Followers

Thursday, April 29, 2021

 


தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமோ அய்யா.............



தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமோ அய்யா

 

 

அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே

அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே

அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே

அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே

அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமோ அய்யா


அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த

தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமோ அய்யா

 

 

கல்லால் ஒருவன் அடிக்க ......

கல்லால் ஒருவன் அடிக்க ......

கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க

காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க

காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

வில்லால் ஒருவன் அடிக்க .....

வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம்

என்ற வில்லால் ஒருவன் அடிக்க

கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட

கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

வீசி மதுரை மாறன்.....

வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க

அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....


பெற்ற தந்தை தாய் இருந்தால்

கல்லால் ஒருவன் அடிக்க

காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க

வில்லால் ஒருவன் அடிக்க

கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட

கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட

வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க

அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....

பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த

தாழ்வெல்லாம் வருமோ அய்யா .....

வருமோ அய்யா .....

வருமோ அய்யா .....

 

 

மார்கழி மகா உற்சவம் - 2010

மதிப்பிற்குரிய அருணா சாய்ராம் அவர்கள் நிகழ்ச்சி

(வழங்கிய ஜெயா தொலைக்காட்சிக்கு நன்றி)

 

பாடியவர்: அருணா சாய்ராம்

பாடல்: தந்தை தாய் இருந்தால்

இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை

இராகம்: சண்முகப்ரியா 

_________________________________________________________

 

 

 

https://www.youtube.com/watch?v=2oKi7y5X8RM&ab_channel=JothiThemozhi

============================


Wednesday, April 28, 2021

 

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’


பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’
பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

பிரீமியம் ஸ்டோரி
பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

னிதர்களாகப் பிறந்தவர்களுக்கு, அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றபடிதான் வாழ்க்கையில் சுக-துக்கங்கள் ஏற்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன.

கடன் பிரச்னை, செய்யும் தொழிலில் பிரச்னை, கொடுக்கல்- வாங்கலில் பிரச்னை, எதிரிகளால் பிரச்னை, சொத்துப் பிரச்னை... என விதவிதமாகத் தோன்றும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

‘திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை’ என்ற வாக்கின்படி, நம்முடைய பிரச்னைகள் நீங்குவதற்குத் தெய்வ வழிபாடு துணை செய்யும். அவ்வகையில் மிக அற்புதமான வழிபாடு ஒன்றை நாம் அறிந்துகொள்வோம்.

சகல வழிபாடுகளிலும் முதன்மை பெறுவது விநாயகர் வழிபாடு. பிரதான வழிபாடு எதுவாக இருந்தாலும், எந்தத் தெய்வத்துக்கு உரியதாக இருந்தாலும், அதில் முதல் வணக்கம் பெறுவது பிள்ளையாரே.

இங்கே நாம் பார்க்கப்போகும் பிரதான வழிபாடே பிள்ளையார் பெருமானுக்குரியதுதான்.விநாயகர் அகவல், விநாயகர் நான்மணி மாலை, கணேசரின் காரிய ஸித்தி மாலை உட்பட பிள்ளையாரின் பெருமைகளை எடுத்துரைக்கும் ஞான நூல்களில் - துதிப் பாடல் தொகுப்புகளில் ஒன்று ஸ்ரீபிள்ளையார் பிரசன்னம்.

அற்புதங்களும் மகத்துவங்களும் நிறைந்த இந்த அருள்கோவைப் பாடல், அகத்திய மாமுனிவரின் அருள்வாக்காகத் திகழும் ஓலைச் சுவடிகளின் பாகங்களிலிருந்து வெளி வந்தது என்பது பெரியோர் வாக்கு. அதாவது, அகத்தியர் நாடி நூலில், பிரசன்ன காண்டம் பகுதியில் உள்ளது இந்த ‘ஸ்ரீதோரண கணபதி ப்ரசன்ன ஸ்துதி’.

இந்த துதிப்பாடலை தினமும் மூன்றுமுறை படித்து, விநாயகரைத் தொழுது வழிபட்டு வந்தால்,  கடன், வறுமை முதலான பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். வாழ்வில் வளம் பெருகும் என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

பிள்ளையார் பிரசன்னம்

‘இறை பிரசன்னம்’ என்ற சொல்லை அறிந்திருப்போம்.

`பிரசன்னம்' என்றால் `வெளிப்படுதல்' என்று பொருள். அதாவது, பிள்ளையார் பெருமானை வெளிப்படுத்துவதற்காகப் பாடப்படும் துதி என்று சொல்லலாம்.

இந்தப் பாடலைப் பாடி வழிபட்டால், பிள்ளையார் பெருமானின் சாந்நித்தியம் வெளிப்பட்டு, அவரின் அனுக்கிரகத்தால் நமது பிரச்னைகள் தீர்த்துவைக்கப்படும் என்பது நம்பிக்கை.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலுக்காக, திருப்பள்ளி எழுச்சி பாடினார்கள் ஆழ்வார்கள். திருப்பதி திருவேங்கடவனுக்கானது சுப்ரபாதம். ‘எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே’ என்று பாடி பரமனைத் துயிலெழுப்பி, பக்தர்களுக்கு அருள்செய்யும்படி வேண்டினார் மாணிக்கவாசகர்.

அதுபோல், தும்பிக்கையானிடம் நம்பிக்கை வைத்து, கடன், சத்ரு பயம், தீவினைகள், திருமணத் தடை, சொத்துப் பிரச்னை, தொழில் முடக்கம் முதலான சகலவிதமான பிரச்னைகளையும் தீர்த்துவைத்து அருள் செய்யும்படி அவரைப் பிரார்த்தனை செய்யும் துதி நூலே, பிள்ளையார் பிரசன்னம்.

இந்தத் துதிப்பாடலில் பிள்ளையாரின் குணாதிசயம், அவர் அமர்ந்து  அருள்பாலிக்கும் இடத்தின் மகத்துவம், அவரது சாந்நித்தியம், பிரச்னைகளுக்கான தீர்வு ஆகியவை சொல்லப்பட்டுள்ளன. இதன் தோத்திர பகுதியைக் காணும்போது, பிள்ளையார் பெருமான் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில் முன் அமர்ந்து, தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு அருள் வழங்குவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் துதிப்பாடலில் சொல்லப்படும் பிள்ளையாரின் திருநாமம் `தோரண கணபதி’ என்றே வழங்கப்படுகிறது. ஆக, பிள்ளையார் பிரசன்னம் துதிப்பாடல் ஒவ்வொன்றின் நிறைவிலும் `தோரண கணபதியே தோன்றிடுக என் முன்னே’ என்று கூறி வணங்குவ்து சிறப்பு.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

இனி, துதிப்பாடல் ஒவ்வொன்றையும் அதன் மகத்துவத்தோடு அறிந்துகொள்வோம்.



