இந்த ஸத் சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது. இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீõ ஆகவே, ஸாயீயும் அங்கு நிச்சயம் வாசம் செய்கிறார். அவ்வாறே அங்கும் கோதாவரிக்கரை இருக்கிறது. அருகில் சிர்டீ கிராமமும் இருக்கிறது. அவ்விடத்திலேயே துனீயருகில் ஸாயீ அமர்ந்திருக்கிறார்; அவரை நினைப்பவர்களை சங்கடங்களிலிருந்து விடுவிக்கும் ஸாயீõ எங்கு ஸாயீ ஸத் சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு ஸாயீ எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(ஆஏஅ)வங்களுடனும் அங்கு வாசம் செய்வார். ஆத்மானந்தத்தில் திளைக்கும் ஸாயீயை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை. அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும்;-- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்; வாழ்க்கையில் நிறைவு பெறுவர். உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் குஹ்யமாக மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு வெளிப்பாடாகும். உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்சமஹா பாவங்களையும் அவற்றைச் சார்ந்த கிளைப்பாவங்களையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கிவிடும். உள்ளும் புறமும் தூய்மையடையும். விபூதி தரிப்பதின் மஹிமை பக்தர்களுக்கு நன்கு தெரிந்ததேõ கதை கேட்பவர்களுடைய மங்களத்திற்காகவே விபூதி வர்ணனை இவ்வளவிற்கு நீண்டது. ஆயினும், நீண்ட வர்ணனை என்று சொல்வதும் பொருத்தமாகாது. எனக்கே அது முழுமையாகத் தெரியாத நிலையிலும், நான் கதை கேட்பவர்களுடைய நன்மை கருதி சுருக்கமாகச் சொல்யிருக்கிறேன். கதை கேட்பவர்களுக்கு இதுவே என் பிரார்த்தனை. ஸாயீயை வழிபடுங்கள்; உங்களுடைய அனுபவத்தை நீங்களே காணலாம். என்னுடைய பேச்சை ஒருமுறையாவது கேளுங்கள்õ இங்கு காரணவாதமும் தர்க்கமும் செல்லாது; பூஜிக்க வேண்டுமென்ற பா(ஆஏஅ)வமே தேவை. புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது; உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள் மேலும் சாயி அற்புதம் தொடர்கிறது..............
Please see below for English version. Tq
எலோர்க்கும் அன்பு நன்றியும் வணக்கமும்....
சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba.......................................................................................................
."Bend the body, mend the senses and end the mind - this is the way to Immortality." - Baba.
Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 35
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
இப்பொழுது விபூதியின் ஒரு நவீனமான அனுபவத்தையும் நெவாஸ்கரின் பக்திப் பிரபாவத்தையும் மஹானுபாவரான ஸாயீயின் கிருபையையும்பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.
159 பாந்த்ராவில் வாழ்ந்துவந்த காயஸ்தப் பிரபு ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தார் ஒருவரால் எவ்வளவு முயன்றும் இரவில் சுகமாகத் தூங்கமுடியவில்லை.
160 கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்கும்போது, காலஞ்சென்ற அவர் தந்தை கனவில் தோன்றி அவரை தினமும் தூங்கமுடியாமல் செய்வார்.
161 நல்லதும் கெட்டதுமான பழைய சங்கதிகளையெல்லாம் ஞாபகப்படுத்தி சாபங்களாலும் வசைமொழியாலும் அவரைத் துளைப்பார். ரகசியமானதும் பலகோணங்களுள்ளதும் பீடைபிடித்ததுமான விஷயங்களைக் கடுமையான இகழ்மொழியில் கொட்டுவார்.
162 ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இந்தப் பிரசங்கம் நடந்து, அவருடைய தூக்கத்தைப் பாழ்படுத்தியது. இந்த இன்னலை அவரால் தாங்கவும் முடியவில்லை; தவிர்க்கவும் முடியவில்லை.
163 இந்த மனிதர் மேற்சொன்ன இன்னலால் வதைபட்டார்; விடுபட வழி தெரியவில்லை. ஆகவே, நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று தம் நண்பர் ஒருவரை அவர் ஆலோசனை கேட்டார். (நண்பர் ஸாயீபக்தர்)
164 ''என்னைப் பொறுத்தவரை மஹானுபாவரான ஸாயீ மஹராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் உதீயை ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்.ஃஃ
165 எப்படி எப்படி ஸாயீ பக்தர் சொன்னாரோ, அப்படி அப்படியே அவரும் செய்தார். அவருடைய அனுபவமும் அவ்வாறே இருந்தது. மறுபடியும் தந்தை கனவில் தோன்றவேயில்லை.
166 விதிவசத்தாலும் நற்செயன் விளைவாகவும், ஆலோசனை கேட்ட நண்பர் ஒரு ஸாயீபக்தர். உதீயின் விசித்திரமான மஹிமையைப்பற்றி விவரித்துவிட்டுச் சிறிதளவு அவருக்கு அளிக்கவும் செய்தார்.
167 ஸாயீபக்தர் சொன்னார், ''படுக்கப்போவதற்குமுன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும், மீதியை ஒரு பொட்டலமாகத் தலையணையின் அருகில் வைத்துக்கொள்ளவும். ஸ்ரீஸாயீயை மனத்தில் வைக்கவும்.--
168 ''பக்திபா(ஆஏஅ)வத்துடன் உதீயை அணுகவும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தைப் பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே.ஃஃ
169 மேற்சொன்ன செயல்முறையை அனுசரித்து, அன்றிரவு அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் கிட்ட நெருங்கவில்லை; அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.
170 அந்த ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்õ அவர் உதீ பொட்டலத்தைத் தலையணையின் அருகிலேயே எப்பொழுதும் வைத்துக்கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார்.
171 பின்னர், பாபாவின் நிழற்படம் ஒன்றை வாங்கி வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி பயபக்தியுடன் பூஜை செய்தார்.
172 தினமும் அப்படத்தை தரிசனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மானசீகமாகப் பூஜை செய்து ஒவ்வொரு வியாழனன்றும் பூமாலை சாத்தி வணங்கினார். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.
173 இந்த நியமநிஷ்டையைக் கடைப்பிடித்து எல்லா விருப்பங்களும் நிறைவேறப் பெற்றார். தூக்கமில்லாத இரவுகள், கெட்ட கனவுகள் பற்றியெல்லாம் மறந்தே போனார்.
174 இந்த சம்பவம் உதீயின் ஓர் உபயோகம். இன்னும் பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது, நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது.
175 பாலாஜீ பாடீல் நெவாஸ்கர் என்று பெயர்கொண்ட தீவிர ஸாயீபக்தர் ஒருவர் இருந்தார். உலகம் காணாத வகையில் உடலுழைப்பால் பாபாவுக்கு சேவை செய்தவர் அவர்.
176 சிர்டீ கிராமத்தின் முகப்புச் சாலைகளையும் பாபா தினசரி நடந்துசென்ற லெண்டிக்குச் செல்லும் சாலையையும் தினமும் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியை அவர் செய்துவந்தார்.
177 அவருக்குப் பிறகு அந்த ஸேவை, அதே செயல்முறையில், உலகியல் வழக்கில் காணமுடியாத அளவிற்குத் திறமைவாய்ந்த ராதாகிருஷ்ணபாயீ என்னும் பெண்மணியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
178 மக்களால் வணங்கப்படும் பிராமண குலத்தில் பிறந்தவராயினும், 'இந்த ஈனமான வேலையை நான் செய்வது தகாதுஃ என்னும் முட்டாள்தனமான எண்ணம் அப் பெண்மணியின் தூய்மையான மனத்தில் உதிக்கவேயில்லை.
