Followers

Tuesday, March 24, 2020


மகப்பேறின்மையால் மனவேதனையா? -வி. விஜயராகவன்....................

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியான, நன்மையான விஷயங்களை பாக்கியம் என்று குறிப்பிட்டார்கள் முன்னோர்கள்.

திருமண பாக்கியம், மாங்கல்ய பாக்கியம் என்பதுபோல, குழந்தை பெறும் யோகத்தையும் "குழந்தை பாக்கியம்' என்று கூறி னார்கள். திருமணம் முடிந்தவுடன் வீட்டுப் பெரியவர்களும் சரி; நண்பர்களும் சரி; உறவினர்களானாலும் சரி- மணமக்களை வாழ்த்தும்போது, "காலாகாலத்தில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று ஆசிர்வசிப்பதைப் பார்க்கலாம்.

எதுவுமே உரிய பருவத்தில்- உரிய காலத்தில் நடைபெறுவதுதான் மகிழ்ச்சியைத் தருகிறது. சிலருக்கு நல்ல படிப்பும் தகுதியும் இருந்தும் வேலை கிடைக்காது; சிலருக்கு எல்லா சிறப்புகளும் இருந்தாலும், உரிய வயதில் திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போகும்; சிலருக்குத் திருமணம் ஏதோவொரு காரணத்தால் தடைப்படும்; சிலருக்குத் திருமணமாகியும் கணவன்- மனைவி பிரச் சினையில் விவாகரத்து நடக்கும். இப்படி உரிய காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தவிப்பவர்கள் அநேகம்.

இன்று பெரும்பாலும் திருமணமான ஆண்- பெண் சந்திக்கும் பிரச்சினை குழந்தை பாக்கியம் தள்ளிப்போவதுதான். இன்றைய மாறிவரும் உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த பிரச் சினைகள், பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சினைகள், ஆண்களுக்கு விந்து உற்பத்தி மற்றும் உடலுறவு சார்ந்த பிரச்சினைகள் என இப்படி பல காரணங்களால் குழந்தை பாக்கியம் பெறுவதில் தடைகளும் தாமதங்களும் ஏற்படு வதைக் காணமுடிகிறது. எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும், "துள்ளி விளை யாட ஒரு பிள்ளை இல்லையே' என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்கூடு.

நவீன மருத்துவம் செயற்கைக் கருவூட்டல் போன்ற முறைகளைப் பரிந்துரைத்தாலும், அதிலும் தோல்வியடைபவர்களையும் பார்க்கமுடிகிறது. இதற்கு ஜோதிடரீதியான விளக்கத்தைக் கூறுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக வாழ்க்கையில் சுகங்களை அனுபவிப்பதற்கு "கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்பார்கள். எதைக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கு விடைதான் "பூர்வ ஜென்ம புண்ணியம்' என்பது. பல பிறவிகளாக நாம் செய்த பாவ- புண்ணியங்களின் பலனாகத்தான் இந்தப் பிறவி அமைகிறது. நமக்கு வரும் நல்லவை- கெட்டவை எல்லாமே இதனடிப்படை யில்தான் நடக்கின்றன. புண்ணியம் செய்த வர்களுக்கு வாழ்க்கை எந்தக் குறையுமில் லாமல், ஏற்ற- இறக்கமின்றி அதனதன் காலத் தில் கிடைக்க வேண்டியது கிடைக்கும்; நடக்க வேண்டியது நடக்கும். புண்ணியக் கணக்கைத் தெரிந்துகொள்வதற்கு நமது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எண்ணவரும் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் உதவுகிறது. மற்ற எல்லா அம்சங்கள் இருந் தாலும், ஒருவருக்கு பேர் சொல்ல பிள்ளை இல்லையென்றால் இந்த சமூகம் அவரை ஒருபடி இறக்கமாகவே பார்க்கிறது. அந்த மழலைச் செல்வம் ஒருவருக்கு உண்டா என்பதை அறிய உதவுவதும் இந்த ஐந்தாம் பாவமே. எனவே இதற்கு "புத்திர ஸ்தானம்' என்றும் பெயர் உண்டு.

