========================
எதனால் ஏற்படுகிறது பித்ரு தோஷம்? முன்னோர் ஆசி கிடைக்கப் பரிகாரங்கள்..! எஸ்.கதிரேசன் ============================== அமாவாசை அன்று, ஆறு, குளம், கடல் என்று புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இப்படி நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடாவிட்டால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு, நம் வாழ்க்கையிலும் சரி, நம் சந்ததியினரின் வாழ்க்கையிலும் சரி பல வகையான பிரச்னைகள் தோன்றி வேதனைப்படுத்தும். எனவே, அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகவும் உத்தமம். அதனால் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும். முன்னோர் வழிபாடு முறைப்படி செய்யாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றியும், உரிய பரிகாரங்கள் பற்றியும் ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம். எதனால் ஏற்படுகிறது பித்ரு தோஷம்? முன்னோர் ஆசி கிடைக்கப் பரிகாரங்கள்..! ''இந்த உலகத்தில் நாம் வந்து பிறந்து இந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்கு முதற் காரணம் நம்மைப் பெற்றவர்கள்தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. நம்மை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா எதனால் ஏற்படுகிறது பித்ரு தோஷம்? முன்னோர் ஆசி கிடைக்கப் பரிகாரங்கள்..! என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ அல்லது தவறோ செய்து, அதற்குள் அவர்கள் அமரராகி விட்டால், அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய 'பித்ரு கடன்'களை வருடா வருடம் நாம் தவறாமல் செய்யவேண்டியது நமது தலையாய கடமையாகும். அதாவது நமக்கு 365 நாள்கள் என்பது நமது பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். எனவே, அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நாம் உணவளிக்க வேண்டும். அதாவது நமது கணக்குப்படி வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை அவர்கள் இறந்த திதியில் ஒரு புரோகிதரை அழைத்து முறைப்படி செய்து நம் முன்னோர்களுக்கு பிண்டம் (உணவு) அளிக்கவேண்டும். அப்படி நாம் செய்யத் தவறிவிட்டால், நம் பித்ருக்களின் மனம் வருத்தம் அடையும். அந்த வருத்தமே நமக்கு பித்ரு தோஷத்தை ஏற்படுத்துகிறது. பித்ரு தோஷம் நமக்கு மட்டுமல்லாமல், நம் சந்ததியினருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் மூலமாக பித்ரு தோஷம் இருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். இதை நாம் கவனிக்காமல் இருந்து விட்டோம் என்றால் நாம் நம் வாழ்க்கையில் அநேக துன்பங்களை சந்திக்க நேரிடும். அது தொடர்கதையாக நம் வாழ்க்கையிலும் நம் குழந்தைகளின் வாழ்க்கையிலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்போதுதான் நாம் நம் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு ஜோதிடரை நோக்கிப் போகிறோம். அது எந்த அமைப்பில் இருக்கும் என்பது பற்றியும் அதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றியும் இங்கு பார்ப்போம். எதனால் ஏற்படுகிறது பித்ரு தோஷம்? முன்னோர் ஆசி கிடைக்கப் பரிகாரங்கள்..! * குருவானவர் ராகு, கேதுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ, அல்லது குருவானவர் ராகு, கேது சேர்க்கை பெற்று ராசியிலும், நவாம்சத்திலும் இருந்தால் தோஷம். * சூரியன், சந்திரன் செவ்வாயின் ராசி அல்லது செவ்வாயின் நவாம்ச வீட்டில் இருந்து அது பாதக ஸ்தானம் பெற்றால் தோஷம். * கடகம், சிம்மம் லக்னத்துக்கு பாதக ஸ்தானம் பெற்று, அதில் கொடிய பாவி இருந்தால் பித்ரு தோஷம் வரும். எதனால் ஏற்படுகிறது பித்ரு தோஷம்? முன்னோர் ஆசி கிடைக்கப் பரிகாரங்கள்..! * சூரியன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ அல்லது சந்திரன் பாதிக்கப்பட்டு கொடிய பாவியுடன் சேர்ந்தாலோ பித்ரு தோஷம் தந்தை வழியிலோ, தாய் வழியிலோ ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. * 6-ம் வீட்டுக்கு உடையவர் 9-ம் வீட்டில் இருந்தாலும் அல்லது 9-ம் வீட்டுக்கு உடையவர் 12 -ம் வீட்டில் இருந்தாலும் தந்தையும் அவரது முன்னோர்களும் மகிழ்ச்சியாக இல்லை என்பதால் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கும். * சந்திரன் 6-ம் வீட்டில் இருந்தாலும், அல்லது 6-ம் வீட்டுடன் தொடர்பு கொண்டாலும் தாயும் அவரது முன்னோர்களும் ஜாதகரிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பரிகாரம் : அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும்.
