யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்..............
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் மிக முக்கியமான பங்கு உண்டு. ராகு, கேது ஒரு ஜாதகத்தில் எப்படி அமர்ந்து இருக்கிறார்கள் என்பதை வைத்து அந்த ஜாதகத்தின் தன்மையைக் கணித்து விடலாம்.அவரவர்கள் கர்ம வினை, ஊழ்வினைக்கேற்ப ராகு கேதுக்கள் பலன்களைத் தருவார்கள் மிக அதீத உச்ச யோக பலன்களையும், மிக மோசமான நீச தோஷ பலன்களையும் அருளும் வல்லமை பெற்றவர்கள்.‘‘அவரவர் விதி வழி வந்தனர் யாவரும்’’ என்பது திருமுறை வாக்காகும். இப்படி ஒருவர் வாங்கி வந்த வரத்திற்கேற்ப பலன்களைக் கூட்டுவிப்பார்கள். இருக்கும் ஸ்தானத்திற்கு ஏற்ப பலன்களும். தசா புக்தி காலங்களில் வாங்கியுள்ள சாரம், பார்க்கும் கிரகம், சேர்ந்து இருக்கும் கிரகத்திற்கு ஏற்ப பலன்களை தருவார்கள்.
பாவம், புண்ணியம் என்பதைப் பற்றிப் பல வகையான கருத்துக்கள், நம்பிக்கைகள், நம் சமூகத்தில் காலம் காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பவை இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் கெட்டுப் போனால், துன்பம், துயரம் அனுபவித்தால் பாவம் செய்தவன். நல்ல நிலையில் இருந்தால், யோக, போக சுகத்தை அனுபவித்தால் புண்ணியம் செய்தவன் என்ற பேச்சு வழக்கில் உள்ளது.
எது எப்படியோ ஜோதிட சாஸ்திரத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மிக முக்கியமான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. எந்த துறையில் ஒருவர் உயர்ந்த நிலைக்கு சென்றாலும் அதில் ராகு, கேதுவின் பங்கு நிச்சயம் இருக்கும். காரணம் பூர்வ புண்ணிய கர்ம வினை சம்மந்தமான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானத்தையும், மோட்சத்தையும், யோகத்தையும், போகத்தையும் தரக்கூடிய ஆற்றல், வல்லமை, அதிகாரம் உள்ள கிரகங்கள் என்றால் அது மிகையாகாது.
கால சர்ப்ப தோஷம், கால சர்ப்ப யோகம் என்பது ராசிக் கட்டத்தில் ராகு - கேதுக்களின் பிடியில் மற்ற கிரகங்கள் இருப்பது. இந்த அமைப்புக்கள் பற்றி பழமையான ஜோதிட நூல்களில் மாறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது. பிற கிரகங்களின் சேர்க்கை நீச கிரக பார்வை, சேர்க்கை தோஷத்தையும். பாக்கிய கிரகங்களின் பார்வை, உச்ச கிரக சேர்க்கை யோகத்தையும் தருவதாக வழி வழியாக வந்த ஜோதிட ஆசிரியர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த அமைப்பானது ஏற்ற இறக்கத்தையும், லாப நஷ்டங்களையும், விபரீத ராஜயோகத்தையும் கொடுக்கும். பொதுவாக இத்தகைய அமைப்பு உடையவர்கள். சுமார் 40 வயதிற்கு மேல் ஏற்றமான பலன்களை அனுபவிப்பார்கள். இதில். லக்னாதிபதி, யோக கிரகங்கள், தசைகள் முதலியவற்றைக் கணக்கில் கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும். லக்கினத்தில் ராகு, ஏழில் கேது அல்லது லக்கினத்தில் கேது, ஏழில் ராகு இருப்பது களத்திர தோஷம். இது திருமண வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும்.
கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், வாக்கு வாதங்கள். பிரிவினைகள், வழக்குகள், விவாகரத்து போன்றவை எல்லாம் இந்த அமைப்பின் மூலம் தான் வரும். மற்ற கிரகங்கள் பலமாக இருந்தால் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. கேது ஆன்மிகத்தில் ஈடுபாட்டைக் கொடுப்பார். யோகம், ஞானம் சித்திக்கும். அறக்கட்டளை, கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் பாக்கியம் உண்டு.
