Followers

Sunday, May 3, 2020

முதலாளி... நீங்களே இந்த வேலை தான் செய்றீங்க; நான் செய்றதுக்கென்ன, எனக்கொண்ணும் கஷ்டமில்லங்க...' என்றான். அவர், அவன் தலையை கோதியபடியே, 'பிழைச்சுக்குவே...' என்றார்.
சாணத்தை உருட்டி, வறட்டி தட்டுவதும், கடையில் தீவனங்கள் வாங்கி வருவதும், மாடுகளை குளிப்பாட்டுவதும் மற்றும் வரவு - செலவு கணக்கு எழுதுவதும் என, அவன் வேலைகள் நீண்டன.
எல்லோர்க்கும் என்றும் அன்பு வணக்கம் சகோ தோழமை களே........
வெற்றி சுலபமானால்.......................
''அது ரொம்ப சுலபம்,'' என்றான் முரளி.
பல ஆண்டுகளுக்குப் பின், சொந்த ஊருக்கு திரும்பியிருந்த முரளியை, ஆர்வத்தோடு நோக்கினர், அவன் நண்பர்கள்.
அவன் முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் பாதாளத்திற்கும், ஆகாயத்திற்கும் உள்ள வித்தியாசம்.
முரளி ஊரை விட்டுப் போகும் போது, உடுத்திக் கொள்ள நல்ல உடையோ, உடைமைகளை வைத்துக் கொள்ள நல்ல பெட்டியோ இல்லை. அவனுடைய பரட்டைத் தலைக்கு எண்ணெய் கூட, பக்கத்து வீட்டில் வாங்கித் தான் தடவி விட்டாள் அவன் அம்மா.
'பத்திரமா பாத்துக்கங்க...' என்று கூறி, செங்கல்பட்டுக்காரரிடம் கைப்பிடித்துக் கொடுத்தனர், அவனது பெற்றோர்.
செங்கல்பட்டுக்காரரிடம், பத்து ஜெர்சி பசுக்கள் இருந்தன. அவைகளை பராமரித்து, பால் கறந்து, வினியோகம் செய்து, பால் பண்ணை நடத்தி வந்தார்.
முரளிக்கு, முதலில், சாணம் அள்ளி, கொட்டகையை கழுவி சுத்தம் செய்யும் வேலை.
'பிடிச்சிருக்கா பாரு... இல்லனா வேற வேலையில சேர்த்து விடறேன்...' என்றார், செங்கல்பட்டுக்காரர்.
'முதலாளி... நீங்களே இந்த வேலை தான் செய்றீங்க; நான் செய்றதுக்கென்ன, எனக்கொண்ணும் கஷ்டமில்லங்க...' என்றான். அவர், அவன் தலையை கோதியபடியே, 'பிழைச்சுக்குவே...' என்றார்.
சாணத்தை உருட்டி, வறட்டி தட்டுவதும், கடையில் தீவனங்கள் வாங்கி வருவதும், மாடுகளை குளிப்பாட்டுவதும் மற்றும் வரவு - செலவு கணக்கு எழுதுவதும் என, அவன் வேலைகள் நீண்டன.
கொட்டகையில் பசுக்கள் இசை கேட்பதற்காக, சி.டி., போடுவர். பசுக்கள் மயங்குகிறதோ இல்லையோ, அவன் கரைந்து உருகுவான். வேலையே அனுபவமாய், அனுபவமே வேலையாய் மாற்றிக் கொண்டான்.
பிரபல பால் நிறுவனம், பண்ணையை குத்தகைக்கு எடுக்க. பசுக்கள் பெருகி, அதையொட்டிய வேலைகளும், அதற்கான ஆட்களுமாய் விரிவடைய, இப்போது பண்ணையின் நிர்வாகம், கிட்டத்தட்ட முரளியின் கைக்கு வந்தது.
நல்ல சம்பளம், சாப்பாடு, இருப்பிட வசதி மற்றும் வாகனம் என்று, அவனை உயரத்தில் வைத்திருந்தார் முதலாளி. ஆனாலும், அவன் இப்போதும் தொழுவத்தில் தான் அதிக நேரம் இருந்தான். தொழுவம் அவனுக்கு தொழிற்சாலை.
ஆண்டுகள் சில கடந்த பின், பளிச்சென்று அவன் ஊரில் வந்து இறங்கவும், பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
'முரளி... அடையாளமே தெரியலயே... நல்லா தேறிட்டியே...' என்றனர்.
திருஷ்டி கழித்தாள் அம்மா.
தான் கொண்டு வந்திருந்த பணத்தை கைநிறைய எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.
'இத்தனை வருஷத்துல நாங்க, ஒரு அங்குலம் கூட வளரல... நீ எப்படிடா...' என்று நண்பர்கள் கேட்டதற்கு, முரளி கூறிய வார்த்தை தான், 'வெற்றி ரொம்ப ஈஸி!'
'நாங்களும், உன்னைப் போல ஆகணும்டா; வேலை கிடைக்குமாடா...' என்றவர்களுக்கு, 'செய்யத் தயாராய் இருந்தா, எல்லா இடத்திலும் வேலை கிடைக்கும்...' என்றான் முரளி.
'நீ இருக்கிற இடத்துக்கு அழைச்சிட்டு போய், எங்களுக்கு வேலை வாங்கி கொடுப்பியா...' என்றனர் சிலர். 'தாராளமா... வீட்ல அனுமதி வாங்கிட்டு வாங்க...' என்றான்.
'கேட்கணுமா... சும்மா இழுத்துக்கிட்டு போ தம்பி; எப்படியாவது இவனுகளையும் உன்னளவுக்கு கொண்டு வந்திடு...' என்றனர் அவர்களது பெற்றோர்.
முரளி ஊருக்கு புறப்பட்டபோது, அவனோடு வந்தவர்கள் நாலு பேர்!
அவர்களை டவுனில் உள்ள தன் அறையில் தங்க வைத்தான் முரளி. அவன் அறையில் இருந்த பேன், கட்டில் மற்றும் மேஜை போன்ற வசதிகளைப் பார்த்து, 'இந்த மாதிரி இடத்துல, சம்பளமே இல்லாம வேலை பார்க்கலாம் போலிருக்கே... ஊர்ல அவன் என்னமோ, மாட்டு கொட்டாய்ல சாணி அள்ளுற வேலை பார்க்குறான்னுல்ல சொன்னாங்க...' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
''பேக்டரி ஒரு இடத்துல, நிர்வாக அலுவலகம் வேற இடத்துல இருக்குற மாதிரி, இதுவும் இருக்கும் போல... முதல்லயே தெரியாம போச்சுடா. நாம என்னமோ நினைச்சோம்; ஆனா, இவனுக்கு எவ்வளவு சொகுசான வேலை. அன்னைக்கே நாமும் வந்திருந்தா, இந்நேரம் கைநிறைய சம்பாதிச்சிருக்கலாம்...'' என்றான் அவர்களில் ஒருவன்.
மறுநாள், அவர்களை பண்ணைக்கு அழைத்துச் சென்றான் முரளி. நவீனமாக இருந்த பண்ணை மற்றும் பசுமையாக இருந்த தீவன தோட்டம் எல்லாம் சுற்றிக் காட்டி, ''பிடிச்சிருக்கா?'' என்று கேட்டான்.
'சுற்றுலா தலம் மாதிரி இருக்கு...' என்றனர்.
''இங்கே வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் தானே?''
''என்னடா இப்படி கேட்டுட்ட... அதுக்குத்தானே வந்திருக்கோம். இப்பவே ஆரம்பிச்சுடறோம். என்ன வேலை சொல்லு... பால் கணக்கு எழுதணுமா, பால் வண்டியில போகணுமா, வேலையை மேற்பார்வை பார்க்கணுமா...'' என்று ஆர்வமாய் கேட்டான் ஒருவன்.
''அதுக்கு முன், ஒரு வேலை இருக்கு வாங்க,'' என்று அழைத்துப் போய், அவர்கள் கையில் சின்ன தகரமும், ஒரு முறமும் கொடுத்து, ''முதல்ல தொழுவத்தை சுத்தம் செய்யலாம் வாங்க,'' என்று கூறி முன்னால் நடந்தவன், ''பால் பண்ணை வேலைங்கறது, பேக்டரி வேலை மாதிரி இரும்பும், இயந்திரமும் கலந்த வேலையில்ல; உயிரும், உணர்வும் கலந்தது. நமக்கு இது புதுசில்ல. ஊர்ல மாடு இல்லாத வீடே இல்ல. ஒவ்வொரு மாட்டையும், நம்ம குடும்பத்தில் ஒருத்தராகவே நினைச்சு வளர்க்கறோம்; பழகுறோம். அதோடு ரொம்ப இணக்கமா, நேசமா இருக்கிற மாதிரி, இங்கும் இதுகளோடு இருக்கணும்.
''பசுக்கள வசியப் படுத்தணும்ன்னா, முதல்ல அதுகளோட கழிவுகளை அப்புறப்படுத்தி, அவைகளை குளிப்பாட்டி, தீவனம் கொடுத்து, இடம் மாற்றி கட்டி, அதுங்களோடு பேசி, அதுங்க மொழியை புரிஞ்சுக்கிட்டோம்ன்னு வைங்க... அதுகளோட சிக்கலும், புரிஞ்சு போகும். அதுகளுக்கு என்ன தேவை, என்ன தேவையில்லன்னு தெரிய வரும்.
''பசுக்களோடு ஐக்கியம் ஆகிட்டா, மத்த வேலைகள புரிஞ்சு செய்ய ஆரம்பிச்சிடலாம்; சிரமமாகவே இருக்காது. போகப் போக நிர்வாக வேலைய கத்துக்கிட்டா பொறுப்பும், சவுகரியங்களும் வரும். எதிர்காலத்துல லோன் போட்டு, பத்து பசு மாடுக வாங்கி, சொந்தமா பால் பண்ணையே நடத்தலாம். எல்லா வேலையையும் கத்துக்கிட்டா, யாரும் நம்மை ஏமாத்தவோ, பொய் சொல்லவோ முடியாது.
''என்னைப் போல வரணும்ன்னு தானே ஆசைப்பட்டீங்க. என்ன செய்தால் என்னளவு வரமுடியும்ன்னு தெரியணும்ல... நான் இங்க வந்து செஞ்ச முதல் வேலை இதுதான்! இங்கிருந்து தான் ஒவ்வொண்ணா கத்துக்கிட்டு, மேல வந்தேன். ஆனா, எனக்கு பல வருஷம் ஆச்சு. நீங்க தீயா வேலை பார்த்தா சில மாசத்துல, தனி பண்ணை கூட ஆரம்பிச்சுடலாம்...'' என்று பேசியபடியே நண்பர்களை திரும்பிப் பார்த்தான் முரளி.
அவன் பின்னால் வந்தவர்களில், ஒருவனைத் தவிர, மற்றவர்கள் திரும்பிப் போய் கொண்டிருந்தனர்.
''ரொம்ப சுலபம்ன்னு சொன்னியா... அதோடில்லாமல், வந்ததும் சாப்பாடு, சினிமான்னு கவனிச்சியா... பயலுக கற்பனையில மிதந்தாங்க. ஆபீஸ் வேலை, நேரத்துக்கு சாப்பாடு, மாசம் பொறந்தா சம்பளம்ன்னு நினைச்சுட்டாங்க. இங்க வந்து, சாணி அள்ளச் சொல்லி, தகரத்தை கையில் கொடுத்ததும் மிரண்டுட்டாங்க. ஊர்ல வேலை செய்ய உடம்பு வணங்காத பசங்க, இதெல்லாம் எப்படி செய்வாங்க?
''போறானுங்க பாரு... இவ்வளவு தூரம் பணம் செலவழிச்சு, கூட்டிக்கிட்டு வந்து, மூணு நாள் சோறு போட்டதுக்கு, ஒரு நன்றி கூட சொல்லாம...'' என்றான் போகாமல் நின்றிருந்த நண்பன்.
''அவங்க ஏமாற்றத்துல போறாங்க. நான் சுலபம்ன்னு சொன்னது, சின்ன வேலையிலிருந்து துவங்கலாம்ங்கிறதை... சாணி அள்றது சுலபமா, கஷ்டமா நீ சொல்லு...'' கேட்டான் முரளி.
''உனக்கு சுலபம்; உனக்கு மட்டும் தான் சுலபம். மூணு நாள் உபசாரத்துக்கு நன்றி சொல்லத் தான் நின்னேன்,'' என்று சொல்லி, அவனும் அந்த மூவரணியைப் பின்தொடர, புன்னகையுடன் தொழுவம் நோக்கி நடந்தான் முரளி.
அவனை எதிர்பார்த்து, ஆவலாக குரல் கொடுத்தன பசுக்கள்!
எஸ். செங்கோடன்
அன்பு நன்றி சகோ
============================================================
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !
I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba
When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba
உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். – பாபா
Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam
அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!
"ஒன்று நினைக் கில் அது ஒழிந்து மற்றொன்றாகும்; அன்றில் அது வரினும் வந்தெய்தும்; ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்; எனையாளும் ஈசன் செயல்'
ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
" விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....! முடியும் என்று உன்னை நம்பு...!!"
ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
=================================

