Followers

Saturday, February 22, 2020

மதவேறுபாடுகளை கடந்து மன்னாரில் குவிந்த இலட்சக்கணக்கான மக்கள்''''


பாடல் பெற்ற தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினம் நேற்று இரவு சிறப்பாக இடம்பெற்றதுடன் இந்து சிங்கள மக்கள் என இலட்சக்கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல லட்சக்கணக்கான பக்தர்களுடன் சிவராத்திரி தினம் சிறப்புற இடம்பெற்றது.
குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு ,கிளிநொச்சி பகுதிகளில் இருந்தும்,நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அதேவேளை சிங்கள பகுதிகளில் இருந்தும் அனேக பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம் பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள் மதம் சார் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் இரவு பூசையும் இடம் பெற்றது.
மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, நிகழ்வு இடம் பெறும் பிரதேசம் முழுவதும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் 8 இலட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
==================================================

No comments:

Post a Comment

  அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி...