ஆன்மிகத்துக்கு இல்லறம் எப்போதும் குறுக்கே
நிற்காது.
அப்படியிருக்க ஞானியர்களிலும் யோகியர்களிலும்
சிலர் எதற்காக பிரமச்சரியத்தைக் கைக்கொண்டார் கள்?
ஒருவித பயத்தின் காரணமாகவே அவர்கள்
பிரமச்சரியத்தைக் கைக்கொண்டார்கள்.
ஞானிகளுக்கும் அச்சம் வருமா எனில், அச்சம் வரும்.
தனது ஞானத்துக்கு எந்த விதத்திலும் பங்கம்
வரக்கூடாது என்ற அச்சம் வரும்.
யோகியர்களுக்கு, தமது யோகத்தின்
பயனில் குறைவு உண்டாகிவிடக் கூடாது என்ற அச்சம் வரும்.
எனவே இப்படிப்பட்ட அச்சம் வருவதில் எந்தத்
தவறும் இல்லை.
அதனால்தான்-
"அஞ்சுவ தஞ்சாமை
பேதமை! அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்'
-என்கிறார்
திருவள்ளுவப் பெருமான்.
அஞ்சவேண்டிய விஷயங் களுக்கு அஞ்சாமல் இருப்பது
முட்டாள்தனம் எனக் கண்டிக்கும் வள்ளுவர், அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதுதான் அறிவாளிகளின்
தன்மை என இதன்மூலம் சுடரொளிபோல் சுட்டிக்காட்டுகிறார்.
ஆக நியாயமான அச்சம் தவறில்லை.
நமது ஞானியர் சிலருக்கு இல்லற உறவின்மீது எந்த
வகையிலான அச்சம் வந்தது? எந்த அச்சத்தினால் அவர்கள் பிரமச்சரியத்தைக் கைக்கொண்டார்கள்.
ஒன்றை அவர்கள் யோசித்திருக்கக்கூடும்.
ஒன்றை உருவாக்கும்போதே அதன் அழிவுக்கும் நாம்
காரண கர்த்தாவாக ஆகிவிடுகிறோம்.
நாம் ஒரு வீட்டை உருவாக்கினால், அது என்றைக்கோ
ஒரு காலத்தில் இடிக்கப்பட்டுவிடும்.
நாம் அந்த வீட்டைக் கட்டாவிட்டால், அது
இடிக்கப்படும் வாய்ப்பிருக்கிறதா? இல்லை.
நாம் தறி மூலம் ஒரு துணியை உருவாக்குகிறோம்.
அது உருவாக்கப்படும்போதே நாளை அது கிழிந்து, மக்குவது உறுதி என்பதாகிவிடுகிறது.
எனவே உருவாக்கப்படுவதெல்லாம் அழிவதற்காகவே.
தோன்றுவதெல்லாம் ஒரு காலத்தில் மறைவதற்காகவே.
இதை அறிந்திருக்கும் ஞானியர்கள், இல்லறத்தில்
ஈடுபட்டால் அதன் விளைவாக ஒரு பிறப்பு நிகழக்கூடும்.
ஒரு பிறப்பு நிகழுமாயின், எதிர்காலத்தில்
அது மறைவை சந்தித்தே தீரும்.
ஆக, பிறப்பை உருவாக்குகிற நாம், நம்மை அறியாமலே
அதன் இறப்பிற்கும் காரணகர்த்தா ஆகிவிடுகிறோம்.
பிறப்பில்லை என்றால் ஏது இறப்பு?
என ஒருவித மனநெகிழ்வின் காரணமாக, அவர்கள் பிரமச்
சரியத்தைக் கைக்கொண்டிருக்கக்கூடும்.
இது ஒருவகை அச்சம்.
இதேபோல் ஆன்மிகத்தின் கரையில் ஏறமுடியாதபடி, இல்லற சாகரம்
நம்மை மூழ்கடித்துவிட்டால் என்ன செய்வது என்ற ரீதியிலும் சிலர் அச்சம்கொண்டு
பிரமச்சரியத்தை ஏற்றிருக்கலாம்.
""எந்நிலை அறிந்த
மகானும் காமத்தை ஜெயித்திட வழியில்லை.
அறிவுநிலை விரிவானவனாலேயே தவிர்த்திட
வாய்ப்புண்டு.''
நம்மைப் பொறுத்தவரை, இயற்கையின்
போக்கில் இயல்பாக நகர்வதே சரியான வாழ்க்கை.
அது பிறருக்குத் தீங்கிழைக்காத, பிறரை பாதிக்காத, பிறருக்கு
உறுத்தலை ஏற்படுத்தாத, நம்மையும் சங்கடப்படுத்திக் கொள்ளாத வாழ்வாக
இருக்கவேண்டும்.
இல்லறமும் சந்ததிப்பேறும் உலகம் உயிர்ப்பாக
இயங்க உருவாக்கப்பட்ட ஏற்பாடு.
அதை நாம் எதற்காகத் தவிர்க்கவேண்டும்?
சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்.
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை
சுமக்கிறவர்கள்.
நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும்
வாகனங்களே!
நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின்
விளைவுதான் நாம்!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்!
நம் தாத்தாக்கள், கொள்ளுத்
தாத்தாக்களின் ஜீன்,
நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது.
அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த
நோய், உங்கள் தாத்தா
பாட்டிக்கு இருந்ததா?' என்று.
நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, வெற்றி- தோல்வி
இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து
எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக் கும்
எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் தீர்வைத் தேடுகிறோம்.
"நீ செய்யும்
தீவினையைக் கண்டவர் யாரு மில்லை என்ற கற்பனையில் உலாவ, உன்னிலிருப்பவனே
பதிந்திட்டுக் காத்திருப்பான் காலத் திற்காக; தக்க தருணத்தில் வெளியிடுவான்- நீ அனுபவிக்க' என்பதே
மெய்ஞ்ஞானம்.
இதற்கிடையே எப்போதோ நமக்கு அடிக்கப் பட்ட
நால்வருண பேதம், இப்போதும் நம்மை
ஆட்டிப் படைக்கிறது;
சாதீயமாக.
இது சரியா? வருண பேதங்கள்
காப்பாற்றப் பட வேண்டியவையா?
(மரம் இன்னும்
தழைக்கும்)
My
dearest friends
Have
a wonderful morning.
அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என்றும் என் இனிய காலை நல்வணக்கங்கள்`!!!
வாழ்க வழமுடன் / நலமுடன்.
அன்புடன் vicknasai.
========================================
No comments:
Post a Comment