தர்மசாஸ்தா, கலியுகவரதன்,பம்பாவாசன்,மணிகண்டன் என்று பலவாறாக போற்றித் துதிக்கப்படும் சுவாமி ஐயப்பன், தன்னை
நாடி வரும் பக்தர்களின் குறை தீர்த்துக் காப்பவர். மேலும் இவர் ஹரிஹரபுத்திரனாக அறியப்படுகிறார். இது எப்படிச் சாத்தியம்,
என்ற பலரின் ஐயத்தைப் போக்கச் சில குறிப்புகளைக் காண்போம். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, ஹரி என்பது
சக்தி அம்சமாகும். சித்தாந்தங்களின்படி,சிவபெருமானின் சக்தியானது சாந்தமயமாக எழுந்தருள்கையில்
உமாதேவியாகவும்,கோபங்கொள்கையில் காளியாகவும்,போரிடுகையில் துர்கையாகவும்,புருஷத்துவத்துடன் எழுந்தருள்கையில்
விஷ்ணு/ஹரியாகவும் விளங்குவதாகவும் கூறுகிறது.‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’என்ற அப்பர்
பெருமானின் தேவார அடியும் ஈண்டு சிந்திக்கத்தக்கது. ஆகையால், சிவபெருமான் தன் சக்தியைக் கொண்டு, தன்
நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமானை அவதரிக்கச் செய்ததைப் போன்று, தன் சக்தியைக் கொண்டே பகவான்
ஐயப்பனையும் அவதரிக்கச் செய்ததை அறியலாம். கந்தபுராணமானது, சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான்,
ஆகியோருக்கு இளவலாக தர்மசாஸ்தா கொள்ளப்படுவார் என்றும் பூரணை புஷ்கலா தேவியருடன் மதக்களிற்றில் அருள்
பாலிக்கிறார் என்றும் கூறுகிறது.
மேலும் பிள்ளையாரை கணங்களுக்குத் தலைவர் என்றும், முருகன் தேவசேனைகளுக்குத் தலைவர் என்றும், ஐயன்
பூதப்படைகளுக்கும் உலகத்தில் வாழும் பூதர்களுக்கும் தலைவர் எனவும் காஞ்சிப் புராணம் புகழ்கிறது.
இதன் ஒரு அங்கமாக, தர்மசாஸ்தாவை, ஐயனார் என்று காவல் தெய்வமாக நாம் வழிபடுவதையும் காணலாம்.
முருகனுக்கு உள்ள ஆறு படை வீடுகளை போல, ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை
ஆரியங்காவு,அச்சன்கோவில்,குளத்துப்புழா,எரிமேலி,பந்தளம் மற்றும் சபரிமலை ஆகும்.
இப்படி இன்னும் பல சிறப்புகளைக் கொண்ட ஐயனின் பெருமைகளைப் பாடி, அவரது அருள் பெறுவோம்.
Singer : Akila Natesan
Editor : Bharane Chidambaram
Description : Vishalakshi Meyyappan
Mani Venkatachalam
எந்த மலை சேவித்தாலும்
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
எந்த மலை சேவித்தாலும்
சபரிமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலை
கோமளாங்கன் வாழும் மலை
கோடி ஜனங்கள் வருகும் மலை
குளத்தூர் ஐயன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
எந்த மலை சேவித்தாலும்
சபரிமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
பாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலை
பரவசத்தை கொடுக்கும் மலை
பாவ வினைகளை தீர்க்கும் மலை
பம்பா பாலன் வாழும் மலை
எந்த மலை சேவித்தாலும்
தங்கமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
எந்த மலை சேவித்தாலும்
சபரிமலை வைபோகம்
எங்கயும் நான் கண்டதில்லையே ஐயப்பா
எங்கயும் நான் கண்டதில்லையே
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்/கூவினால்
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்/கூவினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
சபரிநாயகா சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்
சகல வினைகளும், சகல குறைகளும், சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
மதகஜானனா குக சகோதரா வருக வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நல்வழி காட்டுவான்
மதகஜானனா குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்
மனமகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நல்வழி காட்டுவான்
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் சுவாமியே சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா………………..
No comments:
Post a Comment