1. கடன் தொல்லைகள் நீங்கும்

சக்தியின் மைந்தனாய்ச்

   சித்திகள் சேர்த்திடும்

முக்தியின் பொருள் சொன்ன

     மூத்தக் கரிமுகவாய்

காரணணே புகழ்ப்பொருளே 

    கடன்தீர் வீரனே!

தோரண கணபதியே!            

   தோன்றிடுக என் முன்னே

(தோரண)


கருத்து: அகிலத்தை ஆட்சிசெய்யும் ஆதிபராசக்தியின் முதல் மகனாக அவதரித்து, தம்மை வணங்கும் அடியவர்களது வாழ்வில் பல வெற்றிகளை வழங்கும் பிள்ளையாரே, மனித வாழ்வில் இறை சக்தியால் விளையும் பயன்களையும் தெய்வ ரகசியங்களையும் எடுத்துரைத்த மூத்தப் பிள்ளையே, அட்ட மங்கலங்களில் ஒன்றான யானையின் முகத்தைக் கொண்டிருக்கும் யோக வடிவினரே...

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாவாக விளங்கும் நீங்கள், வாழ்வில் நாங்கள் பட்ட கடன்கள் அனைத்தும் தீர்ந்திட அருள்செய்யும் சக்தி படைத்தவர் என்பதை அறிவோம்.

உலகம் போற்றும் வண்ணம் பெரும்புகழ் கொண்டவரே, தோரண கணபதியே... தாங்கள், ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிக்க வேண்டும்.

2. துயரங்கள் விலகும்

திருமகள் அருளிருந்தும்
   திரவியங்கள் சேராமல்
திருவிருந்தும் வாழ்வுதனில்        
   ஒளியின்றி நிற்கின்றோம்
கடன்பட்டுக் கலங்கும்
   நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே
உடன் வந்தே உபாயங்கள்
    காட்டிடுவாய் கரிமுகவாய்!


கருத்து: வைகுந்த வாசனாம் மகாவிஷ்ணுவின் இதயத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமிதேவியின் திருவருள் பார்வை எங்களுக்குக் கிடைத்த போதும், பதினாறு செல்வங்களும் எங்களிடம் நிலைத்திருக்காமல் நீங்குவதை நீங்கள் காணவேண்டும்.

திருவருள் பரிபூரணமாக இருந்தபோதும், எங்களது வாழ்க்கை களையிழந்து திகழ்வதை உங்களின் கடைக்கண்ணால் ஒரு கணம் நோக்கவேண்டும்.

இந்தக் கலியுகத்தில் பல ஆன்மாக்களிடம் நாங்கள் பெற்ற உதவிகளையும் கடன்களையும் நன்றியோடு திருப்பியளிக்க முடியாமல் தவிக்கிறோம். அதெபோல், எங்களிடம் பணம் பொருளைக் கடனாகப் பெற்றுச் சென்றவர்களிடம் அவற்றைத் திரும்பப் பெற இயலாமலும் கலக்கத்துடன் வாழ்கிறோம்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

தங்களின் உண்மையான பக்தர்களாகிய எங்களுக்கு, இந்தச் சோதனைகள் நீங்கும் வகையில் நீங்கள்  அருள்பாலிக்கவேண்டும். அதன்பொருட்டு, தோரண கணபதியே... ஒருமுறை எங்கள் முன் தோன்றி அருள்பாலிப்பீராக!

3. வீண் விரயங்கள், வீண் பழிச்சொற்கள் விலகும்!

பொருள் பெற்ற நேசர்களும் தனம் பெற்ற மாந்தர்களும்
கருணைச் சொல்தவிர்த்துக் கடுஞ்சொல் உதிர்க்கையிலே
கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்
விரயம் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக


கருத்து: இந்தக் கலியுகத்தில், நண்பர்களும் உறவினர்களும் எங்களிடம் பொருளை அன்போடு கேட்டுப் பெறுகிறார்கள். திருப்பிக் கேட்கும்போதோ, அன்பான வார்த்தைகளைத் தவிர்த்து கடுஞ்சொற்களால் வசைபாடுகிறார்கள்.

தரிசித்த கணமே துன்பங்களை நீக்கி ஆனந்தம் அருளும் யானைமுகக் கணபதியே, கஷ்டங்கள் நிறைந்த இந்தத் தருணத்தில், திருக்கண்களைத் திறந்து தங்களின் அருள் பார்வையை எங்கள் மீது விழச்செய்ய வேண்டும்; எங்களுடைய துயரங்களுக்குத் தீர்வு காண, நல்ல வழியை அருளவேண்டும்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

எங்களது வாழ்வில் பொருள் நஷ்டம் எதுவும் ஏற்பட்டுவிடாமலும், கையைவிட்டுச் சென்ற திரவியங்கள் மீண்டும் எங்களை வந்து அடையும்படியும் அருள்பாலிக்க வேண்டும். தோரண கணபதியே எங்கள் முன் ஒரு கணம் தோன்றி, வீண் விரயங்களும் வீண் பழிச் சொற்களும் வராதபடி எங்களைக் காப்பாற்றவேண்டும்.

4. நலன்கள் யாவும் கைகூடும்

மாதுளை மாங்கனியும் கொவ்வை
   என ஐங்கனியும்
காதினிலே சேதி சொல்லி
   செவ்வாய் மதிசதுர்த்தியிலும்
சேரும் இரவி காலத்திலும்
   மலர்தூவிப் படைத்திட்டோம்
தோரணணே! செவ்வேளின்
   மூத்தவனே! செவி சாய்ப்பாய்!


கருத்து: பிள்ளையாரப்பா! உமக்கு மிகவும் பிடித்தமான கனிகளாகிய மாதுளை, மா, கொவ்வைப் பழம், சாத்துக்குடி, திராட்சை ஆகிய ஐவகைக் கனிகளைச் சமர்ப்பிக்கிறோம்.

மங்கள வாரமாகிய செவ்வாய்க்கிழமையிலும், வளர்பிறை சதுர்த்தி தினத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், உமது திருச்சந்நிதியில் நறுமணம் கமழும் மலர்களைச் சமர்ப்பித்து, மூன்று தீபங்களை ஏற்றிவைத்து வணங்குகிறோம்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

முறம் போன்ற பெரிய செவிகளுக்குக் கேட்கும் படியாக எங்களுடைய கஷ்டங்களைச் சொல்லி, எங்களது வாழ்வில் ஒளி தரும்படி வேண்டு கிறோம். தோரண கணபதியே, முருகனுக்கு மூத்தோனே... எங்களுடைய  கஷ்டங்களைக் காது கொடுத்துக் கேட்டு, அவற்றை தீர்த்தருள்வீராக.

5. அச்சம் நீங்கும்

அல்லல்கள் அகலும்
பூரணியின் மைந்தனாகப்
   புவனமதில் தோன்றியவா
தோரண வாயில் அமர்ந்து
   துவள்வோரைக் காப்பவரே
சக்தியின் மேகலையில்
   புத்தி தரும் புகழ்மகவே
எத்திக்கும் கடன்பட்டோர்
  எதிர்வந்து நிற்கையிலே!


கருத்து: உலக உயிர்களுக்கெல்லாம் பசி தீர அன்னம் பரிபாலிக்கும் அன்னபூரணியின் மைந்தனே, தோரண வாயிலில் அமர்ந்து, தேடி வரும் பக்தர்களின் துன்பங்களை நீக்கிக் காத்தருளும் கருணா மூர்த்தியே, அன்னையின் ஆலய முகப்பில் - மேகலைப் பகுதியில், தாமரைப் பீடத்தில் அமர்ந்து, அடியார்களின் வாழ்க்கைச் சிறக்க வழிகாட்டும் புகழ்பெற்ற பிள்ளையாரே, எங்களின் அச்சங்கள் யாவற்றையும் தாங்கள் போக்கியருள வேண்டும்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

வாழ்க்கைச் சூழல் காரணமாக எட்டுத் திசைகளிலும் எங்களைச் சூழ்ந்து நிற்கும் கடன் பிரச்னைகளிலிருந்து காப்பாற்றுவீராக. பொன்- பொருளையும், இழந்துவிட்ட நல்வாழ்க்கையையும் மீட்க முடியாமல் போராடித் தவிக்கும் நாங்கள், தங்களின் திருமுன்னே கலங்கி நிற்கிறோம். எங்களது பிரார்த்தனையை ஏற்று திருவருள் புரியவேண்டும். அச்சம் நீங்கி நாங்கள் நல்வாழ்வு பெற்றிட வழிகாட்ட வேண்டும்.

6. ஆனந்தம் பெருகும்

சந்திரன் ஒளிகரைத்துச் சரித்திரம் படைத்தது போல்
இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே!
குன்றத்தூர் சக்திபீடமதில் கடன்தீர்க் கணநாதனாய்க்
கன்றுமுன் பசுபோலக் கனிமுகம் காட்டி நிற்பாய்


கருத்து: கலைகளில் நாயகன் என்று சந்திரனைப் போற்றுவார்கள். வான் வழியே உலகைச் சுற்றும் அந்தச் சந்திரனையே ஒளியிழக்கச் செய்து, அவருக்குப் புத்தி கொடுத்து, புகழ் வரலாறு படைத்தவரே! உலக நீதியை எடுத்துரைத்த பெருமானே! 

தங்களை வழிபடாமல் ஆணவத்துடன் சென்று விட்ட தேவர் தலைவனான இந்திரனுக்குப் புத்தி புகட்டும்விதம் தேரின் அச்சை முறியச் செய்து, வழிபாட்டின் தத்துவம் சொன்ன முழுமுதற் தெய்வமே... உம்மை வணங்குகிறோம்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

தங்களைப் போற்றி பிரார்த்தனை செய்ய வந்திருக்கும் எங்களின் முன் தோன்றி... பசுவானது தான் ஈன்றெடுத்த கன்றினைக் கண்டதும் எவ்வாறு மகிழ்ச்சியோடும் கனிவோடும் இன்முகம் காட்டிப் பாலூட்டுகிறதோ, அதுபோல் தாங்களும் எங்களுக்கு இன்முகம் காட்டி, மனநிறைவான தீர்வுகளைத் தந்தருள வேண்டுகிறோம். அதன்பொருட்டு,  தோரணப் பிள்ளையாரே... காலம் தாழ்த்தாமல் எங்கள் முன் தோன்றி அருள் பாலிக்கவேண்டும்.

`பிள்ளையார் பிரசன்னம்' வழிபாடும் மகத்துவமும்!

`கணபதி பூசை கைமேல் பலன்’ என்று ஔவைப் பிராட்டியார் அருளியிருக்கிறார். அவரது திருவாக்குப்படி, அடியார்களின் எளிமை யான வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வரம் வாரி வழங்கும் கற்பகத் தருவாகத் திகழ்பவர் கணபதி.

கடன், நிலம்-மனையில் பிரச்னை, குடும்பப் பிரிவினைகள், வேலையின்மை, திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை, தீவினைகள் முதலான சகல பிரச்னை களுக்கும் காப்பாகத் திகழ்வது, கணபதி பிரசன்ன துதி வழிபாடு.

வழிபடும் முறை:

சக்தி வாய்ந்த இந்தத் துதிப்பாடல் ஒவ்வொன் றையும் மூன்றுமுறை  படித்து, ஒவ்வொரு துதிக்கும் ஒரு நமஸ்காரம் வீதம் (3x6) 18 நமஸ்காரங்கள் செய்யவேண்டும்.

கடன் தீர்ந்து மனநிம்மதி பெறுவதற்கு, ஆறு செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் பிள்ளையாருக்குத் தீபமிட்டு பாராயணம் செய்ய வேண்டும்.

ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமத்துச் சனி கண்டச்சனி, சனி தசை காலங்களில் ஏற்படும்  பாதிப்புகளால் இடர்களைச் சந்தித்து வரும் அன்பர்கள், சனிக்கிழமை காலையில் ராகு நேரத்தில் இந்தத் துதியைக் கூறி பிள்ளையாரை வழிபட்டால், தோஷங்கள் அனைத்தும் அகன்று நல்வாழ்வை அடைவார்கள்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

பெண்களில் சிலருக்கு, திருமணமான பிறகு, நவ கோள்களின் நகர்வால் கணவனைப் பிரிந்து வாடும் நிலை ஏற்படலாம். இவர்கள், சனிக் கிழமைகளில் காலை வேளையில் பிள்ளையாருக்கு ஒன்பது தேங்காய்களைச் சமர்ப்பித்து, அவரின் சந்நிதிக்குப் பின்புறமாக மூன்று தீபங்கள் இட்டு வழிபடவேண்டும். இப்படி ஒன்பது வாரங்கள் தோரண விநாயகரை வழிபட்டு வந்தால்,  பிரிந்த தம்பதி விரைவில் ஒன்று சேர்வார்கள். ஊரும் உறவுகளும் மெச்சும்படி கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து குடும்பம் நடத்துவார்கள்.

வளர்பிறை சதுர்த்தி தினத்தில், பிள்ளையாரின் திருமுன்பாக பிரசன்ன துதியைப் பாராயணம் செய்து வழிபட்டால்,  தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவரும் கடன் பிரச்னைகள் நீங்கும். எதிர்பாராத வகையில் லாபம் பெருகும். தொழிலில் விரைவில் வெற்றி உண்டாகும்.

அதேபோல், உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள அம்பாள் ஆலயத்தில், தோரண கணபதியாய் (நுழை வாயிலின் அருகில்) அருளும் பிள்ளையாரைத் அனுதினமும் தரிசித்து வழிபட்டால், சகலவிதமான தடங்கல் களும் நீங்கி காரிய வெற்றி உண்டாகும்.

தோரண கணபதி தரிசனமும் வழிபாடும்!

சக்தி தேவியர் தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், தோரண வாயிலைப் பார்த்தபடி, அம்பிகைக்கு வலப் புறமாக சந்நிதி கொண்டிருப்பார், அருள்மிகு தோரண கணபதி.

ஜடா மகுடமும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், மேலிரு கரங்களில் அங்குச- பாசமும், கீழ் இரு கரங் களில் தந்தமும் மோதகமும் ஏந்தியவாறு அருள்வார், தோரண கணபதி.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

இவர், தமது கையில் இருக்கும் தந்தத்தைப் பயன்படுத்தி, நமது வாழ்வில் உள்ள `ருணம்' எனும் கடன்களைத் தீர்த்து அருளும் தெய்வம் என்று சிவாகம துதிகள் கூறுகின்றன.

சக்தி மேகல்வாசம்
  சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம்
  கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம்
  தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம்
  நௌமி ஸதா ப்ரசன்னம்!


எனப் போற்றுகிறது ஒரு துதிப்பாடல்.

மூல ஆலயத்திலிருந்து பார்க்கும்போது, இவர் அமர்ந்திருக்கும் இடம் பிரம்ம ஸ்தானமாக அமைவதால், கடனைத் தீர்ப்பதில் இவர் வல்லவராகத் திகழ்கிறார்.

தாமரை பீடத்தில் அமர்ந்தவராக, தம்மைத் தேடிவந்து வழிபடும் பக்தர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமிகடாட்சத்தைக் கொடுக்கிறார்!

மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும்.  இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி வழிபாடு கை கொடுக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம்.




பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை வழிபடலாம்.

இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

அத்துடன் மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில், ஸ்ரீசாரதாம்பா ளின் திருச்சந்நிதியில், காப்பு கணபதியாக அருள்கிறார் ஸ்ரீதோரண கணபதி. தமிழ்நாட்டில் பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வடதேசத்தில் வாரணாசி ஆகிய தலங்களில் தோரண கணபதி வழிபாடு உண்டு.

குன்றத்தூரில் தோரண கணபதி

சென்னையில் குன்றத்தூர் அருள்மிகு முருகன் கோயில் (மலைக்கு) அருகில், திருநீர் மலை சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீசக்தி கார்த்தியாயினி ஆலயம்.

இங்கே, பல்லவர் காலத்துக் கட்டடக் கலை அமைப்பில், நகர்ந்து வரும் தேர் போன்று அமைக்கப் பட்டுள்ளது சக்திதேவியின் சந்நிதி. சக்தி தேவியின் கருவறையைச் சுற்றிலும் அஷ்டலட்சுமிகள் நின்ற கோலத்தில் அருள் தருகின்றனர். நம்முடைய கஷ்டங்கள் அனைத் தையும் நீக்கி, இந்தத் திருக்கோயிலில், கோபுரத்தின் அருகிலுள்ள தோரண வாயிலில் காப்பு தெய்வமாக அருள்கிறார் வ்தோரணகணபதி.
 
இங்கே அம்பிகையைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ஸ்ரீதோரண கணபதியையும் வழிபட்டு வரம் பெற்றுச் செல்கிறார்கள்.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

வளர்பிறை சதுர்த்தி, செவ்வாய்க் கிழமைகளில் தோரண கணபதிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, `ஸ்வர்ண தீப வழிபாடு' மூன்று முறை செய்து வர வேண்டும். இதன் பலனாக கடன் தொல்லைகள் நீங்கும். கடனாகக்  கொடுத்த பணமும் பொருளும் விரைவில் மீளும். வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

சாஸ்திரங்கள் மூவகை எதிரிகள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. அதாவது பணி நிமித்தமான எதிரிகள், வெளிப்படையான பகைவர்கள், மறைமுகப் பகைவர்கள் ஆகியோரால் ஏற்படும் தொல்லை களிலிருந்து விடுபடவும் தோரண கணபதியைத் தரிசித்து அருள்பெறலாம்.

சனிக்கிழமை- காலை வேளையில், இத்தலத்தின் பிள்ளையார் சாந்த சொரூபியாக - வித்யா கணபதியாகக் காட்சி தருவார். அப்போது நிகழும் பூஜை-வழிபாடுகளில் கலந்து கொண்டு பிள்ளையாரைத் தரிசித்து வழிபட்டால், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நன்கு படிக்கத் தொடங்குவார்கள்; தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள்.

நன்கு படித்தும் வெகு நாள்களாக நல்லதொரு வேலை கிடைக்காமல் அல்லல் படும் இளைஞர்கள், சனிக்கிழமை காலையில், குன்றத்தூர் ஸ்ரீசக்தி கார்த்தியாயினி கோயிலில் அருளும் தோரண கணபதியைத் தரிசித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் நல்ல வெலை அமையும் என்பது நம்பிக்கை.

பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் ‘பிள்ளையார் பிரசன்ன ஸ்துதி’

`வளர் பிறை சதுர்த்தியில் பிள்ளையாரை வழிபட்டால், சுகங்கள் தொடரும்' எனும் ஞானநூல்களின் அறிவுரைப்படி, இந்தக் கோயிலில் வளர்பிறை சதுர்த்தி தினங்களில், கூட்டு வழிபாடும் வேள்வியும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சதுர்த்தித் திருநாளில், மாலை 6 முதல் 8 மணி வரை, அன்பர்கள் (பலன் பெற்றோரும், பலன் பெற விரும்பும் அன்பர்களும்) ஒன்றிணைந்து, `ருண விமோசன கணபதி' வேள்வி நடத்தி, வலம்புரிச் சங்கு மூலம் பிள்ளையாருக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டு வரம்பெற்றுச் செல்கிறார்கள்.