Saturday, May 2, 2020

வட்டிப் பணம், சேரச் சேர, என் மனைவியின் ஆணவமும், கர்வமும் வளரத் துவங்கியது.
இந்நிலையில் தான், இன்று நான், பதற்றப்படுவதற்கு காரணமான, அந்த சம்பவம், நிகழ்ந்தது...................
என்றும் அன்பான வணக்கம் சகோ / தோழமையே.................
நண்பேன்டா!...............
சாமிநாதன், இறந்து விட்டதாக, அவனது கடைசி மகள் வந்து சொல்லி விட்டு போனாள்; எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.
நானும், சாமண்ணா என்று அழைக்கப்படும் சாமிநாதனும் ஒரே வகுப்பில், ஒரே டெஸ்க்கில் அமர்ந்து படித்து, வளர்ந்தவர்கள்.
நான், பள்ளி செல்லாத நாட்களில், வகுப்பில் நடந்த பாடங்களை, அவன் தான் எனக்கு விளக்குவான்.
இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் அப்பா, வளையல் வியாபாரி; அவன் அப்பா, சிறிய சீட்டுக் கம்பெனியில், குமாஸ்தா. சொற்ப வருமானம்; இவன் தான் முதல் பிள்ளை; மற்ற மூவரும், பெண்கள். இளமையிலேயே வறுமை.
அதனால், அவன் என்னை போல, பத்தாம் வகுப்பு வரை படிக்க முடியவில்லை. எட்டாம் வகுப்போடு படிப்புக்கு, 'குட்பை' சொல்லி, மளிகை கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.
நான், என் தந்தையின் கடையை விஸ்தரித்து, வியாபாரத்தை விருத்தி செய்தேன்.
எல்லார் வாழ்விலும் வருவது போல, எங்கள் வாழ்விலும், திருமணம் வந்தது; அவன் திருமணத்திற்கு பின் தான், என் திருமணம் நடந்தது.
அவனுக்கு வாய்த்தவள், உத்தமி; ஏழையானாலும், அடக்கமானவள்; பரம சாது. அவனுக்கு, மூன்று பெண் குழந்தைகள்; ஆண் வாரிசு இல்லை.
எனக்கு, குடி, புகை பிடிக்கும் பழக்கத்தோடு, கொஞ்சம் பொய் சொல்லும் பழக்கமும் ஒன்றன் பின் ஒன்றாக, தொற்றிக் கொண்டது.
எப்போதாவது, சந்தோஷமாகவோ அல்லது துக்கமாகவோ இருந்தால், மதுபான கடைக்கு செல்வேன்.
வழியில், அவன் எங்காவது தென்பட்டால், கம்பெனி கொடுக்க சொல்வேன். சில சமயம் வருவான்; பல சமயம் மறுப்பான். இப்படி எங்கள் நட்பு தொடர்ந்தது.
இதினிடையே, எனக்கு, குடல் இறக்க ஆபரேஷன் நடந்ததால், திருமணம் செய்விக்க தயங்கினர், என் பெற்றோர்.
சாமண்ணா தான், அவர்கள் பயத்தை போக்கி, எனக்கு திருமணம் செய்து வைக்க, அவர்களை வற்புறுத்தி, சம்மதிக்க வைத்தான்.
எனக்கு வாய்த்த மகராசி பெயர் ராதா; அந்த காலத்து, எம்.ஆர்.ராதாவை நினைவுபடுத்தும், வில்லத்தனம் நிறைந்தவள். வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், கட்டுப்பாடு குறைவு; செல்லம் அதிகம். யாரையும் உதாசீனமாக பேசுவாள். என் வியாபாரம் சரிந்திருந்த நிலையில், அவள் தந்தை பணம் கொடுத்து, ஸ்திரபடுத்தியதால், நானும், அவள் சொல்லுக்கு அடிபணிய நேரலாயிற்று.
பற்றாக்குறைக்கு, வீட்டிலேயே, லேவா தேவி வியாபாரம் செய்ய துவங்கினாள். வீட்டில் வேலை செய்தபடியே சம்பாதிக்கட்டுமே என்று நானும் கண்டுகொள்ளாமல் இருந்தேன்.
வட்டிப் பணம், சேரச் சேர, என் மனைவியின் ஆணவமும், கர்வமும் வளரத் துவங்கியது.
இந்நிலையில் தான், இன்று நான், பதற்றப்படுவதற்கு காரணமான, அந்த சம்பவம், நிகழ்ந்தது.
அன்று, வியாபாரம், 'டல்'லடித்ததாலும், மழை வரும் போல் இருந்ததாலும், சீக்கிரமே கடையை பூட்டி, வீட்டிற்கு வந்தேன். வழக்கம் போல் என் மனைவி வட்டி வசூலுக்கு எங்கோ சென்றிருந்தாள்.
சாப்பிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, விழித்தேன். 'இந்த நேரத்தில், ராதா வர வாய்ப்பில்லயே... சாயந்திரம், 5:00 மணிக்குத் தானே வருவா; மணி, 3:00 தானே ஆகுது; யாராக இருக்கும்...' என, எண்ணியபடி, கதவை திறந்தேன்.
வாசலில் சாமண்ணா தான் நின்றிருந்தான்.
'வாடா சாமா... என்ன இந்த நேரத்தில; உள்ளே வா...' என்றேன்.
'ராதாம்மா இல்லயா?'
'ஏன் அவள கேட்கிறே... அப்போ என்னை பாக்க வரலயா...' என்று கேட்டு, சீண்டி, 'சரி... என்ன விஷயம்ன்னு சொல்லு... அவ, 5:00 மணிக்கு தான் வருவா; வெளியே போயிருக்கிறா...' என்றேன்.
'ஒண்ணுமில்ல; உனக்கு தான் தெரியுமே... என் மூத்த மக, பிரசவத்துக்கு வந்துருக்கா. இது, அவளுக்கு தலை பிரசவம்; நாங்க தான் செய்யணும்... நாலு நாளைக்கு முன், மீனாட்சி நர்சிங் ஹோம்ல சேர்த்தேன்; 'நார்மல் டெலிவரி' ஆகும்ன்னு நினைச்சேன். கடைசியில், 'சிசேரியன்' செய்து தான், குழந்தைய எடுத்தாங்க. மருத்துவச் செலவு, எக்கச்சக்கமா ஆயிருச்சு. குழந்தையையும், பொண்ணையும் காப்பாற்றியே ஆகணும்ன்னு நினைச்சதுல, அப்போ பணத்தை துச்சமாக நினைச்சுட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு, 20 ஆயிரம் ரூபாய் கட்டிட்டேன்.
'மீதம், 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சா, 'டிஸ்சார்ஜ்' செய்து, கூட்டி வரலாம்; அதான், ராதாம்மாவிடம், வட்டிக்கு வாங்கலாம்ன்னு வந்தேன்...' என்றான்.
