'அறிஞர்
பெர்னாட்ஷா'நூலிலிருந்து:
பெர்னாட்ஷா பள்ளியில் படித்த போது, ஒருநாள் வகுப்பாசிரியர், 'சொர்க்கத்திற்கு போக விரும்பும் மாணவர்கள் எல்லாம் கை
தூக்குங்க...' என்றார்.
பெர்னாட்ஷாவை தவிர, எல்லா
மாணவர்களும் கை தூக்கினர்.
உடனே ஆசிரியர், பெர்னாட்ஷாவை நோக்கி, 'ஏன் உனக்கு சொர்க்கத்திற்கு போக விருப்பமில்லயா?' என்று கேட்டார்.
எல்லோர்க்கும் இனிய நாளாக மலரட்டும் சகோ
தோழமை களே.....................பலதும் பத்தும் படித்ததில் பிடித்தது
தங்களுடன்...................................
சினிமா ஸ்டுடியோவில் கேட்டது: மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி
வீட்டிற்கு, திடீரென வந்த
வருமான வரி அதிகாரிகள், 'உங்க வீட்டை, 'சர்ச்' செய்ய வந்திருக்கோம்...' என்றனர்.
உடனே, ராமசாமி, 'என் வீட்டை எதுக்குங்க மாதா கோவிலாக்கப் போறீங்க...' என்றார்.
'சர்ச் அதாவது, சோதனை போடப் போறோம்...' என்று அதிகாரிகள் கூறியதும், 'சரி... போடுங்க...' என்றார் வி.கே.ஆர்.,
'அறிஞர்
பெர்னாட்ஷா'நூலிலிருந்து:
பெர்னாட்ஷா பள்ளியில் படித்த போது, ஒருநாள் வகுப்பாசிரியர், 'சொர்க்கத்திற்கு போக விரும்பும் மாணவர்கள் எல்லாம் கை
தூக்குங்க...' என்றார். பெர்னாட்ஷாவை
தவிர, எல்லா
மாணவர்களும் கை தூக்கினர்.
உடனே ஆசிரியர், பெர்னாட்ஷாவை நோக்கி, 'ஏன் உனக்கு சொர்க்கத்திற்கு போக விருப்பமில்லயா?' என்று கேட்டார்.
'சொர்க்கம் செல்ல
விருப்பம் தான்; ஆனா, இவங்க எல்லாரும் சொர்க்கத்திற்கு வந்தால், அது சொர்க்கமாகவா இருக்கும்...' என்றார் ஷா.
பின்னாளில், நாடக ஆசிரியராக புகழ் பெற்று, பிரபலம் ஆன பெர்னாட்ஷா, பல ஊர்களுக்கு சென்று, மேடைப் பிரசங்கம் செய்து வந்தார். ஒரு ஊரில்
பேசியதையே, இன்னொரு ஊரிலும்
பேசுவார்; கேட்டால், 'கேட்பவர்கள் வேறு வேறு மக்கள் தானே...' என்பார்.
கூட்டத்தில், மக்கள் அவர் பேச்சை ரசித்து சிரிக்கும் போது, முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அவர் மனைவி மட்டும், அலட்சியத்துடன் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பார்.
இது குறித்து யாராவது, 'உங்க கணவர் பேச்சை, நாங்க எல்லாம் ரசிக்கும் போது, நீங்க மட்டும் இப்படி சும்மா உட்காந்திருக்கீங்களே...' என்றால், 'சும்மாவா இருக்கேன்; ஸ்வெட்டர் பின்னுகிறேன். என் கைகள் மட்டும், இந்த பின்னல் வேலையில் ஈடுபடாது இருந்திருந்தால், அவரை, இந்த ஊசியாலேயே குத்திக் கொன்றிருப்பேன்; ஒரே பேச்சை எத்தனை ஊரில் தான் கேட்பது...' என்பார் கோபத்துடன்!
பணக்கார பெண்ணான இவரை மணந்த பின் தான், பெர்னாட்ஷா பிரபல நாடக ஆசிரியராகவும், நூலாசிரியராகவும் உயர்ந்தார்.
