சரணாகதி செய்வோர் இரண்டு வகை ஆவர். குரங்குக்குட்டிகளைப் போலும்; பூனைக்குட்டிகளைப் போலும். குரங்குக்குட்டி தன் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறது; பூனைக்குட்டியோ தாயைப் பிடித்துக்கொள்ளச் சக்தியற்றதாய், விட்ட இடத்திலேயே கிடக்கிறது. குரங்குக்குட்டி தன் பிடிப்பை விடுமானால் கீழே விழுந்து காயமுறும். பூனைக்குட்டியைத் தாய்ப்பூனையே தூக்கிச் செல்வதால், அது அவ்வித ஆபத்துக் குள்ளாவதில்லை.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
பாபா தாயன்பு காட்டுகிறார் என்பது பக்தர்களின் பிரத்யக்ஷ அநுபவம். "பூனைக்குட்டி சரணாகதிதான்' சிறந்தது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. தம்முடைய சரணாகதி எத்தகையது என்பதை ஒவ்வொருவரும் தம்மைத் தாமே துருவித்தான் தெளிவுபெற வேண்டும். இந்த ஜன்மத்தில் இயன்றாலும் இயலாது போனாலும், நோக்கி நடக்கவேண்டிய இலக்கு இதுதான்!
அரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே......பூர்வஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது. இதுவே நமக்கு மனத்தில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளி¬ருந்து விடுதலையையும் அளிக்கிறது.
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம்
=======================================
No comments:
Post a Comment