இரண்டில் ராகு, எட்டில் கேது அல்லது இரண்டில் கேது, எட்டில் ராகு இருப்பது பொதுவாகப் பல பிரச்னைகளை தரக் கூடியது. குடும்பத்தில் எப்போதும் ஒரு நிம்மதியற்ற, நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும். திருமணத்தடை. தாமதத் திருமணம், இரண்டாம் தார அமைப்பு, விரக்தி, சஞ்சலம், இனம் புரியாத பயம், கவலைகள் ஏற்படும்.
தன் பேச்சினாலே இவர்கள் பல நல்ல விஷயங்களைக் கெடுத்துக் கொள்வார்கள். உணர்ச்சி வசமாகப் பேசிவிட்டு பின்பு வருந்துவது இவர்களின் வாடிக்கையாகும். ராகு மூலம் பணம், சொத்து குவியும். உழைப்பில்லாத செல்வம் சேரும். திடீர் நஷ்டங்கள், பொருட்கள் தொலைந்து போவது போன்றவையும் இருக்கும்.
நான்கில் ராகு, பத்தில் கேது அல்லது நான்கில் கேது, பத்தில் ராகு இருப்பது பல முன்னேற்றங்களையும், தடைகளையும் தரும். ராகு , கேது வைப் பொருத்தவரை நிறை குறைகள் கலந்து இருக்கும். குறிப்பாகக் கல்வியில் நல்ல மேன்மை பெற்றால். உடல் நலத்தில் அடிக்கடி பிரச்னைகள் வரும். தாயார் உடல் நலம் பாதிக்கப்படும். ஒன்றைக் கொடுப்பது ஒன்றைக் கெடுப்பது பாம்புகளின் குணாதிசயமாகும். அடிக்கடி இடமாற்றம், ஊர் மாற்றம் இருக்கும். பெண்களுக்கு மாத விடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள் இருக்கும். தகாத பழக்கங்கள், உறவுகள் பிற பெண்களுடன் சேர்க்கை வரும் வாய்ப்புள்ளது. மருத்துவ சம்மந்தமான துறையில் ஜீவனம், தொழில் அமையும்.
ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது இருப்பது புத்திர தோஷமாகும். சுகஸ்தானம், வீரிய ஸ்தானம். சரியாக இல்லை என்றால் புத்திர பாக்கியம் தாமதமாகும். கேது சாஸ்திர ஞானத்தைத் தருவார். கணபதி உபாசகர் மற்றும் காளி, பிரத்யங் கிரா, வாராகி அம்மன் போன்ற தெய்வங்களை உபாசனை செய்வார்கள். பிள்ளைகளின் வாழ்க்கை சம்மந்தமாக கவலைகள், வருத்தங்கள் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் மனக்குறை, அமைதியின்மை இருந்து கொண்டே இருக்கும்.
அயன சயன போக ஸ்தானமான 12 ஆம் வீட்டில் ராகு - கேது இருந்தால் அடிக்கடி பயணங்கள், அலைச்சல் இருக்கும். தூக்கம் சரியாக இருக்காது எப்போதும் பரபரப்பாக, வேலை. தொழில் என்று அலைந்து கொண்டே இருப்பார்கள். உடல் உறவு வேட்கை இருக்கும். சதா இன்பம் துய்ப்பதில் பிரியம் உடையவர்களாக இருப்பார்கள்.
