Followers

Saturday, July 18, 2020


வெற்றி தரும் ஹோரை ரகசியம்!............
 Graha horai Kaalam in Tamil-2017 - Learn Tamil Online
ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம்
பற்றி நான் பதிகிறேன். இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும்
ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஹோரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஹோரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஹோரையை சூரியனுக்கு அளித்தனர்.அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.
இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஹோரை, புதன் ஹோரை, குரு ஹோரை ஆகிய மூன்றும் நல்ல ஹோரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் – இந்த ஹோரைகளில் துவங்கலாம்.
ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை.
இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய் ஹோரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும்.
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஹோரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஹோரை கணக்கிடப்படும்.
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன.6 – 1- 8 – 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஹோரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.
*சூரிய ஹோரை
சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.
இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்த ஹோரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சுக்கிர ஹோரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஹோரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
புதன் ஹோரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஹோரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
சந்திர ஹோரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஹோரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
சனி ஹோரை :
இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
குரு ஹோரை :
எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஹோரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.
செவ்வாய் ஹோரை :
செவ்வாய் ஹோரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும். தாமதித்தால் கிடைக்காது.
ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஓரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் – ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஹோரை சுப ஹோரை என்றாலும், வெள்ளிக் கிழமை – குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய – நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஹோரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஹோரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.
குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஹோரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு – நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை…
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
தகவல்:  திருமலைஓரை அறிந்து செயல்பட்டால் உங்களை ...
==========================================
==================================
எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த நட்சத்திர நாளில் ஒன்றைச் செய்தால் வெற்றிகிட்டும்?!

சந்திர பலம் உள்ள நாட்கள்?
?எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்து தரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்
?நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.
?நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.
?பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.
?நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:
?அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.
?மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.
?மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்.
தகவல்: ஜோதிடர் ரமா குருமூர்த்தி

==================================
courtesy;https://dhinasari.com/astrology
===================================
எந்த ராசிக்கு எந்த ஹோரை... என்னென்ன பலன்கள்? ஹோரை என்றால் என்ன... முழுவிவரம்
horai
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஜோதிடத்தில் பலவிதமான சூட்சுமமான முறைகள் இருக்கின்றன. அவற்றில், மிக முக்கியமானது ஹோரைகள். ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

அதன்படி, நவகிரகங்களில் சூரியன் - சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிரன் - சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது ஒருமணி நேரம். இந்த சொல்லில் இருந்துதான் அதாவது ஹோரை என்பதில் இருந்துதான் ஆங்கிலத்தில் Hour என்ற வார்த்தை வந்ததாகச் சொல்லுவார்கள்.
ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்வோம். பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரை கள் கணக்கிடப்படுகின்றன. ஹோரைகள் ஆரம்பிக்கும் நேரம் காலை 6 மணி. ஒருநாளுக்கான ஹோரைகள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாகும். இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்தநாளில் காலை 6 மணிக்கு தொடங்கும்.
உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை என்றால் ஞாயிற்றுக்கிழமையினுடைய சூரியன். அவருடைய ஹோரை காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய்க்கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு சுக்கிரனுடைய ஹோரையானது ஆரம்பிக்கும்.
பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.
எந்தெந்த ஹோரைகளில் என்னென்ன செய்யலாம்?


