Do not be deluded with worldly honors............
ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக்கொள்ள
வேண்டும் என்று ஸாயீ திருவாய்மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா. இறைவனின் அரசசபையில்
கௌரவம் தேடுங்கள்; அவருடைய அருளையே கெஞ்சி வேண்டுங்கள்; அவருடைய பிரஸாதத்திற்காகவே முயற்சி செய்யுங்கள்; உலகியல் புகழ் தேடாதீர்....................
GOSPEL OF SRI SAI BABA
"There will never be any dearth or scarcity of food and clothes in my
devotees' home. It is my special characteristic that I look always to and provide
for the welfare of those devotees whose minds are ever fixed on me. Lord
Krishna has also said the same in the Bhagavad Gita (Chapter IX Verse 22).
Therefore, strive not much for food and clothes. If you want anything to beg of
the Lord, leave worldly honour, try to get the Lord's grace and blessings and
be honoured in his court. Do not be deluded by wordly honour. The form of the
deity should be firmly fixed in the mind. Let all the senses and mind be ever
devoted to the worship of the lord. Let there be no attraction for any other
thing; fix the mind in remembering him always so that it will not wander
elsewhere towards body, wealth and home. Then it will be calm, peaceful and
carefree.This is the sign of the mind being well engaged in good company. If
the mind be vagrant, it cannot be called well merged. (Sai Satcharita, Chapter
- VI}.
மனத்தாலும் வாக்காலும் செய்கைகளாலும் ஸாயீபாதங்களை முழுமையாக
சரணடைந்துவிட்டால், அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைகின்றன.
15 கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும் நம்மை
வெவ்வேறு திசைகளில் அழைத்துச்சென்றாலும், கடைசியில் போய்ச்சேருமிடம் ஒன்றே; ஈசுவரப் பிராப்தியே (இறைவனை அடைவதே)õ
16 பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டைக் கடந்து
செல்வதுபோலக் கடினமானது. ஒருவரே நடக்கக்கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும்.
17 இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களைத் தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான்.
இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார்.
18 மனமென்னும் செழிப்பும் வீரியமுமுள்ள மண்ணில் பக்தி என்னும் நீரைப்
பாய்ச்சினால், வைராக்கியம் முளைக்கிறது; ஞானம் மலர்கிறது; பரவசநிலை பீறிட்டு கைவல்¬யம் (வீடுபேறு-மோட்சம்) கைகூடுகிறது. ஜனனமும் மரணமும் நிச்சயமாக
விலகிவிடுகின்றன.
19 மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய ஸித்திகள் நிறைந்தது. அதுவே ஸத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி. பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக அவதாரம்
செய்கிறது.
20 பிரம்மம் ஸச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து ஸத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய குணங்களின்மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
21 களிமண் ஓர் உருவமாக வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதைவிட்டு
அகன்றுவிடுகின்றன.
22 இவ்வுலகமே மாயையி லி ருந்து உருவானதுதான். இவ்விரண்டுக்குமுள்ள உறவு, காரண காரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக்கொண்டு இவ்வுலகமாகக்
காட்சியளிக்கிறது.
23 இவ்வுலகம் தோன்றுவதற்குமுன், மாயையின் நிலை என்ன என்பதைச் சிந்தித்தால், அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட, உருவெடுக்காத நிலை.
24 உருவெடுத்த நிலையோ உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்ம ரூபம்தான்.
ஆகவே, இந்த மாயை பரமாத்மாவி¬ருந்து பிரிக்கமுடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே.
25 மாயை, தமோ குணத்திலிருந்து உயிரில்லாதவையும் நகரமுடியாதவையுமான பொருள்களை சிருஷ்டி
செய்தது. இது மாயையின் முதல் சிருஷ்டி காரியம்.
26 பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்ஃ குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச்சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது.
27 மாயையின் ஸத்துவ குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுருவி, சிருஷ்டி என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது.
