Followers

Tuesday, October 27, 2020

 

தீயவை அறிந்து நன்மைகள் பெறுவோம்! - க. காந்தி முருகேஷ்வரர்



ம்மிடம் இருக்கும் கெட்ட குணங்களை நாம் என்று உணர் கிறோமோ அன்றுதான் முழு மனிதனாகிறோம். எல்லா நேரமும், எல்லாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. சூழ்நிலை என தப்பித்துக் கொள்வதைவிட, சுயநலம்தான் தெரிந்தே பல தவறுகளைச் செய்யவைக்கிறது.

"
நான் நல்லவன், என்னைப்போல நீ இரு' என யாரும், யாரிடமும் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறோம்.




நல்லவன், கெட்டவன் என்பதற்கு எந்த விதிமுறைகளையும் வகுத்து வைக்கவில்லை; வகுத்துவைக்கவும் முடியாது. ஏனெனில், நிரந்தரமான நல்லவருமில்லை கெட்டவருமில்லை. ஒருவர் நல்லதைச் சொன்னால் அதை மற்றொருவர் கடைப்பிடிக்கமாட்டார். எல்லாம் சிலகாலம்தான்.

எங்காவது, எப்போதாவது, யாரிடமாவது நல்லவர் கெட்டவராகவும், கெட்டவர் நல்லவராகவும் இருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிடும். வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து எந்தப் பயனுமில்லை. ஏனெனில், விதியை மாற்றமுடியாது. ஆனால் நம்மால் நம்மை மாற்றிக்கொள்ளமுடியும். அதிகபட்சம் பிறர் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கக்கூட வேண்டியதில்லை. குறைந்தபட்சம் பிறர் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு குறுக்கே நிற்காமல் ஒதுங்கமுடியும். தன்னை உணர்தல் என்பது நம்மிடமிருக்கும் கெட்டவனைத் தெரிந்து, "வேண்டாம், கொஞ்சம் நல்லவ னாக வாழ ஆசைப்படுறேன், உதவுங் களேன்' என தனக்குள் திருத்திக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்.

நம்மைத் திட்டிக்கொண்டிருப்பவர் நம்மிடம் திருடமாட்டார். காரணமின்றி நம்மைப் புகழ்பவரும், நாம் செய்யும் தவறுகளைத் திட்டாமலிலிலிலிலிலிலிலிருப்பரும் நம்மிடம் எதையோ திருட திட்டமிட்டு விட்டனர் என்பதே நிஜம்.

இருபத்தேழு நட்சத்திரக்காரர் களுக்குள் இருக்கும் கெட்டகுணங்களை ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன.

அதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். நம்மிடம் பேசும் அனைவரும் நம்மிடமிருக்கும் கெட்டகுணங்களைச் சொல்லத் தயங்குவது, நாம் நல்லவர்கள் என்பதாலல்ல. வீணாகப் பகைத்துக்கொள்ள விரும்பாமலும், அதனால் தனக்கு பாதிப்பு வராததாலும் கண்டுகொள்ளா மலிருப்பர். அன்பு என்கிற அற்புதம் பல கெட்ட வர்களுக்கும் நண்பர்களை உருவாக்கித் தருகிறது. எல்லாரிடமும் குரூர குணமிருக்கும். எல்லாவற்றையும் தனக்குள் அடக்கிக்கொள்பவர்கள் நல்ல வர்களாகவும், அடக்கமுடியாதவர்கள் கெட்டவர் களாகவும் மாறிவிடுகின்றனர். பிறரை பாதிக்கக் கூடிய நமக்குள் இருக்கும் கெட்டகுணங்கள் எவை?

ஒரே ராசியில் பலர் இருந்தாலும், பல்வேறு குணங்கள் கொண்ட வித்தியாச மானவர்கள் இருக்கிறார்கள். அதற்குக் காரணம், ஒவ்வொரு ராசியிலும் மூன்று நட்சத்திரங்கள், அதன் பாதங்கள் இருக்கின்றன. லக்னாதிபதி, ராசியதிபதியின் பலத்தைவிட, நட்சத்திர அதிபதிகளின் பலமே குணத்தையும், பலன்களையும் தருகிறது. ஒரு ராசியைப் பார்க்கும் கிரகம், ராசியில் இணையும் கிரகங்கள், நின்ற நட்சத்திர அதிபதிகள் பலன்களையே மாற்றிவிடும். ஆதலால் நட்சத்திரங்களின் குணங்களை அறிந்துகொள்ளுதல் அவசியம். நற்குணங்கள் என்பது யாரையும் பாதிக்காத செயல். தீய குணங்கள் என்பது நாம் பேசும் பொய்யான ஒரு வார்த்தைகூட ஒருவரின் வாழ்க்கையையே அழித்துவிடும் செயலாகும்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள். பிறர் எரிச்சலடையும்படி பேசுபவர்கள். நெருங்கிவந்தால் விலகியும், விலகிவந்தால் நெருங்கியும் நிற்கக்கூடியவர்கள். வலியவந்து பேசவேண்டுமென நினைப்பவர்கள். வீண்வாதம், வெட்டிப்பேச்சு பேசுவதில் ஆசைகொண்டவர்கள். பொறுமை பற்றிப் பேசி, பெருமைபேசித் திரிபவர்கள். அவசர புத்தி கொண்டவர்கள். தனக்கேற்றாற்போல் நேர்மை, நீதி வகுத்துக்கொள்பவர்கள். எளிதில் முடியும் ஒரு காரியத்தைத் தன் சுயநலத்திற்காக, தன்னை மதிக்கவேண்டும் என்பதற்காக அலையவிடுபவர்கள். இவர்களிடம் பழிவாங்கும் எண்ணமிருக்கும். எல்லாவற்றிலும் தன்னைவிட பெரியவர் யாருமில்லை என்கிற உறுதியிருக்கும். முடிந்தவரை தனக்கு நெருக்கமானவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பவர்கள். தன்னைவிட உயரக் கூடாதென்பதற்காக எதையும் செய்வார்கள். பிறர் மனதை நோகடித்துவிட்டு தன்னை தியாகிபோல் எண்ணிக்கொள்வார்கள். தான் செய்யும் உதவியைப் பெரிதுபடுத்துவர். பிறர் தனக் குச் செய்ததைப் பெரிதாக எண்ண மாட்டார்கள்.