சூரிய ஹோரை :
சூரியனை ராஜகிரகம் என்று அழைப்பார்கள். அரசு மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிபதி சூரியன். சூரியன் ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷயங்கள் முயற்சித்தால் சிறக்கும். மேலதிகாரிகளை சந்தித்தல், அரசு சார்ந்த முயற்சிகள், சமூகத்தில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை காணுதல் போன்ற செயல்களைச் செய்யலாம். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம். இந்த ஹோரையில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஹோரை ஏற்றதல்ல.
சுக்கிர ஹோரை:
களத்திரம் - அழகு - கவர்ச்சி - சுத்தம் - பொருளாதாரம் ஆகிய விஷயங்களுக்கு சுக்கிரன் அதிபதி. அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த ஹோரையை பயன்படுத்தலாம். வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்க மிகவும் உகந்தது. குறிப்பாக பெண்கள் தொடர்பான அனைத்து காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயம், பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றிக்கும் இது ஏற்றது.
புதன் ஹோரை:
கல்வி - கலைகள் - நுண்ணறிவு போன்ற விஷயங்களுக்கு அதிபதி புதன். வித்தைகள் சம்பந்தமான அனைத்து முயற்சிகளும் இந்த ஹோரையில் செய்யலாம். கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேரம் உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளலாம். புத்திக்கூர்மை வளர்வதற்கு இந்த ஹோரையில் முயற்சி மேற்கொண்டால் சிறப்பு.
சந்திர ஹோரை:
நவகிரகங்களில் மாதா காரகன் - மனம் காரகன் என்று சொல்லக்கூடியவர் சந்திரன். வளர்பிறை காலத்தில் சந்திரன் ஹோரையும் நல்ல ஹோரையாகவே கருதப்படுகிறது. இந்த ஹோரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கிக் கணக்கு துவங்குதல் ஆகியவற்றைச் செய்யலாம். இந்த ஹோரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்கள் ஜெயமாகும். வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது. பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம்.
சனி ஹோரை :
நவகிரகங்களிலே ஆயுள் - தொழில் - கர்மா சம்பந்தமான காரியங்களுக்கு அதிபதி. சனி ஹோரை ஒரு சில காரியங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஹோரையாக சனி ஹோரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஹோரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஹோரை சிறப்பானது. தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் முயற்சி செய்ய ஏற்ற ஹோரை இது.
குரு ஹோரை:
நவகிரகங்களுள் சுபகாரகன் குருவாகும். தனகாரகன் சந்தான காரகன் என்றெல்லாம் அழைக்கக்கூடியவர். அனைத்து சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம். வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. இந்த ஹோரையில் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியங்களை தவிர்த்தல் நலம்.
செவ்வாய் ஹோரை:
ரத்தம் - மருத்துவம் - பூமி - அதிகாரம் போன்ற விஷயங்களுக்கு செவ்வாய் அதிபதியாக திகழ்கிறார். செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஹோரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம். அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி பேசலாம்.
எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?

மேஷம் - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.
ரிஷபம் - ஹோரைகள்:
சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும். புதிய வீடு - மனை - வாகனம் - ஆடை - அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.

மிதுனம் - ஹோரைகள்:
சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும். புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - உத்தியோகம் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.

கடகம் - ஹோரைகள்:
சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.

சிம்மம் - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - சந்திரன் - குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.
கன்னி ஹோரைகள்:
பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் - பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.
துலாம் - ஹோரைகள்:
பொதுவில் செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.
விருச்சிகம் - சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.
தனுசு - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - குரு ஹோரைகள் உத்தமம்.
மகரம் - ஹோரைகள்:
பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.
கும்பம் - ஹோரைகள்:
பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.
மீனம் - ஹோரைகள்:
பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.

====================================
THE HORA AND IT’S USAGE

       Our ancient Hindu Astrologers had subdivided each Sign of the Zodiac into two halves , and called each division as a Hora . Thus , roughly 1 hour is needed for each Hora to pass the  meredian or rise in the East. But Hindu Astrologers did not measure time in hours and minutes .They used Ghatis and Vighatis…One day thus had 60 Ghatis , and each sign , thus takes approximately 5  Ghatis , and half a sign , or a Hora will be about 2 and a half ghatis …

      The Chaldeans in the remote ancient times had acquired considerable knowledge of the stars and the framing of the Zodiac was done by them…and gathered considerable knowledge about the influence of planets over the people . They also found that certain hours were favorable for certain matters and certain , unfavorable for some matters…This method of prediction is called ‘Hora’…and had laid down certain axioms even before the era of Moses or even “The Book of Genesis”…

      The Hindus were also aware  that certain matters ‘thrive/prosper’ during certain Ghatis , and some ‘fall through’…in certain Ghatis…Without getting into the somewhat tedious calculations involved in working out the the Hora operating during particular hours of the day…a readymade table is available for our convenient use .To select the “good time” for the various activities we
would like to undertake , well in advance , and plan for it properly , and accomplish it with confidence that the outcome will be favorable to one…

