தாரா பலனும் சூட்சமங்களும்
================================
அனைவருக்கும் என் காலை வணக்கம்........
ஜோதிடத்தில் சந்திரன் ஒரு ராசியை கடக்க இரண்டே கால் (2.25) நாட்கள் எடுத்துக்கொள்கிறார். ஆதாவது 54 மணிநேரம். ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் வீதம் சந்திரன் ஒரு பாதத்தை கடக்க சரியாக (54 / 9 = 6) ஆறு மணிநேரம் எடுத்துக்கொள்கிறது.
இதன் மூலம் அறிவது என்னவென்றால் தினமும் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை நட்சத்திர பாதம் மாறும் சந்திரன் அதற்கேற்ப தன் கோச்சார பலன்களை தாரை அல்லது தாரா பலன் என்ற முறையில் வழங்குகிறார்.
சமஸ்கிருத மொழியில் தாரா அல்லது தாரை என்றால் நட்சத்திரம் ஏனப்பொருள். தாரைகள் முதலில் ஜென்ம நட்சத்திரத்தில் தொடங்கி ஒன்பது நட்சத்திரம் வரை கணக்கிடப்பட்டு பின் மீண்டும் முதலில் இருந்து கணக்கிடப்படுகிறது.
தாரைகளின் பெயர்கள்:
1. ஜென்ம தாரை
2. சம்பத்து தாரை
3. விபத்து தாரை
4. சேமத்தாரை
5. பிரத்தயக்கு தாரை
6. சாதக தாரை
7. வதைத்தாரை
8. மித்திர தாரை
9. பரம மித்ர தாரை
2. சம்பத்து தாரை
3. விபத்து தாரை
4. சேமத்தாரை
5. பிரத்தயக்கு தாரை
6. சாதக தாரை
7. வதைத்தாரை
8. மித்திர தாரை
9. பரம மித்ர தாரை
இதில் 3,5,7 இவை அனைத்தும் அசுபதாரைகள். மற்றவை சுபத்தாரைகள்.
இப்போது தாரா பலன் அறியலாம், ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் மகம் எனில் அது சிம்மராசியில் வருகிறது. சந்திரன் திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார் எனக்கொள்க.
சந்திரன் மகர ராசியில் சஞ்சரிக்கிறார் எனில், அங்கு உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இதில் உத்திராடம் 3 பாதங்களும், திருவோணம் 4 பாதங்களும், அவிட்டம் 2 பாதங்களும் உள்ளன.
மகரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் கால அளவு பின்வருமாறு:
உத்திராடம் 3 பாதங்கள் X 6 = 18 மணிநேரம்.
திருவோணம் 4 பாதங்கள் X 6 = 24 மணிநேரம்
அவிட்டம் 2 பாதங்கள் X 6 = 12 மணிநேரம்
திருவோணம் 4 பாதங்கள் X 6 = 24 மணிநேரம்
அவிட்டம் 2 பாதங்கள் X 6 = 12 மணிநேரம்
இதில் உத்திராடம் என்பது மகத்தில் இருந்து 12 வது நட்சத்திரம். இதன் தாரை வகை அறிய 12/9= 1.3. இங்கே 1 ஈவு மற்றும் 3 மீதி. இதில் மூன்று என்பதே தாரை வகை. மூன்று விபத்துத்தாரை எனவே உத்திராடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் 18 மணிநேரம் அசுப பலன் இருக்கும்.
அடுத்து திருவோணம் இது 13 நட்சத்திரம் இதன் தாரைவகை 13/9 = 1.4. 1 ஈவு மீதி 4. 4 என்பது சேமத்துத்தாரை எனவே சந்திரன் திருவோணத்தில் சஞ்சரிக்கும் 24 மணிநேரம் நல்லபலன்கள் உண்டாகும்.
அடுத்து, அவிட்டம் இது 14 நட்சத்திரம், இதன் தாரைவகை 14/9=1.5. இங்கு 1 ஈவு, மீதி 5. இதில் ஐந்து என்பது பிரத்தயக்கு தாரை என அறிக. இதனால் சந்திரன் அவிட்டத்தில் சஞ்சரிக்கும் 12 மணிநேரம் அசுப பலன்.
இதன் மூலம் சந்திராஷ்டமம் என்பது 24 மணிநேரமும் ஜாதகரை பாதிப்பதில்லை எனவும், பாதிப்பு ஏற்படும் நட்சத்திர தாரை வரும் மணிநேரங்கள் அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அறிக.
இதுபோலவே ஜென்ம லக்னத்திற்கு, லக்னம் பெறும் சாரம் கொண்டு, தாரைபலம் கணித்து, கிரகங்களின் சாரம் கண்டு பலன் கூறலாம் என தெளிக. இது ஆய்வுக்குரியது.
இவ்வாறு சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திர பாதம் வைத்து தாராபலன் அறியலாம்.
இது ஜோதிடத்தின் மிக முக்கிய சூட்சமம். அதனால் இதனை குறிப்பெடுத்துக்கொள்ளுமாறு உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒருவரின் லக்ன சாரம் மற்றும் லக்னாதிபதி நின்ற சாரம் 3,5,7 தாரையாக இல்லை எனில் லக்னம் பலமுள்ளது எனலாம். இது போலவே கேந்திரம் மற்றும் திரிகோணத்திற்கு பார்க்கலாம்.