ஏழாமிடம் யோகம் -தோஷம் :
சந்திரன் 7ஆம் இடத்தில் இருப்பது சிறப்பான யோகமாகும். ஜாதகர் கலா ரசிகராக இருப்பார். இயற்கை அழகை மிகவும் நேசிப்பார்கள். காதல் வயப்படுவார்கள், பெரும்பாலானவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவிதமான காந்த கவர்ச்சி தன்மை இருக்கும். குரு பார்வை பெற்றால் குரு சந்திர யோகம், கஜ கேசரி யோகம் உண்டு. பட்டம், பதவி, பாராட்டு கிடைக்கும். உயர்ந்த உச்ச அந்தஸ்து அமையும். நிதித்துறை, நீதித்துறையில் இருக்கும் அமைப்பு உண்டு. சந்திரன், சனி பார்வையில் இருந்தால் சஞ்சலம், சபலம், மாறுகண், முகத்தில் ஒளி இழந்த நிலை. மங்கு என்று சொல்லப்படும் கருமை படர்ந்த முக அமைப்பு இருக்கும்.
வயோதிகர் அல்லது இரண்டாம் தாரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எதிர் பாராத வகையில் திடீர் அவசர திருமணமாக அமையும். புதன் பார்வை சந்திரனுக்கு இருந்தால் இயல், இசை, நாட்டியம் என புகழ் பெறுவார்கள். கவர்ச்சிகரமான உடல் அமைப்பு இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அதீதமான காமசுகரசனை இருக்கும். பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள். எந்த கலையையும் அதி விரைவில் பார்வையில் சந்திரன் இருப்பது சந்திர மங்கள யோகம்.
சொத்து சுகம் சேரும். தம்முடைய ஆடைகள், விருப்பங்களை எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்கள். எந்த விஷயத்திலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். எந்த வயதிலும் இவர்களுக்குக் காம சுகம் என்பது தேவையானதாக இருக்கும். சூரியன், சந்திரன் சம சப்தமாகப் பார்ப்பது பௌர்ணமி யோகம்.
சொத்து, செல்வாக்கு இருக்கும். மனைவி மூலம் பாக்கியம் யோகம் கிடைக்கும். உயர் உச்ச பதவிகள் தேடி வரும் ராகு, கேது, சந்திரன் சம்பந்தம் காரணமாக நிம்மதி இல்லாத தன்மை ஏற்படும். மன உளைச்சல், விரக்தி, தற்கொலை எண்ணங்கள், பிரிந்து வாழ்வது, வாக்கு வாதம் என வாழ்க்கை போர்க்களமாக அமையும்.
சுக்கிரனின் பார்வை சந்திரனுக்கு ஏற்படும் போது சகல யோகங்களும் சித்திக்கும். எல்லோரையும் சுண்டி இழுக்கின்ற கவர்ச்சிகரமான உடல் அமைப்பு. முக அமைப்பு இருக்கும். வாழ்க்கையை ரசித்து ருசிக்க வேண்டும் என்பதில் தீராத மோக முடையவர்களாக இருப்பார்கள். கலைத்துறையில் ஜொலிக்கும் யோகத்தை சந்திரனும், சுக்கிரனும் அருள்வார்கள்.
வியாழன் என்று சொல்லப்படும் குரு லக்கினத்திற்கு 7ல் இருப்பது மிகப் பெரிய ராஜயோகம். லக்கினத்தை குரு பார்ப்பதால் செல்வம், செல்வாக்கு பட்டம், பதவி, அதிகாரம் எல்லாம் கிடைக்கும். ஆனால் குரு தனித்து இருக்காமல் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்ந்து இருக்கவேண்டும் என சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு என்பதற்கேற்ப தனித்த குரு. இல்வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். சுபக் கிரகமான குருவிற்கு இப்படிப்பட்ட பாவ ஆதிபத்தியம் உள்ளது.
குரு இருக்கும் இடம். பாழ்‘குரு பார்க்கும் இடம் விருத்தி என்பது ஜோதிட விதி ஆகையால் 7ல் குரு தனியாக இருக்கும் போது பிறந்தவர்களுக்கு எல்லாம் இருந்தாலும் இல்லறம் இனிக்காது. நீயாநானா என்ற போட்டி கணவன், மனைவிக்குள் ஏற்படும். பிற பெண்கள் தொடர்பு, பிற ஆடவர் தொடர்பு தானாக வந்து கூடும். நண்பர்களால் பல பிரச்னைகளை சந்திப்பார்கள். குரு நல்ல ஆதிபத்தியம் பெறவில்லை என்றால் வீண் வம்பு, வழக்குகளைச் சந்திக்க நேரிடும். செய்த குற்றத்தில் இருந்து தப்பித்து விடுவார்கள். செய்யாத குற்றத்திற்கு போலீஸ், வழக்கு , தண்டனை என்று அனுபவிப்பார்கள். வாகன விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குரு இருக்கும் ராசி, சாரம், பிற கிரகங்களின் பார்வையைப் பொறுத்து பலன்களில் ஏற்ற இறக்கம் இருக்கும்.
