''என் சாமா ஒரு
கிறுக்கன் போலும்õ ஆனால், எனக்கு அவன்மேல்
ஆசையும் பாசமும் உண்டு. என்னுடைய இதயத்தில் ஒரு தனியிடம் பிடித்துவிட்டான். அதுவே
என் அன்புதோய்ந்த அனுதாபத்திற்குக் காரணம்.--
''என்னுடைய
கைகளாலேயே இந்த விஷ்ணு ஸஹஸ்ர நாம மாலையை அவன் கழுத்தில் இடுகிறேன். உலகியல்
தொல்லைகளிருந்தும் துயரங்களிருந்தும் இது அவனை விடுவிக்கும். இந்த நாமாவளியைப்
பாராயணம் செய்வதில் அவனுக்கு ஆவலை உண்டுசெய்கிறேன்.--
''நாமம் மலைபோன்ற
பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம்
கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.-- ''நாமம் காலனின்
கழுத்தை நெரிக்கும்; ஜனனமரணச் சுழருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த
விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியின்மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும்
வளர்த்துக்கொள்ள வேண்டும்.-- ''நம்மைப்
பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே
நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீகவாழ்வைச் செழிப்பாக்கும் உரம்.--
''நாமத்தை தியானம்
செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரவிதிகளுக்கும்
உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாமம் என்றும் எப்பொழுதும்
பவித்திரமானது.--
''என்னுடைய நாமத்தை
இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை சேர்ந்து
விடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை
அளிக்கும்.--
''எவர் என்னுடைய
நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப்
பாவங்களிருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச்
சிறந்தவராகின்றார்.ஃஃ
சாயியின்
சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை.
அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க
முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு
சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி
மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும்
எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
''ஆத்மார்த்தமாகவும்
இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே
சந்தோஷமடைவான்.--Baba
Spreading the life and teachings of Shri Shirdi
Saibaba.......
Sometimes Sai removes things from our lives for our
own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean
you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop
believing.
Sai has perfect timing; never early, never late. It
takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
.......... Think positive and positive things will happen.................
வேண்டத் தக்கது
அறிவோய் நீ,
வேண்ட முழுவதும்
தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய்
நீ
வேண்டி என்னைப்
பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது
அருள் செய்தாய்,
யானும் அதுவே
வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு
ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன்
விருப்பு அன்றே!.....
Who so ever puts his feet on SHIRDI soil, his
sufferings would come to an end, the wretched and miserable would rise into
plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.
ஸாயீயை சரணடைந்து
அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம்
செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப்
பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும்
எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்
ஸ்ரீ ஸாயீயின்
பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை
பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது
சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான
ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..
Baba comforted us saying, "Alla Accha Karega
(God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
இனிய சுபகுருதின
வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம்
அத்தியாயம் 27
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================
சிர்டீ இப்பொழுது
ஒரு பவித்திரமான தலமாக ஆகிவிட்டது. பாபாவின் சிஷ்யர்கள் பல தேசங்களிருந்து வந்து
இங்கே திரும்பத் திரும்பக் கூடுவர்; ஆன்மீக
விஷயங்களைப்பற்றிக் கலந்து ஆலோசிப்பர்.
56 அந்தக்
காலத்தில்தான் இப்புத்தகங்கள் உபயோகத்திற்கு வரும். நாம் அப்பொழுது மேலுலகத்தில்
இருப்போம். ஆயினும் சாமா தம்முடைய புத்தக சம்மேளனத்திருந்து (குவிப்பிருந்து)
எடுத்துக் கொடுப்பார். இயற்றிய ஆசிரியர்களின் பிரதிநிதிகளாகப் புத்தகங்கள்
அப்பொழுதும் இயங்கும்õ
57 இந்நூல்கள் பரம
பவித்திரமானவை. சிர்டீயிலோ அல்லது மற்ற இடங்களிலோ பக்தர்கள் இப்
புராணநூல்களை வாசிக்கவேண்டும் என்பதே பாபாவினுடைய விருப்பமாக
இருந்திருக்கவேண்டும். பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னது அதற்காகவே.
58 ராமனுடைய
சரித்திரமான ராமாயணத்தையோ, கிருஷ்ணனுடைய சரித்திரமான பாகவதத்தையோ வாசிக்கிறோம்.
அப்பொழுதும் முன்னும் பின்னும் ஸாயீயே கண்ணுக்குத் தெரிகிறார்.
59 இந்நூல்களின்
கதாநாயகர்கள், வேறு உருவம் ஏற்றுக்கொண்ட ஸாயீயே என்று உணர்ந்தநிலையில், கதையைப் பிரவசனம்
செய்பவரும் காதுகொடுத்துக் கேட்பவர்களும் ஸாயீயின் உருவத்தையே கண்முன் காண்கிறார்கள்.
60 புத்தகங்கள்
குருவுக்கு அர்ப்பணம் செய்யப்படுகின்றன; அல்லது
பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்படுகின்றன. இச் செய்கை, கொடுத்தவர்களுக்கு
மங்களத்தை விளைவிக்கின்றது என்பது சாஸ்திரப் பிரமாணம்.
61 ''இப் புத்தகங்களை
நீ வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய், உன்னுடைய
தொகுப்பில் சேர்த்து சம்ரட்சணம் செய்ஃஃ என்று சாமாவுக்கு பாபா இட்ட
ஆக்கினையின்பின், ஒரு மிகவும் முக்கியமான நோக்கம் இருந்தது.
62 சாமாவின் பக்தி
எவ்வாறு ஒப்பில்லாததோ, அவ்வாறே பாபாவுக்கு சாமாவின்மீது இருந்த பிரேமை கரைகடந்தது.
ஆகவே அவரை ஓர் ஆன்மீக நியமத்துக்கு உட்படுத்தவேண்டுமென்ற விருப்பம் ஸாயீயின்
மனத்தில் எழுந்தது.
63 இதனால் பாபா என்ன
செய்தாரென்று பாருங்கள்õ சாமாவுக்கு இச்சையே இல்லாத போதிலும், அவருக்குச்
சிறந்ததொரு அநுக்கிரஹத்தைச் செய்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையைப்பற்றிக் கேளுங்கள்õ
64 ஒருநாள்
மசூதிக்கு ராமதாசி புவா ஒருவர் வந்துசேர்ந்தார். ராமாயண பாராயணம் செய்வது அவருடைய
நித்திய நியமம் (தினப்படி வழிபாட்டு ஒழுக்கம்).
65 விடியற்காலையில்
எழுந்து காலைக்கடன்களை முடித்தபின் ஸ்நானம் செய்துவிட்டு, விபூதிதாரணம்
செய்துகொண்டு காவியாடை தரித்து அனுஷ்டானத்துக்கு அமர்ந்துவிடுவார்.
66 பரிபூரணமான
சிரத்தையுடன் அத்யாத்ம ராமாயணத்தை நெடுநேரம் வாசித்த பிறகு விஷ்ணு ஸஹஸ்ர
நாமாவளியைப் பாராயணம் செய்வார்.
67 இவ்வாறு
பலநாள்கள் நித்திய அனுஷ்டானம் நடந்துவந்தது. மாதவராவுக்கு நல்லகாலம் பிறந்தது; ஸமர்த்த ஸாயீயின்
மனத்தில் அவருக்கு அருள் செய்யவேண்டுமென்ற எண்ணம் உதித்தது. அதுபற்றிய விவரம்
கேளுங்கள்.
68 மாதவராவின்
சேவைக்குப் பலன் பழுக்கும் நேரம் வந்துவிட்டது. 'மாதவராவ் சமயாசார
(மத ஒழுக்க) நியமம் ஒன்றைக் கடைப்பிடித்து பக்திமார்க்கத்தின்
பிரசாதத்தைப்
பெறவேண்டும். இவ்வழியாக உலகியல் வாழ்வின் தொல்லைகளிருந்து விடுபட்டு, சாந்தியடைய
வேண்டும்.ஃ--
69 பாபாவின்
மனத்தில் எழுந்த எண்ணம் இதுவே. ராமதாசியைத் தம்மிடம் கூப்பிட்டுச் சொன்னார், ''எனக்குத் தாங்க
முடியாத வயிற்றுவ வந்துவிட்டது; குடலே
வெடித்துவிடும்போல் இருக்கிறது.--
70 ''இந்த வயிற்றுவ
நிற்கப்போவதில்லை. போம், சீக்கிரமாகச் சென்று கொஞ்சம் சோனாமுகி சூரணம் (பேதிமருந்து)
வாங்கி வாரும். ஒரு சிட்டிக்கை வாயில் போடாவிட்டால் இந்தப் பிடிவாதமான வயிற்றுவ
போகாது.ஃஃ
71 அப்பாவி ராமதாசி
இதை நம்பிவிட்டார்õ உடனே தாம் படித்துக்கொண் டிருந்த போதியில் பக்க அடையாளம்
வைத்துவிட்டு பாபாவின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து பஜாருக்கு ஓடினார்.
