Followers

Tuesday, February 25, 2020


No photo description available.

கேள்வி வளையம், கழுத்தை இறுக்குகிறதா?


உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பஃபெட்" நமக்கு கூறும் அறிவுரை!


எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே.....................................


'எல்லாரையும் வச்சுக்கிட்டுக் கேட்டுட்டான்; என்ன செய்யச் சொல்ற... உண்மையை அப்படியே உளறி(?)ப்புட்டேன்...' என்பர் சிலர்! இது, இனி அவசியமில்லை. 'உன்ன மாதிரி, எத்தனை ஆளைப் பார்த்திருக்கேன் தெரியுமா... நீ என்ன... உன் பாட்டன், பூட்டன் வந்தாலும், எங்கிட்டே நடக்காது டோய்...' என்று, இனி, நாம் சவால் விடலாம்; நான் கூறும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால்!


இதற்கான தலையாய தப்பித்தல் விதி என்ன தெரியுமா... எதிர்பாராத கேள்விகளை, எதிராளிகளிடமிருந்து, எதிர்பாருங்கள் என்பது தான்!
'பெண்ணிடம் வயதை கேட்காதே, ஆணிடம் வருமானத்தை கேட்காதே...' என்று, நம் முன்னோர் கூறியுள்ளனர்.


இக்கேள்விகள், எந்த நிமிடமும், நம்மை நோக்கி வீசப்படலாம் என்பதால், ஒன்றிற்கு மேற்பட்ட பதில்களை, தயாராக, ஏற்கனவே மனதிற்குள் தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.
வயதைப் பொறுத்த வரை, 'எத்தனையோ கழுதை வயசாச்சு; கணக்குத் தெரியல, என்ன இப்போ... வேறு ஏதாச்சும் பேசுவோமா...' என்று சிரித்தபடி பதில் சொல்லலாம்.


'உங்க மக வயசு, உங்க தங்கச்சி வயசு...' என்றும் விஷயத்தை திசை திருப்பலாம். மதிப்புமிக்க மனிதராக இருந்தால், அமைதியாக, புன்னகை மட்டும் பூக்கலாம். 'யோவ்... இந்தக் கேள்வியைக் கேட்டதே தப்புய்யா...' என்பது இம்மவுனப் புன்னகையின் பதில்!
வருமானத்தைப் பற்றிக் கேட்டால், 'இப்படிப் போட்டுடைக்கச் சொல்லி, வெளிப்படையாகக் கேட்டா எப்படி... அப்புறம் சொல்றேனே...' எனலாம்.
'சமாளிக்கிற சம்பளம் தான்; ஓரளவு மிச்சம் புடிக்க முடிகிற நல்ல சம்பளம் தான்...' என்பதும், நல்ல சமாளிபிகேஷன்!


'இன்னும் உயரட்டும், சொல்றேன்...' என்றெல்லாம் விதவிதமாக சொல்லலாமே தவிர, ஏதோ நெற்றிப் பொட்டில், எதிராளி துப்பாக்கியை வைத்து, கேள்வி கேட்டது போல் எண்ணி, பட்டவர்த்தனமாகப் பேசி, உண்மையை உடைத்து விட வேண்டாம்; சரியான விடையைத் தர, இது ஒன்றும், தேர்வு வினாத்தாள் அல்ல!


இங்கே எல்லா பதில்களிலும், ஒரு உண்மை இருப்பதை கவனித்தீர்களா... 'பொய் ஒன்றை கூறி தப்பியுங்கள்...' என்று நான் சொல்லவே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. பொய் கூறாத, மாற்று பதில்கள் பல உண்டு...
'முதலாளி, என்னப் பத்தி ஏதாச்சும் சொன்னாரா?'
'நான் இல்லாத போது, என்னைப் பத்தி, ஏதும், 'கமென்ட்' வந்திருக்குமே...'
'நீயும், அவளும் என்ன பேசிக்கிட்டீங்க?'
'இந்த வீட்டக் கட்ட, உங்களுக்கு எவ்வளவு செலவாச்சு?'
'எனக்காக நீங்க செலவழிச்ச பணம் எவ்வளவு?'
'நீங்க எனக்குக் கொடுத்த பரிசோட மதிப்பு எவ்வளவு இருக்கும்...'


'இப்போ வேல பார்க்குற டிரைவருக்கு, என்ன சம்பளம் குடுக்குறீங்க?'
'நீங்க, வெளிநாடு போறீங்களாமே, சொல்லவே இல்லை...'


இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும், எதிராளிகள் குடையட்டும்; எதற்குமே அசைந்து கொடுக்காதீர்கள். இவர்களது கேள்வி வங்கிகளுக்கு, சாமர்த்தியமான பதில்களை, தயார் செய்து வைத்திருங்கள்.
உண்மையான பதில், நன்மை செய்யாத போது, புதுக்கோளாறுகளை உண்டாக்கும் போது, கேள்விகள் உள்நோக்கம் உடையவை, சிறு பிள்ளைத்தனமானவை என்கிற போது, அவற்றிற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


'நான் ஏன் பயப்படணும், என் வாழ்க்கை திறந்த புத்தகம்; நான் ஏன் மறைக்கணும்; வெளிப்படையாப் பேசித்தான் எனக்குப் பழக்கம்...' என்றெல்லாம் வீராப்புப் பேசி, வகையாக மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம்!
தெரிந்தால் தவறில்லை; அதே நேரத்தில் தெரிய வேண்டிய அவசியமில்லை என்கிற விஷயங்களில், தெளிவாக இருந்து, நம்மையும், பிறரையும் பாதிக்காத கேள்விகளுக்கு, பதில் சொல்லலாம் தவறில்லை!
மற்றபடி, 'உன் ஜம்பம், என்கிட்டே நடக்காதுடி...' என்று, வினா எழுப்பும் மனிதர்களிடம், விழிப்பாக இருந்து விட்டுப் போவோம்.
இந்த அணுகுமுறை தான், நமக்கு என்றென்றும் பாதுகாப்பு!


லேனா தமிழ்வாணன்
அன்பு நன்றி ஐயா..........


==========================================


தேவையில்லாததை வாங்கினால் என்ன ஆகும்?


உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான "வாரன் பஃபெட்" நமக்கு கூறும் அறிவுரை!
*
1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
*
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)
*
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
*
(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)
*
3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.
*
(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)
*
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....
*
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)
*
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...
*
(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)
*
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....
*
(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)


===========================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என்னைப்போன்றோர்க்கும் இறையருளோடு கூடிய இனிய நற்காலை வணக்கம் அன்பு சகோ, இனிய நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!


அன்புடன் சகோதரன்
விக்னசாயி............
===============================


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...