இக் கதாமிருதம்
சிரத்தையுடனும் பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கப்பட்டால், கேட்பவர்கள்
பக்திப்பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப்
பேறுகளையும் பெறுவர். ........என்பது திண்ணம்....
ஒம் ஸ்ரீ
விநாயகனே போற்றி ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி
ஸ்ரீ குருமஹராஜனே
போற்றி குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான
வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை
பக்தியுடன் சிரம்
தாழ்த்தி வணங்குகின்றேன்.................
இது வெறும்
வாழ்க்கைச் சரித்திரம் அன்று; சந்திரகாந்தக்
கல் ஆகும். இதிலிருந்து ஸாயீயின் கதைகள் என்னும் சந்திரனுடைய அமிருதம் சதா
பொழிந்துகொண்டே யிருக்கிறது. தாகம் கொண்ட சகோரப் பட்சிகளை ஒத்த பக்தர்கள், மனம் நிறையும்
வரை அருந்தித் திருப்தியடைவீர்களாக.....
அன்பார்ந்த
நேயர்களே இப்பொழுது ஸாயீயின் புனிதமான கதைகளை மனமொன்றிச்
சுணக்கமேதுமின்றிக் கேளுங்கள். கலியுகத்தின் மலங்களை எரித்துவிடும் சக்திவாய்ந்தவை
இக் கதைகள்.
ஸாயீயிடம்
அனன்னிய நிட்டை ஏற்பட்டுவிட்ட பக்தனின் விருப்பங்களை எல்லாம் ஸாயீ
நிறைவேற்றிவைக்கிறார்; விரும்பாதவற்றையும் கஷ்டங்களையும் நிவாரணம்
செய்துவிடுகிறார் இது சத்தியம்.
Baba comforted us saying, "Alla Accha Karega
(God will do good)."
ஒம் குரு வாழ்க, குரு நன்றாய்
வாழ்க, குருவே துணை...
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"
இனிய காலை
வணக்கம் அன்புறவுகளே!!!..
ஸ்ரீ சிர்டீ சாயி
ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….
ஸ்ரீ சிர்டீ ஸாயீ
அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
Please see below for English version. Tq
ஸ்ரீ சிர்டீ ஸாயீ
அஷ்டோத்தர நாமாவளி விரிவுரை
தொடர்கிறது....................................................................
96. ஓம் ஸ்ரீ சாயி
அபேத ஆனந்த அநுபவ ப்ரதாய நமஹ |
(எதிலும்)
வேற்றுமை காணாத பாவத்தால் விளையும் ஆனந்தத்தைச் சிறப்பாக அளிப்பவருக்கு நமஸ்காரம்.
அவர்
அநுபவித்துக்கொண் டிருந்த ஆனந்தத்தை அடியார்களுக்கும் அருள்வார் என்பது உட்கிடை.
இறைவனின் சிருஷ்டி யனைத்தையும் வேற்றுமையின்றி சமபா(யக்ஷிபு)வத்துடன் நோக்க இயன்ற
மனிதரின் இதயத்தில் பேரானந்தம் பொங்கும்! ஆயினும், யதார்த்தம் என்ன? ஜாதி, மதம், இனம், பால், மொழி, கல்வி, செல்வம், வயது, உத்தியோகம், வருமானம், அந்தஸ்து, பதவி, அதிகாரம், உடை, உணவு ஆகியனவாக
எத்தனை எத்தனை விஷயங்களில் பேதம் பாராட்டுகிறான் மனிதன்! பேதபா(யஜுழி)வம் அவனுக்கே
எத்தனை இன்னல்களை உண்டுபண்ணுகிறது!
அத்வைத
ஸித்திக்கு அபேதபா(யஜுழி)வம் அரிச்சுவடி ஆகுமன்றோ! சேவையிற் சிறந்த பக்தை
லக்ஷ்மிபாயிக்கு பாபா செய்த அபேதபா(யஜுழி)வ உபதேசம் என்னவென்று பார்ப்போமா?
"லக்ஷ்மீ, எனக்குப் பசி
எடுக்கிறது.'' ""பாபா, நான் இப்போதே
போய் உங்களுக்குச் சில சோளரொட்டிகள் கொண்டுவருகிறேன்.'' -- 98
என்று
சொல்லிக்கொண்டே லக்ஷ்மீ தம் இல்லத்திற்குச் சென்றார். சோளரொட்டி, காய்கறி
பதார்த்தம், சட்டினி இவற்றைச் சுடச்சுடச் செய்து எடுத்துக் கொண்டு
தாமதம் இன்றித் திரும்பிவந்தார். அந்தச் சிற்றுண்டியை பாபாவின் எதிரில் வைத்தார்.