179 விடியற்காலையில் எழுந்து கையில் துடைப்பத்தை ஏந்தி பாபா நடமாடக்கூடிய அனைத்துச் சாலைகளையும் தாமே பெருக்கிச் சுத்தம் செய்வார். அவருடைய சேவை போற்றுதற்குரியதுõ
180 அவருடைய வேலை எவ்வளவு வேகம்; எவ்வளவு சுத்தம்õ அந்தப் பணியில் அவருக்கு நிகர் யார்? சில காலம் கழித்து அப்பணியை அப்துல் ஏற்றுக்கொண்டார்.
181 உலகியல் வாழ்வில் இருந்தும், அதில் ஒட்டாது தாமரையிலைத் தண்ணீரைப்போல் வாழ்ந்துவந்த நெவாஸ்கர் மஹாபாக்கியசா. அவருடைய தியாகத்தை விளக்கும் இப் பகுதிக் காதையைக் கேளுங்கள்.
182 வயல்களில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானிய மகசூலையும் மசூதிக்குக் கொண்டுவந்து வெளிமுற்றத்தில் அம்பாரமாகக் குவித்துவிட்டு பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்துவிடுவார்.
183 பாபாவே தம்முடைய உடைமைகள் அனைத்திற்கும் யஜமானர் எனக் கருதித் தாமும் தம்முடைய குடும்பமும் பிழைப்பதற்குத் தேவையான அளவிற்கு பாபா கொடுத்ததை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவார்.
184 பாபா ஸ்நானம் செய்ததும், கை கால் முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார்.
185 நெவாஸ்கர் ஜீவிதமாக இருந்தவரை இந்தச் செயல்முறை (மகசூல் சமர்ப்பணம்) உடையாமல் தொடர்ந்தது. நெவாஸ்கரின் அன்பான மகனும் இதைத் தொடர்ந்து வருகிறார்; ஆனால் பகுதியாக மட்டுமே.
186 பாபா தேஹவியோகம் அடையும்வரை மகனும் தானியம் அவ்வப்பொழுது அனுப்பினார். அந்தச் சோளத்தை உபயோகித்துச் செய்த ரொட்டியையே பாபா ஒரு நாளைக்கு நான்கு தடவைகள் உண்டார்.
187 ஒருநாள் நெவாஸ்கரின் வருடாந்திர சிராத்த தினம் (ஈமக்கடன் செய்யும் நாள்) வந்தது. உணவு சமைக்கப்பட்டுத் தயாராகியது; பரிசாரகர்கள் பரிமாற ஆரம்பித்தனர்.
188 எதிர்பார்க்கப்பட்ட விருந்தினர்களுக்குத் தேவையான உணவு சமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் பரிமாற ஆரம்பித்தபோது எதிர்பார்க்கப்பட்டதுபோல் மூன்று மடங்கு விருந்தாளிகள் வந்திருப்பது தெரிந்தது.
189 நெவாஸ்கரின் மருமகள் கதிகலங்கிப்போனார். தம் மாமியாரிடம் (பாலாஜீ பாடீல் நெவாஸ்கரின் மனைவியிடம்) தம்முடைய பயத்தை மெல்ய குரல் கிசுகிசுத்தார், 'நாம் இந்த சங்கடத்திருந்து விடுபடுவது எப்படி?ஃ
190 மாமியாருக்கு பாபாவிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. ''ஸமர்த்த ஸாயீ நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கும்போது நமக்கென்ன கவலை? பயப்படாதேஃஃ என்று மாமியார் தைரியம் சொன்னார்.
191 இவ்வாறு மருமகளுக்கு தைரியம் அளித்துவிட்டு, மாமியார் ஒரு பிடி உதீயை எடுத்துக்கொண்டுபோய் உணவு சமைத்து வைத்திருந்த எல்லாப் பாத்திரங்களிலும் கொஞ்சங்கொஞ்சம் தூவிவிட்டு அவையனைத்தையும் துணியால் மூடிவிட்டார்.
