Followers

Tuesday, February 18, 2020



பாபா அளித்த உதீயைப் (விபூதியைப்) பூசிக்கொண்டவுடன் பிசாசுகள் ஓட்டம்பிடித்தன. ஆசீர்வாதத்தால் பீடைகள் அகன்றன. கிருபையான பார்வையினால் சகல தீங்குகளும் விலக்கப்பட்டன. ஆகவே, அவரை தரிசனம் செய்ய மக்கள் ஓடி வந்தனர்.........சத்சரித்திரம் தொடர்கிறது.................



அவருக்குக் கெட்டகாலம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் சீராக ஒரே மாதிரியாக அமையுமோ? நவக்கிரஹங்கள் விளைவித்த சுழற்சியில் மாட்டிக்கொண்டார். யார்தான் விதியின் பயனை அனுபவிக்காது தப்பிக்க முடியும்? அவர் ஆரம்பகாலத்தில் தாணே ஜில்லாவில் வேலை செய்தார். பிறகு ஜவ்ஹர் ஜில்லாவில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு அவர் ஆபீஸராக உத்தியோகம் பார்த்தார். பிறகு வேலையே இல்லாமல் போய்விட்டது.
உத்தியோகம் என்பது தாமரை இலையின்மேல் ததும்பும் நீர்த்துளி அன்றோõ அது எவ்வாறு பழைய இடத்துக்கே திரும்பும்? அந்த சமயத்தில் தீவிரமாகப் பிரயத்தனங்கள் செய்தார். வருடாவருடம் நிதிநிலைமை படிப்படியாக க்ஷீணமடைந்தது (நசித்தது). ஆபத்துகள் வரிசையாகத் தொடர்ந்தன. குடும்பநிலைமை சகிக்கமுடியாதபடி ஆகிவிட்டது. ஏழு ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. ஒவ்வோர் ஆண்டும் சிர்டீக்குச் சென்று பாபாவிடம் தம்முடைய துன்பங்களைப்பற்றி ஒப்பாரி வைத்தார். இரவுபகலாக பாபாவை வணங்கினார். ஸாயீகிருபையாகிய பிரசாதத்தைப் பெற்ற அவருக்கு நல்லகாலம் பிறந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்றார். பழைய வறுமை பறந்தோடியது. .........


தரிசனமாத்திரத்தாலோ, கிருபையுடன் நோக்குவதாலோ, கையால் தொடுவதாலோ வியாதிகள் குணமானதை பக்தர்கள் அனுபவத்தில் கண்டனர். வேறெதிலும் நாட்டமின்றி சரணாகதி செய்ததால் பக்தர்கள் பரம மங்கள சுகங்களை அடைந்தனர். எல்லாருடைய மனோகதியையும் (எண்ண ஓட்டம்) அறிந்துகொண்டு அவர்களுடைய விருப்பங்களையும் கோரிக்கைகளையும் பாபா நிறைவேற்றிவைத்தார். அவரளித்த உதீயைப் (விபூதியைப்) பூசிக்கொண்டவுடன் பிசாசுகள் ஓட்டம்பிடித்தன. ஆசீர்வாதத்தால் பீடைகள் அகன்றன. கிருபையான பார்வையினால் சகல தீங்குகளும் விலக்கப்பட்டன. ஆகவே, அவரை தரிசனம் செய்ய மக்கள் ஓடி வந்தனர்..............


சாயியின் சரித்திரம் பாக்கியம் அளிப்பது. அவருடைய நித்திய நடவடிக்கைகள் பாக்கியம் அளிப்பவை. அவருடைய செய்கைகளோ அதியற்புதமானவை; புரிந்துகொள்ளமுடியாதவை; கிரமமாக விவரிக்க முடியாதவை. அவருடைய உண்மையான வாழ்க்கைச் சரித்திரம் ஆழங்காணமுடியாதது;...................................... ஸாயீயின் லீலைகள் எண்ணத்திற்கும் செயல்/ விளைவு சிந்தனைக்கும் அப்பாற்பட்டவை. அவரைத் தவிர வேறு யாரால் அவற்றை விவரிக்க முடியும்? நான் ஒரு கருவி மாத்திரமே அல்லேனோ? அவரே என்னைப் பேசவைப்பார். எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்


''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் என் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--Baba


Spreading the life and teachings of Shri Shirdi Saibaba.......


Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.


Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.


Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait. .......... Think positive and positive things will happen.................


வேண்டத் தக்கது அறிவோய் நீ,


வேண்ட முழுவதும் தருவோய் நீ,


வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ


வேண்டி என்னைப் பணிகொண்டாய்!


வேண்டி நீ யாது அருள் செய்தாய்,


யானும் அதுவே வேண்டின் அல்லால்


வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,


அதுவும் உன் தன் விருப்பு அன்றே!.....


Who so ever puts his feet on SHIRDI soil, his sufferings would come to an end, the wretched and miserable would rise into plenty of joy and happiness, as soon as they climb the steps of DWARAKAMAYEE.


ஸாயீயை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் ஸாயீக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரஸங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.
எல்லாருக்கும் எப்போதும் க்ஷேமம் உண்டாகட்டும்


ஸ்ரீ ஸாயீயின் பொற்கமலப் பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். ஸம்ஸார ஸாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெறும் வகையாக இக் கதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான ஸாயீயே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா..


Baba comforted us saying, "Alla Accha Karega (God will do good)."


ஒம் குரு வாழ்க, குரு நன்றாய் வாழ்க, குருவே துணை...


''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"


இனிய சுபகுருதின வணக்கம் அன்புறவுகளே!!!..


ஸ்ரீ சிர்டீ சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது……….


Please see below for English version. Tq


வாசகர்களுக்கு என் பிரார்த்தனை இதுவே, ''வாருங்கள், வந்து இந்த ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். சான்றோர்களுடன் சேர்ந்துகொண்டு சதா ஸாயீயின் புனிதமான கதைகளைக் கேட்பவர் மஹாபாக்கியசாலிகள்...சாயி ஸ்த்சரித்திரம் அத்தியாயம் 26
தமிழில் தொடர்கிறது……….
*
*
*
================================================================
இப்பொழுது அதே போன்ற இன்னொரு நிகழ்ச்சிபற்றிச் சொல்கிறேன்; நிறைந்த மனத்துடன் கேளுங்கள். கட்டவிழ்ந்து தெறித்தோடிய பக்தர்களின் மனத்தை பாபா எவ்வாறு அடக்கி அமைதியுறச் செய்தார் என்பதை இக்காதை காட்டும்.


114 கோபால் ஆம்ப்டேகர் நாராயண் என்றொரு சிறந்த பக்தர் பூனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.


115 அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் கலால் வரி இலாகாவில் (உஷ்ஸ்ரீண்ள்ங் ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற்) உத்தியோகம் பார்த்துவந்தார். பத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு உத்தியோகத்தை விட்டுவிட்டு, வேறு வேலை ஏதும் பாராமல் வீட்டிலேயே இருந்தார்.


116 அவருக்குக் கெட்டகாலம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் சீராக ஒரே மாதிரியாக அமையுமோ? நவக்கிரஹங்கள் விளைவித்த சுழற்சியில் மாட்டிக்கொண்டார். யார்தான் விதியின் பயனை அனுபவிக்காது தப்பிக்க முடியும்?


117 அவர் ஆரம்பகாலத்தில் தாணே ஜில்லாவில் வேலை செய்தார். பிறகு ஜவ்ஹர் ஜில்லாவில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு அவர் ஆபீஸராக உத்தியோகம் பார்த்தார். பிறகு வேலையே இல்லாமல் போய்விட்டது.


118 உத்தியோகம் என்பது தாமரை இலையின்மேல் ததும்பும் நீர்த்துளி அன்றோõ அது எவ்வாறு பழைய இடத்துக்கே திரும்பும்? அந்த சமயத்தில் தீவிரமாகப் பிரயத்தனங்கள் செய்தார்.


119 ஆனால், அவருக்கு அதிருஷ்டமில்லைõ ஆகவே அவர் தமது சுதந்திரத்தைக் காத்துக் கொள்வதென்று முடிவு செய்தார். துன்பத்திற்குப் பின் துன்பம் தொடர்ந்தது; அவர் எல்லாவிதத்திலும் சோர்வடைந்துவிட்டார்.