'கி.வா.ஜ.,வின் சிந்தனைகள்' நூலிலிருந்து இலக்கிய சொற்பொழிவில் கி.வா.ஜகந்நாதன்
கூறியது: மனிதனுக்கு உதவும் விலங்குகளை பாருங்கள்... பசு, பால் தருகிறது; எருது, வேலை செய்கிறது; குதிரை, வண்டி இழுக்கிறது. கழுதை, பொதி சுமக்கிறது. அத்துடன், மரக்கட்டைகளை தூக்கிச் செல்ல, யானையை பயன்படுத்துகிறான் மனிதன். இந்த விலங்குகள்
அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது, இவை எல்லாமே, தாவர உணவை உட்கொள்பவை!
மாமிசம் உண்ணும் சிங்கம், புலி போன்ற பயங்கர விலங்குகளை மனிதன், தன் உதவிக்கு வைத்துக் கொள்வதில்லை!
மேல்நாட்டு நகைச்சுவை நடிகர், பீட்டர் உஸ்டினா. இவரது மகன் படிக்கும்
பள்ளியிலிருந்து இவருக்கு வந்த ஒரு கடிதம்:
வகுப்பறையில், உங்கள் மகன் கோணங்கித்தனம் செய்து, மற்றவர்களை சிரிக்க வைக்கிறான்; கண்டிக்கவும்!
உஸ்டினா எழுதிய பதில்: நானும் அதுமாதிரி செய்வதால் தான், பணம் சம்பாதித்து, உங்கள் பள்ளிக்கு கட்டணம் கட்ட முடிகிறது; அவனை கண்டிக்க வேண்டாம்!
புகழ் பெற்ற கதாசிரியரிடம், இளம் எழுத்தாளர் ஒருவர் வந்தார். 'இவ்வளவு அருமையாக எழுதுறீங்களே... இதற்கு நீங்க என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்.
'ஒண்ணும்
பிரமாதமில்ல; ஒரு பேனா, கொஞ்சம் பேப்பர் எடுத்து, மனசுல தோன்றுவதை எல்லாம் எழுதிக் கொண்டே போக
வேண்டியது தான்...' என்றார்
கதாசிரியர்.
'அவ்வளவு தானா...'
'ஆமாம்... ஆனால், மனதில் தோன்றுவது தான், ரொம்ப கஷ்டம்!'
நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி ஐயா.........................
=====================================
தெரிந்து தான்!
தெரிந்துதான் செய்கிறோம்...
பிளாஸ்டிக் கழிவுகளையும்
மிச்சம் மீதிகளையும்
வீதிக் கால்வாய்களில் போடுகிறோம்!
வீட்டை பெருக்கி
குப்பைக் கூளங்களை
குப்பைத் தொட்டியில் போடாமல்
தெருவில் கொட்டுகிறோம்!
கழிப்பறைக் குழாயில் மட்டுமல்ல
சாக்கடைக் குழாய்களிலும்
வேண்டாததைப் போட்டு
தண்ணீர் ஊற்றி விடுகிறோம்!
கட்டட இடிபாடுகளைக் கொட்டி
நம் வீட்டை மட்டும் மேடாக்கி
சுயநலத்துடன் தண்ணீர் வராமல்
தற்காத்துக் கொள்கிறோம்!
ஆறு, குளம், ஏரி, கால்வாய்களை
ஆக்கிரமித்து பிளாட் போட்டு
கட்டடங்கள் கட்டிக் கொள்கிறோம்!
விதி மீறல்களுக்கும், ஊழல்களுக்கும்
லஞ்சத்திற்கும் ஆதரவு அளித்து
அதிகாரத்திற்கு அடிபணிந்து
சுயநலவாதிகளாக செயல்படுகிறோம்!
இத்தனையையும் செய்யும் நமக்கு
தெரிந்தது ஒன்று தான்...
அரசையும், அதிகாரிகளையும்
குறை சொல்லிக் கொண்டிருப்பது!
— சொல்கேளான்
ஏ.வி.கிரி,
சென்னை.
======================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma,
Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat
Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I
shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart
is filled with good thoughts and feelings, all that comes out of the senses -
your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும்
நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of
divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You
All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை
இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய
ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே............ நட்புகளுக்கு ம் அவர்கள்
குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி.....................
================================================
No comments:
Post a Comment