-- 99
பாபா அந்தத்
தட்டை எடுத்து ஒரு நாயின் முன்னே வைத்தார். லக்ஷ்மீ பாயீ உடனே கேட்டார், ""பாபா, நீங்கள் என்ன
இவ்வாறு செய்கிறீர்கள்? --
100
"நான் ஓடோடிச்
சென்று என்னுடைய கைகளாலேயே சீக்கிரமாக ரொட்டி செய்துகொண்டு வந்தேன். அதற்குப் பலன்
இதுதானா? உண்மையான மகிழ்ச்சியை நாய்க்கன்றோ கொடுத்துவிட்டீர்கள்! -- 101
page 45 of 52
"நீங்கள் பசியாக
இருந்தீர்கள்; அந்தப் பசியைத் தணிப்பதற்கு இதுதான் வழியா? ஒரு துண்டுகூட
நீங்கள் வாயில் இடவில்லை; நான் இங்கே தவித்துக்கொண்டு நிற்கிறேன்!"-- 102
பாபா அப்பொழுது
லக்ஷ்மீ பாயீயிடம் கூறினார், ""நீ ஏன் வீணாக
வருத்தப்படுகிறாய்? நாயின் வயிறு நிறைந்தால் நான் திருப்தியடைகிறேன் என்று
அறிவாயாக! -- 103
"இந்த நாய்க்கு
உயிர் இல்லையா? எல்லாப் பிராணிகளுக்கும் பசி என்பது ஒன்றுதான். அது ஊமை; நான் பேசுகிறேன்.
எனினும், பசியில் ஏதாவது பேதம் உண்டா என்ன? -- 104
"பசியால் வாடும்
எந்த உயிருக்கும் அன்னதானம் செய்பவர் உண்மையில் அதை என்னுடைய வாயில் இடுகிறார்
என்று அறிவாயாக! இது எங்கும், என்றும், பிரமாணம் என்றும்
அறிவாயாக!'' -- 105
இது அன்றாடம்
நடக்கும் சாதாரண நிகழ்ச்சி; ஆயினும் போதனையோ
ஆன்மீக பாஷை. ஸாயீயின் உபதேசபரமான திருவாய்மொழி இவ்வாறே; பிரேமையெனும்
ரசத்தால் பரிபக்குவம் செய்யப்பட்டது. -- 106
மக்கள் அன்றாடம்
பேசும் எளிய மொழியில் பேசியே ஆன்மீகத் தத்துவங்களை உபதேசித்தார் பாபா. யாருடைய
தோஷத்தையும் (குறையையும்) ரகசியத்தையும் சுட்டிக்காட்டாது, ஆன்மீக போதனை அளித்து
சிஷ்யர்களை மகிழ்வித்தார். -- 107 ''
ஸ்ரீமத்
ஸாயீராமாயணம் -- அத் 42 -- சுலோ 98 மிலி 107
இந்த நாமம்
ஸ்ரீஸாயீ ஸஹஸ்ர நாமாவளியில் 90ஆவது நாமம்.
==========================================
OM ABHEDANANDANUBHAVA PRADAYA NAMAH
ॐ
अभेदानन्दानुभवप्रदाय नमः
My humble salutation to Him who grants undivided
Bliss.
=========================================
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 16 தொடர்கிறது……….
*
*
*
===============================================
நந்துவோ, பாலாவோ, மற்றவர்களோ
வீட்டில்லை என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும்
அறிந்திருந்தார்.
61 நடமாடும், பேசும், தெய்வமாகிய
ஸாயீநாதருக்கு ஐந்து ரூபாய் எப்பொழுதாவது தேவைப்பட்டிருக்குமா? இதெல்லாம் 'பிரம்மத்தைக்
காட்டுஃ என்று கேட்டுக்கொண்டு வந்தவருக்காகச் செய்யப்பட்ட லீலையே.
62 வீட்டிற்கு
விஜயம் செய்யும் விருந்தினருக்காகச் செய்யப்படும் இனிப்பான பலகாரத்தையோ அல்லது
சீராவையோ (ரவாகேசரியையோ) வீட்டிலுள்ள அனைவருமே சுவைத்து ஆனந்தமடைகின்றனர் அல்லரோõ
63 அதுபோலவே, தம்
அடியவர்களுக்காகவும் மற்ற எல்லாருக்காகவும் போதனை செய்வதற்காக பாபா கண்டெடுத்த ஒரு
சாக்குதான், பிரம்மத்தை நாடி வந்தவர்õ
64 அவருடைய ஜோபியில்
250 ரூபாய்க்குமேல் ஒரு நோட்டுக்கட்டு இருந்தது; அது பாபாவுக்குத்
தெரியும்.
65 பிரம்மத்தைத் தேடிக்கொண்டு
வந்தவருக்கு அது தெரியாதா என்ன? அதைப்
பார்ப்பதற்கு அவருக்குக் கண்கள் இல்லையா என்ன? நோட்டுக்கட்டு
ஜோபியில் இருந்தபோதிலும் அவருடைய விகற்பமான புத்தியும் தயக்கமும் அவரைத் தடை
செய்துவிட்டன.