120 வருடாவருடம் நிதிநிலைமை படிப்படியாக க்ஷீணமடைந்தது (நசித்தது). ஆபத்துகள் வரிசையாகத் தொடர்ந்தன. குடும்பநிலைமை சகிக்கமுடியாதபடி ஆகிவிட்டது.


121 ஏழு ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. ஒவ்வோர் ஆண்டும் சிர்டீக்குச் சென்று பாபாவிடம் தம்முடைய துன்பங்களைப்பற்றி ஒப்பாரி வைத்தார். இரவுபகலாக பாபாவை வணங்கினார்.


122 1916 ஆம் ஆண்டில் அவருடைய துன்பங்களும் வாழ்க்கையின்மீது வெறுப்பும் உச்சநிலையை எய்தின. புனிதமான சிர்டீயிலேயே பிராணனை விட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்தார்.


123 அச்சமயத்தில் அவர் குடும்பத்துடன் சிர்டீயில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். ஓரிரவு என்ன நடந்ததென்று கேளுங்கள்.


124 தீக்ஷிதர் வாடாவுக்கு எதிரே நிறுத்தியிருந்த ஒரு மாட்டுவண்டியின்மேல் ஆம்ப்டேகர் உட்கார்ந்திருந்தார். மனத்துள்ளே கட்டுக்கடங்காத எண்ணங்கள் ஓடின.


125 ஆர்வம் இழந்துபோய் மனமுடைந்து வாழ்க்கையையே வெறுத்தார். அவர் எண்ணினார், ''போதும், போதும், இந்தத் துன்பங்கள். எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.ஃஃ


126 இவ்வாறு நினைத்து வாழ்க்கையையே வெறுத்து ஆம்ப்டேகர் கிணற்றில் குதித்துவிடத் தயாரானார்.


127 அவர் நினைத்தார், ''யாரும் அருகில் இல்லை. அமைதியான இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு என்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வேன். துன்பங்களி­ருந்தும் துக்கத்தி­ருந்தும் விடுபடுவேன்.ஃஃ


128 தற்கொலை செய்துகொள்வது மஹாபாவம்; ஆயினும் அவர் இந்த உறுதியான முடிவை எடுத்தார். ஆனால், சூத்ரதாரியான ஸாயீ பாபா இந்த மூடத்தனமான செயலைத் தடுத்துவிட்டார்.


129 ஆம்ப்டேகர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு மிக அருகில், உணவுவிடுதி முதலாளியான ஸகுண்மேரு நாயக்கரின் வீடு இருந்தது. ஸகுண், பாபாவின் நெருங்கிய பக்தர்; சேவகர்.


130 ஸகுண் திடீரென்று வீட்டின் வாயிற்படிக்கு வந்து, உடனே ஆம்ப்டேகரை வினவினார், ''அக்கல்கோட் மஹராஜின் இந்தப் போதியை (புராணம்) நீர் எப்பொழுதாவது வாசித்திருக்கிறீரா?ஃஃ


131 ''எங்கே? பார்க்கிறேன்; பார்க்கிறேன்õஃஃ என்று சொல்­க்கொண்டே ஆம்ப்டேகர் ஆர்வத்துடன் அப் புத்தகத்தைக் கையில் வாங்கிக்கொண்டார். மேலெழுந்தவாரியாக ஒரு முறை புரட்டினார். பிறகு, நடுவில் ஏதோ ஒரு பக்கத்தி­ருந்து படிக்க ஆரம்பித்தார்.


132 கர்மமும் தர்மமும் நன்கு பிணைந்ததுபோல (அதிருஷ்டவசமாக), அவர் எடுத்துப் படிக்க ஆரம்பித்த பகுதி அவருடைய அந்தரங்கமான எண்ணங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்படி இருந்தது; மின்னலைப்போல் அவருடைய மனத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.


133 ஆம்ப்டேகர் தற்செயலாகப் படிக்க நேர்ந்த கதையை இப்பொழுது விவரிக்கிறேன்; எல்லாரும் கேளுங்கள். இந்நூல் பெரிதும் விரிந்துவிடும் என்ற பயம் காரணமாகச் சுருக்கமாக சாராம்சத்தை மட்டும் சொல்கிறேன்; கேளுங்கள்.