ஏழாம் இடத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால் சாதக, பாதகங்கள் இருக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஆட்சி, அதிகாரம், செலுத்தக் கூடிய கிரகங்கள் அதனால் தான் என்ற செருக்கு, ஆணவம் மேலோங்கி நிற்கும். மூக்கின் மேல் கோபம் என்று சொல்வார்கள் அது இவர்களுக்குத் தான் பொருந்தும். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் வெற்றி பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவி, அதிகாரம் செய்யக் கூடிய அமைப்பு. தாசில்தார். கலெக்டர், காவல் துறையில் உயிர் பதவிகள் எல்லாம் அமையும் யோகம் உண்டு. ஆனால் இல்வாழ்க்கை மட்டும் கேள்விக் குறியாகி விடும். இந்த ஏழாம் இடத்துச் செவ்வாய் தான் பலமான தோஷத்தைத் தரக் கூடியவர். இத்தகைய அமைப்பு உள்ள ஆண், பெண் இருபாலருக்கு எல்லா வகையிலும் எதிரும், புதிருமான நிலை இருக்கும்.
அதீத காம இச்சை காரணமாக அதை தணித்துக் கொள்ள எந்த கீழ் நிலைக்கும் செல்வார்கள். சூரியன் சம்பந்தப்படும் போது மேலும் அக்னியில் நெய் சேருவதை போல காமத்தீ கொழுந்து விட்டு எரியும். அதனால் அயன, சயன, போக ஸ்தானம் பாதிப்படையும். ஆகையால் தான் ஜோதிட கத்தாக்கள், நம் முன்னோர்கள். மூத்தோர்கள் தோஷம் என்ற பெயரில் ஏழாம் வீட்டில் இருக்கும் கிரகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஏழில் சூரியன், செவ்வாய் இருந்தால் அதே போன்று தோஷம் உள்ள ஜாதகத்தைச் சேர்த்தால் தோஷ வீரியம் சமன் அடையும் என்ற கணக்கில் ஜாதகங்களைத் தோஷ பொருத்தம் பார்த்துச் சேர்த்தார்கள். ஆகையால் இத்தகைய அமைப்பு உடையவர்கள் அதற்குரிய ரத்தின வைதீக பரிகாரங்கள் செய்து கொள்வதன் மூலம் சாந்தி, சந்தோஷம் கிடைக்கும்.
ஏழாம் வீட்டில் சனி இருப்பது பெரும்பாலும் பல சிக்கல்களைத் தருவதாக அமைகிறது. திருமணத்தடை, மத்திம வயதில் சுமார் 40ல் திருமணம். வயோதிக தோற்றம் உடைய கணவன், அல்லது மனைவி, முடிவுகள் எடுப்பதில் குழப்பம், தாமதம். அடிக்கடி எண்ணங்கள், ஆசைகளை மாற்றிக் கொள்வார்கள். அடிக்கடி உடல் நலக் கோளாறுகள், சோர்வு, சோம்பல் இருக்கும். சனி இருக்கின்ற ராசியைப் பொருத்து பலன்கள் கூடும். குறையும். மேஷ ராசியில் சனி நீசம் அடைவதால் பல
பிரச்னைகளை சந்திக்கவேண்டி வரும்.
