவற்றிலேயே மூழ்கிப் போகும் எங்களைத் தடுத்தாட்கொள்ளுங்கள். எங்களுடைய எண்ணங்களை உள்முகமாகத் திருப்புங்கள்õ சுக்கானை இழந்த நாங்கள் சம்சாரம் என்னும் சாகரத்தின் பேரலைகளால் எங்கோ அடித்துச் செல்லப்படுகிறோம். தக்க சமயத்தில் எங்களைக் கைகொடுத்துத் தூக்கிப் பிறவிப் பிணியி­ருந்து விடுதலையளிப்பீராக............

மனைவி, மக்கள், நண்பர்கள் கூட்டம் - கடைசிக் காலத்தில் இவர்களில் யாராலும் எந்தப் பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூடவரும் துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.....................

மஹராஜரேõ உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த வினைகளாலும் செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலையை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனர்களையும், துக்கத்தி­ருந்தும் வேதனையி­ருந்தும் விடுவித்தருளுங்கள்.
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"

"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
சாயி பாதம் சரணம் சரணம்.
🌹ஓம் ஸ்ரீ சாயிராம்... 🌹
=========================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...