Followers

Tuesday, March 17, 2020

Foes and friends, kings and paupers are the same to Me.
எனக்கு அரசனும்,ஆண்டியும்,எதிரியும்,நண்பனும் ஒன்றே, சகல உயிரும் ஒன்றே, எல்லோரும் எல்லாம் என் குழந்தைகளே அறிவாய் மனிதா,
''சில சமயம் நான் ஒரு நாய்; சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை; சில சமயம் ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர்வாழ் பிராணி -- பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.—இவைகளுக்கு உணவு கொடுப்பது எனக்கு தருவதாகும்.” ஈயாயினும் எறும்பாயினும் சரி, ஆண்டியாயினும் அரசனாயினும் சரி, கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகமனைத்தும் என்னுடைய வெளிப்பாடே.
நகரும் நகராப் பொருள்கள் நிறைந்த இந்த அளவிடமுடியாத சிருஷ்டி, என்னுடைய நிஜரூபமே ஈதனைத்தும் தெய்வீகப் பொம்மலாட்டம்; சூத்ரதாரி நானே.” ''உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேதபுத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்..”
தேஹாபிமானம் இல்லாத சித்தருக்கு ஹிந்துவோ, முஸ்லீமோ, கீழ்ஜாதியோ, மேல்ஜாதியோ, எந்த வித்தியாசமும் இல்லை. ஜாதிப்பாகுபாடு என்னும் எண்ணமே அவருக்கு இல்லை. பக்கீர்களுடன் அமர்ந்து உணவுண்ணும்போது அவர் மாமிசம் சாப்பிடுவார்; சமயம் நேர்ந்தபோது மீனும் சாப்பிடுவார். சோற்றை நாய் தீண்ட நேர்ந்துவிட்டாலும் சரி, வெறுப்படைந்து முகம் கோணமாட்டார்.
"Fakiri is the real Badshahi (Lordship) as it is everlasting."
எழிமையான ஏழ்மை பக்கீர் வாழ்வே என்றும் நிரந்தர நித்திய சத்திய எஜமானியம்; நூறு இடங்களில் தையல்போட்ட கப்னியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துக் கொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு? அவர் என்றும் பரமானந்ததில் திளைத்திருந்தார்
பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஸாயீ மஹராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shraddha Saburi
Know that I like only those who see Me in all the living beings.
''உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேதபுத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்..”
====================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...