அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய வணக்கம்! ..உரித்தாகுக.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.
உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும், நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும், அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும்.
"என்னிடம் அன்பு செலுத்துபவரிடம் மட்டுமே நான் அன்பு செலுத்துவேன் என்றால் என் அன்புக்கும் நல்லதொரு வியாபாரத்துக்கும் வேறுபாடு என்ன இருக்கிறது?
நான் அன்பு செலுத்திய காரணத்தால் நான் அன்பு செலுத்தப்பட்டாக வேண்டுமென்றால் என் அன்புக்கும் நல்லதொரு வட்டிக்கடைக்கும் வேறுபாடு என்ன இருக்கிறது?
நான் அன்பு செலுத்தும் காரணத்தால் நான் சொன்னபடி எல்லாம் கேட்க வேண்டுமென்றால் என் அன்புக்குக்கும் நல்லதொரு அடிமைமுறைக்கும் வேறுபாடு என்ன இருக்கிறது?"
==========================================
No comments:
Post a Comment