66 முழுமுதற்பொருளைக்
கண்ணெதிரே காட்டு, என்று கேட்டுக்கொண்டு வருகிறார்; ஆனால், ஐந்து ரூபாய்
பாபாவுக்குக் (உடனே திருப்பிப் பெறக்கூடிய) கடனாகக் கொடுப்பதற்கு அவருக்கு
மனமில்லைõ
67 ஸாயீ மஹராஜ்
ஸத்தியஸந்தர் என்பது அவருக்குத் தெரியும்; சிறிது நேரத்தில்
திரும்பி வரப்போகும் கடனும் சொற்பமான தொகையேõ ஆயினும், கடன் கொடுக்கலாம்
என்று அவர் மனத்தில் நினைத்தவுடனே, கஞ்சத்தனம் அவரை
ஆட்கொண்டது.
68 ஐந்து ரூபாய்
என்ன பெரிய தொகை அவருக்கு? அதைக்கூடக் கடனாகக் கொடுக்க அவருக்கு மனமில்லை. பாபாவுக்கு
அச் சிறிய தொகையைக் கொடுக்க மனமில்லாத அவர், வாஸ்தவத்தில்
பேராசையின் வடிவமே.
69 அவரே பாபாவிடம்
அன்புகொண்ட, கள்ளங்கபடமற்ற, விசுவாசமுள்ள
அடியவராக இருந்திருந்தால், தம்முடைய கண்ணுக்கெதிரிலேயே இந்தக் கடன் வாங்கிக் கடன்
கொடுக்கும் காட்சியை சகித்துக்கொண்டு இருந்திருக்கமாட்டார்.
70 பிரம்ம ஞான தாஹம்
அவ்வளவு இருந்தவர், கேள்வியைப் புரிந்துகொண்டிருக்க மாட்டாரா? இல்லை, நான் அவ்வாறு
நினைக்கவே இல்லைõ செல்வத்தின் மீதிருந்த மோஹம் அவரை ஆட்கொண்டுவிட்டது.
71 இந்நிகழ்ச்சிகளெல்லாம்
நடந்துமுடிந்த பிறகு, அவர் வெறுமனேயாவது உட்கார்ந்திருந்திருக்கலாம்õ அதுவும் இல்லைõ திரும்பிச்
செல்வதற்கு இருந்த அதீதமான (அதிகமான) அவசரத்தில் பொறுமையை இழந்து சொன்னார், ''ஓ பாபா ஸாயீ, பிரம்மத்தை
எனக்கு சீக்கிரம் காட்டுங்கள்õஃஃ
72 பாபா அப்பொழுது
சொன்னார், ''நீர் இருந்த இடத்திலேயே பிரம்மத்தை உமக்குக் காட்ட நான் பல
முயற்சிகள் செய்யவில்லையா? இதிருந்து நீர் ஒன்றுமே புரிந்துகொள்ளவில்லையா?ஃஃ
73 பிரம்மத்தை
நாடுபவர், பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து
கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனத்தையும் (பிரம்மத்திற்கு)
ஸமர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
74 பிரம்ம ஞானம்
தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்துவிட முடியாது. பாக்கியசாக்கு
நல்லநேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக்கொள்கிறது.
75 எவன்
பற்றறுத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகிவிடுவதைப்பற்றியும் கூடப்
பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன்
எதிலும் பற்றில்லாதவன்.
76 லவலேசமும்
பற்றறுக்கும் சுபாவம் இல்லாதவனுக்கு, பிரம்ம
தத்துவத்தை எவர் எவ்வளவு முழுமையாக உபதேசம் செய்தாலும், அவர் (உபதேசம்
செய்பவர்) வெற்றி பெறுவாரா?
77 உத்தமமான
அதிகாரிகளுக்கு1 பிரம்ம ஞானம் அதிக சிரமமின்றி சுலபமாகக் கிடைத்துவிடும்.
மத்திம அதிகாரிகள் படிப்படியாக சாஸ்திர விதிகளின்படி முன்னேற வேண்டும்.
78 முன்னவருக்குச்
சிறகடித்துப் பறக்கும் பறவையைப்போன்று வேகமாகக் கிடைக்கும்; பின்னவருக்கு
ஏணியின் படிகளில் ஏறுவதுபோன்று மெதுவாகவே நடக்கும். ஆன்மீக அதிகாரமே இல்லாதவர்கள்
பிரம்மத்தை அறிவதற்காகச் செய்யும் முயற்சிகள் வியர்த்தமே.