'டேய் பைத்தியகாரா... அவள பற்றி தான் உனக்கு தெரியுமே... மீட்டர் வட்டி, ஆட்டோ, ஸ்பீடு வட்டின்னு ஆளுக்கு தகுந்த மாதிரி, வட்டி வாங்கும் கில்லாடி; சரியான பொம்பள ரவுடி. வட்டி வரா விட்டால், ரோட்ல நின்னு அசிங்க அசிங்கமா பேசுவா... அவ கிட்ட போயி, கடன் கேட்டு வந்திருக்கீயே... சரி... நீ அசல் மட்டும் தந்தா போதும்; இப்போ, என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல; 10 ஆயிரம் ரூபா தான் இருக்கு; அதை வைச்சுக்க. நாளைக்கோ அல்லது மறுநாளோ நான் ஏற்பாடு செய்றேன் கவலைப்படாத... இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும்; என் மனைவிக்கு தெரிஞ்சா உன்னோடு சேர்த்து என் பாடும் திண்டாட்டமாகிடும்...' என சொல்லியபடியே, 10 ஆயிரம் ரூபாய் எடுக்க, உள்ளே போக எழுந்தேன்.
அப்போது, மீண்டும் வாசற்கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்தேன்.
பக்கத்து தெரு, பத்மநாபன் நின்றிருந்தார்.
'சார்... ராதாம்மா இல்லயா...' என்று கேட்டார்.
'சரியா போச்சு... இவனும், ஏதோ பணமுடைக்கு தான் வந்துருப்பான் போல... இல்லன்னா அவளத் தேடி யாரு வருவா...' என நினைத்தேன்.
என் மனைவியைத் தேடி ஒருவர் வந்தால், ஒன்று பணம் வாங்க வரணும் அல்லது வட்டி கொடுக்க வரணும். ரெண்டையும் தவிர, அவளை பார்க்க, யாரும் வர்றதில்லை. ஏன், அவளது பெற்றோரே வர்றதில்லன்னா பார்த்துக்கங்க!
'அவ சாயந்திரம் தான் வருவா; உங்களுக்கு என்ன வேணும்... ஏதும் விஷயம் இருந்தா சொல்லுங்க; வந்ததும் சொல்லிடுறேன்...' என்றேன்.
'ஒண்ணுமில்ல; என் மனைவி, பொண்ணு காலேஜ் அட்மிஷனுக்காக, இரண்டு லட்ச ரூபாய், ராதாம்மாகிட்ட கடன் வாங்கி இருந்தா; அதில வட்டியும், அசலுமாக சேர்த்து, 50 ஆயிரம் ரூபா கொண்டாந்திருக்கேன். இதை, அவங்ககிட்ட கொடுத்துடுறீங்களா... அப்புறம் அவங்கள பாத்து பேசிக்கிறேன்...' என்றவர், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளாக, 25 தாள் அடங்கிய, பணப்பையை, என்னிடம் தந்தார்.
பணத்தை வாங்கிய நான் மகிழ்ச்சியில் குதித்தேன்.
'டேய் பாருடா... உன் நல்ல மனசுக்கு லட்சுமி தேவியே, தேடி வந்துட்டா. இந்தா... இதை கொண்டு போய், ஆக வேண்டிய வேலைய கவனி; நான், என் பொண்டாட்டிய எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்...' என்று சொல்லி, அவனது தயக்கத்தை போக்கி, அனுப்பி வைத்தேன்.
அதன்பின், அந்த கிராதகி ராதா வந்தால், என்ன பொய் சொல்லி சமாளிக்கலாம் என்று ஆழ்ந்து, யோசிக்க துவங்கினேன்.
வழக்கம் போல ஒரு, 'பெக்' போட்டால், ஐடியா தானே வந்து விட்டு போகிறது என்று எண்ணி, வண்டியை எடுத்து, டாஸ்மாக் கடைக்கு சென்றேன்.
அன்று, என்ன காரணத்தாலோ, 'மப்பு' தலைகேறி விட்டது போலும். என், இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது, இரவு, 8:00 மணி. கொஞ்ச தூரம் தான் பயணித்திருப்பேன்; கண் இருட்டியது. பின், என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
வேலை முடிந்து அந்த வழியாக வந்த சாமண்ணா, என்னை பார்த்திருப்பான் போலும். அவன் தான் என்னையும், வண்டியையும் பத்திரமாக, வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்திருந்தான். அரை மயக்கத்தில், இதையெல்லாம், என்னால் உணர முடிந்தது.
வீட்டிற்கு வந்த போது, ராதா, பத்ரகாளியா கத்துவது என் காதில், துல்லியமாக விழுந்தது.
'இந்த மனுஷனுக்கு, இதே பொழப்பா போச்சு; நேரம், காலம் இல்லாம குடிச்சிட்டு வர்றது... என் அப்பாகிட்ட சொல்லி, இதற்கு ஒரு வழி செய்தே ஆகணும்...' என்று சாமண்ணாவிடம் சொல்வதையும், அதை, அவன் மவுனமாக கேட்பதையும் அரை மயக்கத்தில் உணர முடிந்தது.
மெதுவாக, என்னை படுக்கையில் கிடத்தியவள், சட்டென திரும்பி, 'ஆமாம்... பத்மநாபன் கொடுத்த பணத்தை, எங்க வைச்சுருக்கீங்க...' கனலாய் தெறித்தது அவள் குரல்!
'அதற்குள், பத்மநாபன், விஷயத்தை இவள் காதில் ஊதிட்டானா... அடக் கடவுளே... என்ன சொல்லி சமாளிப்பது...' என, தடுமாறிய வேளையில், மீண்டும் அக்னி பிழம்பாய், அவள் கேட்க, 'மப்'பில் இருந்த நான், பயத்தில் போலீஸ்காரர்களிடம், குற்றவாளிகள் உளறுவது போல, உண்மைகளை கக்கி விட்டேன் என்பது, காலையில், அவள் சொல்லி தான், எனக்கே தெரிந்தது.
சாமண்ணாவுக்கு, அவசரமாக பணம் தேவைன்னு, அவன், மூணு நாளாக நச்சரித்ததாகவும், அதனால், அந்த பணத்தை, அவனுக்கு தந்து விட்டதாகவும், இன்னும், மூன்று மாதத்தில், வட்டியுடன் சேர்த்து தந்து விடுவதாகவும் கூறியுள்ளேன்.
யாரிடம் சொல்லக் கூடாது என்று, தலைப்பாடாய், சாமண்ணாவிடம் முட்டிக் கொண்டேனோ, அவளிடமே, நானே எல்லாத்தையும் உளறி கொட்டியுள்ளேன். இந்த பாழும் குடியால், எந்தவொரு நல்ல காரியமும் செய்ய முடியவில்லை.
சாமண்ணா இறந்து விட்டான் என, அவனது மகள் வந்து சொன்ன போது, நல்லவேளையாக, என் மனைவி வெளியே போயிருந்தாள். கொஞ்ச நேரத்தில் வந்து விடுவாள்... அதன்பின் என்ன நடக்குமோ நினைத்துப் பார்க்கவே, பயமாக இருந்தது.
பணம் தான் அவளுக்கு முக்கியம்; சாவு வீடு என்று கூட பார்க்க மாட்டாள். பணம் செட்டில் செய்யா விட்டால், சாமண்ணா பிணத்தை எடுக்க கூட, சம்மதிக்க மாட்டாள்.