       The different Hora , and the various matters which will prove beneficial if accomplished during that Hora are given below for easy reference…in a table form…this table is to be followed is NOT connected to the time of Sunrise in the place one resides in…and no other elaborate calculations are necessary…You are ALL requested to try it out and experience for yourself…

        Sun’s Hora :
  This Hora will be strong on Sundays and Sun-star-days and whenever the Sun is strong , like for example , it is exalted or in it’s own Sign and posited in it’s own Stars Uttarashada , Krittika and Uttara Phalguni…The Sun governs vitality , immunity and speedy recovery…hence this Hora is favorable to take medecine , undergo surgery , sign contracts with the Govt. ,  submit application to Medical Colleges…appeal or make a request for promotion , file a Police complaint , enter into politics , initiate Mantras etc…   

        Moon’s Hora :
  Moon owns Cancer , is strong on Mondays , and Rohini , Hasta and Sravana star-days…and also when Moon occupies it’s esaltation/own Sign and occupies the kendras from the Lagna. Approach people during the Moon’s Hora , even the strong-willed will yield especially a Lady Officer superior to you… for a favorable outcome of your problem , Make purchases of pearls , jewels , corals etc..      Good time to start a business in milk and dairy products , especially on  Fridays…Saturdays for Ice-cream etc. Sarting a petrol pump or kerosene business should be started on a Monday and Rohini star-day…ideally in Godhuli Lagna…Musicians should select the Moon’s Hora on Mondays or Fridays and so on…Good for taking up service in the Defence Services…Make  Plans Or Schemes during Moon’s Hora only for grand success due to dawning of brilliant ideas…

  Mars’ Hora :
Mars is strong on Tuesdays , governs the Signs Aries and Scorpio , and Mrigarshirsha , Chitra and Dhanishta star-days…Mars posited in Capricorn , is exalted , if posited in it’s own star and own sub , it is in the most potent position…and especially if it is the Xth House …during the Hora of Mars…
   It is auspicious for the C-in-C of an Army to prepare for war , favorable time to file a suit in a court of Law…and if arguments are made during Mars Hora , it facilitates a win.Mars Hora is favorable to reasch a compromise/settlement , purchase land , buildings especially on Saturdays…
Use of manure , purchase surgical instruments , on the day ruled by the lord of the XIIth House. Join duty as a Judge , or take the oath of office Thursday is beneficial..Fridays are beneficial for executive officers of temples , churches , mosques , colleges , schools and also to take sanyas or “take the vows.
       Those who sign and/or purchase property between 08-00 AM and 10-00 AM having their SUN posited in the 12th   bhava , will not enjoy the appreciation of land value , as the Govt. , will  Acquire the land…whereas , those who purchase property on Sundays and Tuesdays , between    08-00 & 10-00 AM(and having Sun in the 11th) , will get the full advantage of the rise in price …

       Mercury’s  Hora :
 Mercury owns Gemini & Virgo , is strong on Wednesdays , and when the rising Sign is Gemini and/or Virgo and any of it’s stars , Aslesha , Jyeshta and particularly Revati is rising…
       Merc Hora is the ideal Hora for admitting a child to school/college…a very important tip to follow…Take up appointments as a teacher , professor , accountant , auditor mathematician on Thursdays in Merc Hora…Purchase a lottery ticket/bonds/securities/shares/prize bond(s) , on a Wednesday during Mercury hora , OR on the day of the 11th    lord during Merc Hora…
Float a Company or underwrite during Mercury Hora for best results…Important Documents should preferably br drafted during Mercury Hora…
Neurasthenic patients and those who suffer from Vitamin B deficiency should begin treatment during Merc Hora for best results…It has been found that generally , those who commit forgery or fraud , do it on Saturdays in Mercury Hora or on Wednesdays in Saturn Hora…Important documents drafted during Mercurh Hora will prove advantageous…and so on…


