Followers

Thursday, March 12, 2020

ஹாரி - மேகன் பங்கேற்ற 

கடைசி அரசு நிகழ்ச்சி......


லண்டன் : பிரிட்டனில் நடந்த காமன்வெல்த் தின விழாவில் அரச குடும்ப உறுப்பினர்களாக கடைசி முறையாக இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி கலந்துகொண்டனர்.


பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன் சார்லஸ் மறைந்த- டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி அமெரிக்க முன்னாள் நடிகை மேகன் மார்க்கலை 2018ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆர்ச்சி என்ற குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தனர்.




இதையடுத்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் அனுமதியுடன் வட அமெரிக்காவின் கனடாவில் தங்கள் புதிய வாழ்க்கையை அவர்கள் துவங்கினர். இம்மாத இறுதியில் அந்த தம்பதி அரச பொறுப்புகளையும் பட்டங்களையும் துறக்க இருக்கின்றனர். இந்நிலையில் பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் காமன்வெல்த் தின விழா நேற்று நடைபெற்றது. ராணி இரண்டாம் எலிசபெத் இளவரசர் சார்லஸ் - கமிலா இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன்ஆகியோர் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் இளவரசர் ஹாரியும் மேகன் மார்க்கலும் கலந்துகொண்டனர்.




நீல நிற 'கோட் சூட்டில்' வந்த ஹாரியையும் பச்சை நிற உடையில் வந்த மேகனையும் கண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். அரச குடும்ப உறுப்பினர்களாக ஹாரி - மேகன் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் வெளியுறவுத்துறை செயலர் டாமினிக் ராப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...