72 ராமதாசி
படியிறங்கியவுடனே பாபா என்ன செய்தாரென்றால், தம்முடைய
இருக்கையிருந்து எழுந்துவந்து பாராயணப் புத்தகக்கட்டுக்கு அருகே சென்றார்.
73 பல புத்தகங்களுக்கிடையில்
விஷ்ணு ஸஹஸ்ர நாம போதி அதில் இருந்தது. அதைக் கையிலெடுத்துக்கொண்டு தம்முடைய
இருக்கைக்குத் திரும்பிவந்தார்.
74 பாபா சொன்னார், ''சாமா, உனக்குத்
தெரியுமா? இந்தப் போதி பரமமங்களத்தை அளிக்கக்கூடியது. ஆகவே நான் இதை
உனக்குத் தருகிறேன். நீ இதை இன்றிருந்து வாசிக்க ஆரம்பி.--
75 ''ஒருசமயம் நான்
பெருந்துன்பத்தால் பீடிக்கப்பட்டேன். அமைதியிழந்து கொதிப்படைந்த நிலையில் இதயம்
படபடவென்று அடித்துக்கொண்டது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையை இழந்தேன்.--
76 ''அந்த நேரத்தில், ஓõ உனக்கெப்படிச்
சொல்லுவேன் சாமாõ இந்தப் போதி மிகவும் உபயோகமாக இருந்தது; இது இல்லாமல்
நான் உயிர்பிழைத்திருக்கமாட்டேன்õ இதுவே
என்னுயிரைக் காத்ததுõ--
77 ''போதியை ஒருகணம்
மார்பின்மேல் வைத்துக்கொண்டேன். ஆஹாõ உடனே என்னுடைய
இதயத்தின் படபடப்பு அடங்கியது. அல்லாவே போதியினுள் இறங்கியிருப்பதுபோல்
உணர்ந்தேன். நான் உயிர்பிழைத்தது போதியினாலேயேõ --
78 ''ஆகவே சாமா, இதை உன்னுடையதாக
எடுத்துக்கொள். மெதுவாகக் கொஞ்சங் கொஞ்சமாக தினமும் வாசிக்க ஆரம்பி. ஒரு நாளைக்கு
ஒரு நாமாவின் மீது மனத்தை ஈடுபடுத்தினாலும் இது உனக்கு மிகுந்த ஆனந்தத்தை
அளிக்கும்.ஃஃ
79 சாமா பதில்
கூறினார், ''பாபா, எனக்கு இந்தப்
போதி வேண்டாõ அந்த ராமதாசி என்மீது கடுங்கோபம் கொள்வார். அவர் இல்லாமருந்த
நேரத்தில் நான்தான் இந்தத் தகாதசெயலைச் செய்துவிட்டதாக நினைப்பார்.--
80 ''அவர் இயற்கையாகவே
துஷ்டர்; முன்கோபி; பிடிவாதக்காரர்ó; சுலபமாகத்
தன்வயமிழக்கக் கூடியவர். அனாவசியமாக ஏன் ஒரு சண்டையைக் கிளப்ப வேண்டும்? வேண்டா, வேண்டா, எனக்கு எந்தச்
சச்சரவும் வேண்டவே
வேண்டாõ--
81 ''மேலும், இந்தப் போதியின்
மொழியோ ஸம்ஸ்கிருதம். என்னுடைய பேச்சும் உச்சரிப்பும் குறைபாடுடையன. பேச்சில்
கிராமவாடை; உச்சரிப்பில் மெருகில்லை. கூட்டெழுத்தை உச்சரிக்கும்போது
நாக்குக் குழறி, பேச்சு தெளிவிழந்துபோகிறது.ஃஃ
82 பாபாவினுடைய
செயல், சண்டை மூட்டிவிடுவதற்காகவே குறிவைக்கப்பட்டது என்று சாமா
நினைத்தார் போலும். அந்தோõ பாபாவுக்குத் தம்மீது இருந்த அன்பையும் அக்கறையையும் அவர்
உணர்ந்தாரில்லை.