மஹாளய பக்ஷத்தில் வரும் பரணி நட்சத்திரத்தில் திதி கொடுத்தால் மிகவும் விசேஷமாகும். ஏனென்றால் இந்த பரணி மஹா பரணி எனப்படும். அட்சய திரிதியை வரும் நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும். இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே! மேற்கூறிய நாள்களில் சிராத்தம் செய்தாலோ, அல்லது காளஹஸ்தி சென்று அங்கு 'பித்ரு பூஜை' செய்தாலோ பித்ரு தோஷம் நிவர்த்தி ஆகி சகல செளபாக்யங்களும் வந்து சேரும்" என்று தெரிவித்தார். சிவமயம் - 18 VIKATAN NEWS
===============================================
பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக நிவர்த்தி செய்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து உங்களை வாழ்த்த, இந்த ஒரு தீபத்தை, வீட்டில் ஏற்றி வைத்தால் எப்போதுமே! By Rajesh -Oct 31, 2020, 10:44AM IST
ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம், பித்ரு சாபம் இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையில் பல தடைகள் ஏற்படும். முன்னேற்றம் இருக்காது. அந்த பரம்பரையில் யாருக்காவது ஒருவருக்கு திருமணம் ஆகாமல் இருக்கும். குழந்தை பேறு தள்ளிப் போகும். வீட்டில் உள்ளவர்களுக்கு தீராத நோய் இருக்கும். மருத்துவ செலவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்? எவ்வளவுதான் சொத்து வந்து கொண்டே இருந்தாலும், அது தங்காது. அந்த சொத்து, ஏதாவது ஒரு விதத்தில் நஷ்டம் ஆகிக்கொண்டே இருக்கும். அதாவது, சொத்தை விற்று மருத்துவ செலவு, வீண் விரயங்கள் செய்து கொண்டிருப்பார்கள். சொத்தை விற்று வந்த பணத்தில் சுப செலவு செய்தால் கூட மனநிறைவு கிடைக்கும். சொத்தை விற்று திருமணம் செய்தோம் அல்லது வேறு இடத்தில் வீடு கட்டினோம் என்று கூட அவர்களால் அந்த பணத்தை நல்லபடியாக செலவு செய்ய முடியாது.
அந்த பணத்தை மருத்துவமனைக்காக செலவு செய்வார்கள். இப்படிப்பட்ட பல பிரச்சனைகள் வருவதற்கு காரணம் உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் பித்ரு தோஷம் பித்ரு சாபம் ஆக கூட இருக்கலாம். நம்முடைய முன்னோர்கள் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய, கடமைகளை சரியாக செய்யாதவர்கள், முன்னோர்களை மறந்தவர்களுக்கு ஜாதக கட்டத்தில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கும். நம்மை விட்டு பிரிந்த ஆன்மாக்கள் என்றுமே நம்மை சாபிகிக்காது. நம்மை மறந்து விட்டார்களே! என்ற முன்னோர்களின் அந்த ஏக்கம் கட்டாயம் நமக்கு ஒரு தோஷமாக மாறி விடும். இந்த தோஷம் நம்முடைய பரம்பரைக்கே தொடரும்.