192 பிறகு அவர் சொன்னார், ''குஷியாக உணவை எடுத்துப் பரிமாறு. எந்தப் பாத்திரத்தையும் முழுவதும் திறக்காதே. உணவை முகப்பதற்குத் தேவையான அளவிற்குத் திறந்து, உடனே துணியால் மூடிவிடு. இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் நீ உஷாராகச் செயல்படவேண்டும்.--
193 ''இவ்வுணவு அனைத்தும் ஸாயீயின் இல்லத்து அன்னம்; ஒரு பருக்கையும் நம்முடையதன்று. அவமானம் வாராமல் காப்பவர் அவரே; பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதுவும் அவருடையதே; நம்முடையதன்றுõஃஃ
194 அந்த மாமியாரின் நிச்சயமான நம்பிக்கை எப்படியோ, அப்படியே அவருடைய அனுபவமும் ஆயிற்று. எந்தவிதமான பற்றாக்குறையும் ஏற்படவில்லை. எல்லா விருந்தினர்களுக்கும் திருப்தியடையும்வரை உணவளிக்க முடிந்தது.
195 வந்தவர்கள் அனைவரும் விருந்துண்டு திருப்தியடைந்தனர். எல்லாம் நன்றாக நடந்துமுடிந்த பின்னரும் பாத்திரங்கள் முன்பு இருந்ததைப் போலவே உணவால் நிறைந்திருந்தனõ
196 உதீயின் பிரபாவம் இதுவே. ஞானிகளுக்கு இதெல்லாம் ஸஹஜமான சுபாவம். பக்தனைப் பொறுத்தவரை, பா(ஆஏஅ)வம் எப்படியோ அப்படியே அனுபவம்.
197 உதீயின் மஹிமையையும் நெவாஸ்கரின் ஆழமான பக்தியைப்பற்றியும் பேசும்போது, இன்னுமொரு காதை எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதை ஆடாத அசையாத மனத்துடன் கேளுங்கள்.
198 பிரதமமான கதையிருந்து பாதைமாறிச் செல்கிறேனோ என்னும் சிறிய சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால், அவ்வாறாகவே இருந்தாலும், அக் கதையை இந்த சந்தர்ப்பத்தில் அளிக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.
199 அவ்வாறு மனத்தில் முடிவெடுத்துவிட்டதால், இப்பொழுது அக் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறேன். அது இடம் மாறியிருக்கிறது என்று கதைகேட்பவர்கள் நினைத்தால், என்னை மன்னித்துவிட வேண்டுகிறேன்.
200 சிர்டீ கிராமவாசியான ரகு பாடீல் என்பவர் ஒரு சமயம் நெவாஸா கிராமத்திற்குச் சென்று பாலாஜீ பாடீல் நெவாஸ்கரின் விருந்தாளியாக அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தார்.
201 ஒருநாள் இரவு, மாடுகள் எல்லாம் தறியில் கட்டப்பட்டிருந்த நேரத்தில், மாட்டுக் கொட்டகைக்குள் ஒரு நல்லபாம்பு புகுந்து 'புஸ்ஃ என்று சீறியது.
202 இந்த ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்ட அனைவரும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தனர். பாம்போ படமெடுத்த நிலையில் அங்கு சுகமாக அமர்ந்துகொண்டது.
203 மாடுகளோ நிலைகொள்ளாது கட்டுத்தறியிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றன. ஆயினும் வந்திருப்பது ஸாயீயே என்று நெவாஸ்கர் தீவிரமாக நம்பினார்õ
204 மாடுகளை அவிழ்த்துவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மாடுகளில் ஒன்று தப்பித்தவறி பாம்பை மிதித்துவிட்டால் பெரும் நாசம் விளையும்.