சவ ஊர்வலமும் எங்கள் வீட்டை தாண்டி தான் போக வேண்டும்; சாமண்ணா மனைவி பரம சாது; அவள் கணவனை இழந்த துக்கத்தில் பிணத்தை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வாளா, பணத்துக்கு ஏற்பாடு செய்வாளா... 'கடவுளே என்ன செய்வேன்... புரட்டக் கூட, என்னிடம் அவ்வளவு பணம் இல்லயே... இறைவா... நீ தான், ஏதாவது வழி காட்டணும்...' என்று புலம்பித் தவித்தேன்.
நான் பயந்த மாதிரியே, அரக்க பரக்க உள்ளே வந்த ராதா, நான் சோகமாக இருப்பதை பார்த்ததும், ''உங்க நண்பர் சாமண்ணா, இறந்துட்டாராமில்ல... ஆமாம், உங்க கிட்ட வாங்கின, 50 ஆயிரம் ரூபாய கேட்டீங்களா... பத்திரமும் கிடையாது; பாண்டும் இல்ல. எந்த ஆதாரமும் இல்லாம, கொடை வள்ளல் பரம்பரை போல, அள்ளி கொடுத்துட்டீங்களே... சீக்கிரம் போய் கேளுங்க; அப்புறம், கூட்டம் சேர்ந்துட்டால், காரியம் கெட்டுப் போயிடும்,'' என்றாள்.
'அடி பாதகி... இறந்தவன், என் நண்பன்; துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்தினருக்கு, ஆறுதல் சொல்றத விட்டு, எப்படிடீ என்னால பணத்தை போயி கேட்க முடியும்... கடவுளே... இந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு சக்தி கொடு...'என எண்ணியவனுக்கு, திடீரென்று அந்த ஐடியா வர, சட்டென்று எழுந்தேன்.
'இப்ப தான் நீங்க சிங்கம்... சீக்கிரம் போங்க; எவ்வளவு தந்தாலும், வாங்கிட்டு வந்துருங்க,'' என்றவளை, முறைத்து, பின், அவள் காலடியில், 'தொபுக்கடீர்' என விழுந்தேன்.
''என் கால்ல எதுக்கு விழுறீங்க...'' என்று சிடுசிடுத்த அந்த வட்டி புயல், புரியாமல் என்னை பார்த்து, ''உங்க நண்பர் இறந்தது சோகம் தான்; அதுக்காக, நமக்கு வர வேண்டியத கேட்காம இருக்க முடியுமா... உங்களுக்கு, சங்கடமாக இருந்தா, நானும் கூட வர்றேன்; புறப்படுங்க,'' என்றவளை தடுத்து, ''ராதா... என்னை மன்னிச்சுடு; நான் இப்போ, சொல்லப் போறதை கேட்டு, நீ ஆத்திரப்பட்டாலும் சரி, என்னை, என்ன வேணும்ன்னாலும் செய்துக்க...
''அன்னைக்கி உண்மையில என்ன நடந்ததுன்னா... பத்மநாபன் கொடுத்த பணத்த, பீரோவில் வைக்க மறந்து, பேன்ட் பாக்கெட்டில் வைச்சுருந்தேன். அளவுக்கு மீறி குடிச்சிருந்ததால, நான் அசந்த நேரத்தில, எவனோ அந்த பணத்தை களவாடிட்டான். அந்த சோகத்தில் தான், கண்மண் தெரியாமல் குடிச்சு, ரோட்டுல விழுந்து கிடந்தேன். நீ திட்டுவேன்னு பயந்து, சாமண்ணாவுக்கு கொடுத்ததாக, பொய் சொல்லிட்டேன்.
''நீ வேறு, அன்னைக்கு ரொம்ப கோபத்தில இருந்தியா... அப்புறமா, மெல்ல உண்மைய சொல்லி, உன்னை சமாதானபடுத்தலாம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா, அதற்குள், சாமண்ணா திடீரென்று இறந்து, இந்த உண்மைய சொல்ல வைச்சுட்டான்,'' என்றேன்.
கடுஞ் சீற்றத்துடன் திரும்பிய ராதா, ''பாழா போன உங்க குடி பழக்கத்தால, அந்த நல்லவரை சந்தேகப்பட்டேனே... ஒண்ணா, ரெண்டா... 50 ஆயிரம் ரூபாய் ஆச்சே... என் வயிறு பற்றி எரியுதே... இன்னும், இதுமாதிரி எத்தனை விஷயங்கள, என்கிட்ட இருந்து மறைச்சு வச்சுருக்கீங்க... காசு அருமை தெரியாத, எருமை மாட்டு ஜென்மம்.
''என் அப்பாவை வரவழைச்சு, முதல்ல, உங்கள விவகாரத்து செய்துட்டு தான், மறுவேலை. பாவி மனுஷா... என்னவொரு பொய், பித்தலாட்டம் அதுவும், கட்டின பொண்டாட்டி கிட்ட... அதுதான், என் வயித்துல ஒரு புழு, பூச்சி கூட தங்க மாட்டேங்குது,'' என்று கத்தி, படாரென்று, அவள் அறை கதவை சாத்தி, படுக்கையில் விழுந்தாள்.
'இதுமாதிரி அவள், இன்னும் எத்தனையோ நாட்கள் ஏன் மாதங்கள் கூட, வசை பாடுவாள்; கரித்து கொட்டுவாள்; சினத்துடன் சீறுவாள்; வார்த்தைகளை, அக்னி குழம்பாக கரைத்து, என் மீது வீசுவாள்; ஏன், விவாகரத்தே ஆனாலும் பரவாயில்லை... இறந்து போன என் நண்பனுக்காக சகித்துக் கொள்வேன்.
'நான் சொன்ன பொய், அவன் குடும்பத்தாரை, என் மனைவியின் கொடூரமான பண பார்வையிலிருந்து காப்பாற்றி விட்டது; அது போதும்...' என நினைத்துக் கொண்டேன்.
தெருவில், தாரை, தப்பட்டை சத்தம் கேட்கத் துவங்கியது. தன், இறுதி பயணத்தை துவங்கி விட்டான், சாமண்ணா. சத்தம், வீட்டிற்கு அருகே வந்த போது, ராதாவின் அறை கதவு திறந்தது. வெளியே வந்து, சாமண்ணாவின் உடல், தன் வீட்டை கடந்து போவதை, கண்ணீர் மல்க, பாசத்தோடு பார்ப்பதை பார்த்து, என் உள்ளம் பரவசமடைந்தது. இதை தானே, எதிர்பார்த்தேன்.
இதுதான், சமயம் என்று, சாமண்ணாவின், சவ ஊர்வலத்துடன், சங்கமித்து ஒன்றினேன், மனநிறைவோடு!
டி.கே.சுகுமார்
ஆக்கியோனுக்கு அன்பு நன்றி ஐயா............
courtesy of Varamalar.
===============================================
அன்புத்தோழமைகளே.............................
படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்.......................
உங்கள் விருப்பத்தையும் அறிய ஆவல்...
.நன்றி.
அழகிய இனிய காலை வணக்கம்அன்பு நெஞ்சங்களே!!
இறைவன் நினைவே இனிய நாள்!
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!!
-என்றும் அன்புடன் சகோதரன்,
Vickna sai.
===========================================
Image result for இரண்டணா
இரண்டணா - சுஜாதாவின் சிறுகதை.

இப்போதும் சிலர் 
இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நௌ¤நௌ¤கள் இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபககததில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்ததுக கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை துக்கிப் பார்ததால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்.

இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள் நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலநதைப்பழம் லேக்கா உருண்டை கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார்.

Image result for இரண்டணா


வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வருக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெடரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக் கொண்டு வாங்கலாம்.

ரங்கராஜாவில் 'காப்டன் மார்வல்' படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர் சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம் விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞசுவதுடன் ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்ன வெல்லர்ம இரண்டணாவில் வாங்கலாம்!.

அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன் சொல்கிறேன் பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத் அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றதுநான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான் ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து "மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்" என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக் காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான்.

ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இநத அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார் சாதி வழக்கத்துககு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார் சன்னமான குரலில் வரவேற்பார் எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும் கண்ணெதிரே, இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக் கொண்டு இருப்பார் அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்.

Image result for இரண்டணா




"என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா" என்றார்.

அப்போது தான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து "என்ன எண்ணை பாட்டி?".

"உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைதவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா". மீண்டும் ஓடிப்போய் "ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா".

"நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா" நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல "ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா".

"நீ சொல்லவே இல்லையே பாட்டி" என்றேன் நியாயம் தானே "காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப் போறே" இந்த எச்சரிக்கைகளுக் கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது.

ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முட்டியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்து தான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது. மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளை விட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக தூக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம் வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூககு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பல வித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க "வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை, மனுசனை பாம்பாக்குவேன் பாம்மை மனசனாக்குவேன்" ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கெர்ணடிருக்க மோடி மஸ்தான் என்னையே பார்த்து "பயப்படாத பக்கத்ல வந்து குந்து" என்று என்னை அழைத்தான் அந்த பரட்டை தலை சிறுமி சின்ன பல் வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்.

ஆழாக்கு எண்ணெயை மறந்தேன் முதல் வரிசையில்போய் உட்கார்ந்து கொண்டுவிடடேன் அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்.

"கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகிலல போட்டுப் பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன்… இது என்ன?" என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்.

"ஒரணா" "என்னது ஒக்காளியா" என்று கேட்க சபையில் சிரிப்பு" நெருப்பில அரதம் வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாரும் பார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன் மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன் தண்ணில நடப்பேன் நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?" என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி"பாழும் வவுத்துக்காக!".

"நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப் புள்ளையை பந்தாடப் போக்ஷற்ன்" எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித் தான்.

நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கிய மானேன் "தகிரிய முள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க" என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால் வந்து நின்றான் அந்தப் பையனை கூப்பிட்டு அவன் முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப் போக அழுக்குத் துணடால் போர்த்திப் படுக்க வைத்தான் "யார் வூட்டுப் புள்ளையோ இது" என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான் அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான் பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது.

த என்று அதை அதட்டினான் உள்ளுணர்வில் அஙகிருந்து விலக வேண்டும என்று தான் தோன்றியது ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன சன்மத்துககு இந்த இடத்தை விட்டு விலகப் போவதில்லை கீரிப்பிள்ளை ஒன்றுக்குப் போனது அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருநது கயிற்றுக்கு எவ்வி அதன் மேல லாவகமாக நடந்தாள் அதன் பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ பண்ணி அவளை சுற்றினான் இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான் எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. "யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?".

"வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா" என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுநதிருக்க "ஏய்!" என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் "பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்ன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு" என்று கையில் அந்த பேனைக் கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான் படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது.

