Goodmorning dear friends. Have a nice weekend!!!
சிரிங்க சிரிங்க
1 “தமிழ்
மொழியை விட அழகான
மொழி எது?”
“உங்க
பொண்ணு தேன் மொழி
சார்!”
2. “உங்க
தோட்டத்து காய்கறிகளுக்கு மட்டும்
டபுள்ரேட் சொல்றீக்களே, ஏன்?”
“தண்ணி
பாய்ச்சறது கூட வயலுக்கு
மினரல் வாட்டர்தான்...!”
3. “அமைச்சரே! நமது நாட்டின்
‘குடிமக்கள்’ எப்படி இருக்கிறார்கள்?”
“போதையில்தான்
மன்னா!”
4. “உன் கடைசி ஆசை
என்ன?”
“இந்த
வழக்குல உண்மைக் குற்றவாளியை
எப்படியாவது கண்டுபிடிச்சு எனக்குக்
காண்பிங்க எசமான்!”
5. “என்னது, மன்னருக்கு மாரடைப்பா? எதனால்...?”
“சுயம்வரத்துக்குப் போனவரை
அந்நாட்டு இளவரசி ‘மன்னா’
என்று அழைக்காமல்
‘அண்ணா’ என்று அழைத்துவிட்டாளாம்...!”
6. “மன்னா, ஆபத்து...
ஆபத்து வந்துவிட்டது...!”
“என்ன
ஆனது, மாறவர்மன்
நம் மீது படையெடுத்து
வருகிறானா?”
“இல்லை
மன்னா, தாய்
வீட்டுக்கு போன மகாராணி
அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்...!”
7. “என்ன, மகாராணிக்கு
திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்...?”
“மன்னா, ‘பட்டத்து
யானையை அலங்கரியுங்கள்’ என்று நீங்கள்
தானே ஆணையிட்டீர்கள்...!”
8. “தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி
நாட்டு மன்னன் ஓலை
அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்...”
“இப்போது
என்ன செய்யப் போகிறீர்
மன்னா?”
“சாப்பிட்டுவிட்டு மறுபடியும்
தூங்க வேண்டியதுதான்!”
9. “மன்னா! அரசாங்க ரகசியத்தை
இந்த ஒற்றன் அறிந்து
கொண்டான்...”
“நான்
சமையலறையில் மகாராணிக்கு உதவியாக
காய்கறி அரிந்துகொண்டிருந்ததை இவன்
பார்த்துவிட்டானா...?”
==================================================
கணபதிக்கும்
ஒண்ணு…கந்தனுக்கும்
ஒண்ணு
தேவலோகத்தில்
பார்வதியும் பரமசிவனும் பேசிக் கொண்டிருந்தனர்.
தங்கள்
பிள்ளைகளில் யார் புத்தி சாலி என்பதை ஒரு சோதனை வைத்துக் கண்டு பிடிப்போம் என்று.
அதன்படி சிவன்
தன் பிள்ளைகளான கணபதி,கந்தன்
இருவரையும் கூப்பிட்டார்.
‘பிள்ளைகளே
உங்களில் யார் சூழ்நிலைக்குத் தக்கபடி புத்திசாலித் தனமாக செயல்படுகிறீர்களோ
அவருக்கு பரிசாக மாம்பழம் தருவேன்.
போட்டி இதுதான்
உங்களில் யார் முதலில் உலகத்தைச் சுற்றி வருகிறீர்களோ அவருக்கே பரிசு’என்றார்.
கணபதியும் ,கந்தனும் அப்படியே செய்கிறோம் தந்தையே என்று
சொல்லிவிட்டுச் சென்றனர்.
சிறிது நேரம்
கழித்து கணபதி வர,அதற்குப் பிறகு
கந்தன் வந்தார்.
‘என்ன உங்களில்
யார் முதலில் உலகைச் சுற்றி வந்தவர்’ சிவன் கேட்க
‘நான் தான்
தந்தையே என்னுடைய மயில் மீது ஏறி முதலில் வலம் வந்தேன்.ஆனால் அண்ணன் எப்படி எனக்கு
முன்னால் இங்கு?’என கந்தன் கேட்க
கணபதி சிரித்தபடி,’நான் தான் முதலில் சுற்றி வந்தவன்.ஒருவருக்கு
பெற்றெடுத்த தாய்,தந்தையர்தானே
உலகம்.அதனால் நான் அம்மையப்பனைச் சுற்றி வந்தேன்.இது உலகத்தையே சுற்றீ வந்த
மாதிரி.எனவே எனக்குத்தான் பழம்’ என்றார்.