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்கள். பயந்து பதுங்கிப் பாயக்கூடியவர்கள். எப்போது அமைதியாக இருப்பார்- எப்போது கோபப் படுவார் என்பதைக் கண்டறிய முடியாது. நடக்காததையெல்லாம் நினைத்து வருத்தப் படுபவர்கள். முடிவுகள் எடுப்பதில் தயக்கம் கொண்டவர்கள். எல்லாம் முடியுமென நம்பிக்கை கொடுத்து ஏமாந்து போகக்கூடிய வர்கள். இவர்களுக்குத் தூண்டுகோலாக ஒருவர் இருந்தால்தான் முன்னேற்ற சிந்தனை ஏற்படும். இவர்களுக்கு எதிரி இவர்களேதான். பிறரைக் கெடுப்பதைவிட தன்னையே கெடுத்துக் கொள்வார்கள். விதண்டாவாதம் செய்பவர்கள். இவர்களுக்கு வீண்வாதம், ஊர் புரளி பேசுவதில் அலாதிப் பிரியமிருக்கும். இல்லாததை இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள். கனவில் மிதப்பவர்கள். எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்கிற திருப்தியற்ற மனநிலை கொண்டவர்கள். சிந்தனைத் தடுமாற்றம் மிக்கவர்கள். யாரையும் நம்பி நானில்லை எனக் கூறி, எதிர்பார்ப்பவர்கள்.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர் களிடம் எதிலும் முதன்மையாக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். பிடிவாத குணம் உண்டு. நினைத்ததை சாதிக்கப் போராடுவார்கள். எதற்கும் எதிர்மறை கருத்துகளும், அவசர புத்தியும் உண்டு. இவர் களுக்கு ஒருவரை அனுசரித்து அடிமையாக வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். நேரடியாக ஒருவரைப் புகழ்ந்து பேசுவதும், மறைமுகமாக எதிர்ப்பதிலும் வல்லவர்கள். வாழ்க்கைத்துணையை வார்த்தைகளால் வதைப்பவர்கள். சுயநலவாதியாக வாழக் கூடியவர்கள். இவர்களுக்கு, எதையும் தன்னிடமிருந்தே பெறவேண்டும் என்கிற புத்தி இருக்கும். பிறர் பொருளை அபகரித்து, அவர்களுக்கு சிறிதாகக் கொடுத்து வள்ளலா கக் காட்டிக் கொள்வதில் வல்லவர்கள். ஊர்மெச்ச வாழும் இவர்களுக்கு தன் குறை தெரியும். ஆனால், தன்னையும் திருத்திக் கொள்ளமாட்டார்கள்- பிறரையும் திருந்தச் சொல்லமாட்டார்கள். யாரை, எப்படி மடக்க வேண்டும் என்கிற வழிதெரிந்தவர்கள். கொடுப்பதைக் கொடுத்து எடுப்பதை எடுப்பவர்கள். கூட்டுக் குடும்பத்தில் ஆசை இருப்பதாகச் சொல்லும் தனிமை விரும்பிகள்.

திருவாதிரை, சுவாதி, சதயம்

ராகு ஆதிக்கம் பெற்றவர்கள். மனிதத் தலையும், பாம்பின் உடலும் கொண்டதால், மனித உடலைத் தேடுபவராகவும், உடலுக்குத் தேவையான ஆடம்பர- அலங் காரப் பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் கொண்டவராகவும் இருப்பவர்கள். எதிலாவது ஆர்வமும் தேடலும் மிக்கவர்கள். திருப்தியடையாதவர்கள். சுயநலத்திற்கேற்ப திடீர்திடீரென எண்ணங்களை மாற்றிக் கொள்பவர்கள். தேவைக்கு செலவழிப்பதாக எண்ணி சிக்கனமாய் சேமித்து, வட்டிக்குக் கொடுத்து அற்ப ஆசையால் சேமிப்பைத் தொலைப்பவர்கள் புகழ்ச் சிக்கு ஏமாறுபவர்கள். நேரிடை யாக எதிர்க்கத் திராணியற்றவர்கள். வாய் திறந்த நிலையில் ராகு இருப்பதால், ஏதாவது விழுங்கிக்கொண்டே இருக்க விரும்புபவர்கள். பிரம் மாண்டமான சிந்தனை கொண்டவர்கள். பொய் பேசுவார்கள். தெய்வ நம்பிக்கையற்றவர்கள். தீய செயல்களில் செயல்பட யோசிக்க மாட்டார்கள். தேவைக்கேற்ப தன்னை தகவ மைத்துக் கொள்பவர்கள். கெட்டது செய்து முடித்துவிட்டு, செய்தது தவறெனச் சொல்லி வருந்துவதுபோல் பாசாங்கு செய்பவர்கள். தெரிந்தே ஏமாறுபவர்கள். ஏமாற்ற அஞ்சாதவர் கள். தனக்குக் கிடைக்காத வாழ்க்கை யாருக்கும் கிடைக்கக்கூடாதென எண்ணுபவர்கள்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குரு ஆதிக்கம் பெற்றவர்கள். உபதேசம் செய்யத் தெரிந்த அளவு பின்பற்றத் தெரியாத வர்கள். கொஞ்சம் வெற்றி கிடைத்தால் பெரிய சாதனை செய்ததாய் எண்ணிப் பெருமைப்பட்டு முன்னேறத் தயங்குபவர்கள். சோம்பல் என்பது தெரியாத அளவு பார்த்துக் கொள்வார்கள். ஒழுக்கம் நீதி, நேர்மை, நியாயம் பற்றிப் பேசுபவர்கள். நடைமுறைக்கு சாத்தியமற்றவற்றை சாதிக்கத் துடிப்பவர்கள். வாழ்க்கையை வாழத்தெரியாதவர்கள். காலம்தாழ்த்திக் காலத்தைத் தொலைப்பவர்கள். சந்தேக குணம் கொண்டவர்கள். எல்லாம் தெரிந்த- எல்லாம் தெரியாதவர்கள். கற்பனை யில் பிறரை நீந்தவிடுபவர்கள். ஏமாற்றத்தைத் தாங்க முடியாதவர்கள். எப்படியும் நல்லது நடக்குமென நம்பி ஏமாறுபவர்கள். எதிர்த்துப் பேசி சாதிக்கும் திராணியற்று சாபம் தருபவர் கள். ஏமாந்துவிட்டு ஏமாற்றியவரைப் பழிப் பார்கள். வறுமையை ஏற்படுத்தி வாழ்க்கைத் துணையின் தன்மானத்தைக் கெடுப்பார்கள். சுறுசுறுப்பு என்கிற பெயரில் அலைந்து திரிந்து பலனின்றி வருந்துவார்கள். வெட்டியாக வீராப்புக் காட்டுவார்கள்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