134 அகமுக நிட்டையில் சிறந்த ஞானியான மஹராஜ் அக்கல்கோட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவருடைய பக்தர்களில் ஒருவர் கடுமையான வியாதிகளால் பீடிக்கப்பட்டுப் பொறுக்கமுடியாத அளவிற்குத் துன்பத்திலாழ்த்தப்பட்டார்.


135 வியாதிகளி­ருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் அவர் அக்கல்கோட் மஹராஜருக்குப் பல தினங்கள் சேவை செய்தார். துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனம் கலங்கி சோகத்திலாழ்ந்தார்.


136 ஆத்மஹத்தி (தற்கொலை) செய்துகொள்வது என்று நிர்ணயம் செய்துகொண்டு, இரவு நேரத்தில் சுற்றிலும் நிசப்தமாக இருந்தபோது ஒரு கிணற்றிற்குச் சென்று அதனுள் குதித்துவிட்டார்.


137 திடீரென்று அக்கல்கோட் மஹராஜ் அங்கே தோன்றினார். தம்முடைய கைகளாலேயே பக்தரை வெளியே கொண்டுவந்து போட்டார்; உபதேசமும் செய்தார். ''எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீரவேண்டும்.--


138 ''நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வ­யாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?--


139 ''மேலும், துன்பத்தையும் வ­யையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும். ஆகவே இந்தத் துன்பத்தை இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே.ஃஃ


140 தம்முடைய மனநிலைக்கு மிகப் பொருத்தமான இக் கதையைப் படித்த ஆம்ப்டேகர் மெய்சி­ர்த்துப்போனார். உடனே, 'எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் சமூகத்தில் நாம் இக் காரியத்தைச் செய்யத் துணிந்தோமேஃ என்று நினைத்து மனம் நொந்தார்.


141 ஆம்ப்டேகருடைய மனத்திற்கு, 'விதிக்கப்பட்டதை அனுபவித்தே தீர வேண்டும்ஃ என்பது நன்கு விளங்கியது. சரியான சமயத்தில் அதுவே குறிப்பாக அருளப்பட்டது. தாம் செய்ய நினைத்த சாகசச் செயல், தமக்கு நன்மை தரக்கூடியதன்று என்பதும் தெளிவாகியது.


142 அவர் படித்த கதை, உண்மையில் வானத்தி­ருந்து தோன்றிய அசரீரியே. செயற்கரிய செயலான இந்த லீலையைக் கண்ட ஆம்ப்டேகருக்கு ஸாயீ பாதங்களில் நம்பிக்கையும் விசுவாசமும் மேலும் பலப்பட்டன.


143 சற்றும் எதிர்பாராத வகையில், ஸகுண்மேரு நாயக்கரின் வாய்மொழி மூலமாகவும் போதி புத்தகத்தின் மூலமாகவும் வந்த எச்சரிக்கை, கொஞ்சம் தாமதப்பட்டிருந்தாலும் அவருடைய ஜன்மமே அழிந்துபோயிருக்கும்.


144 அவர் நினைத்தார், ''என்னுடைய உயிரே போயிருக்கும். என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் தீங்கும் என் மனைவிக்குத் தாங்கொணாத கஷ்டங்களும் விளைந்திருக்கும். இகத்திலும் பரத்திலுமாக இரட்டை நஷ்டம் அடைந்திருப்பேன்.--


145 ''ஸகுண்மேரு நாயக்கரின் மனத்தைத் தூண்டிவிட்டுப் போதியைக் கருவியாக வைத்துத் தற்கொலைத் திட்டத்தி­ருந்து என்னை மனம் மாற வைத்திருக்கிறார் பாபா.ஃஃ


146 அவ்வாறு நிகழ்ந்திராவிட்டால், அந்த ஏழை (ஆம்ப்டேகர்) வீணாக மரண மடைந்திருப்பார். ஆனால், ஸாயீயைப் போன்ற ரட்சகர் இருக்கும்போது சாவு எப்படி நெருங்கும்?


