Followers

Monday, December 6, 2021

 


உறவுகளும் உணர்வுகளும்............
——————————————
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*
*வாய் தவறி விழும் பேச்சுக்கள்,கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*
*நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

*மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள், தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.*
*பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவர்; நடித்தால் நீங்கள் நல்லவன்; உண்மை பேசினால் பைத்தியக்காரன்;அன்பு காட்டினால் ஏமாளி;எடுத்துச் சொன்னால் கோமாளி!*

*இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து,அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி, பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.*
*நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்; வலிகள் இல்லாமல் இருக்கும்.*

*தன்னுடைய செயல்களும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.*
*அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும்.*

*நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*
*யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை. ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*

*மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள். தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*


===================

மனித நேயம்
""""""""""""""""""""""""
போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது.
அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.
அதில் " என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது.
யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன்.
எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை" என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.
எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன்.
"இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு".
அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது.
வெளியில் , கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா .
என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ?
அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன்.
கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.
தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க..
அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன்.
தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.
என் மனதில் வித விதமான எண்ணங்கள்.
யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார்.
அந்த கடித்ததே கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார்.
ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை.
யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன்.
நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.
மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். " அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா?
கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?
மனித நேயம் சாகவில்லை...
படித்ததில் பிடித்தது...
May be an image of 1 person and outdoors




===================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...