சனி ஆதிக்கம் பெற்றவர்கள். எதிர்த்துப் பேசக் கூடியவர்கள். உழைத்து முன்னேற ஆசைப்படுவார்கள். தேவையான நேரத்தில் மெத்தனமாக இருந்து விட்டு, கடைசிநேரம் அவசரப்படுத்தி அவதிப்படுத்துவார்கள். வீணான உழைப்பும், தேவை யற்ற உறவுகளுக்காக சேவை செய்தும் காலநேரத்தை வீணடிப்பார்கள். எடுத்தெறிந்து பேசக் கூடியவர்கள். குத்திக்காட்டிப் பேசக் கூடியவர் கள். பின்னால் நடப்பதை முன்பே தெரிந்து கொண்டதுபோல் பேசுவார்கள். மறைமுகமாக பல கெட்ட காரியங்கள் செய்யக்கூடியவர்கள். அப்பாவிபோல் காட்டிக்கொள்பவர்கள். தெரிந்தே தவறுகள் செய்வார்கள். தன்னால் அனைவரையும் கவரமுடியும் என்கிற கர்வமே இவர்களைக் கெடுத்துவிடும். தெளிவாகப் பேசுவதாக எண்ணி வாழத்தெரியாதவர்கள். ஊருக்கு நல்லது செய்ய நினைத்து தன்னை நம்பி வந்தவரையும், தன்னோடு இருப்பவரின் அன்பையும் இழக்கக்கூடியவர்கள்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி

புதன் ஆதிக்கம் பெற்றவர்கள். தனக் குத் தெரியாத விஷயங்களே இல்லை என வாதிடக்கூடியவர்கள். கற்பனைக் கோட்டை களைக் கட்டித் தானாக வாழ்ந்துகொண்டி ருப்பவர்கள். வாழ்க்கைத்துணையை வஞ்சிப் பவர்கள். துணை அடிமையாக இருக்க ஆசைப் படுபவர்கள். குடும்ப வாழ்க்கைக்குத் தகுதி யற்றவர்கள். தேவையெனில் அக்கறையாகவும் தேவையில்லையெனில் யார் நீ என்பதுபோல் கண்டும்காணாமலும் செல்பவர்கள். காரியவாதி என்பதைவிட கர்வத்தால் தன்னைத் தாழ்த்திக்கொள்பவர்கள். தான் மறைக்கும் விஷயங்கள் தனக்கு மட்டுமே தெரியுமென எண்ணுபவர்கள். அடுத்தவரை இளக்காரமாக நினைத்து எகத்தாளமாகப் பேசக்கூடியவர்கள். ஏமாளி கிடைத்தால் மனசாட்சியின்றி ஏமாற்றுவார்கள். நண்பர்கள் குறைவாய் வைத்துக்கொள்வதாச் சொல்லும் இவர்களிடம் நிலையான நண்பராக யாரும் இருக்கமாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொண்டவர்கள் விலகி விடுவார்கள்.

அஸ்வினி, மகம், மூலம்

கேது ஆதிக்கம் பெற்றவர்கள். சரியோ- தவறோ தான் சொல்வதை பிறர் எதிர்கேள்வி கேட்காமல் செய்யவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். அறிவுரை சொல்வதைக் கேட்காமல் பட்டுத் திருந்துபவர்கள். பிறரிடம் ஞானிபோல் பேசுவார்கள். வீட்டிக்குள் இருப்பவர்களிடம் வெட்டிகௌரவம் எதிர்பார்ப்பவர்கள். தானே முதன்மை; தன்னைவிட எல்லாரும் கீழ் என்கிற மனநிலையில் எல்லாரையும் இழப்பவர்கள். இவர்களிடம் சொன்னாலும் கேட்கமாட்டார் என, இவர்களுக்கு யாரும் அறிவுரை சொல்லத் தயங்குவர். ஓரிடத்தில் நிற்கப் பிடிக்காதவர்கள். அடுத்தவரை வேலை வாங்கிக்கொண்டே இருப்பார்கள். தன் காரியம் முடியும்வரை குடைச்சல் கொடுப்பார்கள். இந்த நட்சத்திரத்தார் விசுவாசமற்றவர்கள். ஆனால், பிறரிடம் நன்றியும், விசுவாசமும் எதிர்பார்ப்பார்கள். பிறருக்காக வாழ்வதாகக் காட்டிக்கொண்டு தாங்களும் வாழமாட்டார்கள். குறுகிய சிந்தனை கொண்டவர்கள். தலைமைக்குத் தகுதியற்றவர்கள். பிறர் மனம் அறியாதவர்கள். அடிமைகளை வளர்த்து அடிமைகளால் அழிவார்கள். தேவைக்குத் தேவையான நேரம் பழகி, காரியம் சாதித்ததும் விலகுபவர்கள். உதவி பெறும்போது கௌரவப் பிச்சை எடுக்கும் இவர்கள், உதவியை எதிர்பார்த்துச் சென்றால் அலைக்கழிப்பார்கள். ஆணவம் மிக்கவர்கள்.

பரணி, பூரம், பூராடம்

சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். தன்னை அழகு பிம்பமாக எண்ணிக் கொள்பவர்கள். அழகுக்கு முக்கியத்துவம் தருபவர்கள். நகைச்சுவையாகப் பேசுவதாக சொல்லிக்கொண்டு பிறர் மனம் புண்படும்படி பேசுவார்கள். எல்லாரும் தனக்கு அடிமையாக இருக்கவேண்டுமென்கிற எண்ணம் நிறைந்தவர்கள். இவர்கள் நிதானம் என்கிற பெயரில், ஆடியசைந்து வருவதற்குள் நிறைய இழப்புகள் வந்துவிடும். சொன்னதையே சொல்லிச்சொல்லி இம்சை தருவார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என தடுமாறுபவர்கள். குரங்கு கையில் கிடைத்த பூமாலையாய், அப்பாவி கிடைத்தால் ஆட்டிவைப்பவர்கள். அடுத்தவரை உற்றுநோக்குவதில் கவனம் செலுத்தி, தன்னிலை மறப்பவர்கள். அதிக இழப்புகள் ஏற்பட்டாலும் அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார்கள். சுத்தமாக இருப்பதாக எண்ணி, தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மனநிலையை மாற்ற நினைப்பார்கள். காரியம் முடியும்வரை வேறெதுவும் இவர்கள் காதில் விழாததுபோல் நடந்துகொள்வார்கள். காரியம் முடிந்தால் அந்தப் பக்கமே தலைகாட்டமாட்டார்கள். நன்றி மறந்து, குற்றம்கூறி விலக்கிவைப்பார்கள். ஏமாற்றுபவர், போலியாகப் பாசம் காட்டுபவரிடம் ஏமாறுவார்கள். ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். நல்லவர்கள் தன்னை விமர்சித்தாலும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

