
இனிய காலை வணக்கம் அன்புறவுகளே!!!
அரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே......பூர்வஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது. இதுவே நமக்கு மனத்தில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளிருந்து விடுதலையையும் அளிக்கிறது.
ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது......................................................
ஸ்ரீ சிர்டீ ஸாயீ அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை தொடர்கிறது....................................................................
43. பக்த பராதீனாய நமஹ
பக்தர்களிடம் கட்டுண்டவருக்கு நமஸ்காரம்.
பராதீனன் = சுதந்திரமில்லாதவன் = அடிமை.
OM BHAKTA PARADHEENAYA NAMAH
ॐ भक्तपराधीनाय नमः
My humble salutation to the Master who is sub - servient to His devotees, who surrender unto Him completely and who remains at their beck and call.
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது....................................................... சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் ஏழு தொடர்கிறது……….
*
*
*
1910ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முன்னாள் தனத்திரியோதசியன்று பாபா துனியினுள் விறகுகளைப் போட்டுக்கொண்டு ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
74 திடீரென்று பார்த்தால், கொழுந்துவிட்டுப் பெரிதாக எரிந்துகொண் டிருந்த துனியினுடைய தீயில் பாபாவினுடைய கை செருகப்பட்டிருந்தது. பாபா நிச்சிந்தையாகத்தான் இருந்தார்; கை என்னவோ கடுமையாகக் கருகிப்போய்விட்டது.
75 அவருடைய தொண்டரான மாதவ் இதை உடனே கவனித்தார். அருகிருந்த மாதவராவ் தேச்பாண்டேவும் இதைப் பார்த்துவிட்டு, உடனே பாபாவை நோக்கி ஓடினார்.
76 பாபாவுக்குப் பின்பக்கமாகச் சென்று, தம்முடைய இரு கைகளையும் பாபாவின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாகக் கோத்து பாபாவைப் பின்னுக்கு இழுத்தார்.
77 ''ஆஹாõ பாபா என்ன காரியம் செய்துவிட்டீர்?ஃஃ என்று கூவினார். இக் கூவலைக் கேட்ட பாபா, மோனநிலையிருந்து திரும்பி, ''ஓ சாமா, உனக்குத் தெரியுமா? ஒரு குழந்தை அதன் தாயினுடைய கையிருந்து திடீரென்று நழுவிக் கொல்லனுடைய உலைக்களத்தில் விழுந்துவிட்டது.--
78 ''தன் கணவன் சத்தம்போட்டதைக் கேட்ட அவள் பயந்து நடுங்கி, துருத்தியை வேகமாக (குழந்தையைக் கையிடுக்கில் வைத்துக்கொண்டே) இயக்கினாள்.--
79 ''அவ்வாறு செய்யும்போது அவளையுமறியாமல் கையில் இடுக்கிக்கொண் டிருந்த குழந்தையை மறந்துவிட்டாள். மிதமிஞ்சிய சுறுசுறுப்பான, அமைதியற்றிருந்த குழந்தை, கையிருந்து விழுந்துவிட்டது. ஆனால், சாமா, அப் பெண்குழந்தை விழுந்தவுடனேயே நான் குழந்தையைத் தூக்கிவிட்டேன்.--
80 ''அவ்வாறு அப் பெண்குழந்தையை உலைக்களத்திருந்து எடுக்கும்போது இது நடந்துவிட்டதுõ கை எரிந்து கருகிப்போனால் போகட்டும்; குழந்தை உயிர் பிழைத்ததே,,,,,,
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER VII
*
*
*
Baba’s All-pervasiveness and Mercy
In the year 1910 A.D., Baba was sitting near the Dhuni on Divali holiday and warming Himself. He was pushing fire-wood into the Dhuni, which was brightly burning. A little later, instead of pushing logs of woods, Baba pushed His arm into the Dhuni; the arm was scorched and burnt immediately. This was noticed by the servant Madhava, and also by Madhavrao Deshpande (Shama). They at once ran to Baba and Madhavarao clasped Baba by His waist from behind and dragged Him forcible back ward and asked, "Deva, for what have You done this?" Then Baba came to His senses and replied, "The wife of a blacksmith at some distant place, was working the bellows of a furnace;her husband called her. Forgetting that her child was on her waist, she ran hastily and the child slipped into the furnace. I immediately thrust My hand into the furnace and saved the child. I do not mind My arm being burnt, but I am glad that the life of the child is saved."
Bow to Shri Sai -- Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all
https://www.youtube.com/watch?v=ULfqRmogcqk&list=PL865F542D9D422C83
To be continued............
ஷீரடி போக முடியாதவர்கள் அவசியம் பாருங்கள்.
Shirdi Sai Baba Tamil Aarti Full Video Song -ஷிர்டி சாய் பாபா ஆர்த்தி
https://www.youtube.com/watch?v=LGumlrX9UgY
https://www.youtube.com/watch?v=Jn1hyQARZ68#t=19
https://www.youtube.com/watch?v=EIgaKaSYrok
வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் ஏழு தொடர்கிறது......... சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
என் மகனே! மகளே! நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம் குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே! கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும் எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.
"I say things here. There they happen."
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
===========================================
No comments:
Post a Comment