Followers

Wednesday, August 10, 2022

 அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.

courtesy; - https://kaumaram.com/thiru/nnt1307_u.html
===========================
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
===========================
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.

(ஈகையும் தியானமும் நம்மைக் காக்கும்)

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

https://kaumaram.com/mp3_audio/revk_anu012.mp3
===========================

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க

 காவாக்கால்  தன்னையே கொல்லுஞ் சினம்.

ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

If you want to guard yourself, guard against anger; If unguarded, anger will kill you.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

English Couplet 310:

Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.

Couplet Explanation:

Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

===========================




தீராப் பிணிதீர சீவாத் ...... துமஞான
ஊராட் சியதான ஓர்வாக் ...... கருள்வாயே
பாரோர்க் கிறைசேயே பாலாக் ...... கிரிராசே
பேராற் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.
==============================

பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா  மயிலாய் போற்றி 

முன்னிய கருணை யாறு முகப்பரம் பொருளே போற்றி 

கன்னியர் இருவர் நீங்காக் கருணை வாரிதியே போற்றி

 என்னிரு கண்ணே கண்ணுள் இருக்கும் மா  மணியே போற்றி!

 ==============================

Saravanaa Sivakumaraa..............

Shanmuganaatha Jay Jay Shamuganatha (2X)
Subramaniya Kartikeyaa Vadivelaa
Shanmuganatha jay jay shanmuganatha
Om saranam saranam shanmuganahtha


https://www.himalayanacademy.com/view/saravana-sivakumara_kl
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப், பிரிவிலா
அடியார்க்கு என்றும்  வாராத செல்வம் வருவிப்பானை,
மந்திரமும் தந்திரமும்மருந்தும் ஆகி  தீரா நோய் தீர்த்து அருள
வல்லான் தன்னைத்திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக்கொண்ட
போரானை, புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
ஆற்ற நாள் போக்கினேனே


தீராப் பிணிதீர ... முடிவே இல்லாத பிறவி நோய் முடிவு பெறவும்,
சீவ ஆத்தும ஞான ... ஜீவனாகிய ஆத்மாவைப் பற்றிய இந்தச்
சிற்றுயிர் ஞான நிலை பெறுவதற்கும்,
ஊராட்சியதான ஓர்வாக்கு அருள்வாயே ...உலகெல்லாம் ஆட்சி
செய்யக் கூடிய ஒப்பற்ற உபதேச மொழியொன்றை  நீ எனக்கு ஓதி அருள்வாயாக.
பாரோர்க் கிறைசேயே ..  உலகத்துக்கெல்லாம் தலைவராகிய
சிவபிரானின் குமாரனே, பாலாக் கிரிராசே ... இளையோனே, குன்றுகளுக்கெல்லாம்
அரசனான குமரனே, பேராற் பெரியோனே ... புகழால் மிகவும் பெரியவனே, பேரூர்ப் பெருமாளே. ...
பேரூர்த் தலத்தில்* எழுந்தருளியுள்ள  பெருமாளே.

https://www.kaumaram.com/thiru/nnt0949_u.html

வேத நாயகன்  வேதியர் நாயகன்

மாதின் நாயகன்  மாதவர் நாயகன்

ஆதி நாயகன்  ஆதிரை நாயகன்

பூத நாயகன்  புண்ணிய மூர்த்தியே.

 https://www.youtube.com/watch?v=YcG28K6hxTE&ab_channel=BalasundharamSubramaniam


* பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.
==============================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...