பரிகாரம்

ஒவ்வொரு ராசிக்கும் இருக்கும் கெட்டகுணங்களைத் தெரிந்துகொண்டு, கெட்டவர்கள் தங்களைத் தெரிந்து, கெட்டதைத் திருத்தினால் கிட்டிடும் ராஜயோகம். கெட்டவராக வாழ்ந்தால் கஷ்டமே மிஞ்சும் என்பதைப் புரிந்து கொண்டால் கெட்டதுசெய்ய. மனம் அஞ்சும். கெட்டது செய்தவர்களுக்கு சொகுசான வாழ்க்கை கிடைத்தால், எவரும் நல்லவராக வாழ பயப்படுவார் கள். பிறர் வாழப் பொறுக்காமல் வாழ்தல் நரகம். பிறரை வாழவைத்துப் பார்ப்பதை விட, தன்னளவில் தீயவற்றை சிந்திக்காமல் வாழ்தலே சொர்க்கம். கெட்டகுணங்களை ஒதுக்கி, கீழ்ப்படியக் கற்றுக் கொண்டு நல்லது செய்தால், கட்டளையிடும் பணிதானாகக் கிடைக்கும்.
courtesy;nakkiran/balajothidam.
செல்: 96000 53748

 

Saturday, October 10, 2020

 

ஜோதிட ரகசியம்.100. 

 

ஜோதிட ரகசியம்.100.

1.ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு அந்த பாவத்திலிருந்து வரும், 1, 3, 5, 9, 11-ம் பாவங்கள் நன்மையையும், 8, 12 - ம் பாவங்கள் தீமையும், 2, 6, 7 பாவங்கள் சூழ்நிலைக்கு தகுந்தபடி மத்திம பலனையும் (நன்மை அல்லது தீமை) தரும். மற்றும் 4ம் பாவம் 30% நன்மையையும், 10-ம் பாவம் 70% நன்மையையும் தரும்

2.ஒரு ஜாதகத்தை பார்க்கும் முன் கண்டிப்பாக ஆளும் கிரக சந்திரனின் நிலையையும், லக்ன நிலையையும், பிறந்த நேரத்து லக்ன நிலையுடன் , சந்திரனின் நிலையுடன் ஒத்துவருமாறு ஓரிரு நிமிடத்தை கூட்டியோ அல்லது கழித்தோ ஜாதகத்தை சரியாக கணித்த பின் தான் ஜோதிடர்களாகிய நாம் பலன் சொல்ல வேண்டும்.

3.ஒவ்வொரு பாவமும் (கிரகமும்) அது பெரும் தொடர்பின் மூலம் மற்ற 11 பாவங்களிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தும்.

4.முதலில் ஜாதகம் பார்க்கும் போது முக்கியமாக பார்க்க வேண்டியவை. (நிலையான பாவங்களுக்கு) 1-ம் பாவம் – 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 2-ம் பாவம் – 1, 9, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 6-ம் பாவம் – 1, 5, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 7-ம் பாவம் – 2, 6, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது 10-ம் பாவம் – 5, 9, 8, 12 ம் பாவ தொடர்பு கொள்ள கூடாது

5.சார ஜோதிட முறையில் சந்திரனை தவிர மற்ற கிரகங்கள் ஜாதகர் பிறந்த போது எந்த நட்சத்திரம், உபநட்சத்திரத்தில் இருந்ததோ அது கடைசி வரை மாறாது ஆனால், சந்திரன் மட்டும் தன்னுடைய நிலையிலிருந்து (தசா புத்திகள் மாறும் போது) அடிக்கடி மாறும்.

6.ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் எதுவோ அதுவாகவே தன்னை மாற்றி கொள்ளும் என்பது சார ஜோதிட முறையில் அடிப்படை தத்துவம்.

7.நிலையான பாவங்களின் (1, 2, 6, 7, 10) விதிக்கொடுப்பினை ஓரளவுக்காவது வலிமையுடன் இருப்பது அவசியம், ஏனென்றால் இந்த நிலையான பாவங்களின் செயல்கள் தான் மனித வாழ்க்கையை தூண்கள் போல் தாங்கி பிடிக்கின்றன.

8.ஒரு பாவத்தின் விதி கொடுப்பினை எனபது தன் பாவ பலனை மட்டும் நிர்ணயிக்கும். ஆனால் மதி என்ற தசா புத்திகள் தான் தொடர்பு கொண்ட பாவத்துடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அது மற்ற 11 பாவங்களின் மீதும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும்.

9.ஒரு ஜாதகம் என்பது தனி மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து விசயங்களையும் (12 பாவங்களிலும்) உள்ளடக்கியது. இது பொது விதி ஆகும். அதனுடன் தசா புத்தி அந்தரங்களை சேர்த்து பலன் சொல்வது அந்த ஜாதகத்தின் தனி விதியாகும். (இது தனித்தன்மை வாய்ந்தது)

10.ஒவ்வொரு கிரகமும் தான் எந்த பாவத்தை தொடர்பு கொண்டுள்ளதோ, அந்த பாவத்தின் காரகங்களை தன் கிரக காரக ரீதியில் செயல் படுத்துவதோடு மட்டுமல்லாமல் மேற்கண்ட பாவங்கள் எந்த பாவங்களுக்கு 8, 12 ம் பாவமாக அமைகின்றதோ அந்த பாவங்கள் தங்களுடைய கிரக காரக ரீதியில் கெடுக்கும்.

11.ஒரு குறிப்பிட்ட கிரகம் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் இயங்கினாலும் இதில் உபநட்சத்திரமே வலிமையானது. ஆனாலும் நட்சத்திரத்திற்கு நாம் எந்தவித முக்கியத்துவமும் தராமல் விட்டுவிட முடியாது. ஏனெனில் உபநட்சத்திரம் எனபது நட்சத்திரத்தின் உள்ளே இருந்து செயல்படுவதால் ஆகும்.

 

12.ஒவ்வொரு பாவமும் தண்ணி தொடர்பு கொண்ட வேறொரு பாவத்தின் மூலமே இயங்குகிறது. ஒரு பாவத்தின் ஆரம்ப முனை தான் கொண்டிருக்கும், நட்சத்திர உபநட்சத்திர அதிபதிகள் மூலம் மற்ற பாவங்களை இயக்குகின்ற அதே நேரத்தில் மற்ற பாவங்களின் மூலமும் தன்னை இயக்கி கொள்கிறது.

13.ஒவ்வொரு பாவமும் தன்னுள் 50% அகம் சார்ந்த காரகங்களையும், 50% புறம் சார்ந்த காரகங்களையும் வைத்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு பாவமும் தன்னுள் 12 பாவங்களின் காரகங்களையும், 9 கிரகங்களின் காரகங்களையும் வைத்துள்ளது.