நன்றி,
மணிகண்டன் பாரதிதாசன்
மணிகண்டன் பாரதிதாசன்
=============================
தாரா பலன் என்றால் என்ன தெரியுமா ?
தாரா, தாரை போன்றவைகள் என்ன வென்று முதலில் பார்ப்போம் ..இவைகள் நட்சத்திரங்களின் குறி ஈடாகவே ஜோதிட வேதம் சொல்கிறது . ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் இருக்கும் 12 ராசிகளில் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அவரின் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் ஆகும் , .
ஒரு ஜாதகரின் வேலை, வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள் போன்ற நிகழ்வுகள் துவங்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் அந்த நட்சத்திரமாவது அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை முன் கூட்டியே
அறிவது நலம்
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.
1 – ஜென்ம தாரை – மனக்குழப்பம் தொழில் துவங்க நல்லது இல்லை
2 – சம்பத் தாரை – தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.
3 – விபத் தாரை – தவிர்க்க வேண்டிய நாள்..பயணங்கள் தவிர்ப்பது நல்லது
4 – ஷேம தாரை – நன்மை தரக்கூடியது என்று அறியவும்
5 – பிரத்யக் தாரை – வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல் தரும் என்று பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றது
6 – சாதக தாரை – புதிய முயற்சி, செயல்களுக்கு சாதகமானது...எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்
7 – வதை தாரை – கடுமையான தீமை தரக்கூடியது,..வாக்கு தர்க்கங்கள் தவிர்க்கவும்
8 – மைத்ர தாரை – மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்
9 – பரம மைத்ர தாரை – அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள் என்று கணக்கில் கொள்ளவும்
உதாரணம் : ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி என்று வைத்து கொள்ளுங்கள் அன்றைய நட்சத்திரம் பூரம் என்றிருந்தால் அஸ்வினி முதல் பூரம் 11 நட்சத்திரம் 9ல் வகுக்க மீதி 2வரும், இது சம்பத் தாரை நன்மை தரும். இது போல கணக்கிடு பலன்களை சொல்லவேண்டும்

நன்றி;ஜோதிடச்சக்கரம்.
================================
=================================
ராசியான தாரா பலன்:-
-:ராசியான தாரா பலன்:- தாரை என்றால் நட்சத்திரம் என்று பொருள்.ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை ஒட்டி அவருக்கு எந்ததெந்த நட்சத்திரங்கள் ராசியானது யோகமானது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்போது தான். அத்தகைய யோகமான ராசியான நட்சத்திரங்களில் நாமும் ஏதாவது சுபகாரியங்களில் இறங்கலாம். அல்லது அப்படிபட்ட ராசியான நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் நட்பு கொண்டு கூட்டாக அல்லது அவர்களுடைய உதவி கொண்டு வியாபாரத்தில் அல்லது தொழிலில் இறங்கலாம்.
ராசியில்லாத நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் தொடர்பு கொண்டு பின்னால் பெரும் பொருள் இழப்புகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதிலிருந்து விடுபடலாம் அல்லவா? திருமணம் செய்து கொள்ளும் மனைவியைத் தேர்ந்தெடுப்பதிலும் கூட இத்தகைய தாரா பலன் பயன் உள்ளதாக அமைகிறது. தார பலன் இல்லாத ஜோடியின் எதிர்காலத்தில் நேர்மாறாகவே இருக்கும்.
அவரவர் ஜெனன நட்சத்திரத்திற்கு 2-4-6-8-9-11-13-15-18-20-24-26,ம் நட்சத்திரங்கள் ராசியான தாரா பலன் உடைய நட்சத்திரங்களாகும்.
22 வது நட்சத்திரம் ராசியான தாரா பலன் உடைய நட்சத்திரமான போதிலும் அது "வைநாசிக பாதம்" என்று சொல்லக்கூடிய அசுபப் பலன் உடைய நட்சத்திரமாகும்.
17வது நட்சத்திரமும் தாரா பலனில் ராசியான நட்சத்திரமான போதிலும் அது சந்திராஷ்டமனம் என்ற அடிபடையில் அசுபமாக வேலை செய்யும்.ஆகவே அது சுபத்திற்கு ஆகாது என்ற தவிர்க்கப்படுகிறது.
ராசியான தாரைகளில்(நட்சத்திரங்களில்):-----
1.) 2-11-20ம் நட்சத்திரங்கள் - சம்பத்துத் தாரை.
2.)4-13ம் நட்சத்திரங்கள்-சேஷத் தாரை.
3.)6-15-24ம் நட்சத்திரங்கள்-சாதகத் தாரை.
4.)8-26ம் நட்சத்திரங்கள்-மைத்திர தாரை.
5.)9-18ம் நட்சத்திரங்கள்-பரமைத்திர தாரை.
ஆகிய 12 நட்சத்திரங்களும் யோகம் தருபவைகளாகும்.
courtesy; srirajan astro. tq
=================================
No comments:
Post a Comment