ஆண் குழந்தையோ, பெண் குழந் தையோ- ஒருவருக்கு மழலைச் செல்வத் தைத் தீர்மானிப்பதில் இந்த ஐந்தாம் பாவம் பெரும் பங்குவகிக்கிறது. பொதுவாக ஒருவருக்கு புத்திர பாக்கியம் ஏற்பட வேண்டுமானால், ஐந்தாமிடமும் அதன் அதிபதியும் வலுத்துக் காணப்படவேண்டும். அதாவது ஐந்தாம் பாவம் சுபகிரகங்களின் வீடாகவும், சுபகிரகங்களின் பார்வை பெறு வதாகவும், சுபகிரகங்கள் அமரப்பெற்ற தாகவும் இருப்பதும்; பாவர் சேர்க்கை அல்லது பார்வை அல்லது சம்பந்தம் எந்தவகையிலும் இல்லாமலும் இருந்தால், அந்த ஜாதகர்- ஜாதகிக்கு புத்திர பாக்கியம் உண்டு என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இத்துடன் ஐந்தாம் வீட்டின் அதிபதி நீச வீட்டில் இல்லாமலும், நீசம் பெற்ற கிரகங்களுடனும், பாவ கிரகங்களுடனும் எந்தவகையிலும் சம்பந்தம் பெறாமலிருப் பதோடு, மறைவிடங்கள் எனப்படும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இல்லாமலும், இவற்றின் அதிபதிகளோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமலும் இருப்பது அவசியம். இத்தகைய அமைப்பைப்பெற்ற ஜாதகருக்கு புத்திர பாக்கியம் உண்டு என்று கூறலாம்.


இவ்வாறே ஐந்தாமிடத்துக்கு அதிபதியாக வரும் கிரகமானது நவாம்சத்தில் வலுவுடன் உச்சம், ஆட்சிபெற்று, சுபர் சேர்க்கை, பார்வை மற்றும் சம்பந்தம் எவ்வகையிலாவது பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம் உண்டு என்றே கூறவேண்டும்.

இதேபோல் ஒருவருக்குப் பிள்ளைப்பேறு அமையுமென்பதை உறுதிசெய்ய லக்னத்திலிருந்து எண்ண வரும் ஒன்பதாம் பாவமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வீட்டை "பாக்கிய ஸ்தானம்' என்று ஜோதிடம் அழைக்கிறது. வாழ்க்கையின் சகல வசதிகளையும் பெற்று, செல்வாக்கு, அந்தஸ்து, அதிகாரத்தோடு ஒருவர் வலம்வருவதற்கு பாக்கிய ஸ்தானமே கைகொடுக்கிறது. இந்த பாவத்துக்கு "பித்ரு ஸ்தானம்' என்றும் பெயருண்டு. அதாவது தகப்பன், தகப்பன்வழி உறவுகள், குலமுன்னோர்கள், பிதுரார்ஜித சொத்து போன்றவற்றை அறிய உதவு வதால் இதற்கு அந்தப் பெயர். மேலும் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கு இறந்த முன்னோர்களின் ஆசியும் மிக அவசியம்.

இந்த இடத்தில் ஒன்றை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்கள் மனம் வருந்தாதபடி நடந்துகொண்டு, அவர்களை நல்லபடியாக கவனித்துக்கொள்வது மிக முக்கியம். பெற்றோர் மட்டுமல்ல; வீட்டில் வயதான பெரியவர்கள் யாரிருந்தாலும் அவர்களை நல்ல படியாகப் பராமரித்து அவர்களது ஆசிகளைப் பெறுவது அவசியம். இப்படி நடந்துகொள் பவர்களின் குடும்பத்தில் சுபகாரியங்கள் காலா காலத்தில் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறும். குழந்தை பிறப்பதும் உரிய காலத்தில் நடைபெறும். மாறாக பெற்றோர்களையும், பெரியவர்களையும் உதாசீனப்படுத்துபவர்களின் இல்லங்களில் கல்யாணம், குழந்தை பாக்கியம் போன்றவை தடைப்படும். அப்படியே நடந்தாலும் குறைகளோடு, மனத் திருப்தியில்லாத வகையில் அமையும்.

இதற்கு ஒருவரது ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் கெட்டிருப்பது- அதாவது பித்ரு தோஷமோ பித்ருக்கள் சாபமோ காரணமாக இருக்கும். இதற்கு மந்திர சாஸ்திரரீதியான பரிகாரங்களாக, பித்ருசாப நிவர்த்தி ஹோமம், பித்ருப்ரீதி ஹோமம் மற்றும் உரிய மந்திரோபதேசம் பெற்று ரட்சை ஏற்று ஜெபித்துவருவது, இதற்கான எந்திரப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வருவதன்மூலம் நிவர்த்திபெறலாம். இதனால் திருமணத் தடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு கர்ப்பம் தரிக்கமுடியாமல் போவது போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு காண முடியும்.

பொதுவாக பித்ருகாரகனாகிய சூரியனின் நிலையும் கவனத்திற்குரியதே. சூரியன் தன் பகை கிரகங்களுடன் இல்லாமலும், நீசம் பெறாமலும், துர்ஸ்தானங்களில் இல்லாமலும், துர்ஸ்தானாதிபதிகளோடு சேராமலும், அவர்களோடு எவ்விதத்திலும் சம்பந்தம் பெறாமலுமிருப்பது அவசியம். இவ்வாறே, ஒன்பதாமிடம் சுபகிரகத்தினுடையதாக இருந்து, ஒன்பதாமிடத்தில் சுபகிரகங்கள் நிற்பதோ, ஒன்பதாம் பாவத்தை சுபர் பார்ப்பதோ, எவ்வகையிலாவது சுபர் சம்பந்தம் பெற்றோ காணப்பட்டாலும் அந்த ஜாதகருக்கு அழகும் குணமும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் உள்ள குழந்தைகள், உரிய காலத்தில் பிறப்பார்கள் என்று ஜோதிடப் பெரியோர்கள் கூறியிருக்கின்றனர்.