14.ஒரு கேள்விக்குரிய சரியான பதில் துல்லியமாக அறிய பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஆய்விற்குரிய பாவ காரக கொடுப்பினை – 25%
ஆய்விற்குரிய கிரக காரக கொடுப்பினை – 25%
ஆய்விற்குரிய பாவத்திற்கு லக்ன கொடுப்பினை – 15%
ஆய்விற்குரிய பாவத்திற்கு 9-ம் பாவ கொடுப்பினை – 10%
ஆய்விற்குரிய பாவத்திற்கு அப்போதைய தசாபுத்திகளின் கொடுப்பினை – 25%
மற்றும் அன்றைய கிரக கோட்சார நிலை மற்றும் ராசிகளின் தன்மை, மற்றும் ராசிகளின் தத்துவம் ஆகியவை ஆகும். அகம் சார்ந்த விசயங்களுக்கு கிரக கார கொடுப்பினை மிகவும் முக்கியம். உதாரணம் ஒரு ஆணின் திருமணத்திற்கு 7-ம் பாவத்தை விட சுக்கிரனின் கொடுப்பினை முக்கியம்.

15.ஒரு குறிப்பிட்ட சம்பவங்களுக்கு பாவ காரக கொடுப்பினை பாதிக்க பட்டிருந்தாலும் கூட, கிரக காரகம் பாவத்திற்கு சாதகமான நிலையில் இருந்தால் அந்த சம்பவங்கள் எப்படியாவது நடைபெற கிரக காரகம் குறிப்பிடும் அளவு உதவி புரியும்.

16.லக்ன பாவம் எந்தெந்த பாவங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதோ அந்த பாவங்களை எப்படியாவது ஜாதகர் (ஓரளவிற்காவது) அனுபவிக்க முடியும்.

17.ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பாவ, கிரக மற்றும் லக்ன கொடுப்பினை நன்கு அமைந்து, தசா நாதனும் சாதகமான நிலையில் இருந்தால் அந்த குறிப்பிட்ட செயலில் ஜாதகர் மிக சிறப்பாக அந்த தசா காலம் முழுவதிலும் அனுபவிப்பார்.

18.அகசார்புடைய ஒற்றைப்படை பாவங்களும், புறசார்புடைய இரட்டை படை பாவங்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றை ஒன்று எதிர்த்து கொண்டே இருக்கும்.

19.ஒரு கிரகம் அல்லது பாவ ஆரம்பமுனை நின்ற நட்சத்திரம் எந்த பாவ ஆரம்ப முனைகளுடன் தொடர்பு கொள்கின்றதோ அது சம்பவமாகவும், அதே கிரகம் நின்ற உபநட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு சாதக அல்லது பாதக பலனை தெரிவிக்கும்.

20.ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஆய்வு செய்யும் போது அந்த விஷயத்தின் பாவ காரகத்தை மட்டும் ஆய்வு செய்யாமல் கிரக காரகத்தையும் இணைத்தே ஆய்வு செய்ய வேண்டும்.

21.ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு விதி குடுத்த பலனை அப்போது நடக்கும் மதி என்ற தசா புத்தி முழுமையாக கொடுக்க அல்லது குறிப்பிட்ட அளவு கெடுக்க அதிகாரம் பெறுகின்றது.

22.ஒவ்வொரு கிரகமும் கோட்சாரத்தில் மற்ற கிரகங்களின் நட்சத்திர உபநட்சத்திரத்திலும் செல்லும் போது தான் வைத்திருக்கும் பாவத்திற்கு தற்காலிகமாக நன்மையையோ அல்லது தீமையையோ செய்யும்.

23.பாவ ஆரம்ப முனை என்பது விதி. விதி என்பது கடைசி வரை மாறாதது.

24.விரைந்து செல்லக்கூடிய கிரகங்கள் (சந்திரனை தவிர) ஜாதகத்தில் பாவ உபநட்சத்திரமாக வருவது ஒருவகையில் சிறப்பாகும். விதி என்ற பாவ கொடுப்பினையும், மதி என்ற தசா புத்திகளையும் மட்டும் கருத்தில் கொண்டு கோட்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் பலனை நிர்ணயிக்கலாம்.

25.ஒரு குறிப்பிட்ட பாவ முனையின் உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் வேறு சில பாவ முனைகளுடன் தொடர்பு கொல்லும் போது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படுத்தும், தொடர்பு கொண்ட பாவத்தின் அகம் சார்ந்த காரகங்களுக்கு ஒரு விளைவையும், அகம் சாராத அல்லது புறம் சார்ந்த காரகங்களுக்கு வேறொரு விளைவையும் தரும்.

26.ஒருவருடைய தனித்தன்மை என்பதே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து முடிப்பதில் தான் உள்ளது. லக்ன பாவமே ஒருவரது தனித்தன்மையை குறிப்பிடும்.

27.ஒரு குறிப்பிட பாவம் மற்ற பாவங்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் லக்னமே அனுபவிக்கும்.

28.லக்ன உபநட்சத்திர அதிபதி எந்த பாவ முனைகளை தொடர்பு கொண்டுள்ளதோ, அந்த பாவ காரக ரீதியில் ஜாதகரின் எண்ண அலைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

29.ஒரு பாவத்தின் ஆரம்பமுனை உபநட்சத்திரம் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் வாயிலாக வேறு சில பாவங்களின் ஆரம்ப முனைகளுடன் தொடர்பு கொண்டு தன்னுடைய பாவத்திற்கு நன்மையோ அல்லது தீமையையோ அல்லது நடுநிலைமையையோ தரும். இது அந்த ஜாதகத்தில் குறிப்பிட்ட அந்த பாவத்தின் விதி ஆகும்.

30.1, 2, 3, 4, 7, 10, 11ம் பாவ உபநட்சத்திர அதிபதிகள் தாங்கள் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தங்களுடைய பாவங்களையே தொடர்பு கொண்டாலும் அல்லது தங்களுடைய பாவத்திற்கு 4, 8, 12ம் மற்றும் லக்னத்திற்கு 8, 12ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தாலும் அது ஒரு உன்னதமான ஜாதகம் ஆகும்.

31.ஒரு பாவத்தின் கொடுப்பினையை முழுவதுமாக அறிந்து கொள்ள அந்த பாவத்தின் நட்சத்திர அதிபதி உபநட்சத்திர அதிபதி, உப உபநட்சத்திர அதிபதி ஆகிய 3 கிரகங்களையும் ஆய்வு செய்தால் மட்டுமே அந்த பாவத்தின் கொடுபினைகளை 100% சரியாக நிர்ணயம் செய்ய முடியும். (நன்மை அல்லது தீமை அல்லது நடுநிலைமை).