83 ''என் சாமா ஒரு
கிறுக்கன் போலும்õ ஆனால், எனக்கு அவன்மேல்
ஆசையும் பாசமும் உண்டு. என்னுடைய இதயத்தில் ஒரு தனியிடம் பிடித்துவிட்டான். அதுவே
என் அன்புதோய்ந்த அனுதாபத்திற்குக் காரணம்.--
84 ''என்னுடைய
கைகளாலேயே இந்த விஷ்ணு ஸஹஸ்ர நாம மாலையை அவன் கழுத்தில் இடுகிறேன். உலகியல்
தொல்லைகளிருந்தும் துயரங்களிருந்தும் இது அவனை விடுவிக்கும். இந்த நாமாவளியைப்
பாராயணம் செய்வதில் அவனுக்கு ஆவலை உண்டுசெய்கிறேன்.--
85 ''நாமம் மலைபோன்ற
பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம்
கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.--
86 ''நாமம் காலனின்
கழுத்தை நெரிக்கும்; ஜனனமரணச் சுழருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த
விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியின்மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும்
வளர்த்துக்கொள்ள வேண்டும்.--
87 ''பிரயத்தனமாக, செய்கிறோம் என்ற
உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும்
நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தோன்றினாலும், நாமம் தன்னுடைய
பிரபாவத்தை வெளிப்படுத்தும்.--
88 ''நம்மைப்
பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே
நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீகவாழ்வைச் செழிப்பாக்கும் உரம்.--
89 ''நாமத்தை தியானம்
செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திரவிதிகளுக்கும்
உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாமம் என்றும் எப்பொழுதும்
பவித்திரமானது.--
90 ''என்னுடைய நாமத்தை
இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கரை சேர்ந்து
விடுவீர்கள்; வேறு உபாஸனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை
அளிக்கும்.--
91 ''எவர் என்னுடைய
நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப்
பாவங்களிருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச்சிறந்த மனிதரைவிடச்
சிறந்தவராகின்றார்.ஃஃ
92 பாபாவின்
இதயத்தில் ஆழமாகப் பதிந்திருந்த எண்ணமும் நோக்கமும் இவையே. அதற்கேற்றவாறே அவர்
செயல் புரிந்தார். வேண்டா, வேண்டா, என்று
சொன்னபோதிலும் சாமாவின் பாக்கெட்டில் போதியைத் திணித்துவிட்டார்õ
93 நம் முன்னோர்கள்
செய்த புண்ணியங்களின் கூட்டுவமையே ஸாயீயின் கிருபை என்னும் பலனை விளைவிக்கிறது.
நம்மைத் தூயவர்களாக்கி இவ்வுலக வாழ்வின் தொந்தரவுகளிருந்தும் துன்பங்களிருந்தும்
மயக்கங்களிருந்தும் விடுவிக்கும் மஹிமை பெற்றது விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளித்
தோத்திரம்.
94 மற்ற மதச்சடங்குகளுக்கு
எத்தனையோ விதிகளை அனுசரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், நாமஜபத்தையோ
எந்நேரமும் இடைவிடாது செய்யலாம். நாமஜபத்திற்குத் தடங்கல் என்பதே கிடையாது. வேதம்
ஓதக்கூடாத நாள்களிலும் நேரங்களிலுங் கூட, நாமஜபம்
செய்யலாம். அதைவிட எளிமையானதும் சுலபமானதுமான வழிபாட்டுமுறை வேறெதுவுமேயில்லை.
95 மராட்டி ஞானி
ஏகநாதருங்கூட இதே ரீதியில் தம் அண்டைவீட்டுக்காரர் ஒருவரின் மீது விஷ்ணு ஸஹஸ்ர
நாமாவளியைத் திணித்து அவருடைய வாழ்க்கையை ஆன்மீகப் பாதைக்குத் திருப்பினார்.
96 ஏகநாதரின்
இல்லத்தில் தினமும் விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளி பாராயணமும் புராணங்கள் வாசிப்பதும்
பஜனையும் நடந்துகொண் டிருந்தன. ஆயினும், பக்கத்து
வீட்டுப் பிராமணர், நீராடுதல் ஸந்தியாவந்தனம் போன்ற நித்திய விதிகளைக் கூடத்
துறந்துவிட்டு மனம் போனபடி துராசாரத்தில் மூழ்கி வாழ்ந்துவந்தார்.
97 புராணப்
பிரவசனத்தை ஒருபோதும் செவிமடுத்தாரில்லை. மேலும் சொல்லப்போனால், அக் கெட்ட மனிதர்
ஏகநாதர் வீட்டினுள் என்றுமே நுழைந்தாரில்லை. ஆயினும் ஏகநாதர் கருணைகூர்ந்து அவரைத்
தம்மிடம் வரவழைத்தார்.
98 உயர்குல
பிராமணராகப் பிறந்திருந்தபோதிலும் அவர் தடம்புரண்டு வாழ்ந்துவந்தார். இவ்வுண்மை
தெரிந்த ஏகநாதர் பரிதாபப்பட்டு, அவரைச்
சீர்திருத்திச் செம்மையாக்குவது எப்படி என்று யோசித்தார்.
