Followers

Friday, February 21, 2020

Image may contain: 1 person, text

When death arrives, do not be grieved.
மரணம் வரும்போது வருந்த வேண்டாம் இரவல் கொடுத்தவன் கேட்கிறான் இல்லையென்றால் அவன் விடுவானா?, பிறப்பும் இறப்பும் உடை மாற்றுவது போன்றே, பஞ்சபூதங்களினால் உருவாகி பிறந்து மீண்டும் அவைகளிலே ஐக்கியமாகின்றோம் கலங்காதே என்னை சரணடைந்தவர்களை நற்பேறடையச் செய்வேன்,
மசூதியில் தினமும் இரவுபகலாகக் குன்றாது துனீ எரிந்துகொண் டிருந்தது.அது உங்கள் ஆணவம், கன்மம், மயையை போன்ற மலங்களையும், தீய சிந்தனைகளையும் எரிக்கும், பாபா பிடிப்பிடியாக ரட்சையை எடுத்து பக்தர்கள் விடைபெறும்போது அளித்தார். சம்சார வாழ்க்கையும் உதீயைப் போன்றதே. நாமும் விபூதியாகிவிடும் நாள் வரத்தான் செய்யும். இதுதான் உதீயின் மஹிமை. இதை ஒருநாளும் மறக்க வேண்டா.
இவ்வுலகமனைத்தும் சாம்பலால் போடப்பட்ட ஒரு கோலமே என்பதை உறுதியாக அறியவும். உலகமே ஒரு மாயை என்பதுபற்றிச் சிந்தித்து, உதீயின் ஸத்தியத்துவத்தை மட்டும் நம்புக.
நிச்சயிக்கப்பட்ட மரணம்!
படிப்பினை
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒருவன் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு மனிதன் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;
எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல் குர்ஆன் 3:185)
“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதிலும் அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.
===================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...