துலாலக்னம் அமைந்தால் சனி 7ல் நீசம் அடைவார். மகிழ்ச்சியற்ற, பற்றற்ற குடும்ப வாழ்க்கை அமையும். கூட்டுத் தொழிலில் நஷ்டம் வரும். நண்பர்களால் சிக்கல்கள், பிரச்னைகள் வரும். அடிக்கடி வாகன விபத்துக்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். பொதுத் தொண்டில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். சேவை மனப்பான்மை இருக்கும்.
உடல் உறவு நாட்டம், காம இச்சை குறைவாக இருக்கும். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், இடைவெளி, பிரிந்து வாழ்வது போன்றவை இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகள், வயிறு உபாதைகள் வரும். தாய் வழி உறவுகளின் பிரச்னை இருக்கும். பயணங்கள், இடமாற்றங்கள் இருக்கும். ஜீரண கோளாறுகளால் அவதிப்படுவார்கள் பொதுவாக 7ல் சனி இருப்பது குடும்ப, தாம்பத்தியத்திற்குத் தோஷம் தான் மற்ற சுபக் கிரகங்கள் பாக்கிய ஸ்தானம் போன்றவை பலமாக இருந்தால் கெடு பலன்களின் வீரியம் குறையும்.
ஏழாம் இடத்தில் புதன் இருப்பது மகா பாக்கிய யோகமாகும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். வித்தையின் நாயகன். அறிவு, ஆற்றல், சொல், வாக்கு, சிந்தனையின் ஊற்று, கல்விக்கு அதிபதி. அறிவுச் சுரங்கம், விவேகத்தின் வேந்தன். என ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் இவரின் ஆளுமை கண்டிப்பாக இருக்கும். வாழ்க்கையை தங்கள் விருப்பப்படி அனுபவிப்பார்கள். அழகை ஆராதிப்பார்கள் . எந்தத்துறையில் இருந்தாலும் அந்த துறையில் கொடி கட்டிப் பரப்பார்கள்.
திட்டங்கள் தீட்டுவது, யோசனை சொல்வது இவர்களுக்கு கை வந்த கலை. எதையும் கலை ஆர்வத்துடன் வித்தியாசமான முறையில் பார்ப்பார்கள். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வார்கள். தான், தன் சுகம் பெரிது என்று நினைப்பவர்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் யாருக்கு சப்தம ஸ்தானத்தில் புதன் இருக்கிறதோ அவர்கள் எல்லோரையும் வசியம் செய்து விடுவார்கள். காமசுகத்தை அணு அணுவாக ரசித்து ருசிப்பார்கள். காதல், கள்ளத் தொடர்பு, காமக் களியாட்டங்களுக்கு எல்லாம் நாயகன் புதன் தான் தம் ஆசாபாசங்களை, இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள எவ்வளவு கீழே இறங்கி வர முடியுமோ அந்த அளவிற்குக் கீழ்த்தரமாக நடந்து கொள்வார்கள்.
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்வார்கள். இடத்திற்கு தக்கவாறு நேரத்திற்கு தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்வார்கள். அதே நேரத்தில் 7ல் பலம் குறைந்த நீச சேர்க்கை உள்ள புதன் ஜாதகரை புதனால் நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, வீரியக் குறைவு ஏற்படும். பெண்களுக்கு பெண்மைக்குறைவு உண்டாகும். துரிதஸ்கலிதம், சஞ்சலம், சபலம், பய உணர்வு, தனக்குத் தானே பிதற்றுவது என மனம், சித்தம் சம்பந்தப்பட்ட உடல் நலக் குறைபாடுகள் புதனால் உண்டாகும்.
ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது பாக்கிய தனலட்சுமி யோகம். நமது வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களைத் தருவது சுக்கிரனின் அருட்கொடையே. எட்டாததை எட்டச் செய்வார், கிட்டாததைக் கிட்டச் செய்வார். எல்லா சுக போகங்களுக்கும் கர்த்தா. அயன சயன போகத்தை அள்ளி வழங்குபவர் காமகாரகன், களத்திரகாரகன், விந்தைகள் புரியும். மாயக்கிரகம். காமக்களியாட்டங்களை நடத்தும் தலைமைச் செயலாளர். சுக்கிரனின் சாகசங்கள், திருவிளையாடல்கள். எல்லாத் துறைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையைத் தருபவர் சுக்கிரன்.
சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஆண், பெண் இரு பாலருக்கு வசிய சக்தி இருக்கும். பெண்கள் கருப்பு, மாநிறமாக இருந்தாலும் அவர்களிடம் எல்லோரையும் சுண்டி இழுக்கும் காந்த கவர்ச்சி இருக்கும். முகமும் கண்களும் பேசும், ஒளி வீசும். ஆண்கள் மன்மதனைப் போல் மதனகாமராசர்களாக இருப்பார்கள்.
சுக்கிரன் திருமணப் பந்தத்திற்கும், இல்லற சுகத்திற்கு முக்கிய கிரகமாக இருக்கிறார். ஆண் ஜாதகத்தில் மனைவியைப் பற்றியும் , பெண் ஜாதகத்தில் கணவரைப் பற்றியும். அறிய வைப்பவர், விளங்க வைப்பவர். திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும் போது ஆண், பெண் இந்த இரண்டு ஜாதகங்களிலும் சுக்கிரனின் அமைப்பைக் கவனிப்பது மிக மிக இன்றியமையாததாகும்.
சுக்கிரன் சுப பாக்கியத்தைத் தரும் சூப்பர் சுப கிரகம். இவர் 7 ஆம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் பாக்கியம், மற்றொரு வகையில் துர்பாக்கியமாகும். களத்திர கார்கள் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பது களத்திர தோஷம். அதிலும் நீசமாக இருக்கக் கூடாது. 6, 8, 12க்குடையவர்கள் சேர்க்கை பெற்றால் இல்லறம் கசக்கும், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், பிரிந்து வாழ்வது என பிரச்னைகள் வரும். பலம் பெற்ற சுக்கிரன் சமயோசிதமாகவும், தந்திரமாகவும் ஜாதகரை வழி நடத்துவார். இவர்கள் செய்யும் திறைமறைவு வேலைகள், பிறர் தொடர்பு, கள்ளக் காதல் தொடர்பு காரணமாக இல்வாழ்க்கையில் இடைவெளி ஏற்படும்.
யோகத்தையும், தோஷத்தையும், கௌரவத்தையும், அவமானங்களையும் ஒரு சேர வழங்கும் தன்மை சுக்கிரனுக்கு உண்டு. 7ல் சுக்கிரன் நல்ல ஆதிபத்தியம் பெற்று அமர்ந்தால் ஜாதகர் ராஜபோகத்தை அனுபவிப்பார். பலம் குறைந்த சுக்கிரன் தருவது போல் தந்து எல்லாவற்றையும் கெடுத்துவிடுவார். தகாத உறவுகள், கீழோர் சேர்க்கை, சிறுநீரக கோளாறுகள், ஆண், பெண் மர்ம உறுப்புக்களில் பிரச்னை, நோய்கள் வரும். கண், தோல், கட்டிகள் . ஆறாப் புண்கள், நாடி நரம்புகள் தளர்ச்சி, விந்து குறைபாடு எனப் பல வகைகளில் ரோகத்தைத் தருவார். இவர் 7ல் இருப்பது பெரும்பாலும் இருதார யோகத்தையே காட்டுகிறது. லக்னாதிபதி, சந்திரன் பலமாக இருந்தால் சுக்கிரனின்
நீச கெடுபலன்கள் கணிசமாகக் குறையும்.
courtesy-ஜோதிட முரசு
மிது'னம் செல்வம்

============================
ராகு, கேது தோஷம் வராமல் தடுக்க முடியுமா?..........................