99 அவர் 'வேண்டாஃ என்று
சொன்னபோதிலும், தாம் விஷ்ணு ஸஹஸ்ர நாமாவளியை ஒவ்வொரு சுலோகமாக உரக்கச் சொல், அவரைத் திருப்பி
ஒப்பிக்க வைத்தார். ஒவ்வொரு சுலோகமாகப் பாடம் ஏற ஏறப் படிப்படியாக அவர் உத்தாரணம்
(தீங்கிருந்து மீளுதல்) அடைந்தார்.
100 விஷ்ணு ஸஹஸ்ர
நாமாவளியைப் படிப்பதோ பாராயணம் செய்வதோ நம் மனத்தைத் தூய்மை செய்துகொள்வதற்கு
சுலபமான நேர்வழிப் பாதை ஆகும். இவ்வழிபாட்டுமுறை நமக்குப் பரம்பரைச் சொத்தாகக்
கிடைத்திருக்கிறது. பாபா மேற்கொண்ட பெருமுயற்சி இக் காரணம்பற்றியே.
101 இதற்கிடையே
ராமதாசி சோனாமுகி மருந்துடன் விரைவாகத் திரும்பிவந்தார். சண்டை மூட்டிவிடுவதில்
நாரதரைப்போல் மகிழ்ச்சி கண்ட அண்ணா பாபரே தயாராகக் காத்திருந்து, நடந்தது
அனைத்தையும் ராமதாசியிடம் விவரமாகத் தெரிவித்தார்.
102 ஏற்கெனவே ராமதாசி
ஒரு முரட்டுமனிதர். போதாக்குறைக்கு அண்ணா பாபரேவின் நாரதர்வேலையும்
சேர்ந்துகொண்டதுõ இந்த அபூர்வமான சூழ்நிலையின் உண்மை நிலையை எவரால் விவரிக்க
முடியும்?
103 இயல்பாக அந்த
ராமதாசி குதர்க்கமே உருவானவர். ஒருநொடியில் அவருக்கு மாதவராவின்மேல் சந்தேகம்
வந்துவிட்டது. ராமதாசி சொன்னார், ''என்னுடைய
போதியைப் பிடுங்கிக்கொள்வதற்காகவே பாபாவை மத்தியஸ்தத்திற்கு (நடுநிலையாளராக)
இழுத்தாய்.ஃஃ
104 வாங்கிக்கொண்டுவந்த
சோனாமுகி மருந்தை மறந்துவிட்டு மாதவராவின்மேல் வசைமாரியை ஆரம்பித்தார். பொங்கிவந்த
கோபத்தால் பெருஞ்சத்தம் போட்டு, அர்த்தமற்ற
வார்த்தைகளை சரமாரியாகப் பொழிந்தார்.
105 ''வயிற்றுவ ஒரு
பாசாங்கு என்று எனக்கு நன்கு தெரியும். என்னுடைய போதியின்மீது நீ
கண்வைத்துவிட்டதால், நீதான் பாபாவை இவ்வாறு பாசாங்கு செய்யத்
தூண்டியிருக்கிறாய். நான் இதைப் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை.--
106 ''நான்
ராமதாசியென்று பெயர் பெற்றவன்; தைரியசா; பயமேயில்லாதவன்.
என்னுடைய போதியை மரியாதையாகத் திருப்பிக்கொடுத்துவிடு. இல்லையேல், நான்
உன்னெதிரிலேயே மண்டையை உடைத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில்
மிதப்பேன்.--
107 ''என்னுடைய
போதியின்மீது நீ குறிவைத்துவிட்டாய். ஆகவே, நீதான் இந்தக்
கபட நாடகத்தை ஜோடித்து பாபாவின்மேல் பழி வருமாறு செய்து நல்ல பிள்ளைபோல்
ஒதுங்கிவிட்டாய்.ஃஃ
108 மாதவராவ் அவரைப்
பலவிதமாக சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், ராமதாசியோ
விடுவாரில்லை. பிறகு, மாதவராவ் மென்மையாக என்ன சொன்னார் என்று கேளுங்கள்.