"இதான் உனக்காகும் ராத்தரி" அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கி ப்போய் நின்றோம் மௌமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம வந்தான் நான் எனனிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை உடுக்கை அடித்துக் கொண்டே சற்றி வந்தான் கீரி சுற்றிக் கொண்டு இருந்தது வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன் போல நடந்து வந்தேன் வீட்டின் அருகில் வந்த போது தான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க "எங்கே இரண்டணா" என்பது மட்டுமின்றி எங்கே கிண்ணி?.

"கிண்ணியையும் வைத்துவிட்டு வந்து விட்டேன பாட்டி சமயலறையிலிருநது குரல் கொடுத்தாள்" ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ" என்றள் மீண்டும தெருக் கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக் காரன் சாமக்கிரியைகளை கவர்ந்து கொண்டு சென்றிருக்க வேண்டும் விறிச் சோடியருந்தது தெரு போய் விட்டான்.

நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம் எதிரொலித்தது சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன் தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போட்டிருக்க மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது வித்தை காரன் அருகில் சென்க்ஷற்ன அந்தப் பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்ததுக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பது போல் "வா தம்பி" "நான் வந்து கீழ சித்திரை வீதில விததை பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டடங்க அந்த கிண்ணி என்னுது" "தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒரு கண்டிசன் "என்ன" எங்கூட வரியா வித்தை காட்ட லர்ல்குடி பிச்சாண்டார கோவில் இந்த பக்கம் குளித்தலை "அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும் போகலாம்" என்றாள். பைஜமா சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்.

"ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா" என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன் "என் கிண்ணியை கொடு" " கொடுக்கறேன் கொடுக்கறேன்" அவன் என்னிடம அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப் போது நீட்டி நீட்டி கொடுப்பது போல் கொடுத்து கையை இழுத்து கொண்டான் நான் பெரிசாக அழ ஆரமபித்ததும் கொடுத்தான் "கிண்ணியை கொடுத்துடடு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா "நான் வீட்டுக்கு திரும்பும் போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்" "வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா" என்றாள் நான் ஓடி வந்து அவசரமாக என் உண்டியலை உடைத்து எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக் கொண்டு வந்து விட்டேன்.

பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால் புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழன்று சுழன்று ஆட... எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
courtesy;வாத்தியார் ayaa tq.
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!



எது உண்மையான பக்தி?

*ஒரு குட்டிக்கதை!*


மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப்போது கிடைக்கும் ?

ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர்.

செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தார்.

செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.

செல்வந்தரோ தினமும் காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வார்.

பல தலைமுறைக்கு காணும் செல்வம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.

ஒரு நாள் நாரத முனிவர் விஷ்ணுவைப் பார்த்து ”அந்தச் செல்வந்தர்
மிகுந்த பக்திமானாக இருக்கிறார்; தினமும் உங்களுக்குப் பல மணி
நேரம் பூஜை எல்லாம் செய்கிறார். அவர் நிம்மதியாய் வாழ, ஏதாவது செய்யக்கூடாதா?”என்றார்.

விஷ்ணுவும் அதற்குச் சம்மதித்துவிட்டு நாரதரை பூலோகத்துக்கு அனுப்பினார்.

போகும்போது நாரதரைப் பார்த்து, “நீங்கள் கீழே சென்று, ‘நான் நாரயணனிடமிருந்து வருகிறேன்" என்று செல்வந்தரரிடம் சொல்லுங்கள்.

அவர் 'தற்பொழுது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?’
என்று கேட்பார்.

அதற்கு நீங்கள் ‘நாராயணன் தற்போது ஓர் ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’ என்று பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

”அப்படியே அந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியையும் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள்”என்று சொல்லி அனுப்பினார் விஷ்ணு.

நாரதரும் முதலில் அந்தச் செல்வந்தரின் வீட்டுக்கு செல்கிறார்.

பூஜை எல்லாம் முடித்துவிட்டு வந்த செல்வந்தர், நாரதரிடம், “நீங்கள் யார்?” என்று கேட்க, நாரதர் தான் நாரயணரிடமிருந்து வருவதாகச் சொல்கிறார்.

அதற்கு அந்தச் செல்வந்தர் *“தற்போது நாராயணன் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?”* என்று கேட்க, நாரதரும், நாராயணன், ஒர் ஊசியின் காதுவழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருப்பதை பார்த்தாகச் சொல்கிறார்.

அதற்கு அந்த செல்வந்தர் *“அது எப்படி முடியும்? இது என்ன நடக்கிற காரியமா?”* என்று கேட்டார்.

நாரதர் அடுத்தது அந்தச் செருப்புத் தொழிலாளியைப் பார்க்கச் சென்றார்.

அவரிடமும் இதே சம்பாஷணை நடைபெற்றது.

ஆனால் கடைசி பதிலுக்கு அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, *“இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?”* என்று பதில் சொன்னார்.

அவர்கள் இருவரும் சொன்ன பதிலை நாராயணனிடம் வந்து சொன்னார்.

கடவுள் பக்தி என்பது, பூஜை, புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.

இறைவனின் பாதத்தை பூரண நம்பிக்கையுடன்,நீயே சரணம் என்று
பற்றுவதே ”உண்மையான பக்தி” .

இப்பொழுது தெரிகிறதா? ஏழையின் நிம்மதிக்கு காரணம் என்று
பதிலளித்தார் நாராயணன்.

காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, நதியானது
மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ*… அது போல், கடவுளுடன்
நமது மனமும் கலந்துவிட வேண்டும்.

நமக்கு அனுக்கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும்.

அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது *வியாபாரமாகிவிடும்.*

ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல, செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன், என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால்
வியாபாரமாகி விடும்.

அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, பெருமாளிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் *பக்தி* என்று பெயர்.
---------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
courtesy;வாத்தியார் ayya.
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Friday, May 1, 2020

