Followers

Thursday, May 7, 2020

மார்ட்டின் லூதர் கிங்
அமெரிக்காவில் கறுப்பின மக்களை கொடுமைகளிலிருந்து மீட்க விடிவெள்ளியாக உதித்த கருப்பு இனத்தவர்தான் மார்ட்டின் லூதர் கிங்.
இருபதாம் நூற்றாண்டில் கருப்பினத்தவர்களுக்கு நிலவிய அவலத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய மார்ட்டின் லூதர் கிங்1929ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிறந்தார், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமயக்கல்வி பயின்ற மார்ட்டின் பாதிரியார் பணியை செய்து வந்தாலும் கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை எப்போதும் அரித்துக் கொண்டிருந்தது.
கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்த வெள்ளையர்கள், உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடத்தினை ஒதுக்கினர்.
பல ஆண்டுகளாக அவமானங்களை சந்தித்து வந்த கறுப்பினத்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் மார்ட்டின் லூதர் கிங்கோ வன்முறை தலைதூக்குவதில் கவனம் செலுத்தவில்லை, ஏனெனில் மகாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டம் இவரை வெகுவாக கவர்ந்தது, காந்தியடிகளின் வழிகளில் அதிக நம்பிக்கை வைத்த இவர் கறுப்பினர்த்தவர்களுக்காக சமஉரிமை கோரும் இயக்கங்களில் கலந்துகொண்டு தீவிரமாக செயல்பட்டார், மிகச்சிறப்பாகவும், உருக்கமாகவும் பேசக்கூடிய லூதர்கிங்கின் பேச்சுக்கள் எழுச்சியூட்டியதே தவிர வன்முறையைக் கிளறியதில்லை, 1963ம் ஆண்டு வாஷிங்டனில் சுமார் இரண்டுலட்சத்து ஐம்பதாயிரம் பேர் மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க சொற்பொழிவாற்றினார்.
அன்று ஆற்றிய சொற்பொழிவில் அவர் தனது கனவினை உலகிற்கு சொன்னார், "எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் இந்த தேசத்தில் என்னுடைய நான்கு பிள்ளைகளும் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும் என்று கூறினார்.
இவ்வாறு பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1965ம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்த அமெரிக்கா கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்ற சட்டத்தை பிரகடணப்படுத்தியது, இதன் பின்னர் கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார்.
ஆனால் மற்ற இனத்தவரும் அவரது இனத்தில் சேர்ந்தது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தன் விளைவாக 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி ஒரு வெள்ளையினத் தீவிரவாதி லூதர்கிங்கை துப்பாக்கியால் சுட்டான், தனது 39 வயதிலேயே உலகை விட்டு பிரிந்த லூதர் கிங்கின் மறைவிற்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது, மார்ட்டின் லூதர் கிங் என்ற அந்த மாமனிதனின் நினைவாக அமெரிக்காவில் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை 'மார்ட்டின் லூதர் கிங் தினம்' என்று அனுசரிக்கப்படுகிறது.
சமூக அநீதிகளை எதிர்த்து தைரியமாக போராடியவர்களின் உயிர்களை சில நாச சக்திகள் அழித்தாலும் வரலாற்றில் அவர்களுக்கென்று உள்ள இடத்தை யாராலும் அழிக்க முடியாது, லூதர் கிங்கைப் போல் அகிம்சை வழியில் சமூக அநீதிகளை அழிக்க முனைவோருக்கு நிச்சயம் அந்த வானமும் வசப்படும்.https://www.youtube.com/watch?v=APUAKRDdawE

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...