விநாயகருக்கு உகந்த விரதங்கள்...! பிள்ளையார் சஷ்டி
விரதம்.......
தடைகளை
அகற்றும் விநாயகர் சதுர்த்தி: விரதம் இருப்பது எப்படி?
ஆவணி வளர்பிறை
சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு ஆண்டிற்கு
தொடர்ந்து அனுஷ்டிப்பது சதுர்த்தி விரதம். இதனால்
செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
வைகாசி வளர்பிறை
வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம்.
இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
மாசி மாத
தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு
முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருப்பது. இந்த சங்கடஹர
சதுர்த்தி விரதத்தினால் எப்படிப்பட்ட துன்பமும் விலகிவிடும்.
கார்த்திகை தேய்பிறை
பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் ‘தைரியம்’ அதிகரிக்கும். இந்த விரதத்தை ‘பிள்ளையார் நோன்பு’ என்பர்.
தை அல்லது ஆடி
முதல் செவ்வாய் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் ‘செவ்வாய் விரதம்.’ இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும்.
விநாயகரைக்
குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம்.
இதனால் செல்வ விருத்தியும், கன்னிப்
பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.
========================
பிள்ளையார் சஷ்டி
விரதம்...............
மார்கழி மாதம்
சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம்
அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப்
பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான்
அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெற்ற செருக்கில் தேவர், முனிவர் உள்ளிட்ட அனைவரையும்
கொடுமைப்படுத்தினான். அனைவரும் சிவபெருமானிடம் பிரார்த்தித்தனர்.
சிவபெருமான் விநாயகப் பெருமானை
அழைத்து, பூத கணங்களுடன் சென்று
கயமுகாசுரனை அழிக்கும்படி ஆணை இட்டார். அதேபோல், விநாயகரும் பூதகணங்களுடன்
சென்று, கய முகாசுரனுடன் போர்
புரிந்தார். விநாயகர் ஏவிய எந்த ஆயுதத்தாலும் கயமுகாசுரனை அழிக்க முடியவில்லை.
அப்போதுதான் அவன் பெற்றிருந்த
வரம் நினைவுக்கு வரவே, தன்னுடைய தந்தங்களில் ஒன்றை
உடைத்து, கயமுகாசுரனின் மேல் ஏவினார்
விநாயகர். அது கயமுகாசுரனைத் தாக்கியது. மார்பில் ரத்தம் பெருக்கெடுக்க, வலியால் துடித்த கயமுகாசுரன்
மூஷிக வடிவம் கொண்டு ஓடினான். தந்தமும் அவனைத் துரத்தியது.
ஓடி ஓடிச் சோர்ந்துபோன
கயமுகாசுரன் இறுதியில் விநாயகரைச் சரண் அடைந்தான். விநாயகப் பெருமானும் அவனை
மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார்.
கயமுகாசுரனை அடக்கி ஆட்கொண்டு
திரும்பிய விநாயகப் பெருமானை பூதகணங்களின் அதிபதியாக நியமித்தார் சிவபெருமான்.
அன்று முதல், விநாயகருக்கு கணபதி என்ற பெயர்
ஏற்பட்டது.
முருகப் பெருமான் சூரபத்மனை மயில்
வாகனமாக ஆட்கொண்டு அருளியதுபோல், பிள்ளையாரும் கயமுகாசுரனை
சம்ஹாரம் செய்யாமல், வாகனமாக ஏற்று அருள்புரிந்தார்.
இதனால், பிள்ளையார் சஷ்டி விரதம்
இன்னும் விசேஷமாகும்.
பிள்ளையார் சஷ்டி விரதம்
அனுஷ்டிக்கும் முறை :
பிள்ளையார் சஷ்டி விரதம் என்பது, கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச
பிரதமை தொடங்கி (மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை) 21 நாட்கள் அனுஷ்டிக்கும்
விரதமாகும்.
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச
சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மை யுடன் விரதத்தைத்
தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில்
தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள்
இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.
முதல் 20 நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு
உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி
நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து
வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி
செய்யவேண்டும்.
21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப்
பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின்
சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். உபன்யாசம் செய்யக் கேட்டும் பயன் பெறலாம்.
21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில்
வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப்
பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.
=============================
தடைகளை
அகற்றும் விநாயகர் சதுர்த்தி: விரதம் இருப்பது எப்படி?
ஒவ்வொரு
வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி
நாளை, ‘விநாயகர்
சதுர்த்தி’யாகக்
கொண்டாடுகிறோம்.
விநாயகர்
சிவபெருமானின்
பக்தனான கஜமுகாசுரன், தன் தவத்தின்
பலனாக பல வரங்களைப் பெற்றிருந்தான். அதில் ‘மனிதர்கள், விலங்குகள், ஆயுதங் களால்
தனக்கு ஆபத்து நேரக்கூடாது’ என்ற வரமும்
ஒன்று. இந்த கஜமுகாசுரனின் வதத்திற்கான உருவாக்கப்பட்டவரே, விநாயகர்
என்று சொல்லப்படுகிறது. ஒரு முறை சிவபெருமான், உலக உயிர்களுக்கு
படியளப்பதற்காக சென்றுவிட்டார். தனிமையில் இருந்த பார்வதிதேவி, சந்தனத்தை
எடுத்து அதில் ஒரு உருவத்தை செய்தாள். அதற்கு உயிர் கொடுத்தபோது அது அழகிய பாலகனாக
உருவெடுத்தது.