நீங்களும், `பிள்ளையார் பிரசன்னம்' வெளியான தலமாகக் கருதப்படும் குன்றத்தூருக்குச் சென்று தோரணரை வழிபட்டு நலம் பெற்று வாருங்கள்.


தோரண கணபதியே தோன்றுக என் முன்னே.'

"சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்

முக்தியின் பொருள்சொன்ன மூத்தக் கரிமுகவாய்

காரணமே புகழ்ப் பொருளே கடன்தீர் வீரனே

தோரண கணபதியே தோன்றுக என் முன்னே.' (1)

 

"திருமகள் அருளிருந்தும் திரவியங்கள் சேராமல்

திருவிருந்தும் வாழ்வுதனில் ஒளியின்றி நிற்கின்றோம்

கடன்பட்டு கலங்கும் நெஞ்சைக் கனிவுடன் காத்திடவே

உடன்வந்தே உபாயங்கள் காட்டிடுவாய் கரிமுகவாய்.' (2)

 

"பொருள்பெற்ற நேசர்களும் தனம்பெற்ற மாந்தர்களும்

கருணை சொல்தவிர்த்து கடுஞ்சொல் உதிர்க்கையிலே

கரியோனே கஜமுகனே கண்திறந்து தீர்வளிப்பாய்

விரயங்கள் ஏதுமின்றி வீழ்பொருளைக் கொணர்ந்திடுக.' (3)

 

"மாதுளை மாங்கனியும் கோவை என ஐங்கனியும்

காதினிலே சேதி சொல்லிலி செவ்வாய் மதி சதுர்த்தியிலும்

சேரும் இரவி காலத்திலும் மலர்தூவிப் படைத்திட்டோம்

தோரணனே செவ்வேளின் மூத்தவனே செவி சாய்ப்பாய்.' (4)

 

"பூரணியின் மைந்தனாகப் புவனமதில் தோன்றியவா

தோரண வாயிலமர்ந்து துவள்வோரைக் காப்பவரே

சக்தியின் மேகலையில் புத்திதரும் புகழ் மகவே

எத்திக்கும் கடன்பட்டோர் எதிர்வந்து நிற்கையிலே.' (5)

 

"சந்திரன் ஒளிகரைத்து சரித்திரம் படைத்ததுபோல்

இந்திரன் வில்லொடித்து மதிதந்து விதி சொன்னவரே

குன்றத்தூர் சக்தி பீடமதில் கடன்தீர கணநாதனாய்க்

கன்றுமுன் பசுவைப்போல் கனிமுகம் காட்டி நிற்பாய்.' (6)


சக்தி மேகல்வாசம்
  சகல கல்யாண மூர்த்திம்
அங்குச பாச ஹஸ்தம்
  கிரீட மகுட தாத்ரீம்
அஷ்ட லக்ஷ்மீ சகிதம்
  தோரண கோபுர நேத்ரம்
ருணமோசன கணேசம்
  நௌமி ஸதா ப்ரசன்னம்!

 

============================================


தொகுப்பு: கே.குமார சிவாச்சாரியார்    

அட்டைப்பட ஓவியம்: பத்மாவசன்


courtesy; https://www.vikatan.com/spiritual/temples/141865-vinayagar-prasanna-sthuthi

===================================

Sunday, April 25, 2021

 எல்டொராடோ - சுஜாதா அவர்களின் மற்றுமொரு சிறுகதை!





