Followers

Thursday, February 6, 2020



கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது.


எல்லோர்க்கும் இனிய நாளாகட்டும் சகோ தோழமை களே...................


கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்... தெரிந்துகொள்வோம்


நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!


கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!


ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?


இல்லையே…!


அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!


இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்.


============================================


1945 - பிப்ரவரி 6:ஏழ்மை நாடான, ஜமைக்காவில், நைன் மைல் எனும் கிராமத்தில் பிறந்தவர், பாப் மெர்லி. அவரின் வறுமையை மறக்க செய்தது, இசையின் மீது அவருக்கு இருந்த காதல்!நண்பர்களுடன் இணைந்து, 'வெய்லர்ஸ்' என்னும் இசைக் குழுவை உருவாக்கினார். தொடர்ந்து, 'ஜட்ஜ்நாட், சிம்மர்ஸ் டவுன், சோல் ரெபல்ஸ், கேட்ச் எ பயர், எக்ஸோடஸ், சர்வைவல்' என்று புகழ்பெற்ற ஆல்பங்களை வெளியிட்டார். உலகமெங்கும் அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். தன் நாட்டு இசையான, 'ரெக்கே'வை, உலகெங்கும் ஒலிக்கச் செய்தார்; தன் நாட்டில் உள்ள, இரு பெரும் எதிர்க்கட்சிகளை இணைத்து, 'ஒன் லவ்' எனும் பாடலை, மேடையில் பாடினார்; அது, இந்த யுகத்தின் பாடலாகக் கொண்டாடப்பட்டது!ஜிம்பாப்வே விடுதலை அடைந்தபோது, அந்நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தினார் மெர்லி. புகழின் உச்சியில் இருந்த மெர்லி, புற்றுநோய் தாக்கியதால், 1981, மே 11ம் தேதி இறந்தார்.உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்த பாப் மெர்லி, பிறந்த தினம் இன்று!
=============================================================


'நடையில் நின்னுயர் நாயகன் கக்கன்' (மறைந்த காங்கிரஸ் தலைவர்) பற்றிய நூலிலிருந்து:
கக்கன் வாழ்ந்த தும்பைப்பட்டி கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள், மழைநீர் தேங்கும், பீக்குளத்திலும், பிற ஜாதியினர், 'ஊரணி' என்ற குளத்திலும் குடிநீர் எடுப்பது அக்காலத்தில் வழக்கம்.
வெளிவாசல் சென்று கை கால் கழுவுவதற்கும், மாடுகள் நீர் அருந்த, குளிப்பாட்ட பயன்படுத்தப்பட்ட அக்குளத்து நீரைத்தான், குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர் தாழ்த்தப்பட்ட மக்கள். அதே சமயம், எவரும் குளிக்காமலும், மாடுகள் வாய் வைக்காமலும், மிகவும் பாதுகாப்பாக காவலிட்டு, காப்புச் செய்து வந்த குளம் ஊரணி. இதில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் எடுக்கக் கூடாது என்பது ஊர்க் கட்டுப்பாடு.


இதை எதிர்த்து, 'தாழ்த்தப்பட்ட மக்களும், ஊரணியைப் பயன்படுத்த வேண்டும்...' என்ற தன் எண்ணத்தை, தம்முடன் இருக்கும் தலைவர் களான, ஒருங்கான் அம்பலம் மற்றும் கருப்பன் செட்டியார் என்கிற கருப்பையா செட்டியார் ஆகியோருடன் கலந்து ஆலோசித்தார் கக்கன்.


நல்லுள்ளமும், மனித நேயமும் கொண்ட அந்த தலைவர்கள், இதற்கு ஆதரவு தெரிவித்ததுடன், இக்கொடுமையை எதிர்த்துப் போராட ஒப்புக் கொண்டனர். அதனால், அன்று ஊர்ப்பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த குப்பையன் (குப்புசாமி) தலைமையில், ஊரணியில் குடிநீர் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டினார் கக்கன். ஒருங்கான் அம்பலம் மற்றும் கருப்பையா செட்டியார் ஆகியோர் முன்செல்ல, மக்கள் பின் சென்றனர்.
அனைவரும் குளத்தில் குடிநீர் எடுத்து திரும்பும் போது, அம்பலவர் இனத்து மக்கள், கத்தி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களுடன் வழி மறித்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் கைகளிலோ குடிநீர்; அம்பலவர் மக்களின் கைகளிலோ ஆயுதம். 'என்ன நடக்குமோ...' என்ற அச்சம், மக்கள் மத்தியில் நிலவியது. ஆனால், தெளிந்த சிந்தனை கொண்ட அந்த தலைவர்கள், இதற்கு அஞ்சவில்லை; காந்திய வழியில் எதிரணியினரைச் சந்திக்க
முடிவு செய்தனர். ஒருங்கான் அம்பலம்


