Followers

Saturday, May 9, 2020

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா? அலட்சியம் வேண்டாம்! - ஒரு மருத்துவ விளக்கம்! #Menorrhagia

ஜெ.நிவேதா



மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா? அலட்சியம் வேண்டாம்! - ஒரு மருத்துவ விளக்கம்! #Menorrhagia
மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கா? அலட்சியம் வேண்டாம்! - ஒரு மருத்துவ விளக்கம்! #Menorrhagia


மாதவிடாய் பற்றிய விழிப்புஉணர்வு, அண்மைக் காலமாக அதிகரித்துவருகிறது. அதிலும் சாதாரணமாக அல்ல... எழுத்து வடிவத்தைத் தாண்டி, திரைவடித்துக்கே வந்துவிட்டது. உதாரணமாக, 'பேடு மேன்' (Pad man) போன்ற படங்கள் மக்களால் வரவேற்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும் ஆரோக்கியமான சூழல்தானே! இதுபோன்ற விழிப்புஉணர்வுகளில் ஒன்றுதான், மாதவிடாய் காலத்தில் உடல்நலத்தின் மீது நாம் எடுத்துக்கொள்ளும் அக்கறை. 'அந்த நேரத்தில் உனக்கு வயிறு வலிக்குமா?’, `எனக்கு வலியே இருக்காது. ஆனாலும், அதிகமா ரத்தப்போக்கு இருக்கும்', 'எனக்கு அந்த நாள்களில் பயங்கரமா வயிறு வலிக்கும். மாத்திரை போடலைன்னா வலி குறையவே குறையாது'...

இப்படியான மாதவிடாய்காலச் சிக்கல்களை, சில உரையாடல்களை பெண்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு சூழலில் நிச்சயம் கேட்டிருப்பார்கள் அல்லது அவர்களே சொல்லியிருப்பார்கள். வலியுணர்வுபோலவே, மாதவிடாய் காலத்துக்கென சில பிரத்யேகப் பிரச்னைகளும் இருக்கின்றன. `உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய்காலச் சிக்கல் எது?’ என்று கேட்டால், அதிகமான அல்லது குறைவான ரத்தப்போக்கு, மூட் ஸ்விங், பின் முதுகுவலி, கால்வலி, அடிவயிற்றில் வலி... என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்னையைக் கூறுவார்கள்.

மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குறித்து மகப்பேறு மருத்துவர் வினுதா அருணாச்சலத்திடம் கேட்டோம்... ``மாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

எது அதிக ரத்தப்போக்கு?

அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தாங்கமுடியாத வலி; அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்; அசெளகரியமாக உணர்தல், இவற்றோடு உடலில் ரத்த அளவு குறையும் அளவுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தையே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம் என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது, உடலிலுள்ள ரத்தச் சிவப்பணுக்கள் குறைந்து, ரத்தச்சோகை ஏற்படக்கூடும். இதனால், உடல் நலிவடைந்து, சோர்வாகக் காணப்படுவார்கள். இவை அனைத்தும் தொடக்கநிலைகள்தாம். இந்தச் சூழலிலேயே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.

அதிக ரத்தப்போக்கு எடுத்துச்சொல்லும் எச்சரிக்கைகள்...

வயதின் அடிப்படையில், அதிக ரத்தப்போக்கு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகள் என்று அறிந்துகொள்ளலாம்.
20 - 25 வயதுள்ளவர்கள்:
`Polycystic Ovaries’ எனப்படும் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். உடற்பயிற்சிகள் இல்லாமல் இருப்பது, உணவு முறை சீராக இல்லாதது போன்றவற்றாலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

25 முதல் 35 வயதுள்ளவர்கள்:

இந்த வயதுள்ளவர்கள் அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான மிக முக்கியமான அறிகுறியாகக்கூட இருக்கலாம். அந்தப் பிரச்னையை முதல் நிலையிலேயே கண்டறிந்துவிட்டால், குணப்படுத்திவிடலாம். சில நேரங்களில் இது நீர்க்கட்டிப் பிரச்னையாகவும் இருக்கக்கூடும். அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கலாம். எனவே, அதிக ரத்தப்போக்கை உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது நல்லது.

45 வயதை தாண்டியவர்கள் (மெனோபாஸ் காலத்துக்குப் பிறகு):

அதிக ரத்தப்போக்கென்றால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸ் காலத்துக்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் (Post Menopausal Bleeding), பரிசோதனை செய்து, காரணத்தைக் கண்டறிந்துவிடுவது நல்லது.

எதனால் ஏற்படுகிறது?

* ரத்தப்போக்குக்கு உதவும் முக்கியமான ஹார்மோன்கள் `ஈஸ்ட்ரோஜென் (Estrogen)’, `புரொஜெஸ்ட்ரோன் (Progesterone)’. இவை இரண்டிலும் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்வதால் ஏற்படுவதுதான் அதிக ரத்தப்போக்கு. இதை ஹார்மோன் சமநிலையின்மை (Hormone Imbalance) எனக் குறிப்பிடுவோம்.

மாதவிடாய் நாள்களில் கருமுட்டை உற்பத்தி செய்யத் தவறும்போது, கர்ப்பப்பை செயலிழப்பதால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பை, சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது.
* கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படலாம்.
* கர்ப்பப்பைச் சுரப்பு திசுக்கட்டியால் (Adenomyosis)ஏற்படலாம்.
* தைராய்டு பிரச்னைகள், சிறுநீரகக் குறைபாடுகள், மருந்து ஒவ்வாமைகளால் ஏற்படலாம்.

உணவுமுறை மாற்றங்கள்:

இந்தியாவைப் பொறுத்தவரை, பொதுவாகவே நிறையப் பேருக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது. ரத்தச்சோகையால் பாதிக்கப்படுபவர்களில், பெரும்பாலானோர் பெண்களே. பருவமடைதல், மாதவிடாய், பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க, இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். உதாரணமாக, கீரை, மாதுளை, அத்திப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரையோடு சத்து மாத்திரைகளும் உட்கொள்ளலாம். இப்படி, அதிக ரத்தப்போக்கு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்தக் காரணத்தைச் சரியாக அறிந்துகொள்வதே, அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி’’ என்கிறார் வினுதா அருணாச்சலம்.

நன்றி;விகடன்.
======================================



பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்.............

பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி  போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை  உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது  கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும்.

இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல்,  அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன்  ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம்  போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும்  அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.

மனரீதியான ஆறுதல்:

இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள்  உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களை சத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம்.  ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம். நோய் தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதை தடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்

அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு  ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.

ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும்  தொந்தரவுகள் குறையும்.

கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு  சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.

செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.

ரெசிபி

எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும்.  இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாக கலந்து தேன், சிறிதளவு  தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்த எனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக்  கிடைக்கும். உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.

பேரீச்சை பால்:

பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில் இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்து உட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது. இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.

கொள்ளு கூட்டு:

மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு  போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்து சீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.

டயட்

பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால் உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில்  சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத்  தரும். இந்த நேரத்தில் பெண்களின் எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரைக்கு பதிலாக  தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.

courtesy;tamilmurasu.
=============================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...