205 தூரத்திருந்து புஜங்கத்தைப் பார்த்த நெவாஸ்கர், தலைகால் புரியாமல் மகிழ்ச்சியடைந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்கு மயிர்க்கூச்செறிந்தது. நல்லபாம்பை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
206 ''புஜங்க ரூபத்தில் பாபா நமக்குப் பேட்டி அளிக்க வந்திருப்பது ஸாயீயின் கிருபா கடாட்சமேஃஃ என்று சொன்னார். பிறகு, பாம்பிற்கு ஒரு கிண்ணம் நிறையப் பால் கொண்டுவந்தார்.
207 அணுவளவும் பயமில்லாமல் இருப்பதற்கு நெவாஸ்கருக்கு எவ்வளவு பக்தியும் விசுவாசமும் இருந்திருக்கவேண்டும்? அவர் நல்லபாம்பிடம் என்ன சொன்னார் என்பதை சாவதானமாகக் கேளுங்கள்õ
208 ''பாபா, ஏன் இப்படிக் கோபமாகப் புஸ்ஸென்று சீறுகிறீர்கள்? எங்களை பயமுறுத்தப் பார்க்கிறீர்களா என்ன? எடுத்துக்கொள்ளுங்கள்; இந்தக் கிண்ணத்தில் உள்ள பாலை நிம்மதியாக அருந்துங்கள்.ஃஃ
209 பாம்பிற்கு ஒரு கிண்ணம் பால் போதுமா? ஆகவே நெவாஸ்கர் ஒரு பெரிய பாத்திரம் நிறையப் பாலைக் கொண்டுவந்து பயமின்றிப் பாம்புக்கெதிரில் வைத்தார். உண்மையில் பயம் என்பது மனத்தில் உற்பத்தியாவதுதானேõ
210 பால் நிரம்பிய பாத்திரத்தைப் பாம்புக்கெதிரில் வைத்துவிட்டு, நெவாஸ்கர் அகலாதும் அணுகாதும் பழைய இடத்திற்குப் போய் உட்கார்ந்துகொண்டார். அகமும் முகமும் மலர்ந்து பாம்பைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார்.
211 பாம்பு நுழைவது பீதியைத்தான் அளிக்கும். ஆயினும், இச் சம்பவத்திற்கு எல்லாருடைய பிரதிபப்பும் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? இந்த ஆபத்திருந்து எவ்வாறு மீள்வது என்று தெரியாமல் திகைத்துப்போய், எல்லாரும் விசாரமடைந்தனர்.
212 'நாம் வெளியே சென்றால் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துவிடும். அங்கிருந்து பாம்பு வெளியே வருவது கடினம்ஃ என்று நினைத்து எல்லாரும் அங்கேயே காவலாக உட்கார்ந்திருந்தனர்.
213 மாட்டுக்கொட்டல் இருந்த பாம்பு திருப்தியடைந்தது. யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஓடி மறைந்தது. யாருக்குமே பாம்பு எங்கே சென்றதென்று தெரியவில்லை. எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.
214 பிறகு அவர்கள் மாட்டுக்கொட்டில் முழுவதும் தேடினர்; பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நெவாஸ்கர் ஒருவரைத் தவிர மற்றவரெல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். நெவாஸ்கருக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்தது.
215 மனக்குறை என்னவென்றால், பாம்பு மாட்டுக்கொட்டில் நுழைவதைப் பார்த்தது போலவே வெளியே சென்றதையும் பார்க்கமுடியவில்லையே என்பதுதான்õ
216 நெவாஸ்கருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். குழந்தைகள் எல்லாரும் இளம் பிராயத்தினர். அவ்வப்பொழுது குடும்பத்தினர் அனைவரும் நெவாஸாவிருந்து சிர்டீக்கு தரிசனம் செய்ய வந்தனர்.
