அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும்
அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக..
விளம்பரங்களுக்கு விட்டில் பூச்சியாகாதீர்.. p-p
விட்டில் பூச்சிவிளம்பரம்
தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்ற
நிலையில், தற்போது பலரும்
கண் விழிப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்தான்.
பொழுது போக்குக்காக தொலைக்காட்சி பார்த்த நிலை
மாறி, தற்போது
பொழுதுகளையே வீணாகக் கொல்லும் மெகா சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள், நேரடி ஒளிபரப்பு
நிகழ்ச்சிகள் என பட்டியல் நீண்டு கொண்டே… போகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளை
இலக்காக கொண்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் தான் முதல் இடத்தில் உள்ளன.
பலரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே வீட்டு
வேலைகளை செய்வார்கள். நிகழ்ச்சிகளின் இடையே விளம்பரங்கள் வரும்போது சமயலறைக்குச்
சென்று சமைத்துவிட்டு வரும் பெண்களும் இருந்தார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் கூட பெண்களை தொலைக்காட்சி
முன்பு கட்டிப் போடும் அளவுக்கு தற்போது விளம்பர நிகழ்ச்சிகள் சக்கைபோடு
போடுகின்றன.
முதல் நாள் பார்த்த மெகா சீரியல்களில் வரும்
காட்சிகள் பற்றித்தான் அலுவலகங்களில் கலந்துரையாடிய காலம் போய், புதிய
விளம்பரங்கள் குறித்து விதவிதமாக விவாதங்கள் அரங்கேறுகின்றன. அந்த அளவுக்கு
விளம்பரங்கள் நேர்த்தியாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படுகின்றன.
விளம்பர தயாரிப்பாளர்கள் புதுமையான உத்திகளைக்
கையாள்வது இதற்கு முக்கிய காரணம். வித்தியாசமான கரு, படப்பிடிப்பு, உறவுகளை
மையப்படுத்தி மனதைத் தொடும் விளம்பரங்கள், குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள் என திணுசு… திணுசாய், புதுசு… புதுசாய்
விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன.
இன்றைய முன்னணி கதாநாயகன், நாயகிகளில் பலர்
விளம்பரங்களில் முகம் காட்டிய பின்புதான் திரையுலகில் கொடிநாட்டுகின்றனர்.
அது ஒரு ரகம் என்றால் விளம்பரங்களைப்
பிரபலப்படுத்த பிரபலமான நபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கதாநாயகன், நாயகிகளைத்
தேடிப் பிடித்து நடிக்க வைப்பது இன்னொரு ரகம். இந்தப் பிரபலங்களின் தாக்கத்தால், நிறுவனத்தின்
பொருள்களை நினைவில் வைக்கும் காலம்போய், பிரபலத்தைக் கொண்டு நிறுவனத்தை நினைவு கொள்ளும்
காலம் வந்தாயிற்று என்றுதான் சொல்ல வேண்டும்.
உதாரணமாக, ஈமு கோழிப் பண்ணைகளுக்கு சில பிரபலமான நபர்கள்
விளம்பரம் கொடுத்ததால்தான் ஏராளமான பொதுமக்கள் அதில் முதலீடு செய்து ஏமாந்தார்கள்.
அவர்களையும் வழக்கில் சேர்க்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது
நினைவிருக்கலாம்.
விளம்பரங்கள் மனதை கவரும் வகையில் இருப்பது
வரவேற்கத்தக்கதுதான். ஆனால் வரம்பு மீறுவதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. அதில் சில
விளம்பரங்களில் பெண்கள் மோசமாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.
வாசனைத் திரவியங்கள், ஆண், பெண்களின்
உள்ளாடைகள், கார், பெயின்ட் என
அனைத்து விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறை ஆடைகளில் காண்பிப்பது ஏன்? அதற்கு அவசியம்
என்ன வந்தது? என்பதுதான்
லட்சோப லட்ச மக்களின் கேள்வி.
குறிப்பிட்ட வாசனை திரவியத்தையோ அல்லது
விளம்பரங்களில் காண்பிக்கப்படும் பொருளையோ, ஒரு ஆண் உபயோகிப்பதன் மூலம் அனைத்து இளம்
பெண்களும் அவரது பின்னால் வருவதைப் போன்றும், அல்லது ஒரு ஆண், பெண்களை
மயக்குவதற்காகவே குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருள்களை உபயோகிப்பது போலவும்
காண்பிக்கப்படுகிறது.
ஒரு ஆணை அவர் பயன்படுத்தும் வாசனை
திரவியத்துக்காகவே பெண்கள் அவரை விரும்புவார்களா, அல்லது அவர்
பின்னே செல்வார்களா?
இங்கு பெண்களின் மதிப்பு எந்த அளவுக்கு தரம்
தாழ்த்தப்படுகிறது. மேலும், அந்த விளம்பரங்களைப் பார்க்கும், வளரும்
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை சிறிதும்
யோசித்துப் பார்க்க வேண்டாமா?
விளம்பரங்கள் அனைத்தும் விளம்பர கவுன்சிலின்
சான்றிதழ் பெற்று வந்தாலும், அதில் எந்தவித பயனும் இருப்பதாகத் தெரியவில்லை.
மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதால் பெண்களின் பொன்னான நேரம் வீணாகிறது. ஆனால், அதில்
ஒளிபரப்பாகும் விளம்பரங்களால் பெண்களின் தன்மானமே பாதிக்கப்படுகிறது. சில மோசமான
விளம்பரங்களின் தாக்கத்தால் பெண்கள் தேவையற்ற செலவுகளையும் ஏற்க வேண்டிய நிலை
ஏற்படுகிறது.
மோசமான உணவு பொருட்களை மிகவும் சத்து மிக்க
உணவாக விளம்பரம் செய்வதால், பிள்ளைகளுக்கு அதன் மீது நாட்டம் ஏற்படுகிறது.
இதுபோன்ற விளம்பரங்களால் பிள்ளைகளின் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது-
இதுபோன்ற விளம்பரங்கள் ஆரம்பத்திலேயே
தடுக்கப்பட வேண்டும். விட்டில் பூச்சிகளைப் போல விளம்பரங்களுக்கு இரையாக
வேண்டாம்..
வாணிஸ்ரீ சிவகுமார் -
நன்றி
சகோதரி.
=====================================
No comments:
Post a Comment