ஒரு குட்டி கதை!
கடவுள்: கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும் பொதி சுமப்பாய். உனக்கு ��சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."
கழுதை: கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: நாயைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ ��மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."
நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: குரங்கைப் படைத்து அதனிடம் சொன்னார். "நீ மரங்களில் கிளைக்கு கிளை தாவி குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
குரங்கு: எனக்கு 10 வருடங்களே போதும் சாமி.
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
கடவுள்: மனிதனைப் படைத்தார். "நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன் அறிவைப் பயன்படுத்தி எல்லா உயிர்களையும் உன் கட்டுப் பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."
மனிதன்: "சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், நாயின் 15 வருடங்களையும், குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."
கடவுள்: அப்படியே ஆகட்டும்.
அன்றிலிருந்து மனிதன் 20 வருடங்கள் மனிதனாகவும், பின் திருமணம் செய்து 30 ஆண்டுகள் கழுதையைப் போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள் நாயைப் போல வீட்டைப் பாதுகாத்தும், கடைசிப் பத்து வருடங்கள் குரங்கைப் போல தன் ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக் குழந்தைகளை மகிழ்விக்கிறான்...!!!
======================================================
==============================
அப்பா, உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களை விட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும் கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம் போதும். உங்களை என்னால்
பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்" என்றாள் பிரியா.
அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.
நேர்மைக்கு என்றுமே அழிவில்லை *
பொதுப் பணித்துறை ஊழியராயிருந்து ஓய்வுபெற்றவர் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஊழல் புரையோடிப்போன ஒரு துறையில், பச்சைத் தண்ணீர் கூட
அடுத்தவரிடம் கேட்டு வாங்கி குடிக்கமாட்டாராம் பத்மநாபன். அதனால் அவருக்கு சக ஊழியர்களால் கிண்டலாக சூட்டப்பட்ட பட்டப்பெயர் தான் ‘பச்சை தண்ணி’ பத்மநாபன்.
ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தவர்
தனது உயிர் பிரியப்போகிறது என்பதை அறிந்து தனது பிள்ளைகளை அழைத்தார்.
“இறைவா, என் பிள்ளைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போகிறேன். நீ தான் அவர்களை காக்கவேண்டும்” என்று பிரார்த்தித்தவர் பிள்ளைகளிடம் “நான் எப்படி வாழ்ந்தேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்களும் எந்த சூழலிலும்
நீதி தவறாமல் தேவைகளை சுருக்கிக்கொண்டு நேர்மையாய் வாழ்ந்து என் பெயரைக் காப்பாற்றவேண்டும்” என்று
நா தழு தழுக்க சொன்னார்.
இரண்டு மகன்களும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருக்க, கடைசி மகள் ப்ரியா மட்டும் கோபத்தில் வெடித்தாள்.
ப்ரியா கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறாள். அவள் விரும்பிய கல்லூரியில் கூட அவளை சேர்க்க வழியின்றி ஏதோ அரசு உதவி பெறும் கல்லூரியில் தான் பத்மநாபனால் சேர்க்க முடிந்தது. அதுவே அவளுக்கு கோபம்.
“அப்பா, உங்க பேங்க் அக்கவுண்ட்டில் நையா பைசா கூட இல்லாமல் நீங்கள் எங்களை விட்டு போவது எங்கள் துரதிர்ஷ்டம். உங்களை என்னால் பின்பற்றமுடியாது. உங்கள் அறிவுரைகளையும்
கேட்க முடியாது. ஊழல் பேர்வழிகள், ஊழல் பெருச்சாளிகள என்று நீங்கள் கூறியவர்கள் எல்லாரும் அவர்கள் குழந்தைகளுக்கு பல தலைமுறைகள் சொத்து சேர்த்து விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் இருக்கும் இந்த வீடு கூட வாடகை வீடு தான். ஸாரி. நேர்மையாயிருந்து நாங்கள் பட்டதெல்லாம் போதும். உங்களை என்னால்
பின்பற்றமுடியாது. நாங்கள் எங்கள் வழியை பார்த்துக்கொள்கிறோம்" என்றாள் பிரியா.
அவளை உற்றுநோக்கியபடி பரிதாபமாக பார்த்த அந்த ஜீவனின் உயிர் அடுத்த சில நிமிடங்களில் பிரிந்தது.
காலங்கள் உருண்டன.
கல்லூரி படிப்பை எப்படியோ தட்டுத் தடுமாறி முடித்த ப்ரியா ஒரு புகழ் பெற்ற கட்டுமான நிறுவனத்திற்கு பணிக்கு அப்ளை செய்து நேர்முகத் தேர்வுக்கு சென்றாள். அந்த பணிக்கு தேவையான தகுதியுடைய நபரை ஏற்கனவே பேனல் உறுப்பினர்கள் தேர்தெடுத்து விட்டாலும் ஒரு பார்மாலிட்டிக்காக இண்டர்வ்யூவை
நடத்திக்கொண்டிருந்தனர்.
பேனல் மெம்பர்களுக்கு மத்தியில் அந்நிறுவனத்தின் எம்.டி.யும் அமர்ந்திருந்தார்.ப்ரியாவின் முறை வந்ததும் உள்ளே அழைக்கப்பட்டாள்.
அவளது ரெஸ்யூமை பார்த்த பேனல் மெம்பர் ஒருவர் “உன் அப்பா மிஸ்டர்.பத்மநாபன் பொதுப் பணித்துறையிலிருந்து ஒய்வு பெற்றவரா ???” என்றார்.
“ஆமாம்… சார்”
உடனே எம்.டி. நிமிர்ந்து உட்கார்ந்தார். ப்ரியாவை நோக்கி கேள்வியை வீசினார் .. “உங்கப்பாவுக்கு ‘பச்சைத் தண்ணி பத்மநாபன்’ங்குற பேர் உண்டா ????”
“ஆமாம்… சார்” என்றாள் சற்று நெளிந்தபடி.
“ஒ நீங்க அவரோட டாட்டரா ?? இந்தக் காலத்துல அவரை மாதிரி மனுஷங்களை பார்க்க முடியாதும்மா இந்த கம்பெனி இன்னைக்கு இந்தளவு வளர்ந்திருக்குதுன்னா அதுக்கு அவரும் ஒரு காரணம். கடலூர்ல இருக்கும்போது நான் 15 வருஷத்துக்கு முன்ன கவர்மென்ட் காண்ட்ராக்ட் ஒன்னுக்கு டெண்டர் அப்ளை பண்ணியிருந்தேன். என்னை விட அதிகமா கோட் பண்ணின நிறைய பேர் எவ்வளவோ லஞ்சம் தர்றதா சொன்னாலும் உங்கப்பா அதுக்கெல்லாம் ஆசைப்படாம, அவங்க மிரட்டலுக்கெல்லாம் மசியாம அந்த காண்ட்ராக்ட்டை முறைப்படி எனக்கு ஒதுக்கினார்.
அன்னைக்கு மட்டும் அவர் அந்த காண்ட்ராக்ட்டை எனக்கு ஒதுக்கலேன்னா இன்னைக்கு நான் இல்லை. இந்த கம்பெனியும் இல்லை.
ஏன்னா, என் சொத்தையெல்லாம் அடமானம் வெச்சு கம்பெனி ஆரம்பிச்ச நேரம் அது. அந்த ஒரு காண்ட்ராக்ட் மூலமாத் தான் எனக்கு நல்ல பேர் கிடைச்சி, இந்த துறையில ஒரு பெரிய என்ட்ரி
கிடைச்சது. ஆனால் அதுக்கு பிறகு உங்கப்பா வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆயி போய்ட்டார்.”
“அவருக்கு என்னோட நன்றிக்கடனை செலுத்த இதை விட பெரிய வாய்ப்பு கிடைக்காதும்மா. யூ ஆர் செலக்டட். நாளைக்கே நீ டூட்டியில் ஜாய்ன் பண்ணிக்கலாம்.” என்றார்.
அந்நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவில் தலைமை அதிகாரியாக ப்ரியாவுக்கு வேலை கிடைத்தது.
அலுவலகம் வந்து செல்ல ஒரு டூ-வீலர் வாங்கித் தந்தார்கள். பி.எப்., இன்சென்டிவ், ரெண்ட் அலொவன்ஸ் என பலப் பல சலுகைகள். கனவிலும் ப்ரியா எதிர்பார்க்காத ஒரு வேலை.
இரண்டு ஆண்டுகள் சென்றன. ப்ரியா பணியிடத்தில் நல்ல பெயர் எடுத்தாள்.
இதற்கிடையே அவர்கள் சிங்கப்பூர் கிளை அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவர் வேலையை ராஜினாமா
செய்து விட, அங்கு தலைமை பொறுப்புக்கு தகுதியான ஆள் தேவைப்பட்டார். BOARD OF DIRECTORS ஒன்று கூடி விவாதித்து ப்ரியாவையே சிங்கப்பூர் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் நியமிப்பது என முடிவானது.