217 நெவாஸ்கரின் இரண்டு மனைவிகளுக்கும் பாபா புடவைகளும் ரவிக்கைத் துணிகளும் வாங்கிக் கொடுத்து அவர்களை ஆசீர்வாதம் செய்வார். இவ்விதமாக வாழ்ந்த பாலாஜீ நெவாஸ்கர் சிறந்த பக்தர்.
218 இந்த ஸத் சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது. இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீõ ஆகவே, ஸாயீயும் அங்கு நிச்சயம் வாசம் செய்கிறார்.
219 அவ்வாறே அங்கும் கோதாவரிக்கரை இருக்கிறது. அருகில் சிர்டீ கிராமமும் இருக்கிறது. அவ்விடத்திலேயே துனீயருகில் ஸாயீ அமர்ந்திருக்கிறார்; அவரை நினைப்பவர்களை சங்கடங்களிருந்து விடுவிக்கும் ஸாயீõ
220 எங்கு ஸாயீ ஸத் சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு ஸாயீ எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பா(ஆஏஅ)வங்களுடனும் அங்கு வாசம் செய்வார்.
221 ஆத்மானந்தத்தில் திளைக்கும் ஸாயீயை மனத்திற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை.
222 அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும்
நிறைவேறும்;--
நிறைவேறும்;--
223 அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்; வாழ்க்கையில் நிறைவு பெறுவர். உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் குஹ்யமாக மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு வெளிப்பாடாகும்.
224 உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்சமஹா பாவங்களையும் அவற்றைச் சார்ந்த கிளைப்பாவங்களையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கிவிடும். உள்ளும் புறமும் தூய்மையடையும்.
225 விபூதி தரிப்பதின் மஹிமை பக்தர்களுக்கு நன்கு தெரிந்ததேõ கதை கேட்பவர்களுடைய மங்களத்திற்காகவே விபூதி வர்ணனை இவ்வளவிற்கு நீண்டது.
226 ஆயினும், நீண்ட வர்ணனை என்று சொல்வதும் பொருத்தமாகாது. எனக்கே அது முழுமையாகத் தெரியாத நிலையிலும், நான் கதை கேட்பவர்களுடைய நன்மை கருதி சுருக்கமாகச் சொல்யிருக்கிறேன்.
227 கதை கேட்பவர்களுக்கு இதுவே என் பிரார்த்தனை. ஸாயீயை வழிபடுங்கள்; உங்களுடைய அனுபவத்தை நீங்களே காணலாம். என்னுடைய பேச்சை ஒருமுறையாவது கேளுங்கள்õ
228 இங்கு காரணவாதமும் தர்க்கமும் செல்லாது; பூஜிக்க வேண்டுமென்ற பா(ஆஏஅ)வமே தேவை. புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது; உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது.
229 சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள். சுத்தமான பா(ஆஏஅ)வம் உடையவரே ஞானம் பெறுவார்.
230 கதையில் ஏதாவது குறைபாடுகள் நுழைந்திருந்தால், அவற்றையும் ஸாயீ எனக்களித்த அருள்வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதி, இந்த ஸத் சரித்திரத்தைப் படிக்கும்போது தெரியும் தோஷங்களை ஒருபொருட்டாகக் கருதாது விட்டுவிடுங்கள்.
231 இந்த ஸத் சரித்திரத்தை ரசித்து வாசிப்பவர்களின் இதயத்தில், எப்பொழுதும் கருணை ததும்பிவழியும் ஸாயீயின் நிஜமான சொரூபம், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் வகையில் ஸ்தாபிதம் ஆகட்டும் (நிலைபெறட்டும்).
232 கோவா எங்கே இருக்கிறது? சிர்டீ எங்கே இருக்கிறது? அங்கு நடந்த திருட்டைப் பற்றிய சுவாரசியமான கதையை ஆதியிருந்து அந்தம்வரை விவரமாக ஸாயீ எடுத்துரைத்தார். அடுத்ததாக அதைச் சொல்கிறேன்.