ஓ... தாராளமாக முடியும். எங்கேனும் குருவிக் கூடு, பாம்புப் புற்றிருந்தால் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையெனில் இடிக்காதீர்கள். அடர்ந்த வனங்களையும், காடுகளையும் அழிக்கக் கூடாது. அறுபது எழுபது வருட பச்சை மரங்களை வெட்டுவதற்கு முன்பு யோசியுங்கள். அரசு இடத்தை தந்திரமாக வளைக்கும்போது ராகு உங்களை வளைப்பார். ராகுவும், கேதுவும் பாட்டன் பாட்டிக்கு உரித்தான கிரகங்களாதலால் முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாமல் விற்க வேண்டுமா என்று பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். முக்கியமாக கேதுவின் அருளைப்பெற வேண்டுமெனில் கோயில் சொத்துக்களை எப்படியேனும் குறைந்த விலையில் வாங்கிப் போடலாமா என்று நினைப்பது கூடாது. கற்றுக் கொடுத்த குருவையே நிந்திப்பதை செய்யவே கூடாது. மிக முக்கியமாக புண்ணிய தீர்த்தங்களை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளாவிட்டாலும் அதில் காலை கழுவாதீர்கள். சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு ஊரை ஏமாற்றும்போது ஞானகாரகனான கேது கடும் கோபம் கொள்கிறார். பரம்பரை பரம்பரையாக வணங்கி வந்த குல தெய்வம் மற்றும் கிராம தேவதைகளின் வழிபாடுகளை நிறுத்தாமல் தொடருங்கள். உங்கள் மூல ஊற்றின் ஒரு கண் அங்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏராளமான பணத்தை வைத்துக் கொண்டு லோபித்தனமாக இருக்கக் கூடாது. ஏனெனில் யோகக்காரகனான ராகுவை ஓரிடத்தில் முடக்காதீர்கள். பிறன்மனை நோக்குவதும், களவாட நினைப்பதும் கடுமையான களத்திர தோஷமாக மாறும். கன்றுக்கு பால் விடாமல் ஒட்ட ஒட்ட பால் கறப்பது கூட தோஷத்தை அதிகரிக்கும். பொய் சாட்சி கூறும்போது உங்களின் வாக்கு ஸ்தானத்தில் தானாக ராகுவோ, கேதுவோ அமர்வது நிச்சயம்.
courtesy- கிருஷ்ணா

நிஜ வாழ்க்கையில் நிழல் கிரகங்கள் என்ன செய்யும்?
ஜோதிடரீதியாக இந்த இரு கிரகங்களுக்கு என்று தனியாக எந்த சக்தியும் கிடையாது. ஆனால் மற்ற கோள்களின் இணைவினைப் பெறும்போது அவற்றின் தன்மையை மாறுபடச் செய்யும் திறன் இவர்களுக்கு உண்டு. அதாவது இவை இரண்டும் வேதிப்பொருட்கள் போல. உப்பு அல்லது சர்க்கரைபோல என்றுகூட வைத்துக்கொள்ளலாம். உப்பு பாலில் கலந்தால், பால் திரிந்து விடுகிறது. சர்க்கரை சட்னியில் சேர்ந்தால் சட்னியின் ருசி மாறிவிடுகிறது. அதுபோல இந்த இரண்டு கோள்களும் ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள், எந்த கோளின் இணைவினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இவர்கள் தரும் பலனின் அளவு மாறுபடும். பொதுவாக இவை இரண்டும் நேரடியாக வந்து சேரவேண்டிய பலனை மாற்றிவிடுவதால் இந்த இரு நிழல் கிரகங்களையும் தீய கோள்கள் என்றே சித்தரிக்கின்றோம். இதனாலேயே ஒருசிலருக்கு நன்மையாகவும், ஒருசிலருக்குத் தீமையாகவும் அமைந்துவிடுகிறது. பொதுவில் இவை இரண்டும் அசுப கிரகங்களே ஆகும்.
courtesy;திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

================================
காள சர்ப்ப தோஷமா, காள சர்ப்ப யோகமா?.....