147 ஆம்ப்டேகரின் தந்தை அக்கல்கோட் சுவாமியின் சிறந்த பக்தராக விளங்கினார். இவ்வனுபவத்தின் மூலமாக, அவ்வழிபாடு தொடர்ந்து அதுமாதிரியாகவே செய்யப்பட வேண்டும் என்பதையும் பாபா அறிவுறுத்தினார்.


148 இவ்விதமாகக் காலப்போக்கில் எல்லாம் நல்லபடியாக நடந்தன. கெட்டகாலம் கழிந்தது. ஆம்ப்டேகர் பெருமுயற்சி செய்து ஜோதிடம் கற்றுக்கொண்டார். அதற்கான பலனும் கிடைத்தது.


149 ஸாயீகிருபையாகிய பிரசாதத்தைப் பெற்ற அவருக்கு நல்லகாலம் பிறந்தது. ஜோதிட சாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்றார். பழைய வறுமை பறந்தோடியது.


150 குருவினிடம் பிரேமை வளர்ந்தது. செல்வச் செழிப்பும் சந்தோஷமும் பின்தொடர்ந்தன. குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் நிலவின. எல்லாவிதத்திலும் ஆனந்தமுடையவராக வாழ்ந்தார்.


151 ஒன்றைவிட மற்றொன்று சுவையில் மீறும் இம்மாதிரியான லீலைகள் எண்ணிலடங்கா. அவையனைத்தையும் சொல்லப் புகுந்தால், கிரந்தம் (நூல்) மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும். ஆகவே, சாரத்தை மட்டும் சொல்கிறேன்.


152 ஹேமாட் ஸாயீ பாதங்களில் சரணடைகிறேன். பாபா விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை (புத்தகத்தை) சாமாவுக்கு அன்பளிப்பாகத் தந்த சுவையான நிகழ்ச்சியை அடுத்த அத்தியாயம் விவரிக்கும்.


153 சாமா 'வேண்டா, வேண்டாஃ என்று சொன்னபோதிலும், அவர் மீதிருந்த அளவற்ற பிரேமையால் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் சுந்தரமான மஹாத்மியத்தை வர்ணித்த பின், அதை சாமாவின்மீது பாபா திணித்தார்.


154 சிஷ்யனுக்கு இச்சை இல்லாம­ருந்த போதிலும், அநுக்கிரஹம் செய்யக்கூடிய சமயம் வந்தபோது உபதேசம் அளித்த பாபாவின் கருணையை அடுத்த அத்தியாயத்தில் காணலாம். அக் கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.


155 அத்தியாயத்தின் முடிவில், ஸத்குரு உபதேசம் செய்யும் முறை எவ்வளவு விசித்திரமானது என்பதும் விளங்கும். செவிமடுப்பவர்களேõ கவனத்துடன் கேளுங்கள்.


156 மங்களங்களுக்கெல்லாம் மங்களமான ஸாயீ தலைசிறந்த குணங்களின் சுரங்கம். அவருடைய புனிதமான கதையைக் கேட்கும் வாய்ப்பை பாக்கியவான்களே பெறுகின்றனர்õ


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியத்தில், 'குலகுருவிடம் விசுவாசத்தை நிலைபெறச் செய்த செம்மை - காக்காய்வ­ப்பு நோய் தீர்த்த அருள் - தற்கொலை முயற்சியைத் தடுத்தாட்கொண்ட கருணைஃ என்னும் இருபத்தாறாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.


================================================
'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது…………………
=================


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது……………………………………….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.


ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.
பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
Please see below for English version. Tq
CHAPTER 26
*
*
*


============================================


Mr. Ambadekar.......................


Mr. Gopal Narayan Ambadekar of Poona was a devotee of Baba. He served for ten years in the Abkari department in the Thana District and in Javhar state, from where he had to retire. He tried to get some other job, but he did not succeed. He was overtaken by other calamities and his condition grew from bad to worse. He passed 7 years in this condition, visiting Shirdi every year and placing his grievance before Baba. In 1916 his plight became worst and be decided to commit suicide in Shirdi. So he came there with his wife and stayed for two months. One night while sitting in a bullock cart in front of Dixit's Wada, he resolved to end his life by throwing himself into a well close by. He proposed to do one way but Baba wished to do something else. A few paces from this place, there was a hotel and its proprietor Mr. Sagun, a devotee of Baba, came out and accosted him thus - "Did you ever read this Akkalkotkar Maharaja's life?"