       Jupiter’s Hora :
       Jupiter is strong on Thursdays , or when Moon transit’s the stars ,  Poorvabhadrapada 1st to 3rd padas , and Jupiter owned Signs Sagittarius and Pisces , and  when transiting Punarvasu or Vishakha stars...or ,  when Moon transits Cancer…the exaltation Sign of Jupiter…
      Approach people for favours  , and if one wants a loan or over-draft facilities from a Bank ,  approach the proper authorities during Jupiter Hora , chances of success are maximized… If Jupiter is a benefic for you(as per K.P.) , and you are running Jupiter’s Dasa , remember to meet Ministers or high Govt. Officers during Jupiter Hora for best results…
      Dealers in Gold & Silver , should open a new Branch on Thursdays during Jupiter Hora when Jupiter is in direct motion…good nusiness will be assured…
      Similarly , prefer Jupiter Hora to take treatment , purchase a new vehicle especially on Friday…Refrigerators on Saturdays during Jup Hora , invest in Shipping or Petrol Co. , shares on Mondays , during Jup Hora.
      Open a Bank account/take a junior auditor’s post , during Jup Hora.
 Take an Insurance Policy on Saturdays during Jupiter’s Hora…your endowment policy will mature and you will enjoy the benefits…BUT , if the Insurance Agent obtains the signature of the person on a Life Policy , during the conjoined period of Saturn and Mars , the Insurance Company will lose heavily , whereas it will prove to be a Fortune for the beneficiaries/family members of the native…who has signed his policy during Mars Hora on a Saturday or Saturn Hora on a Tuesday…! 
For laying Foundation stone for Hospitals Jup Hora on Sundays…
buildings for Police  , Military ,  Courts ,  Shipping offices , Mondays .
For Industry , Educational Institutions , All India Radio station , Textiles , Engng. , etc. ,  Wednesdays.                                       
Legal Dept. , Temples , Churches , Mosques and Charitable Institutions , Thursdays…
For Animal husbandry , Food Dept. , Agriculture Dept. , Tea Board , prohibition dept. , Gold decontrol  on Jupiter Hora on Fridays…
Insurance Corporations , Labour Dept. , Mines & Minerals Dept. ,
Retrenchment , Intelligence Dept. , Quarters for :Refugees due to Famine , Flood and other Natural Disasters , for servants…slaughter House etc.. on Saturdays…


      Venus Hora :
     Very strong for Venusian matters , on Fridays , or , days when Moon transits Bharani , Purvashada and Purvaphalguni stars…or when Moon transits Taurus , Libra or Pisces(the exaltation sign of Venus)…When Moon transits in Venus’s star , one commences to do matters signified by Venus knowingly or unknowingly…and success is sure…Peace and Prosperity , as also Harmony and Happiness are promised.
      Select Venus Hora to meet an Officer who is impatient or a hard task-master , and moody…you will find him calm and co-operating…Even a militant , arrogant , foolhardy and rash person will give a patient hearing and will be helpful…Tempers are cooled during this Hora…
     Write love-letters during Venus Hora , you will succeed beyond your expectations…If you receive a reply/ letter  , do not make haste , wait till Venus Hora operates , you will be surprised…Now you could well ask , ”she has already written the letter and posted it , how can the Hora change its contents ?

The Answer is simple…knowingly or un-knowingly you can open the letter at any Hora…
If it is Saturn Hora , she will express her inability to meet you and she will fix a date , some other time/date…If it is Mars Hora , the tone of the letter will upset you…you could think of ‘forgetting’ the whole affair…but if it be Venus Hora , she will fix a date for dinner , movie , party
Or meeting at an unfrequented place…etc…It follows that one should select Venus  Hora if you desire to cultivate a true and lasting relationship.. or love…
Also ,  select Venus Hora to purchase jewels , silk sarees , costly dress , scents and other beauty aids.
Also , this hour will be helpful if you want to sever relations with anyone too…!
It is fervently hoped that Readers use the Hora very carefully for the specific objective chosen.
courtesy; http://astrologeranjaan.blogspot.com.tq
===================================

=====================================

Saturday, July 11, 2020






God is one, God is one, God is one for everyone


Lyrics:

God here, God there, God God everywhere
God is one, God is one, God is one for everyone

Rama here, Rama  there, Rama Rama  everywhere
God is one, God is one, God is one for everyone

Krishna here, Krishna there, Krishna  Krishna  everywhere
God is one, God is one, God is one for everyone

Buddha here, Buddha there, Buddha  Buddha  everywhere
God is one, God is one, God is one for everyone