தோஷம் என்றால் ஏதோ ஒரு பெரிய குறை என்றும், யோகம் என்றால் பெரிய அதிர்ஷ்டம் என்றும் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறோம். யோகம் என்றால் இணைவு என்பதே பொருள். இரண்டு கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒரு கிரகம் இணையும் பாவகம் என்பதைக் குறிப்பிடுவதற்காக யோகம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். ஜாதகத்தில் குருவோடு சனி இணைந்திருந்தால் அதை ‘குரு சண்டாள யோகம்’ என்று சொல்கிறார்கள். குரு சண்டாள யோகம் என்றால் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது அல்ல! குருவினால் உண்டாகும் நற்பலனை சனி குறைத்துவிடும் என்றுதான் பொருள். ஆயினும் இதனை யோகம் என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள் காணக்கூடாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்களின் இணைவு என்பதே யோகம் என்பதன் பொருள்.
அதேபோன்று தோஷம் என்றால் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று தவறாகப் பொருள் கொள்ளக்கூடாது. தற்கால ஜோதிடர்கள் காளசர்ப்ப தோஷம், காளசர்ப்ப யோகம் என்றும் இரண்டு விதமாக பலன் சொல்கிறார்கள். ஒரு மனிதனுடைய ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது கோள்களுக்கு இடையில் எல்லா கிரகங்களும் அடங்கிவிடும் தன்மையை தோஷமென்றும், யோகமென்றும் இரண்டுவிதமாக பிரிக்கிறார்கள். ஜாதகக்கட்டத்தில் இடமிருந்து வலமாகக் காணும்போது ராகுவிலிருந்து தொடங்கி மற்ற ஏழுகிரகங்களும் உள்ளடங்கி கேதுவில் முடிந்தால் அதனை தோஷம் என்றும், கேதுவில் தொடங்கி ராகுவில் முடிந்தால் அதனை யோகம் என்றும் தற்கால ஜோதிடர்கள் பலன் உரைக்கிறார்கள். ராகு மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர், கேது மனித உடலும் பாம்பு தலையும் கொண்டவர்.
உண்மைக்கோளான ஏழும் பாம்பின் வாயை நோக்கி சென்றால், அதாவது கேதுவை நோக்கி சென்றால் அது தோஷம் என்ற விளக்கத்தையும் சொல்வார்கள். தோஷ அமைப்பு உடையவர்கள் தனது வாழ்வில் முதல் 30 வருடங்கள் சுகத்தினையும் 30வயது முதல் 60 வயது வரை கடுமையான கஷ்டத்தையும் அனுபவிப்பார்கள், மாறாக யோக அமைப்பு உடையவர்கள் முதல் 30வயது வரை துன்பத்தை அனுபவித்தாலும், 30 முதல் 60 வயது வரை சிறப்பான வளர்ச்சியைக் காண்பார்கள் என்றும் பலன் சொல்கிறார்கள். ஆனால் இந்த கருத்தினை அறிவியல் ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
யோகம் என்று சொன்னாலும், தோஷம் என்று சொன்னாலும் அதனால் பெரிதாக பலன் ஏதும் மாறிவிடாது, இரண்டிற்கும் ஒரே மாதிரியான பலனே என்பது கற்றறிந்த ஜோதிடர்களின் கருத்து. இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் பரவலாக அமர்ந்திருக்க வேண்டும்; மாறாக ஒரு குறிப்பிட்ட பாவகங்களுக்குள் சென்று அவை முடங்கிவிட்டால் அந்த ஜாதகத்தின் பலன் குறைவாகவே இருக்கும் என்பதுதான். பொதுவாக இந்த காளசர்ப்ப அமைப்பினைப் பெற்றவர்கள் எந்த விஷயத்திலும் எளிதாக திருப்தி அடைந்து விடமாட்டார்கள். ஒரு சட்டையைக்கூட உடனே வாங்கிவிடாமல் அது சரியில்லை, இது சரியில்லை என்று பல்வேறு குறைகளைச் சொல்லி கடைசியாக ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்பொழுதும் திருப்தியடையாமல் இதைவிட நன்றாக
வாங்கியிருக்கலாமோ என்றும் சிந்திக்கும் மனோபாவம் கொண்டிருப்பார்கள். ஆகவே இந்த காளசர்ப்ப அமைப்பினை உடைய ஜாதகர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.

courtesy;Dinakaran.com.
=========================================
No comments:
Post a Comment