அந்த பாலகனை
காவல் வைத்து விட்டு, நீராடுவதற்காகச்
சென்றாள் பார்வதிதேவி. அந்த நேரம் பார்த்து சிவபெருமான் அங்கு வந்தார். சிவனை, யார் என்று
தெரியாத காரணத்தால் உள்ளே அனுமதிக்க மறுத்தான், அந்த பாலகன். தன்னுடைய
இருப்பிடத்திற்குள், தன்னையே
அனுமதிக்காத சிறுவனின் மீது கோபம் கொண்டார், சிவபெருமான். பாலகனுக்கும்
ஈசனுக்கும் இடையே போரே மூண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் பாலகனின் தலையை
துண்டித்துவிட்டார், சிவபெருமான்.
அப்போது
அங்கு வந்த பார்வதிதேவி, தான்
உருவாக்கிய பாலகனை அழித்துவிட்டதை எண்ணி வருந்தினாள். இதையடுத்து அந்தச் சிறுவனுக்கு
தான் உயிர் கொடுப்பதாக சிவபெருமான் உறுதியளித்தார். அதன்படி பூத கணங் களிடம், ‘வடக்கில் தலை
வைத்திருக்கும் உயிரினத்தின் தலையைக் கொண்டு வாருங்கள்’ என்று
உத்தரவிட்டார். அதன்படி கிடைத்த யானையின் தலையை, அந்த பாலகனுக்குப்
பொருத்தினார். மேலும் அவனை வழிபட்ட பிறகே பிற தெய்வங் களை வணங்க வேண்டும் என்றும், அவனை
வழிபடுபவர்களுக்கு காரியத் தடைகள் அகலும் என்றும் அருளினார்.
விநாயகர்
என்பதற்கு, ‘தனக்கு மேலே
ஒரு தலைவன் இல்லாதவர்’ என்று
பொருள். யானைத் தலை வந்ததை அடுத்து, ஒரு ஆவணி மாத சதுர்த்தி நாளில், கஜமுகாசுரனை
அழிக்க விநாயகர் அனுப்பி வைக்கப்பட்டார். கஜமுகாசுரனுக்கும், விநாயகருக்கும்
கடும் போர் நடந்தது. அப்போது தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதையே அந்த
அசுரனை அழிக்க ஏவினார், விநாயகர்.
அதனால் அந்த அசுரனின் அகந்தை அழிந்தது. அவன் மிகப்பெரிய மூஞ்சுறு எலியாக உருவெடுத்தான்.
விநாயகர், அதனை
தன்னுடைய வாகனமாக மாற்றிக்கொண்டார்.அன்று முதல் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று, விநாயகர்
சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு வேறு சில
கதைக் காரணங்களும் சொல்லப்படுகின்றன. இருப்பினும் இன்றைய தினத்தில் விநாயகரை
வழிபட்டால் தீராத வினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பதுஐதீகம்.
விரதம்
இருப்பது எப்படி?
ஒவ்வொரு
வருடமும் ஆவணி மாதத்தில் வருகிற வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி
நாளை, ‘விநாயகர்
சதுர்த்தி’யாகக்
கொண்டாடுகிறோம். பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது என்பது இதன்
சிறப்பை எடுத்துரைப்பதாகும். விநாயகர் சதுர்த்திஅன்று அதிகாலையில் எழுந்து நீராடி
விட்டு, பூஜையறையில்
கோலமிட வேண்டும். விநாயகர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, அதன் முன்பாக
தலைவாழை இலை ஒன்றை விரித்து வைக்க வேண்டும். அதில் பச்சரிசியைப் பரப்பி, பச்சரிசியின்
மீது களிமண்ணால் செய்த பிள்ளையாரை வையுங்கள். களிமண்ணால் செய்த பிள்ளையார் தான்
விசேஷம். அருகம்புல், எருக்கம்பூ
போன்றவற்றை பிள்ளையாருக்கு சாத்துங்கள்.
பின் சந்தனம், குங்குமம்
வைத்து விளக்கேற்றி, தூப- தீப
ஆராதனை காட்டி வழிபாடு செய்யுங்கள். அதன்பிறகு விரதம் இருப்பவர், முதல் நாளில்
இருந்து செய்து வழிபட்ட பிள்ளையாரை ஆற்றிலோ, கடலிலோ கொண்டு போய் விட்டு
விட்டு வந்த பின் உணவருந்த வேண்டும். அல்லது வேறு ஒருவர் மூலமாகவும், விநாயகரை
ஆற்றிலோ, கடலிலோ
கரைக்கக் கூறி விட்டு விரதம் இருப்பவர் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இந்த
விரதத்தை மேற்கொள்வதால், புத்திர
பாக்கியம், செல்வம் ஆகிய
பலன்கள் கிடைக்கும்.
courtesy; malaimalar/webduniya.
============================
No comments:
Post a Comment