‘இல்லை இதை நான்
ஏற்க மாட்டேன் .தந்தை சொன்னது அகில உலகத்தையும் சுற்றி வர வேண்டும் என்று. நீ
செய்ததை நான் ஒப்புக் கொள்ள முடியாது என கந்தன் வாதிட,
பார்வதி தேவி
இதென்ன சோதனையெனக் கலங்க,சிவன் மட்டும்
புன்முறுவலுடன்
கணபதிக்கு ஒன்று,கந்தனுக்கு ஒன்று என் இரண்டு மாம்பழங்களை
ஆளுக்கு ஒன்றாகத் தந்தார்.
‘தந்தையே
அண்ணனுக்கு பழம் தந்தது எனக்கு வருத்தமில்லை.ஆனாலும் ஜெயித்தவன் நான் தானே
சொல்லுங்கள்’ என கந்தன் கேட்க
சிவன்,’குழந்தைகளே ஜெயித்தது நீங்கள் இருவருமேதான்’என்றதும் பிள்ளைகளோடு பார்வதியும் சேர்ந்து
குழம்ப,
‘ஒருவனுக்கு உயிர்
கொடுத்து அவனை உருவாக்கி,கல்வி
கேள்விகளில் சிறக்கச் செய்வது அவன் தாய்தந்தையர்.அவனுக்கான உலகத்தை வடிவமைத்துக்
கொடுப்பது அவர்கள்தான்.அதனால் பெற்ற்வர்களைத் தன் உலகமாக நினைப்பது சரியே.இது
உணர்வுபூர்வமானது.தியரிடிகல் லாஜிக்.இதைத்தான் கணபதி செய்தான்.
அதே நேரம் உலகம்
என்றதும் அண்டசராசரங்களையும் ,கோள்களையும் அடக்கியதுதான் உலகம் என்பது கந்தனின் வாதம்.இதுவும் சரியே.இது
பிராக்டிக்கல் லாஜிக்.
இருவரும் அவரவர்
கோணத்தில் சிந்தித்து செயல்பட்டீர்கள்.ஓரே மாதிரி சிந்தித்து முன்னும் பின்னுமாக
வந்திருந்தால் ஒருவர் மட்டுமே வென்றதாகக் கூறியிருப்பேன்.வெவ்வேறு கோணத்தில்
சுயமாக சிந்தித்து செயல்பட்டதால் என்னைப் பொறுத்தவரை இருவருமே வெற்றி
பெற்றவர்கள்தான்.
என்ன தேவி என்
வாதம் சரியா ‘என
எப்படியோ இரண்டு
பேருக்கும் சண்டை வராமல் பழம் கிடைத்ததே என்று அந்தத் தாயுள்ளம் ஆமோதித்தது.
பொறுமையே மிகவும்
சிறந்தது.
* இறைவன் ஒருவனே
என்றாலும், எண்ணற்ற
தோற்றங்களில் அவன் காட்சி தருகிறான். அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருள்புரிபவன்
அவனே.
* ஒவ்வொருவரும்
இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். ஆனால், உள்ளத்தில் அன்பு இல்லாமல் வெறும் உச்சரிப்பால்
மட்டுமே அவனை அடைய முடியாது.
* செல்வச்சீமான்
என்றாலும், நாடாளும் மன்னன்
ஆனாலும் எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே. சிறு எறும்பும் இறைவனின்
அன்புப்படைப்பே.
* சகதி நிறைந்த
சேற்றில் பிறக்கும் தாமரை, அதிலிருந்து
எப்படி விலகி இருக்கிறதோ, அதுபோல வாழ்வில்
பட்டும் படாமலும் இருக்கப் பழகுங்கள்.
* நன்மை
செய்தவர்க்குத் திருப்பி நன்மை செய்வது உலக இயல்பு. ஆனால், தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வது உத்தமருக்குரிய
உயர்ந்த குணம்.
* பொறுமையை விடச்
சிறந்த தவம் வேறொன்றும் உலகில் இல்லை. திருப்தியை விடச் சிறந்த இன்பம் இல்லை.
மன்னிப்பதை விட மகத்தான ஆயுதம் வேறில்லை. இவற்றை வாழ்வில் கடைபிடியுங்கள்.
- குருநானக்
My dearest friend, friends
Have a wonderful night!!!
அன்பின்
உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய வணக்கம்.!!!=============
அன்புடன் vicknasai.
==============================
No comments:
Post a Comment