Allah here Allah there  Allah Allah everywhere
God is one, God is one, God is one for everyone


Jesus here, Jesus there, Jesus Jesus everywhere
God is one, God is one, God is one for everyone

Shiva here, Shiva there, Shiva, Shiva everywhere
God is one God is one, God is one for everyone

God here, God there, God   God   everywhere
God is one, God is one, God is one for everyone

================== or ================
God here, God there, God God everywhere
God is one, God is one, God is one for everyone

Shiva here, Shiva there, Shiva, Shiva everywhere
God is one God is one, God is one for everyone

Allah here, Allah there, Allah Allah everywhere
God is one, God is one, God is one for everyone

Sai here, Sai there, Sai, Sai everywhere
God is one, God is one, God is one for everyone.

====================================

GOD IS IMPORTANT. If you have God with you, you will have the rest. Real wealth is God. Real health is God. We should make every effort to pray for God. Because we are from God, we should be back to God.


SILENCE, Cleanliness and Forbearance. In Silence can be heard the Voice of God, not in the revelry of noise. Through Cleanliness, you earn purity. By Forbearance, you cultivate Love.



The Lord rushes toward the Bhakta faster than the Bhakta rushes towards HIM.

If you take one step towards Him, He takes a hundred steps towards you !
He will be more than a mother or father. He will foster you from within you, as He has saved and fostered so many Saints who have placed faith in HIM.


GOD IS ALWAYS WITH YOU, IN YOU, AROUND YOU. We should have such a friend.

So actually speaking, real friend is GOD. God is our permanent friend. All worldly pleasures and comforts are like passing clouds.    So today we have to develop compassion. That is the principle of God.

LOVE, LOVE, LOVE. LOVE IS GOD. LIVE IN LOVE.

START THE DAY WITH LOVE. FILL THE DAY WITH LOVE.
SPEND THE DAY WITH LOVE. END THE DAY WITH LOVE.
THIS IS THE WAY TO GOD.

Therefore, we should live in LOVE continuously.


Those who seek to know God must steel themselves to bear insult, injury and torture, with a smile.

Sri Sathya Saibaba


God is One, God is One  God is One for Everyone.



===============================
===================================
This video is a humble offering at the feet of God.
Beautiful bhajan by Sri Sathya Sai Baba Organization .

====================================


Yamuna  Tira  Vihari

Vrindavana  Sanchari

 

Govardhana  Giri  Dhari

Gopala  Krishna  Murari

 

Dasaratha  Nandana  Ram Ram

Dashamukha  Mardana Ram Ram

 

Pashupati  Ranjana  Ram Ram

Papa  Vimochana  Ram Ram

 

Mani  Maya  Bhushana  Ram Ram

Manjula  Bhashana  Ram Ram

 

Rana  Jaya  Bhishana  Ram Ram

Raghu  Kula  Bhushana  Ram Ram

https://www.youtube.com/watch?v=HPLkZZDSksg&ab_channel=Adhy%C4%81tman

https://www.youtube.com/watch?v=Bi6UFIca0b4&ab_channel=Adhy%C4%81tmanAdhy%C4%81tman
=================================

Yamuna Teera Vihari  Brindavana Sanchari

Govardhana Giridhari  Gopala Krishna Murari

Chithravathi Teera Vihari   Chinni Krishna Murari                        [ Govardhana Giridhari ... ]

Prema swrupa  Sanchari  Parthi Puri Swara Sai

[ Govardhana Giridhari ... ]

 

Lord Krishna moves about in Brindavan and in the hearts of devotees filled with divine love and also on the banks of river Yamuna.

 The cute little Krishna who lifted the hillock Govardhana with his little finger, is the Sai of Parthi on the banks of the river Chitravathi.