கதவு திறந்து மன்னிக்கு அவனை அடையாளம் தெரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. தெரிந்ததும் திடுக்கிட்டாள் திணறி எச்சில் விழுங்கி 'நீங்களா? எப்ப வந்தேள்?"
"இப்பதான், நேர வரேன், அப்பா எப்படி இருக்கா?"
"அம்மா, அம்மா யார் வந்திருக்கா பாருங்கோ."
"யாருடி?"
"பரத்"
"பரத்தா?"
யாரு? பரத்தா?"
“என்னது? பரத்தா!" மூலைக்கு மூலை ஆச்சர்யக் குரல்கள் ஒலித்தன.
ரேடியோ நிறுத்தப்பட்டது. பிள்ளைகளின் படிப்பு ரத்து செய்யப்பட்டது.
அம்மா, பெரிய அண்ணா, அண்ணா, அக்கா, மன்னிகள் குழந்தைகள் எல்லோரும் ஹாலில் ஒரு அரை வட்ட விரோத விழாப் போல் வந்து சேர்ந்துகொண்டு, அவனைச் சுற்றிப் பார்வை வியூகம் அமைத்தார்கள்
சின்ன மன்னிதான் "வா பரத்" என்றாள். எப்படி மாறிவிட்டாள்! எங்கே அந்த அழகான மணப்பெண்?
"என்னடா, எங்கே வந்தே?" அம்மா
"அப்பாவைப் பார்க்க வந்தேம்மா எப்படி இருக்கார்?"
"இத்தனை நாளா இல்லாம இப்ப வந்தாயா? ஏன் என்னைப் பார்க்க வரக்கூடாதா? எத்தனை வருஷமாச்சு!"
"அப்பா உடம்பு ரொம்ப மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டேன்"
"ஏண்டா, எந்த மூஞ்சியை வெச்சுண்டு விசாரிக்கறே! துப்புக் கெட்டவனே ! ஒரு கடுதாசி உண்டா? இப்ப திடீர்னு எதுக்காக வந்ததிக்கறே? எதுக்காகடா?"
"இல்லைம்மா, அம்பி அய்யர் சொன்னதைப் பார்த்தா அப்பாவை ஒரு வேளை இனிமே பார்க்க முடியாம போய்டுமோன்னு பயம் வந்துடுத்து.”
"பார்த்து இப்ப என்ன கிழிக்கப் போற?'
"ஏன்னா ? வந்தவரை...''
"சும்மாருடி! இது எங்க குடும்ப விஷயம். ப்ராடிகல் சன் வந்திருக்கான்" என்றார் அண்ணன்
"ஏண்டா, பார்க்க என்ன தகுதி இருக்கு உனக்கு?"
"ஏன் பார்க்கக் கூடாதா?" என்றான் விரோதமாக
"ஏய் பசங்களா எல்லோரும் உள்ள போங்கோ."
"மகன்ங்கிற தகுதிதான் அண்ணா ."
"மகன்! ஆஹா! பெரிசா வந்துட்டான். எத்தனை நாள் அவருக்கு சோறு போட்டே?."
"இதையெல்லாம் அப்புறம் பேசலாம். எனக்கு அப்பாவை பார்க்கணும், அவ்வளவுதான்"
"கூடாது. முடியாது. இந்த வீட்டில நுழையறதுக்கு உனக்கு அருகதை இல்லை. அப்படியே வெளில போ"
"இந்த வீடு உன்னுதா அண்ணா?"
"பார்த்தியாம்மா. வந்த உடனே என்ன கேள்வி கேக்கறான் ?
"எட்டு வருஷமா ஏண்டா வரலை? அதுக்கு பதில் சொல்"
"இந்த வீடு இன்னும் நம் அப்பாதுதானே, இதில் நுழைய எனக்கு உரிமை இருக்கு"
"இவன் அப்பாவைப் பார்க்க வரலைம்மா. கிழவன் மண்டையைப் போட்டுறப் போறார்னு சொத்தில் பங்கு வந்திருக்கான்"
"ஏண்டா கடன்காரா! எப்படி நீ வரப்போகும்? -பெத்த தாயார்க்கு ஒரு லெட்டர் போட்டியா?"
"அதுக்கெல்லாம் என்ன காரணம்ங்கறது எல்லோருக்கும் தெரியுமே"
"தெரியும் பேப்பர்ல சந்தி சிரிச்சுதே..."
"சொத்துக்குத்தாம்மா வந்திருக்கான்..."
"இதோ பார் ஸ்ரீதர். அனாவசியமா சண்டைக்கு காலைப் பிராண்டாதே! எனக்கு சொத்தும் வேண்டாம் ஒரு எழவும் வேண்டாம். அப்பாவைப் பார்க்க அனுமதிச்சாப் போறும். எங்க படுத்திண்டிருக்கார்?"
"அப்படியே சுபாவம் மாறாம இருக்கான்."
'இருந்துட்டுப் போறேன். முட்டாத்தனமாக நடந்துக்காதீங்கோ என்ன சொன்னாலும் ஏசினாலும் நான் அப்பாவைப் பார்த்துட்டுத் தான் இந்த இடத்தை விட்டுப் போகப் போறேன். அனாவசியத் துக்கு இந்த இடத்தில் சண்டையோ மூர்க்கத்தனமோ வேண்டாம். ஒரு நண்பன், இல்லை பார்வையாளனா நினைச்சுக் கங்கோ...... . எங்கே அவர்?"
"உன்னை இப்ப அவர் பார்த்தா அடையாளம் கண்டுப்பார்னு நினைக்கிறயா?"
"ஏன்? மயக்கமா?"
"இல்லை . மூஞ்சில காறித் துப்புவார்."
'துப்பமாட்டார். நிச்சயம் என்னை அவருக்கு ஞாபகம் இருக்கும். எட்டு யுகமானாலும் ஞாபகமிருக்கும்!"
"கிழத்துக்கு நேத்திக்கு நடந்தது இன்னிக்கு நினைவில்லை.....ஞாபகம் இருக்குமாம்!"
"சரிம்மா; இவனோட என்ன ரோதனை? கல்லுளி மங்கன் மாதிரி போகமாட்டான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு......கூடப் பிறந்த தோஷத்துக்காக காட்டிட்டு வீட்டை விட்டு விரட்டிடலாம். ஏய் சின்னி , வாடி இங்கே. இது யார் தெரியுமா... சி...த்... தப்...பா... அழகான சித்தப்பா, அழைச்சுண்டு போய் தாத்தா ரூமை காட்டு"
சின்னியின் பின் மௌனமாக நடந்தான். மாடிப்படி ஏறித் திரும்பும்போது அத்தனை கண்களும் அவனைக் குத்தித் துளைப்பதை உணர்ந்தான்
எட்டு வருஷமாக விட்டுப்போன உறவு, ஒரு கடிதமில்லை விசாரிப்பில்லை கல்யாண அழைப்பில்லை எங்கே இருக்கிறான் என்கிற சங்கதி இல்லை. சினிமா என்றோ, டிராமா என்றோ கல்கத்தா என்றோ, காசி என்றோ, பணக்காரன் என்றோ கடனில் முழ்கிவிட்டான் என்றோ, பொண்டாட்டி ஓடிப்போய் கிறிஸ்துவப் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கிறான் என்றோ கேள்விப்பட்டிருப்பார்கள்......எட்டு வருஷ வெட்டுக்குப் பிறகு வதந்திகளிலிருந்து வடிவெடுத்திருக்கிறான். எப்படி ஒட்டுவார்கள்?