நம்முடைய குலம் தழைக்க, குலம் நன்றாக வாழ்வதற்கு, எதிர்பாராத ஆபத்துக்களை நம்மிடம் வராமல் தடுப்பதற்கு, முன்னோர்களின் ஆசீர்வாதம், குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் கட்டாயம் தேவை. தினம் தோறும் இறை வழிபாடு செய்யும் போது, முன்னோர்களை நினைத்து அவர்களை நீங்கள் மறக்கவில்லை, என்பதற்காக ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து குலதெய்வத்தையும் தினந்தோறும் நினைவுகூர்ந்து கொண்டே இருங்கள். இது வாழ்நாள் முழுவதும் உங்கள் வாழ்க்கையை நல்லபடியாக வழிநடத்திச் செல்ல துணைபுரியும் ஒரு வழிபாட்டுமுறை. அடுத்தபடியாக, முன்னோர்களின் ஆன்மாவை தீபச் சுடரின் மூலம் நம்மால் உணரமுடியும். நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்களும் தீபச்சுடரில் காட்சி தந்து, நமக்கு ஆசீர்வாதத்தை வழங்க முடியும்.
இதன்படி ஒரு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது 48 நாட்களுக்கு ஒரு முறையோ, உங்களுடைய வீட்டில் முன்னோர்களை நினைத்து ஒரு தீபம் ஏற்றி வைக்கப்படவேண்டும். அந்த தீபம் மண்ணால் செய்யப்பட்ட அகல் தீபம் ஆக இருக்கவேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். இரவு நேரத்தில் உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில், ஒரு தாம்பூலத் தட்டை வைத்து, அதன் மேல் மண் அகல் தீபத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது உங்களுடைய முன்னோர்களை மனதார நினைத்து கொண்டு ஏற்றங்கள். அந்த தீபத்திற்கு பக்கத்திலேயே ஒரு சொம்பு நிறைய, குறைய தண்ணீர் வைக்க கூடாது. சொம்பு நிறைந்து சுத்தமான நல்ல தண்ணீரை வைத்து விடுங்கள். இரவு முழுவதும் அந்த தண்ணீரும் அந்த தீபாவும் அப்படியே இருக்கட்டும். எண்ணெய் தீரும் வரை தீபம் எரிந்து குளிர்ந்தால் தவறு ஒன்றும் கிடையாது.
அன்றைய இரவு உங்களுடைய முன்னோர்கள் அந்த தீப ஒளியின் மூலம் உங்களுடைய குடும்பத்திற்கான ஆசீர்வாதத்தை மனம் குளிர்ந்து வழங்குவார்கள். அவர்களை நினைத்து அந்த தீபத்தை நீங்கள் தொடர்ந்து மாதத்திற்கு ஒருமுறை ஏற்றி வைத்துக் கொண்டு வந்தாலே, உங்கள் ஜாதக கட்டத்தில் இருக்கும் பித்ரு தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்கள், படிப்படியாக குறைய ஆரம்பிப்பதை உங்களால் உணர முடியும். வீட்டில் எல்லோரும் தூங்கச் சென்ற பின்பு ஒருவர் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு தூங்கச் சென்றுவிடுங்கள். நீங்கள் உறங்கும் இடத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைக்க வேண்டாம். படுக்கை அறையில் துங்கினால், ஹாலில் இந்த தீபத்தை ஏற்றலாம்.
உங்கள் வீட்டு பால்கனியில், திண்ணைப் பகுதியில் எங்கு வேண்டுமென்றாலும் இந்த தீபம் ஏற்றலாம் தவறில்லை. உங்களுடைய ஜாதக கட்டத்தில் பித்ரு தோஷமும் சாபமும் எதுவுமில்லை. இருப்பினும் உங்கள் வீட்டில் தொடர் கஷ்டங்கள் தீராத துயரங்கள் இருந்து கொண்டே வருகிறது எனும் பட்சத்தில் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைகள் காற்றோடு கரையும் கற்பூரம் போல, காணாமல் போகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
=============================================
==============================================
களத்திர தோஷம்.............
No comments:
Post a Comment