இன்று ஒரு தகவல்... (1)
என்னப்பா, தென்கச்சியார்தான் இன்று ஒரு தகவல் சொல்லுவார் என்று நினைச்சியளோ??.......
இந்த அருந்ததியும் தேடித்தடவி எடுத்துச் சொல்லுவாவெல்லே.....!!
யாழ்ப்பாணத் தமிழின் அழகு பற்றி.......
நான் ஒரு முறை சமயப் பிரசங்கம் செய்வதற்காக யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்தேன். என்னை அழைத்தவர் வீட்டு முதியவர் ஒருவர் இயற்கை எய்திவிட்டார். அதனால் காலையிலே அவர் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்துக் கொண்டு தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.
அப்போது, நான் தங்கியிருந்த வீட்டு பணியாள் வந்து சுவாமி, "தோஞ்சாச்சா" சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா? என்று கேட்டார். எனக்கு விளங்கவில்லை. திரும்பத் திரும்ப அவர் "தோஞ்சாச்சா, தோஞ்சாச்சா" ? என்று கேட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அந்தப் பணியாள் சென்று ஒரு படித்த பெண்மணியை அழைத்து வந்தார். அந்த அம்மா என்னிடம் சுவாமி துக்க வீட்டுக்கு போய் வந்தீர்களே...! தோய்ந்து விட்டீர்களா? என்று இவன் கேட்கின்றான். நான் முழிக்க..... நீங்கள் ஸ்நானம் பண்ணி விட்டீர்களா என்று மீண்டும் கேட்டார்.
எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. "தோய்தல்" என்பதே நீராடுவதற்கு சரியான தமிழ் வார்த்தை. தோய்தல் என்றால் ஒன்றிலே முழுமையாக அமிழ்ந்து போதல் என்று பொருள்.
அந்தத் தொல்காப்பியத் தமிழை ஒரு வேலைசெய்பவனே சாதாரணமாகப் பேசுகின்றான் யாழ்ப்பாணத்தில். தூய தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் அல்ல. அது யாழ்ப்பாண மக்களாலேயே பேசப்படுகின்றது. அங்குதான் அது வாழ்கின்றது.
(திருமுருக கிருபானந்தவாரியார் எழுதிய விளக்கு என்னும் நூலில் இருந்து)
ஒரு அன்பர் கூறியது.
இந்தப் பெருமையை நாம் தொடர்ந்தும் காப்பாற்ற வேண்டும் என்பதே என் கவலையும், ஆசையும்,ஆதங்கமும் உறவுகளே....!!
No comments:
Post a Comment