 

32.இராசி என்பது வேறு, பாவம் என்பது வேறு இதில் ஒரு இராசி கட்டம் என்பது 30 டிகிரி அளவு கொண்டது. பாவம் என்பது ஒவ்வொரு ஊரின் அட்சாம்சம் பொருத்து மாறக் கூடியது. ஒவ்வொரு பாவமும் சரியாக 30 டிகிரி அமையாது. எந்த டிகிரியில் அந்த பாவம் விழுகிறது என்பதே அந்த பாவ முனை ஆகும்.

33.ஒருவரின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் ஏதோ ஒரு வகையில் ஒரு தொடர்பு இருக்கும். பிறந்த போது உள்ள லக்னநிலை இறப்பின் போது உள்ள சந்திரனின் நிலையை காட்டும். அல்லது பிறந்த போது உள்ள சந்திரனின் நிலை இறப்பின் போது உள்ள லக்ன நிலையை காட்டும். அல்லது பிறந்த போது உள்ள சந்திரனின் நிலை இறப்பின் போது உள்ள லக்ன நிலை கட்டும்.

34.ஒரு குறிப்பிட்ட கேள்விக்குண்டான பலனை துல்லியதாக நிர்ணயிப்பதில் அந்த கேள்விக்குரிய பாவத்தின் கொடுப்பினை எந்த அளவு முக்கிய பங்கு வகிக்குமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு அந்த கேள்விக்குரிய கிரக காரக கொடுப்பினையும் முக்கிய பங்கு வகிக்கும்.

35.பெரும்பாலான கிரகங்கள் மற்றும் பாவ உபநட்சத்திரங்கள் 6, 8, 12ம் பாவங்களை தாங்கள் நின்ற நட்சத்திரம் உபநட்சத்திரம் மூலம் தொடர்பு கொள்ளாமல் இருப்பது ஜாதகர் வாழ்க்கைக்கு நிம்மதியை தரும். 

36.பொதுவாக ஒரு குறிப்பிட்ட பாவம் தனது திரிகோண பாவத்தை தொடர்பு கொள்வதை காட்டிலும் தனது பாவத்திற்கு 3, 11ம் பாவங்களை தொடர்பு கொள்வது அந்த பாவத்திற்கு கூடுதல் வலிமை தரும்.

37.ஒரு குறிப்பிட்ட பாவம் இயங்கும் போது அந்த பாவம் எந்த பாவத்திற்கு 3ம் பாவமாக வருகின்றதோ அந்த பாவத்தை மிக அதிக அளவில் பல மடங்கு வளர்த்து விடும். அந்த பாவத்தை அதன் அடுத்த பரிநாமதிர்க்கு எடுத்துச் செல்லும்.

38.ஒரு குறிப்பிட்ட பாவம் இயங்கும் போது அந்த பாவம் எந்த பாவத்திற்கு 2வது பாவமாக வருகின்றதோ அந்த பாவத்தை குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகமாக வளரவிடாமல் சராசரி அளவைவிட சற்று கூடுதலாக மட்டும் வளர்த்து அதற்க்கு முட்டுக்கட்டையாக செயல்படுத்தும். இதை ஒரு நடுநிலை பாவமாக கருதலாம்.

39.ஒரு குறிப்பிட்ட கிரகம் தரும் பலன்களை அனுபவிப்பது லக்னமே, ஒரு குறுப்பிட்ட கிரகம் இரட்டைப்படை பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த கிரகத்தின் காரகங்கள் வழியாக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 8, 12ம் பாவங்களாக இருக்கக் கூடாது. இது ஒரு சிறப்பு விதி ஆகும்.

40.ஒரு குறிப்பிட்ட பாவம் (கிரகம்) திரிகோண பாவங்களில் 2, 6, 10 மற்றும் 3, 7, 11ம் பாவங்களை தொடர்பு கொண்டால் அக்கிரகத்தின் (பாவத்தின்) அக சார்புடைய காரகங்களையும் புற சார்புடைய காரகங்களையும் ஜாதகரால் மிகவும் அனுபவிக்க முடியும் (தசா புத்திகள் எதிர்க்காத வரை).

41.லக்ன பாவம் 4ம் பாவ தொடர்பினை பெற்று எந்த தசையாக இருந்தாலும் அது 2, 4ம் பாவத்தை தொடர்பு கொண்டால் கண்டிப்பாக வீடு வாங்குவர். ஆனால் 4ம் பாவத்திற்கு 3, 7, 11ம் பாவ தொடர்பு வரக்கூடாது. அப்படி பெற்றால் சொத்தினை நிலையாக வைத்திருக்க முடியாது.

42.தசா நாதனுக்கு 3 அல்லது 4 புத்திகள் சாதகமாக இருந்தால் தசா நாதன் வலிமை பெற்று விடுவார்.

43.கேன்சர் நோய்க்கு ராகு, கேதுக்கள் தான் காரகர் இவர்கள் 6, 8, 12ம் பாவ தொடர்பு கூடாது.

44.லக்னம் மற்றும் 8ம் பாவ உபநட்சத்திரம் ஒரே கிரகமாக இருந்தால் தலையில் அடிபடும், உடல் ஊனம் வர வாய்ப்பு உண்டு, தசா புத்தி தொடர்பு அதை எதிர்த்தால் (1, 8ம் பாவத்தை) நிறைய கிரகங்கள் 7ம் பாவத் தொடர்பினை பெற்றால், ஊனம் வராது.

45.சுக்கிரன் 3, 7, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆகாது மற்றும் 4ம் பாவம் 3, 7, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆகாது.

46.லக்னம் ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொள்கிறவர்கள் இளமையாக இருப்பார்கள் (50 வயதுக்காரர் 40 வயதுக்காரர் போல்) லக்னம் 6,8,12ம் பாவத்தொடர்பு வயதானவர்கள் போல் காணப்படுவார்கள் (40 வயதுக்காரர் 50 வயதுக்காரர் போல்).

47.லக்னம் உபநட்சத்திரம் செவ்வாயாக இருந்தால் அழகு குறைவு ஆனால் ஸ்மார்ட் ஆக முரட்டுதனமானதாக தோற்றம் இருக்கும்.
லக்னம் சுக்கிரன் உப நச்சத்திரமாக இருந்தால் அழகு அதிகம்.
லக்னம் ராகு உப நட்சத்திரமாக இருந்தால் வித்தியாசமாக இருப்பார் (உடை தாடி அனைத்தும்). 

48.1,8-3,8,12ம் பாவத்தொடர்பு ஜாதகருக்கு ஆயுள் குறைவு.