109 ''நான் ஏமாற்றுவேலை
செய்தேன் என்று அனாவசியமாகப் பழி சுமத்தவேண்டா. என்ன உம்முடைய போதியின் கதை? சுலபமாகக்
கிடைக்கக்கூடிய புத்தகந்தானேõ--
110 ''பாபாவையே
சந்தேகப்படும் அளவிற்கு உம்முடைய போதியென்ன தங்கமா, வைரமா, வைடூரியமா? வெட்கம், வெட்கம்õஃஃ
111 ராமதாசியின்
அட்டகாசத்தைப் பார்த்த பாபா இனிமையாகக் கேட்டார், ''ஓய், ராமதாசிõ இப்பொழுது என்ன
தவறு நடந்துவிட்டது? ஏன் காரணமேதுமின்றி உம்மையே நீர் வருத்திக்கொள்கிறீர்?--
112 ''சாமாவும் நம்
பையன் அல்லனோõ ஏன் இவ்வளவு சிரமப்பட்டு அவனைத் திட்டுகிறீர்? அர்த்தமில்லாமல்
ஏன் சோகப்படுகிறீர்? உம்முடைய கோபத்தைக் காட்டி எல்லாரையும் வேடிக்கை
பார்க்கவைக்கிறீர்õ--
113 ''ஓ, நீர் எப்படி இவ்வளவு
சண்டைவிரும்பியாக இருக்கமுடியும்? நீர் ஏன்
மென்மையாகவும் இனிமையாகவும் பேசக்கூடாது? எந்நேரமும் போதி
படித்தும் உம்முடைய இதயம் அசுத்தமாக இருக்கிறதேõ--
114 ''தினமும் நீர்
அத்யாத்ம ராமாயணம் வாசிக்கிறீர்; ஸஹஸ்ர நாமாவளி
பாராயணம் செய்கிறீர். ஆயினும் உமது முரட்டு சுபாவத்தை விடமாட்டேனென்கிறீரே. இந்த
லட்சணத்திற்கு உம்மை நீர் ராமதாசி என்றுவேறு சொல்க்கொள்கிறீர்õ
115 ''நீர் என்னவிதமான
ராமதாசி? நீர் உலகியல் பொருள்களை உதாசீனம் செய்பவராக அல்லீரோ
இருக்கவேண்டும்? மாறாக, ஒரு புத்தகத்தை
கெட்டியாகப்
பிடித்துக்கொண்டு
விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறீரேõ உம்முடைய
நடத்தையைப்பற்றி யார் என்ன சொல்லமுடியும்?--
116 ''ஒரு ராமதாசிக்கு 'என்னுடையதுஃ என்ற
எண்ணமே உதவாது. எதையும் எல்லாரையும் சமபாவனையாகப் பார்க்கவேண்டும். நீரோ இந்தப்
பையனின்மேல் அபரிமிதமான விஷத்தைக் கொட்டிவிட்டீர். போதியைப் பிடுங்குவதற்கு
அவனுடைய கையை விடாமல் பிடித்துக்கொண் டிருக்கிறீர்õ--
117 ''போய், உம்முடைய
இடத்தில் அமர்ந்துகொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் மவாகவே வாங்கலாம். ஆனால், உலகமெங்கும்
தேடினாலும் ஆத்மவிசாரம் செய்யும் ஒரு நல்லமனிதன் கிடைப்பது கடினம்.--
118 ''உம்முடைய போதி
எவ்வளவோ மஹத்தானதாக இருக்கலாம்; ஆனால், சாமா எதையும்
அறிந்தானில்லை. மேலும், நான்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்; நான்தான் அதை
அவனுக்குக் கொடுத்தேன்.--
119 ''தவிர, உமக்கு அது
மனப்பாடமாகத் தெரியும். ஆகவே நான் அதை சாமாவுக்குக் கொடுக்கவேண்டுமென்று
நினைத்தேன். அவன் அதைத் திரும்பத் திரும்ப வாசித்து சகல மங்களங்களையும்
அடையவேண்டும் என்பதே என் நோக்கம்.ஃஃ
120 ஆஹாõ என்ன ரஸமான
பேச்சுõ இனிமையானதும் புத்துணர்ச்சியை ஊட்டக் கூடியதுமான
வார்த்தைகள். ஆத்மானந்தத்திற்கு நிகராகக் குளிர்ச்சியளிக்கும் மிக அபூர்வமான
வார்த்தைகள்õ
121 ராமதாசி
மனத்தளவில் தம்முடைய குற்றத்தை உணர்ந்துவிட்டார். மாதவராவிடம் கடுகடுவென்று
சொன்னார், ''இதோ பார், நான் உனக்குச்
சொல்கிறேன்; உன்னிடமிருந்து போதிக்குப் பதிலாகப் 'பஞ்சரத்னி
கீதையைஃ எடுத்துக் கொள்ளப் போகிறேன்õஃஃ
122 ராமதாசி
இம்மட்டிற்கு சாந்தமடைந்ததைக் கண்ட மாதவராவ் மகிழ்ச்சியடைந்தார். அவர் சொன்னார், ''ஒன்றென்ன, பத்து கீதைப்
பிரதிகளை போதிக்குப் பதிலாக அளிக்கிறேன்õஃஃ
123 பின்னர், பஞ்சரத்னி கீதை
ஜாமீனாக விளங்க, இச்சண்டை மெதுவாக ஓய்ந்தது. கீதையினுள் இருக்கும் இறைவனை
அடையாளம் காணமுடியாதவருக்கு அந்த நூல் எதற்கு?