Ambadekar took that book from Sagun and began to read it. Casually, or we may say providentially he came across a story which was to this effect. - During the life time of Akkalkotkar Maharaj a certain devotee suffered very much from an incurble disease and when he could endure the agony and pain no longer, be became desperate and to end his miseries threw himself one night into a well. Immediately the Maharaj came there and took him out with his own hands and advised him thus - "You must enjoy the fruit - good or bad - of your past actions; if the enjoyment be incomplete, suicide won't help you. You have to take another birth and suffer again; so instead of killing yourself, why not suffer for some time and finish up your store of the fruit of your past deeds and be done with it once and for all?"


Reading this appropriate and timely story, Ambadekar was much surprised, and moved. Had he not got Baba's hint through the story, he would have been no more. On seeing Baba's all-prevasiveness and benevolence, his faith in Him was confirmed, and he became a staunch devotee. His father was a devotee of Akkalkotkar Maharaj and Sai Baba wanted him to walk into his father's footsteps and continue his devotion to Him. He then got Sai Baba's blessings and his prospects began to improve. He studied astrology and gained proficiency in it and thereby improved his lot. He was able to earn sufficient money and passed his after-life in ease and comfort. Bow to Shri Sai - Peace be to all
Bow to Shri Sai -- Peace be to all


=======================
To be continued............
===============================================


Bow to Shri Sai -- Peace be to all


To be continued............


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்õ ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, ஸாயீ பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ ஸமர்த்த ஸாயீ ஸத் சரித்திரம்ஃ என்னும் காவியம் தொடர்கிறது.....................................


ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.


சாயி ஸ்த்சரித்திரம் தொடர்கிறது………..............................................பாபாவின் சங்கல்ப்ப படி தொடர்ந்து வருவார்
/
/
/


/
/
/


ஓம் சாயி நமோ நமோ
ஸ்ரீ சாயி நமோ நமோ
ஜெய ஜெய சாயி நமோ நமோ
சற்குரு சாயி நமோ நமோ”.


"I say things here. There they happen."


=
=
OM SAI NAMO NAMAH
SHREE SAI NAMO NAMAH
JAI JAI SAI NAMO NAMAH
SADGURU SAI NAMO NAMAH


Sai Samarth...........Shardha Saburi


Bow to Shri Sai - Peace to be all


************************************************************
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்


தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
=
=
=


''ஜெய் ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜெய்"


ஓம் நமோ பகவதே சாயிநாதாய
அமிர்த வாக்ய வர்ஷாய
சகல லோக பூஜிதாய
சர்வ தோஷ நிவாரணாய
ஷிரிடி வாசாய
சாயிநாதாயதே நமஹ


சற்குரு நாதா சரணம்! சரணம்!
சச்சிதா னந்தா சரணம்! சரணம்!
அற்புத ஒளியே சரணம்! சரணம்!
அன்பே அருளே சரணம்! சரணம்!
நித்திய சாயி சரணம்! சரணம்!
நிர்மல வடிவே சரணம்! சரணம்!
பொற்பதம் பணிந்தோம் சரணம்! சரணம்!
புண்ணிய ரூபா சரணம்! சரணம்!


Twameva mata cha pita twameva
Twameva bandhushcha sakha twameva
Twameva vidya dravinam twameva
Twameva sarvam mama deva deva
Twameva sarvam Sai deva deva....


You alone are my mother and my father,
You alone are my friend and my beloved companion,
You alone are my knowledge and my wealth,
O Supreme Lord, you alone are everything for me.


Sometimes Sai removes things from our lives for our own protection. Trust in Him.


Just because you can't see the air, doesn't mean you stop breathing. Just because you can't see Sai doesn't mean you stop believing.


Sai has perfect timing; never early, never late. It takes a little patience and it takes a lot of faith but it's worth the wait.


Think positive and positive things will happen.................


Saying sorry doesn't solve the problem. It's what you do after that truly counts.


======================================================================================================================================அன்புடன் சகோதரன் விக்னசாயி.


No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...