49.லக்னம் 9ம் பாவம் – 8,12ம் பாவத்தொடர்பு மனவளர்ச்சி குன்றியவர்.

50.லக்னம் – 1,2,5,9,11ம் பாவத்தொடர்பு நீண்ட ஆயுளை (70 வயதுக்கு மேல்) கொடுக்கும்.

51.லக்னம் – 2,4,6,10ம் பாவத்தொடர்பு என்பது குழந்தை, குழந்தை பருவத்தில் முரட்டுத்தனம் உள்ள குழந்தையாக இருக்கும்.

52.11ம் பாவம் வலிமையுடன் இருந்தால் எப்போதும் உற்சாகமான எண்ணங்களுடன் மகிழ்ச்சியான வாழ்கை அமையும். பொருள் சார்ந்த ஆசைகள் குறையும்.

53.8ம் பாவம் 7ம் பாவம் தொடர்பு கொண்டால் விபத்து வராது.

54.ஜாதகத்தில் குறிப்பிட்ட பாவங்களின் கொடுப்பினை நன்றாக இருந்து லக்ன பாவமும் அந்த குறிப்பிட்ட பாவங்களுக்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டு இருந்தால் அந்த குறிப்பிட்ட பாவங்களின் பலனை ஜாதக 100% நன்றாக அனுபவிப்பார் (தசா புத்திகள் தடுக்காத வரை). 

55.லக்னதிற்கு 6,8,12ம் பாவத்தொடர்பு இருக்கக் கூடாது. 

56.ஒரு குறிப்பிட்ட பாவம் 1,5,9ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் காரகங்கள் மூலம் ஜாதகற்கு ஆரோக்கிய பாதிப்போ, வலி வேதனைகளோ இருக்காது.

57.2 – 6, 8, 12ம் பாவத்தொடர்பு பல், கண், மூக்கு, நாக்கு, கன்னம் இவற்றில் பிரச்னைகளை உண்டு பண்ணும்.

58.2 – 10ம் பாவத்தொடர்பு பணத்தை வைத்து தொழில் செய்வார். 

59.2- 9ம் பாவத்தொடர்பு அதிக சந்தோஷங்களுக்கும் தான தர்மத்திற்கும் பணத்தை செலவு செய்வார். ஆன்மிகம் மூலம் ஜாதகருக்கு அமைதி கிடைக்கும்.

60.2 – 6ம் பாவத்தொடர்பு பணத்தை வட்டிக்கு விடுவார் மற்றும் இன்னொரு சொத்தும் வாங்குவார். 

61.2 – 8, 12ம் பாவத் தொடர்பு 8ம் பாவம் பணம் மாட்டிக்கொள்ளுதல், 8, 12ம் பாவம் பணத்தை பறிக்கொடுத்தல் ஆகும்.

62.3 – 8ம் பாவத்தொடர்பு டென்சனை கொடுக்கும்.

63.3, 7, 11ம் பாவங்கள் எந்த பாவத்திற்கு 12ம் பாவமாக உள்ளதோ அந்த பாவங்கள் ஒரு வரைமுறைக்கு கட்டுப்பட்டே செயல்படும். உதாரணம் - 4, 8, 12க்கு 3, 7, 11ம் பாவங்கள் 12ம் பாவங்கள் ஆகும். 

64.3வது பாவம் ஒரு செயலை அல்லது வேலையை மாற்றி மாற்றி பண்ணுவது. 4வது பாவம் ஒரு செயலை அல்லது வேலையை ஒரே மாதிரி பண்ணுவது.

65.4 – 3, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆனாலும் நமக்கு ஒன்றும் ஆகாது. ஆனால் வண்டிக்கு சேதாரம் உண்டு.

66.4 – 8, 11ம் பாவத்தொடர்பு விபத்து ஆனால் வண்டிக்கு (அதிக டேமேஜ்) பிரச்சனை. ஜாதகருக்கும் (சிறிய அளவு டேமேஜ்) பிரச்சனை.

67.4 - 4, 8, 12ம் பாவத்தொடர்பு படிப்பு குறைவு.

68.ஒரு குறிப்பிட்ட பாவம் அந்த பாவத்தில் இருந்து வரும் 4ம் பாவம் 30% வரை மட்டும் தான் அந்த பாவத்தை இயக்கும். (உ.ம் – 10ம் பாவத்திற்கு 1ம் பாவம் 4ம் பாவம் என்பது போல).

69.4 – 11ம் பாவத்தொடர்பு கல்வியில் உயர் நிலையைக் கொடுக்கும். ஆனால் சொத்தில் வில்லங்கம் வரும். ஷேப் இல்லாத லேண்டு அல்லது வீடு வாங்குவார்.

70.4 – 12ம் பாவததொடர்பு சொத்துக்கள் வாகனங்கள் இருந்தாலும் அவர் அதை அனுபவிக்க முடியாது.

71.4 – 10ம் பாவத்தொடர்பு டீச்சர் அல்லது உற்பத்தி சார்ந்த தொழில் செய்வார்.

72.4 – 3ம் பாவத்தொடர்பு உடல் மெலிந்து இருப்பார். அடிக்கடி பயணங்கள் செய்வார். பிறந்த ஊரிலே இருக்க மாட்டார்.

73.4 – 6ம் பாவத்தொடர்பு உடல் பருமனாக இருப்பார். மேலும் குருவும் 4, 6ம் பாவத்தொடர்பு உடல் பருமன் காட்டும்.

74.4 – 3, 12ம் பாவத்தொடர்பு வண்டி அடிக்கடி பஞ்சர் ஆகும்.

75.4 – 5ம் பாவத்தொடர்பு வீட்டை வாடகைக்கு விட மாட்டார். வீட்டை அழகாக ரசனையுடன் கட்டி தானே குடி இருப்பார். மேலும் வீட்டையும், வாகனங்களையும் மேலும் மேலும் அழகு படுத்துவார்.

76.4 – 2ம் பாவத்தொடர்பு சுகர் உண்டாகும். மேலும் சுக்கிரனும் இரட்டைப்படை தொடர்பு இருக்க வேண்டும். மேலும் சந்திரனும் காரகர் ஆவார். (சந்திரன் இரத்தம்).

77.கல்வி என்பது 4 நிலைகளை கொண்டது அவை
1.
பாலக்கல்வி – 2 முதல் 7 வயது வரை.
2.
அடிப்படைக்கல்வி - 7 முதல் 17 வயது வரை.
3.
உயர்க்கல்வி - 17 முதல் 25 வயது வரை.
4.
உச்சக்கல்வி -25 வயதுக்கு மேல்.

78.4, 6 – 3, 5ம் பாவத்தொடர்பு கடன் அடைப்படும்.