124 பாபாவின் அருகில்
அமர்ந்துகொண்டு அத்யாத்ம ராமாயணத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யும்
ராமதாசி, பாபாவிடமேவா இவ்வாறு சண்டைக்குப் போகவேண்டும்?
125 ஆயினும், நான் எப்படி
இதைக்கூடச் சொல்லலாம்? நான் எப்படி யார்மீதும் பழி சொல்லமுடியும்? ஏனெனில், இந்நிகழ்ச்சிகள்
நடந்திராவிட்டால் மற்றவர்களுக்கு விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் மஹத்துவம் எவ்வாறு
சென்றடையும்?
126 பாபாவின்
இன்னலைக் களைந்ததும் (இதயப் படபடப்பு), எனக்கு அநேக
நற்பயன்களை அளிப்பதும், இந்தச் சண்டையைக் கிளப்பிவிட்டதுமான விஷ்ணு ஸஹஸ்ர நாமம்
உண்மையிலேயே இவ்வுலகத்தியது அன்று; ஸாயீயால்
அளிக்கப்பட்ட பரிசே.
127 இவ்வளவு முயற்சி
எடுக்கவில்லையென்றால் மாதவராவுக்குப் போதியின்பால் விசுவாசம் ஏற்பட்டிருக்காது; அதைக் கையால்
தொட்டிருக்கமாட்டார்; வாயால் சொல்யு மிருக்கமாட்டார்; மனப்பாடமும்
ஆகியிருக்காது.
128 அன்பொழுகும்
ஸாயீதான்; ஆனால், அவரை அடைவது
கடினம். லீலை புரிவதையே தொழிலாகக் கொண்ட அவர், எப்பொழுது
எவ்விதமாக சூத்திரங்களை (பொம்மலாட்ட நூல்களை) இழுப்பார் என்பதை அறிந்துகொள்வது
கடினம்.
129 காலப்போக்கில்
சாமாவுக்குப் போதியின்மீது நிஷ்டை ஏற்பட்டது. ஹரி ஸீதாராம தீக்ஷிதரும் பேராசிரியர்
கணேச கோவிந்த நரகேவும் அவருக்குச் சரியான உச்சரிப்புடன் சுலோகங்களைப் படிக்கக்
கற்றுக்கொடுத்தனர். சாமா நன்கு கற்றுக்கொண்டார். காலக்கிரமத்தில் அவருக்கு விஷ்ணு
ஸஹஸ்ர நாமம் மனப்பாடம் ஆகிவிட்டது.
========================================================
=================
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ
ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 27
*
*
*
============================================
Shama and Vishnu-Sahasra-Nam
Shama was a very intimate devotee of Baba and Baba
wanted to favour him in a particular way by giving him a copy of
Vishnu-Sahasra-Nam as Prasad. This was done in the following way. Once a
Ramadasi (follower of Saint Ramadas) came to Shirdi and stayed for some time.
The routine he followed daily was as follows : He got up early in the morning,
washed his face, bathed and then after wearing saffron-coloured clothes and
besmearing himself with sacred ashes, read Vishnu-Sahasra-Nam (a book giving a thousand
names in praise of Vishnu, and held second in importance to Bhagwad Geeta) and
Adhyatma-Ramayana (Esoteric version of Rama's story) with faith. He read these
books often and often and then after some days Baba thought of favouring and
initiating Shama with Vishnu-Sahasra-Nam. He, therefore, called the Ramadasi to
Him and said to him that,
He was suffering from intense stomach-pain, and
unless He took Sennapods (Sona-mukhi, a mild purgative drug) the pain would not
stop; so he should please go to the bazar and bring the drug. The Ramadasi
closed his reading and went to the bazar. Then Baba descended from His seat,
came to the Ramadasi's place of reading, took out the copy of
Vishnu-Sahasra-Nam, and coming to His seat said to Shama- "Oh Shama, this
book is very valuable and efficacious, so I present it to you, you read it.
Once I suffered intensely and My heart began to palpitate and My life was in
danger. At that critical time, I hugged this book to My heart and then, Shama,
what a relief it gave me! I thought that Allah Himself came down and saved Me.
So I give this to you, read it slowly, little by little, read daily one name at
least and it will do you good." Shama replied that he did not want it, and
that the owner of it, the Ramadasi who was a mad, obstinate and irritable
fellow would certainly pick up a quarrel with him, besides, being a rustic
himself, he could not read distinctly the Sanskrit (Devanagari) letters of the
book.