===================================

=====================================


Thursday, July 2, 2020

பூண்டை எப்படியெல்லாம் சாப்பிட்டால் தேங்கி இருக்கும் சளியை வெளியேற்றலாம் என்று தெரிஞ்சுக்குங்க.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஒன்று பூண்டு, பூண்டில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது என்பதை நாம் உணர்வோம். அதோடு பூண்டில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பல வகையான சல்ஃபர் கலவைகள் இருக்கிறது.
பூண்டில் இருந்து வரும் மிகவும் அடர்தியான நாற்றத்திற்கு இதுவே காரணம். இதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் அல்சீனல் நம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டதாக இருக்கிறது. அதோடு இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்து காணப்படுகிறது.
உடலில் ஏற்படும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது பூண்டு.
தினமும் ஏதேனும் ஒரு வகையில் பூண்டினை நாம் சேர்த்துக் கொள்கிறோம். இப்போது குளிர் காலம் என்பதால் ஏற்படக்கூடிய சளிப்பிரச்சனையை பூண்டினைக் கொண்டு எப்படி தீர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இஞ்சி :
பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து இந்த மருந்து தயாரிக்கலாம். இரண்டு இன்ச் அளவுள்ள இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் பின்னர் இரண்டு அல்லது மூன்று பூண்டினை தோல் சீவிக் கொள்ளுங்கள். இவற்றை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
சுமார் ஐந்து நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் சூடு ஆறியதும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறையும், அரை ஸ்பூன் தேனையும் சேர்த்து பருகலாம்.
வெங்காயம் :
சிறிதளவு வெங்காயத்தையும்,பூண்டையும் தனித்தனியாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்தக் கலவையை அரை டம்பளர் தண்ணீரில் சேர்த்து சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்துக் குடிக்கலாம்.
இவை சளியினால் ஏற்படக்கூடிய பிறத்தொல்லைகளுக்கும் தீர்வளிக்கும்.
மஞ்சள் பூண்டு :
தோல் நீக்கி பாதியாக நறுக்கிய பூண்டு ஆறு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,அரைஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு ஸ்பூன் தேன்,ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதில் ஊறிய பூண்டினை எடுத்து அப்படியே சாப்பிடுங்கள். ஒரு முறை தயாரித்ததை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துவதாக இருந்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
பூண்டு சூப் :
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள், அது பொன்னிறமாக மாறியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கக்கூடிய அரைகப் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
சைவ உணவு சாப்பிடுபவரக இருந்தால் இதனுடன் ஏதேனும் காய்கறியை சேர்க்கலாம். இதே அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் இத்துடன் சிக்கன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவை நன்றாக வதங்கியதும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதில் சேர்த்திருக்கும் காய்கறி அல்லது சிக்கன் வெந்ததும் அதனை இறக்கி விடலாம்.
பூண்டு டீ :
ஒரு கப் அளவு தண்ணீரை கொதிக்க வைத்திடுங்கள். அதில் பாதியாக நறுக்கிய ஐந்தாறு பூண்டினை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் அவை கொதித்ததும் இறக்கி விடலாம்.
பின்னர் அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் அசை ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
வேறு முறைகள் :
இந்த வழிகளில் பூண்டினை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், இதைத் தவிர நேரடியாக ஒரு பூண்டை அப்படியே கடித்துச் சாப்பிடலாம். இதனால் நாற்றம் வரும் என்று பயப்படுகிறவர்கள். தேனில் ஊறிய பூண்டினை எடுத்துச் சாப்பிடலாம்.
இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை இதனைச் செய்ய வேண்டும். இதைத் தாண்டியும் சளி குறையவில்லையெனில் மருத்துவரை சந்திக்கலாம்.
நன்மை 1 :
பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.
நன்மை 2 :
ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும்.
நன்மை 3 :
ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
நன்மை 4 :
பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீழ்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது.
நன்மை 5 :
பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும்.
நன்மை 6 :
இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் அடங்கியுள்ளதால், பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். ஆனால் இது ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
நன்மை 7 :
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது PhIP என்ற ஒரு வகை ஹெட்ரோசைக்ளிக் அமைன் (HCA). பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு தான் PhIP-யை கார்சினோஜென்ஸாக மாற்றுகிறது.இதனால் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது.

மூல நோயை ஒரே வாரத்தில் குணமாக குப்பைமேனி மற்றும் துத்திக் கீரையை இப்படி சாப்பிடுங்க!