"சித்தப்பாவா நீ" என்றாள் சின்னி.
"ஆமாம்".
மெதுவாக அந்த மாடி அறையை அணுகினார்கள்
"எந்த ஊர்?'
"ஏதோ ஊரு"
"சித்தி வரலியா"
"இல்லை"
'செத்துப் போய்ட்டாளா?"
"இல்லை"
"என்ன வேலை பண்றேள்?"
"அலையறேன்"
"எதுக்கு?"
“ஜெயிலுக்குப் போயிருந்தேன்னு சொன்னாளே, அந்த சித்தப்பாவா, நீ?"
"ஏய் சின்னி! பேசாம ரூமைக் காட்டிட்டு திரும்பி வா..."
சின்னி கதவைத் திறந்து, "உள்ள போங்கோ. தாத்தா தூங்கிண்டிருப்பார்” என்று சொல்லிவிட்டு விலகினாள்,
உள்ளே டெட்டால் வாசனையடித்தது. ஏறக்குறைய இருட்பாக, சைபர் வாட் நியான் ஒளியில் தரையில் ஒரு போர்வைக் குவியல் தெரிந்தது
சுவரில் தடவி விளக்குப்போட்டு அதை அணுகினான். குனிந்து மெல்ல விலக்கினான். அதிர்ந்து போனான்,
'மை காட்! இது அப்பா இல்லை. நான் பார்த்த அப்பா பாதி! சுருங்கிப் போய்விட்டார். கண்கள் இருட்டுப் பொத்துகளாக மூடி, கன்னங்கள் ஒட்டிப்போய், கை நரம்புகளும் மார்பு எலும்புகளும் தெரிய......பிராணன் ?
"அப்பா" பதில் இல்லை.
சற்று நேரம் அவரைப் பார்த்துக் கொண்டு அழுதான். மன வெளிச்சத்தில் சட் சட் என்று அந்த மனிதரின் ஞாபக பிம்பங்கள் மாறின.
"அப்பா, அப்பா..."
படுக்கையருகில் உட்கார்ந்து நெற்றியைத் தொட்டான். சூடு அந்த கையெலும்பை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டான். அழுகை பீறிட்டது.
"அப்பா..."
சட்டென்று கனவுச் சங்கிலியிலிருந்து விடுதலை பெற்றவர் போல் சிலிர்த்துக் கண் விழித்தார்.
"யாரு?"
"நான்தாம்பா, பரத் வந்திருக்கேன்"
மெல்லத் தலை நகர்த்தி அவனைப் பார்த்தார்.
'பரத்தா?... பரத்தா?... என் மூணாவது பையனா?"
"ஆமாம்ப்பா ஆமாம்"
"நீதானா!" என்ன கிணற்றுக் குரல் அது! எட்டு வருஷத்துக்கு முந்தைய ஒலி முழக்கம் எங்கே...?
"நான் தாம்பா.."
'சௌக்கியமா இருக்கியா?"
"இருக்கேம்பா!"
"ரொம்ப நாளா காணோம்..."
"வந்துட்டேம்பா!"
"தெரியும். நீ வருவேன்னு தெரியும் சாப்பிட்டியா?'
"இல்லப்பா"
"சாப்ட்டுறு. ராட்சசிகள்ளாம் அப்புறம் இல்லைன்னுடுவா. மூணு ராட்சசி.....நாலு ராட்சசி"
"என்னப்பா உனக்கு உடம்பு..."
"களைப்புப்பா! அலுப்பு... போறும் நிஜமாவே பரத்தா...?' அந்தக் கரம் சிரமப்பட்டு மேல் வந்து அவன் தலை மயிரைக் கலைத்து, "பரத் உனக்குத்தான்... உனக்குத்தான் சரியாவே எதும் செய்யலை..." கிழவரின் கண்கள் கலங்கின
"அதெல்லாம் இல்லப்பா"
"என்னைப் பாரு சீக்கிரம் செத்துப் போய்டுவேனா? சீக்கிரம் போய்ட்டா தேவலாம்..."
"இல்லப்பா, தேவலையாய்டும்"
'உன்னைப்பத்திதான் சதா நினைப்பு"
"எனக்கும்ப்பா"
"கிட்ட வா" கிழவர் மெல்ல, யோசித்து யோசித்து, மிக மெலிந்த குரலில் பேசினார்.
"இந்த ரூமைப் பாரு சுடுகொடு மாதிரி இல்லை என்னை இதில் போட்டு அடைச்சுட்டு எல்லாரும் கீழயே இருக்கா அஞ்சு நிமிஷம் பேச ஆளில்லை. நாக்கு செத்துப் போச்சு. ஆரஞ்சுப்பழம் வாங்கிக் கொடுனு ஒரு வாரமா சொல்லிண்டிருக்கேன். இங்க வேற யாரும் இல்லையே...?
"இல்லைப்பா!"
"பழம் எல்லாம் கீழே வெச்சிண்டிருக்கா. அவாளே சாப்படறா..... உங்கம்மா, மூத்த ராட்சசி, என்னை வந்து பார்த்து மூணு நாளாச்சு, எல்லாரும் காத்திண்டிருக்கா பரத்..."
"அதெல்லாம் இல்லைப்பா, சரியாய்டும்".
"ஆரஞ்சுப்பழம் வாங்கித் தரயா"
'தரேன்ப்பா "
"இத பார் மருந்து.. இதில் விஷம் கலந்திருக்கா, குடிக்கமாட்டேன்"
"அப்படி எல்லாம் செய்யமாட்டாப்பா."
"எல்லாரும் காத்துண்டிருக்கா.. நீ எந்த ஊர்ல இருக்கே?"
"ஏதோ ஊர்ப்பா. ஸ்திரமா எதும் இல்லை ."
வீட்டில் இருக்கயா?
"இல்லை, ரூம்ல..."
எனக்கு இடம் இருக்குமா, என்னை அழைச்சுண்டு போறியா?"
"சரிப்பா"
"இப்ப போகலாமா"
"இல்லை, நாளைக்கு கார்த்தலை..."
"இப்பவே போகவேண்டாமா?'
"தூங்கிட்டு நாளைக்கு கார்த்தலை போகலாம்."
"என்னை இந்த சுடுகாட்டில் இருந்து அழைச்சுண்டு போயிடறியா?"
"சரிப்பா"
அவர் முகத்தில் சாந்தம் தெரிந்தது
"நீ பேசு"
அவர் முன் சாய்ந்து "அப்பா” என்றான் தலையைக் கோதிவிட்டு
*அப்பா நானும் நீயும் கிரிக்கெட் ஆடுவோமே, ஞாபகம் இருக்கா ?"
ஞாபகம் புன்னகையாக மலர்ந்தது
"ரெண்டுபேரும் ஒரே டீம்ல மாட்ச் ஆடியிருக்கோம். நீ பத்தொம்பது அடுச்சுட்டு ரன் அவுட் ஆயிட்டே. எனக்கு ஏற்ப உன்னால ஓட முடியலே. ஸாரிப்பா, அது ராங்கால், அது என் தப்பு...."
"சொல்லு..."
"சின்ன - வயசில அய்யன் வாய்க்கால்ல நீஞ்ச கத்துக் குடுத்தியே. தொபுக்கடீர்னு தள்ளிவிட்டுட்டு மூச்சுத் திணற வெப்பியே; அப்புறம் கொய்யாக்கா அடிச்சு சாப்பிடுவோமே அம்மாவுக்குத் தெரியாம உனக்கு பர்க்லி சிகரெட் வாங்கிண்டு வருவேனே. ரெண்டு பேரும் கவட்டை கட்டி குருவி அடிப்பமே எவ்வளவு தூரம் ட்ரெக்கிங்... போவோம்... பாண தீர்த்தத்தில் பாறைல படுத்துண்டு நட்சத்திரத்துக்கு எல்லாம் புதுசா பேர் வெப்பியே! சுள்ளி பத்த வெச்சு சட்டில சமைப்பமே..."