இவ்வாறே குருவின் நிலையும் ஆராயப்படவேண்டும். ஏனென்றால் அவர் குழந்தை பாக்கியம் ஏற்படக் காரணமாக இருப்பவர். பொதுவாக ஆண்- பெண் ஜாதகத்தில் ஐந்தாம் பாவம், ஒன்பதாம் பாவத்தில் குறையிருக்குமானால் புத்திர சாபமோ, பித்ரு சாபமோ இருக்கும். குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு புத்திர பாக்கியமே இல்லாமல் போவதும் உண்டு. பல கிரகநிலைகளைக் கூறமுடியும் என்றாலும், உதாரணத்திற்கு ஒன்றைக் கூறலாம். லக்னத் திற்கு ஐந்தாமிடமாகிய புத்திர ஸ்தானத் தில் சனி, ராகு அல்லது கேது, குரு ஆகியோர் தனியாகவோ சேர்க்கை பெற்றோ காணப்பட்டாலும் குழந்தை பிறப்பதில் தாமதமேற்படும்.

பொதுவாக ஆணின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவம், குருவின் நிலையை வைத்தும், பெண்ணின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம், அதன் அதிபதியின் நிலை மற்றும் குரு பகவானின் நிலை போன்றவற்றைக் கொண்டும் குழந்தை பாக்கியம் பற்றிக் கூறவேண்டும். எல்லாத் தகுதிகளும் இருந்தும், மருத்துவரீதியாக எந்தக் குறையுமில்லாமல் இருந்தும் சிலருக்கு குழந்தைகள் பிறப்பதில் தாமதம் ஏற்படுவதுண்டு. இதற்கு புத்திர சாபம், பித்ருசாபம், சர்ப்ப தோஷம், ஸ்த்ரீசாபம் (பெண்ணை இம்சை செய்து அதனால் அந்தப் பெண் இறக்க நேரிடுவது), பசுவை வதைப்பது அல்லது பசு இறப்பதற்கு எவ்வகையிலாவது காரணமாக இருப்பது போன்றவை காரணமாக இருப்பதை அறியலாம். இந்தப் பிறவியில் நல்லபடியாக வாழ்ந்தாலும், முந்தைய பிறவிகளில் மேற்கூறிய காரியங்களைச் செய்திருந்தாலும் இதுபோன்று அமையும். ஐந்து தலைமுறைக்கு முன் ஒருவர் செய்த பழிபாவமும் அந்தத் தலைமுறைக்குச் சேரும். இதைத்தான் "மாதா பிதா செய்தது மக்களுக்கு' என்று பெரியோர் கூறுகின்றனர்.

சிலருக்கு ஒரே குழந்தையும், சிலருக்கு அதிக குழந்தைகளும் பிறப்பதுண்டு. பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் மனோகாரகனாகிய சந்திரனும், அவரது சத்ரு ஸ்தானமென்னும் ஆறாம் பாவத்தில் களத்திர காரகனாகிய சுக்கிரனும் அமையப் பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு ஒரு குழந்தைதான் பிறக்கும் எனலாம். இவ்வாறே, ஒருவரது ஜனன காலத்தில் ஐந்தாம் வீட்டின் அதிபதியும், ஆத்மகாரகனாகிய சூரியனும் இணைந்து காணப்பட்டாலும், அந்த ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்குமென்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பொதுவாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, செவ்வாய் மற்றும் குரு ஆகியோரது நிலை வலுவிழந்து காணப்பட்டால் குழந்தை பிறப்பதில் தாமதமும் தடைகளும் உண்டாகும். ஆணோ- பெண்ணோ உரிய காலத்தில் குழந்தை பிறப்பதற்கு அவர்களது ஜாத கத்தில் ஐந்து மற்றும் ஒன்பதுக்குடையவர்கள் நன்கு அமைந்து, கர்மகாரகனாகிய சனியும், சுக்கிலம் தரும் சுக்கிரனும், சூரியனும், ரத்தக்காரகனும்- போகத்தைத் தூண்டுபவனுமான செவ்வாயும் நல்ல நிலையில் இருப்பது அவசியம்.

குழந்தை பாக்கியம் மட்டுமல்ல; திருமணம் தடைப்படுவது, விவாகரத்து சார்ந்த பிரச்சினைகள், வழக்குகளால் பிரச்சினை போன்ற எதுவாக இருந்தாலும் மந்திரசாஸ்திரரீதியிலான பரிகாரங்கள்மூலம் தீர்வு பெறமுடியும்.

செல்: 95006 27065
courtesy;Balashothidam.
=======================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...