28 இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக்கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால், முக்குணங்களும் தோன்றாநிலையிலேயே இருந்துவிடுகின்றன; சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை.
29 முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றாநிலையிலேயே இருக்கிறாள்.
தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றாநிலையிலேயே இருக்கமுடியும் என்று
அறிந்துகொள்ள வேண்டும்.
30 மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. ''பார்ப்பதனைத்தும் பிரம்மமேஃஃ என்னும் சொற்றொடருக்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ளவேண்டும்.
31 இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்துகொள்ளத் தீவிர
ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயிலவேண்டும்.
32 வேதங்களையும் உபநிஷதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் படித்தால், 'நித்தியமெது? அநிந்தியமெது?ஃ என்னும் பாகுபாட்டுஞானம் கிடைக்கும். 'குருவினுடைய திருவாய்மொழியே வேதாந்தம்ஃ என்னும் அனுபவமும் கிடைக்கும்; பரமானந்தம் கிடைக்கும்.
33 தம் பக்தர்களின் இல்லங்களில் உணவுக்கும் உடைக்கும் எந்தவிதமான பற்றாக்குறையும்
இருக்காது என்று ஸாயீ உறுதிமொழி கொடுத்திருப்பது ஸாயீபக்தர்களுக்கு எப்பொழுதுமே
தெரிந்த விஷயந்தான்.
34 ''வேறெந்த சிந்தனையுமில்லாமல் என்னையே நினைந்து யாண்டும் என்னையே உபாஸிக்கும்
நித்திய யோகிகளுக்கு யோகக்ஷேமத்தை அளிப்பதை என்னுடைய ஸத்தியப் பிரமாணமாகக்
கருதுகிறேன்.ஃஃ
35 ஸ்ரீமத் பகவத் கீதையின் இந்த உறுதிமொழியைப் பேருண்மையாக எடுத்துக்கொள்ள
வேண்டும் என்று ஸாயீ திருவாய்மொழிகிறார். உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இல்லை; அவற்றின் பின்னால் அலைய வேண்டா.
36 இறைவனின் அரசசபையில் கௌரவம் தேடுங்கள்; அவருடைய அருளையே கெஞ்சி வேண்டுங்கள்; அவருடைய பிரஸாதத்திற்காகவே முயற்சி செய்யுங்கள்; உலகியல் புகழ் தேடாதீர்.
37 பாராட்டுபவர்களுடைய தலையசைப்பை நாடி உன்னுடைய கவனம் ஏன் திரும்ப வேண்டும்? உன் இஷ்ட தெய்வமன்றோ காருண்யத்தினால் உருகி
வியர்வையைத் 'தபதபஃவென்று பெருக்க வேண்டும்õ
38 அந்த லட்சியத்திற்கு நீ எவ்வளவு வேண்டுமானாலும் பாடுபடுõ புலன்கள் அனைத்தும் பக்திப் பெருக்கால்
மூழ்கடிக்கப்பட்டு, புலனின்ப நாட்டங்கள் எல்லாம் பக்தியுடன் கூடிய வழிபாடாக மாற்றம் எய்தட்டும்õ ஓ, அந்நிலை எவ்வளவு அற்புதமானதுõ
39 இம்மாதிரியான வழிபாடு இதர வழிகளில் ஆசை வைக்காது என்றென்றும் நிலைக்கட்டும்.
மனம் மற்ற விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, என்னுடைய நாமஸ்மரணத்திலேயே நிலைத்து நிற்கட்டும்.
40 மனம் அந்நிலையில் உட லி ருந்தும் குடும்பத் தொல்லைகளி லி ருந்தும்
பணத்தாசையி-ருந்தும் விடுதலை பெற்று ஆனந்தமயமாக இருக்கும்; ஸமதரிசனத்தையும் பிரசாந்தத்தையும் (பேரமைதியையும்)
அடைந்து, கடைசியாக பரிபூரணத்துவத்தையும் அடையும்.
ஓம் ஸ்ரீ சாயி ராம். —
=======================================
No comments:
Post a Comment