மாதம் பத்து லட்ச ரூபாய் சம்பளம். கம்பெனி சார்பாக ஒரு கார், அப்பார்ட்மென்ட் என அத்தனை வசதிகளும் அவளுக்கு கிடைத்தன. கடுமையாக உழைத்து சிங்கபூர் நிறுவனத்தின் லாபத்தை
பன்மடங்கு அதிகரிக்கச் செய்தாள் ப்ரியா.
அவளை லோக்கல் பிஸ்னஸ் பத்திரிக்கை ஒன்று பேட்டி கண்டது.
“உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கருதுகிறீர்கள். ???”
கேள்வி கேட்க்கப்பட்டதுமே ப்ரியா உடைந்து அழலானாள்.
“இது எல்லாம் என் அப்பா எனக்கு போட்ட பிச்சை. அவர் மறைந்த பிறகு தான் நான் உணர்ந்தேன்… பொருளாதார ரீதியாக
அவர் ஏழையாக மறைந்தாலும் ஒழுக்கத்திலும், நேர்மையிலும் நாணயத்திலும் அவர் கோடீஸ்வரராக மறைந்தார்….”
“அதுக்கு ஏன் இப்போ இவ்வளவு நாள் கழிச்சு அழுறீங்க ???”
“என் அப்பா இறக்கும் தருவாயில் அவரது நேர்மைக்காக அவரை நான் அவமதித்தேன். என் அப்பாவின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன். இன்று நானிருக்கும் நிலைக்கு வர
நான் எதுவும் செய்யவில்லை. அவர் கஷ்டப்பட்டு அல்லும் பகலும் பலவித தியாகங்களுக்கு இடையே போட்ட பாதையில் நான் சுலபமாக நடந்து வந்து விட்டேன்.”
“அப்போது என் தந்தை என்னிடம் கேட்டுக்கொண்டது என் அடியொற்றி செல்வீர்களா என்பதே ??”
“ஒவ்வொரு கணமும். என் வீட்டு வரவேற்பறையில் அவருடைய படத்தை பெரிதாக மாட்டியிருக்கிறேன். அந்த ஆண்டவனுக்கு பிறகு எனக்கு எல்லாமே என் அப்பா தான்.” கண்களை துடைத்தபடி சொன்னாள் ப்ரியா.
நீங்கள் எப்படி பத்மநாபனை போலவா ???
உண்மையான நல்ல பெயரை சம்பாதிப்பது என்பது மிக மிகக் கடினம். அதன் வெகுமதி உடனே வருவதில்லை. ஆனால்
அது எவ்வளவு தாமதமாக வருகிறதோ அந்தளவு நீடித்து நிலைத்து நிற்கும்.
நேர்மை, நாணயம், ஒழுக்கம், சுய-கட்டுப்பாடு, தீயவற்றுக்கு அஞ்சுவது, கடவுளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, இவையெல்லாம் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன.
கோடீஸ்வரனாகவும் ஆக்குகின்றன. வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் அல்ல.
உங்கள் குழந்தைகளுக்கு நல்லவற்றை விட்டுச் செல்லுங்கள். இதைத் தான் அக்காலங்களில் சொன்னார்கள்
"பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதை. விட புண்ணியத்தை சேர்க்கவேண்டும்”* என்று.
* நிறைய உண்மை கலந்த கதை இது !!! * நேர்மையாக இருப்பதால் கண்ணீர் தான் பரிசு என்று மனம் கலங்காதீர்கள் * ....*உங்கள் நேர்மை தான் உங்கள் குடும்பத்தை நிஜமாகக்
காப்பாற்றும்* , *நமது நாட்டையும் நேர்மை தான் காப்பாற்ற வேண்டும் *.....ஆகவே மகிழ்ச்சியாக , நேர்மையாக சமுதாயப்பணியாற்றுவோம்* ....
லஞ்சம் இல்லா சமுதாயத்தை நிச்சயமாகவே உருவாக்குவோம்
=================================================
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
அன்பும் நன்றியும் வாத்தியார் ஐயா........
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
==========================================
எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும்...........தோழமைகளே.....
=========================
'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான்.
இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.”
'இங்ங்னமாகப் பிறப்பிலேயே வாழ்வுக் கதியை வகுத்துவிட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை; அவன் வகுத்த நியதி மாறுபடப் போவதும் இல்லை. - -
'இந்த உண்மையை உணர்ந்தவர்கள், தன் மக்களின் வாழ்வினைக் கருதிக் கவலைப்படமாட்டார்கள். எத்துணைத் துயரம் வந்தாலும், காக்கும் பொறுப்புக் கடவுளுடையது என்று நினைத்து, அவர்கள் மன அமைதி கொள்வார்கள்.
இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய் நெஞ்சமே யஞ்சாதே நீ.
ஒளவைக் குழந்தை வெண்பாவைச் சொல்லி, ‘அன்னையே! நீ நெஞ்சம் வருந்த வேண்டாம் என்று, தன்னைப் பெற்றவளுக்குத் தேறுதலும் கூறிற்று என்பார்கள். "அன்னையே! என்பால் விருப்பமுடன், என் வாழ்வின்போக்கு இன்னபடியாக அமைவதாக என்று என் தலையிலே எழுதி, என்னைப் பிறப்பித்த சிவபெருமானும் செத்துப் போய் விட்டானோ?
இல்லை அல்லவோ அதனால், மிகவும் கொடிய பஞ்சமே நாடெங்கும் ஏற்பட்டாலும், என்னைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கே அல்லவா! ஆகவே, நீ உன் நெஞ்சத்தே என்னைக் குறித்த எவ்வகையான, அச்சத்தையும் கொள்ளாது நிம்மதியாகச் சென்று வருக” என்பது இதன் பொருள். -
'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ என்றவாறு,
இதே கருத்தினைத் திருக்குறளும் கூறும். அதனையும் இத்துடன் நோக்கிப் பொருள் உணர்தல் வேண்டும். -
'குழந்தை பாடுமா?’ என்று கேட்கலாம். பாடும். அது 'பூர்வ புண்ணிய ஞானம் என்று சான்றோர் கூறுகின்றனர்.
‘சிவனன்றித் துணை இல்லை என்று அறிவுறுத்தும் சிறந்த ஒளவையார் தனிப்பாடல் வெண்பா இது.
இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கே அன்னை நெஞ்சமே யஞ்சாதே நீ.
============================================
இறைவன் ஆலயத்திலோ ஆச்சிரமத்திலோ வெவ்வேறாக பிரிந்திருக்கவில்லை.
சத்தியமே இறைவன், அன்பே ஆண்டவன், தர்மமே தெய்வம்
எப்போதும் இவைகளைப் பின்பற்றுவதே இறைவனை வழிபடும் முறையாகும்.
அதிகாலையில் எழுந்தவுடன் லோகா சமஸ்தா சுகினோ பவந்து அதாவது இவ்வுலகின் அனைத்துயிருக்கும் நன்மை உண்டாகட்டும் என தூய உள்ளத்தோடு இறைவனை வேண்டின் எம் வாழ்வும் இறை அருளால் இன்பமாகும்.
ஓம் ஸ்ரீ சாயி பாத சரணம் சுவாமி.
Wherever we may be how can we experience God? Bhagawan clearly assures us of the way to experience His presence.
God is not found separately in a temple or in an ashram. Truth is God. Love is God. Dharma is God. When you worship God by following these principles, He will manifest Himself then and there. Do not doubt this. Love God wholeheartedly. Pray to God and make friends with Him. You can achieve anything if you have God as your friend. Learn today to fill your heart with love and adorn your hand with the ornament of sacrifice. Sacrifice is the jewel for the hands. Truth is the necklace one should wear. You must develop the habit of adorning these jewels. Develop divine love and foster peace in the country. Pray with a broad feeling: Loka samastha sukhino bhavantu (May the whole world be happy)! Start every day with this prayer. Then, you will lead a blissful and peaceful life which is full of enthusiasm. Love God and make friendship with Him, and you are bound to be successful in all your endeavours.
- Divine Discourse, 18 Mar 1999.
Just as there is butter in milk, fragrance in flower, tasty juice in the fruit and fire in wood, there is Divinity in the vast universe. - Baba
=============================================
=====================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...