Shama thought that Baba wanted to set him up
against the Ramadasi by this act of His, but he had no idea of what Baba felt
for him. Baba must have thought to tie this necklace of Vishu-Sahasra-Nam round
the neck of Shama, as he was an intimate devotee, though a rustic, and thus
save him from the miseries of the worldly existence. The efficacy of God's Name
is well-known. It saves us from all sins and bad tendencies, frees us from the
cycle of births and deaths. There is no easier sadhana than this. It is the
best purifier of our mind. It requires no paraphernalia and no restrictions. It
is so easy and so effective. This sadhana, Baba wanted Shama to practise,
though he did not crave for it. So Baba forced this on him. It is also reported
that long ago, Eknath Maharaj, similarly, forced this Vishnu-Sahasra-Nam on a
poor Brahmin neighbour, and thus saved him. The reading and study of this
Vishnu-Sahasra-Nam is a broad open way of purifying the mind, and hence Baba
thrust this on His Shama.
The Ramadasi returned soon with the Seena-pods.
Anna Chinchanikar, who was then present and who wanted to play the part of
Narada (the Celestial Rishi who was wellknown for setting up quarrels between
Gods and demons and vice versa), informed him of what had happened. The Ramadasi
at once flared up. He came down at once on Shama with all fury. He said that it
was Shama who set Baba to send him away under the pretext of stomach-ache for
bringing the medicine and thus got the book. He began to scold and abuse Shama
and remarked that if the book be not returned, he would dash his head before
him. Shama calmly remonstrated with him, but in vain. Then Baba spoke kindly to
him as follows -
"Oh Ramadasi, what is the matter with you? Why
are you so turbulent? Is not Shama our boy? Why do you scold him unnecessarily.
How is it that you are so quarrelsome? Can you not speak soft and sweet words?
You read daily these sacred books and still your mind is impure and your
passions uncontrolled. What sort of a Ramadasi you are! You ought to be
indifferent to all things. Is it not strange that you should covet this book so
strongly? A true Ramadasi should have no 'mamata' (attachment) but have
'samata' (equality) towards all. You are now quarrelling with the boy Shama for
a mere book. Go, take your seat, books can be had in plenty for money, but not
men; think well and be considerate. What worth is your book? Shama had no
concern with it. I took it up Myself and gave it to him. You know it by heart.
I thought Shama might read it and profit thereby, and so I gave to it
him."
How sweet were these words of Baba, soft, tender
and nectar-like! Their effect was wonderful. The Ramadasi calmed down and said
to Shama that he would take 'Panchratni' Geeta in return. Shama was much
pleased and said - "Why one, I shall give ten copies in return".
So the matter was ultimately compromised. The
question for consideration is "Why should the Ramadasi press for
Pancha-ratni Geeta, the God in which he never cared to know, and why should he,
who daily read religious books in the Masjid in front of Baba, quarrel with
Shama before Him?" We do not know how to apportion the blame and whom to
blame. We only say that, had this procedure been not gone through, the
importance of the subject, the efficacy of God's name and the study of
Vishnu-Sahasra- Nam would not have been brought home to Shama. So we see that
Baba's method, of teaching and initiating was unique. In this cases Shama did
gradually study the book and mastered its contents to such an extent, that he
was able to explain it to Professor G.G. Narke, M.A. of the College of
Engineering, Poona, the son-in-law of Shriman Booty and a devotee of Baba.
Vitthal-Vision
================================================
===============================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
எல்லாருக்கும்
க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த
ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ
நமோ
ஜெய ஜெய சாயி நமோ
நமோ
சற்குரு சாயி நமோ
நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்
தெளிவு குருவின்
திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு
சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே
சாயிநாதாய
அமிர்த வாக்ய
வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ
நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா
சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா
சரணம்! சரணம்!
அற்புத ஒளியே
சரணம்! சரணம்!
அன்பே அருளே
சரணம்! சரணம்!
நித்திய சாயி
சரணம்! சரணம்!
நிர்மல வடிவே
சரணம்! சரணம்!
பொற்பதம்
பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா
சரணம்! சரணம்!
Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....
You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.
Sometimes Sai removes things from our lives for our
own protection. Trust in Him.
Just because you can't see the air, doesn't mean
you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop
believing.
Sai has perfect timing; never early, never late. It
takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.
Think positive and positive things will
happen.................
Saying sorry doesn't solve the problem. It's what
you do after that truly counts.
======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.
No comments:
Post a Comment