233 ஆகவே, ஹேமாட் மனப்பூர்வமாக ஸாயீ பாதங்களில் பணிகிறேன். கதை கேட்பவர்களை பயபக்தியுடன் கேட்கும்படி பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்ஃ என்னும் முப்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
=============================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது………………………
=================================================================
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 35
*
*
*
*
*
*
============================================
Insomnia Case
A Kayastha Prabhu gentleman of Bandra suffered from Insomnia for long. As soon as he laid himself down for sleep, his departed father appeared to him in his dream, and abused and scolded him severely. This broke his sleep and made him restless the whole night. Every night this went on and the man did not know what to do. One day he consulted a devotee of Baba in this respect. He recommended the Udi as the only infallible remedy he knew. He gave him some Udi and asked him to apply a little of it to his forehead before going to bed and keep the Udi-packet under the pillow. He tried this remedy and found, to his great surprise and joy, that he got sound sleep and that there was no disturbance of any kind. He continued the remedy and always remembered Sai. Then he got a picture of Sai Baba which he hung on the wall near his pillow and started worshipping it daily and on Thursdays, offering garland, naivedya etc. Then he got on well and forgot altogether his past trouble.
Balaji Patil Newaskar
This man was a great devotee of Baba. He rendered most excellent and disinterested service. Every day he swept and kept clean all the passages and streets in Shirdi through which Baba passed in His daily routine. This work was, after him, equally welldone by another female devotee named Rahda-Krishna-Mai, and after her by Abdoola. When Balaji reaped his corn every year, he brought the whole quantity and presented it to Baba. He returned with what Baba gave him and maintained himself and his family with it. This course was followed by him for many years and after him by his son.
Power and Efficacy of Udi
Once it happened that at Balaji's death anniversary day, a certain number of guests were invited and the dinner was prepared for them. But at the dinner-time it was found that thrice the number of people invited had turned up. Mrs. Newaskar was in a fix. She thought that the food would not suffice for the people assembled and that if it fell short, the honour of the family would be at stake. Her mother-in-law comforted her by saying, "Don't be afraid, it is not ours, but Sai's food; cover every vessel with cloth, putting some Udi in it, and serve from the same without opening it : Sai will save us from ignominy." She did as she was advised and it was found to their surprise and joy that not only did the food suffice for all, but plenty of it remained after serving. "As one feels intently, so he realizes accordingly" was proved in this case.
Sai Appearing as Serpent
Once Raghu Patil of Shirdi went to Balaji Patil at Newase. That evening he found that a serpent entered the cowshed hissing. All the cattle were afraid and began to move. The immates of the house were frightened, but Balaji thought that it was Sai Who appreared in his house as a serpent. Without being afraid in the least he brought a cup of milk and placing it before the serpent said, "Baba, why do you miss and make noise? Do you want to frighten us? Take this cup of milk and drink it with a calm mind". Saying this, he sat close by unperturbed. The other members were frightened and did not know what to do. In a short time the serpent disappeared. Nobody knew where it went. It was not found though a search was made in the cowshed.
Balaji had two wives and some children. They sometimes went to Shirdi from Newase for taking Baba's darshana. Then Baba bought saris and other clothes which were given to them with His blessings.
Bow to Shri Sai -- Peace be to all
===============================================
To be continued............
==============================================================
To be continued............
==============================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.
Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will happen.................
Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.
=============================================================
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
மூலப்பதிவாளர்களுக்கு / சாயி சமஸ்தானத்திற்க்கு என்றென்றும் சாயின் அருள் மழை பொழியட்டும்.
பல கோடி நன்றிகள் ஐயா / அம்மணி.
=========================================================================
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உனை என்றும் மறவாமை வேண்டும்
என்றும் சாயியின் அடிமை.........
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
அன்புடன் சகோதரன் விக்னசாயி.
==================================
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
==================================
No comments:
Post a Comment