Followers

Wednesday, May 6, 2020

GOOD MORNING DEAR FRIENDS!!!
HAVE A WONDERFUL SUNDAY!!!
நடந்ததெல்லாம் நன்மைக்கே. நடக்காதது இன்னும் நன்மைக்கே!!!.
பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?(உள்ளே படித்து பாருங்கள்)
அது ஒரு அழகிய கோவில். அந்த கோவிலின் அழகையும் அதில் பிரதானமாக உள்ள சலவை கல்லால் ஆன விக்ரகத்தின் அழகையும் கண்டு ரசிக்க எண்ணற்ற பக்தர்கள் தினசரி வந்து செல்வார்கள். எதிரே உள்ள பிரகாரத்தில் கூட தரையில் சலவைக் கற்களை தான் பதித்திருந்தார்கள்.
ஒரு நாள் தரையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள், மூலஸ்தானத்தில் உள்ள விக்ரகத்திடம் பேசின. (கல் பேசுமா என்று கேட்காதீர்கள். அகலிகையும் கல்லாக இருந்தவள் தானே?!)
“எங்கள் மீது நடந்து வந்து தான் உன்னை பார்க்கிறார்கள். ஆனால் உன்னை மட்டும் எல்லோரும் வணங்கிவிட்டு செல்கிறார்கள். உன் அழகை புகழ்கிறார்கள். ஆனால் எங்களை எவரும் பொருட்படுத்துவதே கிடையாது. இது எந்த வகையில் நியாயம்?”
“நண்பர்களே, நீங்களும் நானும் ஒரே இடத்தில் இருந்து தான் வந்தோம் என்பது உங்களுக்கு தெரியும் தானே?”
“ஆம்… தெரியும்… அதனால் தான் எங்களுக்கு இந்த வருத்தம். ஒரே இடத்தில் இருந்து நாம் வந்திருக்கும்போது உன்னை மட்டும் உயர்வாக கருதுவது ஏன்?”
“நண்பர்களே… இந்த கோவிலை கட்டும்போது, தொழிலாளர்கள் உங்களை நாடி வந்து உங்களை வெட்டி எடுத்து உளியால் செதுக்க முற்பட்டபோது நீங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. உளி மேலே படுவதை விரும்பாது வேண்டுமென்றே உடைந்து உடைந்து போனீர்கள். எனவே உங்களை தரையில் பதிக்கும் கல்லாக போட்டுவிட்டார்கள். ஆனால் என்னிடம் வந்தபோது நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். சிற்பி தனது உளியால் என்னை செதுக்கியபோது “இது என்னை வேறு ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்காகத் தான்” என்று என்னை தேற்றிக்கொண்டு உளியும் சுத்தியும் எனக்கு தந்த அடிகளை தாங்கிக்கொண்டேன். இதோ இன்று ஒரு அழகிய சிலையாக மாறிவிட்டேன்.”
“நீ சொல்வது வாஸ்தவம் தான்…”
உங்களை மேம்படுத்த அவர்கள் விரும்பியபோது நீங்கள் ஒத்துழைக்கவில்லை. இந்த உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உள்ளது. உங்களை உயர்த்தும் முயற்சிக்கு ஒத்துழைக்காமல் பாதியிலேயே நீங்கள் நிறுத்திவிட்டதால், உங்கள் மேலே நடந்து செல்பவர்களை பற்றி நீங்கள் குறைப்பட்டுக்கொள்ள முடியாது!”
இவ்வாறு விக்ரகம் கூறி முடித்தவுடன் பெருமூச்சு விட்டன தரையில் பதிக்கப்பட்ட கற்கள்.
விக்ரகம் எப்படி உளியை தாங்கிக்கொண்டு தன்னை வடிக்க ஒத்துழைத்ததோ அதே போல நாமும் இறைவன் நம்மை செம்மை படுத்த தரும் சோதனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். சோதனையின்றி சாதனை எப்போதும் இல்லை.
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
நமக்கு நிகழும் அனுபவங்கள் அனைத்தையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். தோல்விகளினாலும், ஏமாற்றங்களினாலும் நிலை குலைந்துவிடாது நம் பயணத்தை நம்பிக்கையுடன் தொடரவேண்டும்.
நம்பிக்கையுடன் இருப்பவர்களே இந்த உலகை ஆள முடியும்.
இன்றைக்கு நாம் பார்த்து பெருமூச்சு விடும் பல சாதனையாளர்கள் இது போன்ற சோதனைகளை தாண்டி வந்தவர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.
நம் வாழ்க்கையில் நம்மை கண்ணீர் விட வைத்த தருணங்கள் பெரும்பாலானவை ஒரு வகையில் நமக்கு மிக மிகப் பெரிய வரங்களே என்பதை காலம் தான் உணர்த்தும். நடந்ததெல்லாம் நன்மைக்கே. நடக்காதது இன்னும் நன்மைக்கே.
The past may be good or bad, but the present is better and the future will always be the best.
இதை என்றும் நினைவில் வைத்திருந்தால் எந்த துன்பமும் நம்மை எதுவும் செய்ய முடியாது.
பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?
நம் பிறந்த நாளின் முக்கியத்துவத்தையும், நட்சத்திரப்படி ஒருவர் தன் பிறந்தநாளை கொண்டாடுவதன் அவசியத்தையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.
ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.
பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?
1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).
3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.
4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்
5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.
6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்
7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.
8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)
9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.
10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.
11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.
12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.
13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
14) வாகனங்கள் வாங்கலாம்
15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.
16) உபநயனம் செய்துகொள்ளலாம்
17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.
பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :
1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.
2) திருமணம் செய்துகொள்வது கூடாது
3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது
4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது
5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.
6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)
7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.
9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.
மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.
பல ஆண்டுகளாக ஆங்கில முறைப்படி தங்கள் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் திடீரென்று அவற்றை மாற்றிக்கொண்டு கொண்டாடுவது சிரமாக இருக்கலாம். ஆனால் அந்த சிரமங்கள் அனைத்தும் நமது நன்மைக்கும், உண்மையான முன்னேற்றத்துக்குமே என்பதை உணர்ந்து இவைகளை நடைமுறைப்படுத்துங்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ குருவருளும் திருவருளும் என்றென்றும் துணை நிற்கும்.
(SPECIAL CREDITS : இந்த பதிவை எழுதும்போது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை எம் ஜோதிட ஆசிரியர் திரு.நாராயணன் அவர்கள் தீர்த்து வைத்ததோடல்லாமல் சில குறிப்புக்களையும் தந்து உதவினார். அவருக்கு என் நன்றி!
நன்றி சரியான மந்திரம்.
GOOD MORNING DEAR FRIENDS!!!
HAVE A WONDERFUL SUNDAY!!!
இனிய ஞாயிறு காலை வணக்கம் உறவுகளே!!!
அன்புடன்
Vickna Sai.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...