If you can do something, do some good unto others.
( Do unto others as you would have them do unto
you)
''யார் உன்னிடம்
வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால்
வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு
இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி (பாபா) ஸந்தோஷமடைவார்.--
''முன்ஜன்ம
சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து
விரட்டி விடாதே.--
''யார் உன்னிடம்
வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால்
வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு
இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீஹரி ஸந்தோஷமடைவார்.--
''யாராவது உன்னிடம்
பைஸா கேட்டால், உனக்குக் கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா.
ஆனால், பைஸா கேட்ட நபர் மீது நாயைப்போலக் குரைக்கவும் வேண்டா.--
''மற்றவர்கள் உன்னை
எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ மனம்
புண்படும்படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் ஸஹித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு
அபாரமான சுகம் கிடைக்கும்.--
''இந்த உலகமே
தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம்
வழிதவறிவிடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக
இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.--
''உனக்கும்
எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம்
செய்வாயாக. அப்பொழுது நமக்குப் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசஸ்தமான
(மங்களமான) பாதை கிடைத்துவிடும்.
''குருவுக்கும்
சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர், 'நீங்கள், நான்ஃ என்னும்
மனோபா(ஆஏஅ)வமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய
முடியாது.--
''அல்லாவே யஜமானர்; அல்லாவே யஜமானர்õ அவரைத் தவிர
ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனைசெய்து
பார்க்கமுடியாதவைõ--
''அவர் நினைப்பதே
நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனத்தின் இனிய
விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.--
''பூர்வஜன்மங்களின்
சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின்
அடித்தளத்தி¬ருந்து பொங்கும் அன்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம்.
ஸுகத்தையும் ஸந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்) அனுபவிப்போம்.--
''யார் இங்கு
சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேறு
பெற்றவன்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண் டிருக்கும்வரை, உயிருள்ளனவாய்
இருக்கின்றன.ஃஃ (திருவாய்மொழி இங்கு முடிகிறது) அருள்மொழியான இவ்வார்த்தைகள் என்
செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் ஸுகமடைந்தது; என் ஜீவனுடைய
தாகம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.
Baba's Advice Regarding our Behaviour
The following words of Baba are general and
invaluable. If they are kept in mind and acted upon, they will always do you
good. "Unless there is some relationship or connection, nobody goes
anywhere. If any men or creatures come to you, do not discourteously drive them
away, but receive them well and treat them, with due respect. Shri Hari (God)
will be certainly pleased, if you give water to the thirsty, bread to the
hungry, clothes to the naked, and your verandah to strangers for sitting and
resting. If anybody wants any money from you, and you are not inclined to give,
do not give, but do not bark at him, like a dog. Let anybody speak hundreds of
things against you, do not resent by giving any bitter reply. If you always
tolerate such things, you will certainly be happy. Let the world go
topsy-turvy, you remain where you are. Standing or staying in your own place,
look on calmly at the show of all things passing
before you. Demolish the wall of difference that separates you from Me; and
then the road for our meeting will be clear and open. The sense of
differentiation, as I and thou, is the barrier that keeps away the disciple from
his Master, and unless that is destroyed the state of union or atonement is not
possible, "Allah Malik" i.e. God is the sole Proprietor, nobody else
is our Protector. His method of work is extra-ordinary, invaluable, and
inscrutable. His will will be done and He will show us the way, and satisfy our
heart's desires. It is on account of Rinaubandh (former relationship) that we
have come together,
let us love and serve each other and be happy. He,
who attain the supreme goal of life, is immortal and happy; all others merely
exist, i.e., live so long as they breathe".
====================
No comments:
Post a Comment