பெரும்பாலும் இந்த மூலநோயினால் பாதிக்கப் படுவது..அதிக பாரம் தூக்குபவர்கள், அதே நேரம் ட்ரைவிங் செய்பவர்கள் தான். கர்ப்பிணி பெண்கள், அதிக நேரம் நின்று வேலை செய்வோரையும் மூல நோய் விட்டு வைப்பதில்லை. ஆரம்பத்தில் பெரிதாக பாதிக்காவிட்டாலும் சில நாட்களிலேயே உயிரை எடுக்க தொடங்கிவிடும். குறிப்பாக வெளி மூலம் இருந்தால் விஷேசங்களுக்கு செல்வதற்கு கூட தயங்குவோம்.
அந்த அளவிற்கு தொல்லை கொடுக்கும். சரி இதற்கான தீர்வு என்ன? வாங்க பார்க்கலாம்.! துத்திக் கீரை..! இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று தான். குறிப்பாக கிராமங்களில் குப்பைமேனி, துத்திக் கீரை போன்றவை தெரு ஓரங்களில் கிடைக்கக் கூடியவை.
இதனுடன் மோர் ஒரு கப் தேவையாகிறது. முதலில் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கப் மோர் எடுத்து அதில் துத்திக் கீரை பேஸ்ட் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். சுவைக்காக உப்பு சிறிதளவும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மருந்து தயார். இதனை காலையில் குடியுங்கள்.
தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர மூல நோய் முற்றிலும் குணமாகிவிடும்.அதே போல் நீங்கள் அரைத்த துத்திக் கீரை பேஸ்ட் மீதமிருந்தால் உங்களுக்கு மலச்சிக்கலால் ஏற்பட்ட ஆசன வாய் புண்களை இந்த பேஸ்ட் நீக்கி விடும். அதனால் சிறிதளவு ஆசன வாயில் பூசி விடுங்கள். அனைத்து பிரைச்சனைகளையும் இந்த ஒற்றைக் கீரை தீர்த்துவிடும்..!
courtesy;daily tips.
=================================

நரம்புத் தளர்ச்சியை நீக்கி உச்சி முதல் பாதம் வரை நரம்புகளை வலுபடுத்தும் சித்த மருத்துவம்

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது.
இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது நரம்புத் தளர்ச்சி மட்டும்தான். எழுதும் போதும் கை நடுங்கும், எதை எடுத்தாலும் ஒரு வகையான தடுமாற்றம் மற்றும் மனசோர்வு, தூக்கமில்லாமல் தவிப்பது போன்றவைகளாகும்.
இது போன்ற பாதிப்புகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி அழுவதும், சிரிப்பதும் பைத்தியம் பிடித்தது போன்று காணப்படுவார்கள்.
அது போன்றவர்கள் எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவு வகைகள் மற்றும் காலை உணவுடன் இனிப்பு சிறிதளவு சேர்த்து உண்டு வரலாம். அல்லது தங்களுக்கு பிடித்த இயற்கையான இடங்களுக்கு சென்று வரலாம்.
மேலும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சில உணவு வகைகளை பார்ப்போம்:
  • அமுக்கிராங் கிழங்கு: 500 கிராம்
  • மிளகு: 25 கிராம்
  • சுக்கு: 25 கிராம்
  • அதிமதுரம்: 25 கிராம்
  • ஏலஅரிசி : 25 கிராம்
  • சாதிக்காய்: 25 கிராம்
  • தேன்: 1 லிட்டர்
  • பால்: அரை லிட்டர்.
செய்முறை:
அமுக்கிராங் கிழங்கை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் பானையில் பாலை ஊற்றி, வெள்ளைத் துணியால் பானையின் மேல் போட்டு, இடித்து வைத்துள்ள அமுக்கிராங் கிழங்கு பொடியை துணியின் மேல் உளர்த்தி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் அரை மணி நேரத்திற்கு நெருப்பில் அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
2 மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுத்துக்கொள்ளவும்.
அனைத்து பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும். தேனை ஒரு பானையில் ஊற்றி மேற்கண்ட பொடிகளை சிறிது சிறிதாகக் போட்டு நன்கு கிளறி கிண்டி வைத்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை:
காலை சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் இரவு சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் சாப்பிட்டு விட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வரவும். இதனை 48 நாட்கள் சப்பிட்டு வந்தால் போதும் நரம்புத்தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்
courtesy;daily tips.
==============================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...