Followers

Monday, May 3, 2021

 

கணவனின் உயிரை காப்பாற்ற வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவி! பின்னர் நடந்தது என்ன? மனதை உருக்கும் புகைப்படங்கள்

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் சுவாசிக்க போராடிய கணவனை காப்பாற்ற வாயோடு வாய் வைத்து சுவாவம் கொடுத்த மனைவியின் முயற்சி தோல்வியில் முடிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில் நாட்டின் பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுபாடும் நிலவுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவமனையில் ரவி சிங்கேல் என்பவர் கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து செயற்கை சுவாசத்தின் தேவை அதிகரித்தது. இந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அவரும் அவரது மனைவியும் பல மருத்துவமனைகளுக்குச் சென்று கொரோனா சிகிச்சை பெற முயற்சித்தனர்.


இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டபோதும், அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் தனது கணவரைக் காப்பாற்ற மனைவி ரேணு சிங்கெல் வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறினார். ஆனால் இவரது முயற்சி தோல்வியில் முடிந்து ரவி சிங்கேல் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக ஆக்ரா மருத்துவ அதிகாரி பாண்டே கூறுகையில் மாவட்டம் முழுவதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...