79 'எது நித்தியம், எது அநித்தியம்
என்னும் விவேகத்தைவிடச் சிறந்த, உன்னதமான வழி
வேறேதும் பிரம்மத்தை அடைவதற்கு இல்லை.ஃ இது ஸத்தியமான வேதாந்த வசனம். ஆயினும்
அம்மாதிரியான விவேகம் எல்லாருடைய சக்திக்கும் உட்பட்டதா என்ன?
80 சிரமமான
அப்பியாஸங்களாலும் கடினமான பயிற்சிகளாலும் உடலை எலும்புக்கூடாகத் தேய்க்கவேண்டும்.
அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும்.
================================================
எல்லாருக்கும் க்ஷேமம்
உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன்
ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ
ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்.
பாபாவின்
சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 16
*
*
*
==================================================
Sai Baba was, as we know, the living and moving
Brahman Incarnate. Then, some one may ask - "Why did He want the paltry
sum of five rupees, and why did He try hard to get it on loan? Really He did
not want that sum at all. He must have been fully knowing, that Nandu and Bala
were absent, and he seems to have adopted this procedure as a test for the
seeker of Brahman. That gentleman had a roll or bundle of currency notes in his
pocket, and if he was really earnest, he would not have sat quiet and be a mere
onlooker, when Baba was frantically trying to get a paltry sum of Rs. five. He
knew that Baba would keep His word and repay the debt, and that the sum wanted
was insignificant. Still he could not make up his mind and advance the sum.
Such a man wanted from Baba the greatest thing in the world, viz., the
Brahma-Jnana! Any other man, who really loved Baba, would have at once given
Rs. five, instead of being a mere onlooker. It was otherwise with this man. He
advanced no money nor did he sit silent, but began to be impatient, as he was
in a haste to return and implored Baba saying-
"Oh Baba, please show me the Brahman soon.
" Baba replied - "Oh my dear friend, did
you not understand all the procedure that I went through, sitting in this
place, for enabling you to see the Brahman? It is, in short this. For seeing
Brahman one has to give five things, i.e. surrender five things viz. (1) Five
Pranas (vital forces), (2) Five senses (five of action and five of perception),
(3) mind, (4) intellect and (5) ego. This path of Brahma- Jnana of self-realization
is 'as hard as to tread on the edge of a razor'. Sai Baba then gave rather a
long discourse on the subject, the purport of which is given below
===================================================
Bow to Shri Sai -- Peace be to all
To be continued............
வாசகர்களுக்கு
என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த
ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின்
புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்¬.-- அத்தியாயம் 16 தொடர்கிறது.........
சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/
என் மகனே! மகளே!
நான் சத்திய தேவன். பொய் சொல்ல மாட்டேன். முழுமையான சரணாகதி அடைந்து நீ கரம்
குவித்தால் ஓடி வரும் நாராயணன் நான். உன் விதியை அவ்வப்போது மாற்றிக்
கொண்டிருக்கும் கலியுக பிரம்மாவும் நானே! உனது இன்னல்களை அழிக்கும் ஈசனும் நானே!
கோபத்தின் போது வெளிப்படும் அக்கினியும், துக்கத்தின் போது
வெளியாகும் கங்கையும் நானே! உன் நாசியில் வெளிவரும் வாயுவும் நானே! எங்கும்
எதிலும் உனக்காக, உன் சார்பில் இருக்கும் அன்புத் தந்தை நான். நீ அமைதியாக
இரு.. என் பெயரை சதா உச்சரித்துக் கொண்டிரு.. உனக்குத் தேவையானதை செய்வேன். கடைசி
வரை உன் கூடவே இருந்து துணை செய்வேன். - ஸ்ரீ சாயியின் குரல்.
/
/
/
“ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ
நமோ
ஜெய ஜெய சாயி நமோ
நமோ
சற்குரு சாயி நமோ
நமோ”.
"I say things here. There they happen."
=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH
Sai Samarth...........Shardha Saburi
Bow to Shri Sai - Peace to be all
************************************************************
ஸ்ரீஸத்குரு
ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம்
உண்டாகட்டும்
தெளிவு குருவின்
திருமேனி காண்டல்
தெளிவு குருவின்
திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின்
திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு
சிந்தித்தல் தானே
=
=
=
''ஜெய் ஸ்ரீ
ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ்
கீ ஜெய்"
ஓம் நமோ பகவதே
சாயிநாதாய
அமிர்த வாக்ய
வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ
நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ
சற்குரு நாதா
சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா
சரணம்! சரணம்!
அற்புத ஒளியே
சரணம்! சரணம்!
அன்பே அருளே
சரணம்! சரணம்!
நித்திய சாயி
சரணம்! சரணம்!
நிர்மல வடிவே
சரணம்! சரணம்!
பொற்பதம்
பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா
சரணம்! சரணம்!
======================================================================================================================================
அன்புடன் சகோதரன்
விக்னசாயி.
======================================
No comments:
Post a Comment