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாகச் சொன்னான்.
தந்தை மகன் இருவருக்கும் இருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பு, சிநேகிதம் கையோடு கை அழுத்திய பலப்பரீட்சை,
நீண்ட நீண்ட நடைப் பயணங்கள், பறவைக் குரல்கள், மண் வெளியில் தியாகராஜர், துரத்தல், ஓட்டம், பிடிப்பு, ரகசியப்பரிவர்த்தனை, நிறுத்தி உட்காரவைத்து மரத்தடியில் அருணாசலக் கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட்...
"பரத்" என்று அவன் கையைப் பிடித்தார். "நானும் நீயும் ஒண்ணு..."
'அப்பா! எல்டொராடோவைப் பத்தி சொல்லுவியே, ஞாபகம் இருக்கா? அதைத் தேடிண்டு தான் நான் போனேம்பா. கற்பனைத் தங்கம்னு தெரியாம தூரத்திலேயே பளிச்னு காட்டிட்டிருந்ததை நோக்கி ஓடினேன்ப்பா"
"நானும்தான் அதையே தேடினேன்" என்றார்
"அப்பா உன்னை முதல்ல சரசுவோட பார்த்தப்ப எனக்கு அப்படியே சகலமும் ஸ்தம்பிச்சுப் போச்சு. ரொம்ப நாள் கழிச்சுத்தான் எனக்கு ஏன்னு புரிஞ்சுது. ஆனா அதைப்பத்தி நான் ஒருத்தர்கிட்ட ஒரு வார்த்தை பேசலியே! இன்னிவரைக்கும்...சொன்னதில்லையே!"
"அந்த சம்பவத்துக்கப்புறம் உனக்கும் எனக்கும் உறவுல பிளவு வந்துடுத்து....... அன்னியோன்யம் வெட்டுப்பட்டுடுத்து..."
"நீ என்னைப் பார்த்து, நான் உன்னை பார்த்து பயப்பட ஆரம்பிச்சோம், என் மனசுல உன்ன பத்தி இருந்த இமேஜ் கலைஞ்சு போயி நாம் ரெண்டு பேரும் அப்பவே பிரிய ஆரம்பிச்சுட்டோம். அதுக்கப்புறம் எத்தனையோ நடந்து போயி, நான் விலகிப் போய், ஊர் ஊரா அலைஞ்சு...உறவு விட்டுப்போயி,கல்யாணம் பண்ணிண்டு, பெண்டாட்டியைப் பிரிஞ்சு போய்......வேண்டாம்பா......
அதையெல்லாம் அழிச்சுடலாம்பா ......சரசு வரைக்கும் விரசமில்லாம இருக்கு அதோட போதும். அதுக்கப்புறம் எல்லாத்தையும்....."
அப்பா தலையை ஆட்டினார். "அதுவும் இருக்கட்டும்" என்றார்.
'பரத் கிட்ட வா.."
அவன் வந்தான். "நாளைக்கு கார்த்தால என்னை அழைச்சுண்டு போறியா அந்த இடத்துக்கு-"
"சரிப்பா ."
"எத்தனை மணிக்கு வண்டி?"
"சீக்கிரமே கிளம்பிடலாம்பா.."
"என்னால நடக்க முடியாது..."
"உன்னை அப்படியே தூக்கித் தோள்மேல வெச்சுண்டு போயிடறேம்பா..நீ என்னைத் தூக்கிண்டு போவியே அது மாதிரி....."
"எனக்குத் தேவலை ஆய்டுமா?"
"நிச்சயம் ஆயிடும்பா"
"தேவலையானதும் கண்ணாடி மாத்திக்கொடு. என்ன?"
'சரிப்பா"
"ஒரு சின்ன டிரான்சிஸ்டர் வாங்கிக் கொடுத்துடு"
"சரிப்பா"
"ஹெமிங்வேயோட கிலிமஞ்சாரோ படிச்சுக்காட்டு"
"சரிப்பா"
'மார்க்கஸ் அரேலியஸ், திருவாசகம், அப்புறம் பவிஷ்ய புராணம், டாஸ்டாயவ்ஸ்கி, கோஸ்லர், ரஸ்ஸல்....."
'எல்லா,.."
"இதோ பாரு, அந்த தடி ரெண்டு வேஷ்டி, ரெண்டு பனியன், அதான் என்னுது. செருப்பு கூடக் கிடையாது. இப்பவே எடுத்துண்டுடு".
'நான் வாங்கித்தரேம்பா."
"நிறைய நடக்கணும்" அவர் முகத்தில் இப்போது தேஜஸ் தெரிந்தது. உதட்டில் புன்னகையுடன் அவனை மிக அருகி அழைத்து கண் சிமிட்டலுடன், 'பரத் உங்கிட்ட ஒரு ரகசிய சொல்லணும். அவா ஒருத்தருக்கும் தெரியாது."
"என்னப்பா?"
சொன்னார்
ராத்திரி முழுவதும் அவர் அருகிலேயே உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். மூன்று மணி சுமாருக்கு அப்பா இறந்து போயிருந்ததை உணர்ந்தான். தூக்கம் போலத்தான் படுத்திருந்தார். உதட்டில் புன்னகை ஸ்திரமாக இருந்தது.
பரத் ஓரத்தில் ஒதுங்கி நிற்க, ஒவ்வொருவராக வந்து ஆர்ப்பாட்டமாக அழுதார்கள். அதன்பின் சுரத்துக் குறைந்து அழுதார்கள். அதன் பின் மௌனமாக...
"வந்தான், முடிச்சுட்டான்! இவனைப் பார்த்த அதிர்ச்சியிலே உயிர் போய்டுத்து !!. எதுக்காக இப்படி திடீர்னு வரணும்?'
"அண்ணா ஒரு விஷயம். தனியா வாயேன்"
"என்ன?"
"போறதுக்கு முன்னால அப்பா எங்கிட்ட சொன்னார். வீட்டையும் நிலத்தையும் என் பேரில் எழுதி வெச்சிருக்கறதா..... காரியம் எல்லாம் முடிஞ்சப்புறம் இந்த அட்ரஸ்க்கு எழுது. எல்லாத்தையும் மாத்தி சாஸனம் பண்ணிக் கொடுத்துடறேன்..."
"பரத், எங்க போற ?'
திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
=====================================
இந்தச் சிறுகதையை எவ்வளவு முறை படித்திருப்பேன் என்று நினைவில்லை. நான் அவ்வளவு எமோஷனலான ஆள் இல்லை. சட்ரென்று கலங்குவது, உணர்ச்சி வசப்படுவது.....இதெல்லாம் அதிகம் கிடையாது.
இருந்தும் ஒவ்வொரு முறை இதைப் படிக்கும் போதும் நிறையவே கண் கலங்கியிருக்கிறேன். அதுதான் சுஜாதாவின் எழுத்தின் சக்தி
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
நன்றி; வாத்தியார் ஐயா..=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...