Followers

Saturday, March 14, 2020

Even Parameshwar, the Great God who has created the world, cannot alter birth or death.
இவ் உலகைப் படைத்த முழுமுதல் கடவுள் சர்வேஸ்வரனாலும் கூட பிறப்பு,இறப்பு என்னும் விதியை மாற்ற இயலாது, எல்லா உயிரும் அவர் அவர் முந்தய பிறவி வினைகளுக்கேற்ப பிறப்பெடுக்கின்றன..பிறப்பும் இறப்பும் இறைவன் திருவிளையாடல் இதைப் பிரிக்க முடியாது. எம் மேனி மட்டும் அழிந்து இன்னோர் உடல் எடுக்கும் மானிட ஆன்மா மரணமெய்தாது. அடுத்தவரை புண்படுத்தின் அடுத்த பிறவி நிச்சயம்....
அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக. மனைவி, மக்கள், மாமன், மருமகன் -- இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகி¬ருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
இதை உணர்வாய், கவலையை விடு,எப்போதும் ஆனந்தமாய் இரு, என்னை சரணடைந்தவனை ஆனந்த விடுதலை கிடைக்கும் என்பது திண்ணம்.
எல்லா உயிரும் அவர் அவர் முந்தய பிறவி வினைகளுக்கேற்ப பிறப்பெடுக்கின்றன..பிறப்பும் இறப்பும் இறைவன் திருவிளையாடல் இதைப் பிரிக்க முடியாது. எம் மேனி மட்டும் அழிந்து இன்னோர் உடல் எடுக்கும் மானிட ஆன்மா மரணமெய்தாது. அடுத்தவரை புண்படுத்தின் அடுத்த பிறவி நிச்சயம்....
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
''எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீரவேண்டும்.--நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வலியாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?--” ''மேலும், துன்பத்தையும் வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும். ஆகவே இந்தத் துன்பத்தை இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே.”
If you cannot endure abuse from another, just say a simple word or two, ... but it is only after performing many meritorious acts that one gets a human birth. ... Death and life are the manifestations of God's activity. You cannot separate the two. ...
ஸாயீயின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. 'அதுவே நான்ஃ என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாமல் ஆனந்தம் நிரம்பி வழிகிறது. எவர் ஓங்கார பிரம்மத்தை தியானம் செய்தவாறு இறைவனை நினைத்துக்கொண்டே தேகத்தை உதறுகிறாரோ, அவர் பிறவி எடுத்ததன் பயனை அடைகிறார். இவ்வுலகம் மாயையின் சந்தை. அசலும் போலியுமான பொருள்கள் அபாரம். போலியை அசல் என்று நம்பிப் பொருள்களை வாங்கும் மனிதர்களும் அநேகம்.
அசலையும் போலியையும் அடையாளம் கண்டுகொள்வதில், திறமைமிக்கவர்களும் தடுமாறுகின்றனர். ஆகவே, வஞ்சத்தின் லட்சணங்களைப் (அடையாளங்களைப்) புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்கென்றே ஒரு நிபுணரைத் துணையாகக் கொள்ளவேண்டும். அவர் (ஸத் குரு), போலி எவ்வாறு அசல்போலத் தோற்றமளிக்கிறது என்பதை, பார்த்தவுடனே காட்டிக்கொடுப்பார். அஞ்ஞானம் இவ்வாறாக அழியும்.ஆகவே அகம்பாவம்,தற்பெருமையற்று வாழ்ந்தால் விரைவாக சற்குருவின் கிருபையால் ஆன்மீக ஞானம் கைகூடும்.
இக் காவியத்தைச் சிலர் தூஷணம் (நிந்தை) செய்யலாம். சிலர் இதை எனக்குப் பெருமை சேர்க்கும் பூஷணமாகக் (அணிகலனாகக்) கருதலாம். எது எப்படியிருப்பினும், இருசாராருமே என்னுடைய வந்தனத்திற்கு உரியவர்கள்; அவர்கள் அனைவரும் நாராயணரின் வடிவங்கள்.
==========================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...