முன்வந்து பேசத் துவங்கினார்...
'நானும் அம்பலவ சமுதாயத்தைச் சேர்ந்தவன் தான். நம்மோடு வாழும் மக்கள், கழிவுநீரைக் குடிப்பது என்ன நியாயம்? இயற்கையால் வழங்கப்பட்ட நீரைக் கொடுக்க மறுப்பது எவ்வளவு பெரிய கொடுமை...' என்றார். ஆனால், எவரும் அவர் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை; கூச்சல் அதிகமானது. அதனால், 'இவர்களை வெட்டி, உங்க ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால், முதலில் என்னை வெட்டிவிட்டு, பின் மற்றவர்களை வெட்டுங்கள்...' என்று சொல்லி, சாலையின் நடுவில் அமர்ந்தார், ஒருங்கான் அம்பலம்.
உடனே கருப்பையா செட்டியார், 'உங்க ஆயுதத்தால் தான் இந்த சமூகக் கொடுமைக்கு முடிவு ஏற்படும் என்றால், என்னைத் தீர்த்துக் கட்டி, பின் தீர்வு காணுங்கள்...' என்று அவரும் சாலையில் அமர்ந்தார். அவர்களை தொடர்ந்து கக்கன், 'இந்த இரு தலைவர்களை வெட்டுவதற்கு முன், என்னை வெட்டுங்கள்; எங்கள் சமுதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தர முன்வந்த இவர்கள் சாவதற்கு முன் நான் மரணம் அடைய வேண்டும். அதனால், என்னை முதலில் வெட்டுங்கள்...' என்று கூறி, சாலையில் அமர்ந்தார்.


எதிரணியில் இருந்த வன்முறைச் சிந்தனையாளர்களோ என்ன செய்வதென்று புரியாமல், தடுமாறினர். இறுதியில், 'இரவு ஊர்ப்பஞ்சாயத்தில் முடிவு செய்யலாம்...' என்று கூறி கலைந்து சென்றனர்.
அன்று இரவு, மிகப்பெரிய அளவில் பஞ்சாயத்து நடந்தது. இனக்கலவரமாக மாறிவிடக் கூடாது என கருதி, அனைத்து இன மக்களும் ஒன்று திரண்டு அமர்ந்திருந்தனர். ஒருங்கான் அம்பலம், கருப்பையா செட்டியார் ஆகியோரும் ஊர் பஞ்சாயத்தில் கலந்து, மனிதநேயச் சிந்தனை என்ற அடிப்படையில் வாதத்தை எடுத்து வைத்தனர். பல்வேறு எதிரணி சொல் வீச்சிற்கிடையே, இவர்களின் வாதத் திறமையால் தாழ்த்தப்பட்ட மக்கள், ஊரணியின் ஒரு மூலையிலும்,
ஜாதி இந்துக்கள் மறுமூலையிலும் நீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவும், சமுதாயக் கொடுமையின் மறுவடிவம் தான் என்றாலும், அன்றைய சூழலில், அந்த மக்களை அமைதிப்படுத்த, இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.


நடுத்தெரு நாராயணன்
அன்பு நன்றி ஐயா..........


======================================================


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...
Gurur Brahma, Gurur Vishnu, Gurur Devoh Maheshwara
Guru Sakshat Parabrahmah Tasmai Shree Guru Veh Namah !


I am Love, I shower Love. I share Love. I am pleased with Love. - Baba


When your heart is filled with good thoughts and feelings, all that comes out of the senses - your speech, your vision, your action - will naturally be pure. - Baba


உனது ஹ்ருதயம் நல்ல சிந்தனைகளாலும் நல்ல உணர்வுகளாலும் நிரப்பப்பட்டுள்ள போது, உனது பேச்சு, பார்வை, செயல்கள் யாவும் இயல்பாகவே சுத்தமாக இருக்கும். பாபா


Embodiments of divine Love!............ Have A Great And Wonderful Day Ahead.
God Bless You All............ love-all-serve-all-help-ever-hurt-never............. Sairam


அன்புறவுகள்... எல்லோர்க்கும்... அனைவருக்கும் சகோ என்றென்றும் அன்பு நன்றியுடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! ..உரித்தாகுக தோழமை / சகோ(களே)................!!!


ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் என்னைப்போன்றோர்க்கும் இனிய ஆண்டாக நாளாக மலரட்டும்...சகோ தோழமை களே...............
நட்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!
நினைத்தவை எல்லாம் நிறைவேறி , சுபீட்சம் உண்டாகட்டும் !!!


ஓம் சாயி நமோ நம! ஸ்ரீ சாயி நமோ நம!
ஜெய ஜெய சாயி நமோ நம! சத்குரு சாயி நமோ நம!
அன்புடன் சகோதரன்
விக்னசாயி............

============================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...