79.4ம் பாவம் மற்றும் 5ம் பாவம் அடுத்தடுத்து வரும் இரண்டு பாவங்களுக்கும் ஒரே கிரகம் பாவ உபநச்சத்திரமாக அமைந்தால், அந்த கிரகத்தின் சாரத்திலோ, அல்லது உபநச்சத்திரத்திலோ வேறு கிரகம் இருந்தால் மேலே குறிப்பிட்ட 5ம் பாவத்தை விட அதன் 12ம் பாவமாகிய 4ம் பாவத்தின் வேலையையே அதிகம் செய்யும்.

80.5 – 9ம் பாவத்தொடர்பு எந்த வேலையையும் இலவசமாக செய்து கொடுப்பார் (இந்த பாவரீதியாக).

81.5ம் பாவம் வெள்ளை அணுக்களை குறிக்கும்.
1
ம் பாவம் சிவப்பு அணுக்களை குறிக்கும்.

82.லக்னம், 5ம் பாவம், குரு – 4, 8, 12ம் பாவத்தொடர்பு பெற்றால் குழந்தை இல்லை. ஆனால் ஏதாவது ஒரு ஒற்றைப்படை பாவங்கள், தசா புத்திகளில் காட்டினால் குழந்தை உண்டு. 5ம் பாவத்தை காட்டினால் 100% குழந்தை உண்டு. 3ம் பாவத்தை காட்டினால் 200% குழந்தை உண்டு.

 

83.கலைத்துறையில் நீடித்து இருப்பதற்கு 5ம் பாவம் 10ம் பாவத்திற்கு 8, 12ம் பாவங்களான 5, 9ம் பாவங்களை தொடர்பு கொள்ளக் கூடாது.

84.5, 7, 9ம் பாவங்கள் ஒற்றைப்படை பாவங்களைத் தொடர்பு கொண்டால் (ஆபரேஷன் ஏதும் செய்யாத பட்சத்தில்) அதிக குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் அதிகமாக உண்டு. 

85.5ம் பாவம் - 2, 4, 6, 10ம் பாவத்தொடர்பு கொண்டால் ஜோதிடம் நன்றாக வரும். ஆனால் பிரகாசிக்க முடியாது. பொருளாதாரம் உயர்வு உண்டு.
5 - 3, 7, 11
ம் பாவத்தொடர்பு கொண்டால் ஜோதிடம் நன்றாக வரும். பொருளாதார உயர்வு இல்லை ஆனால் நன்றாக பிரகாசிப்பார்கள். 5ம் பாவம் எந்த காரணத்தை கொண்டும் 4, 8, 12 ம் பாவத்தொடர்பு கூடாது. 

86.குழந்தை பாக்கியத்திற்கு 5ம் பாவம், லக்னம், 9ம் பாவம் மற்றும் குரு (புத்திரகாரகன்) போன்றவை 5ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

87.பெண் குழந்தைகளுக்கு சுமார் 8 வயது முதல் 20 வயது வரை நடை பெரும் தசா புத்திகள் 4, 8, 12ம் பாவத்தொடர்பை பெற்றிருந்தால் அந்த பெண் ருது ஆகும் காலம் தாமதப்படும்.

88.ஒரு குறிப்பிட்ட பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் காரகங்களின் மீது லக்னத்திற்கு (ஜாதகருக்கு) ஒருவித ஈர்ப்பு, கவர்ச்சி, மயக்கம், நேசம் போன்றவை உண்டாகும்.

89.6 – 8 ம் பாவ தொடர்பு ஈகோ பிரச்சனை வரும். தேவைக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டி வரும்.

90.6 - 2, 4, 6, 10 மற்றும் 3, 7, 11 ம் பாவ தொடர்பு மருத்துவ படிப்பிற்கு நல்லது.

91.6 - 6, 8, 12ம் பாவ தொடர்பு நோய், வழக்கு, கடன் ஆகியவை இரட்டிப்பாகும்.
6
ம் பாவ தொடர்பு நோயை குறிக்கும்
8
ம் பாவ தொடர்பு அதில் வலி, வேதனை, உறுப்பு பழுதாவதையும் குறிக்கும்.
12
ம் பாவ தொடர்பு அந்த உறுப்பு செயல் இழத்தலையும் குறிக்கும்.

92.6 – 6, 8 , 12 நோய் மென்மேலும் மோசமாகும்.
6 – 1, 5, 11
ம் பாவ தொடர்பு நோயிலிருந்து விடுதலை
6 – 4, 10, 12
ம் பாவ தொடர்பு வைத்தியம் செய்தும் உடல் செயல் இழத்தலையும், நோய் குணமாகாததையும் குறிக்கும்.

93.6 சிறுகடன் – 5 சிறுகடன் அடைபடுதல்
8
பெருங்கடன் – 7 பெருங்கடன் அடைபடுதல்

94.6 – 1, 5, 9,8 – 3, 7, 11 ம் பாவ தொடர்பு வரும் பொது அணைத்து கடன்களையும் ஜாதகர் அடைப்பார்

95.6 – 1, 3, 5, 9, 11 ம் பாவ தொடர்பு நீடித்த நோய்களை தராது

96.6 ம் பாவம் எந்த பாவத்தை தொடர்பு கொண்டாலும் தொடர்பு கொண்ட பாவத்திற்கு தைரியம் உண்டு. உதாரணம்: 2 – 6 பேச்சு தைரியம்
3 – 6
எழுத்து தைரியம் என்பது போல 

97.6 –ம் பாவம் தன்னுடைய பாவத்திற்கு மிகவும் சாதகமான அதே நேரத்தில் லக்ன பாவத்திற்கு மிகவும் பாதகமான 4, 8, 12 ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் அமைப்பை உடைய ஜாதகர் மதுவை உட்கொள்ள ஆரம்பித்தால் மதுவிற்கு அடிமை ஆகும் வாய்ப்பு உண்டு. மற்றும் ராகு, கேதுக்களின் 1, 6 , 8, 12 ம் பாவ தொடர்பு இதற்கு காரணமாகும்

98.ஒரு குறிப்பிட்ட பாவம் தனது பாவத்திலிருந்து 6-ம் பாவத்தை தொடர்பு கொண்டால், மற்றவர்களை வீழ்த்தி அல்லது போராடி தனது பாவத்தை செயல்படுத்தும்

99.8-ம் பாவம் ஒற்றைபடைகளை தொடர்பு கொண்டால் விபத்து வராது

100.8 – 1, 3, 5, 7, 11 ம் பாவ தொடர்பு ஜாதகர் இறுதியில் வலி, வேதனைகளை அனுபவிக்கமாட்டார்.

 

courtesy; Posted by சம்பத் [எ] சண்முகராஜ் tq.

============================================

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...