யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும். நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர்..................
Control your desires. Do not waste money, time, food and energy. - Baba
* யாரிடமும் அதிகம் பேச வேண்டாம். பத்து வார்த்தை ஒருவர் பேசினால் பதிலுக்கு ஒரு வார்த்தை பேசினால் போதும்.
* நமக்கு மனிதப்பிறவி கிடைத்தது மகத்தான வாய்ப்பு. இதை உணர்ந்தவர்களே பயனுள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர்.
* கடவுளைத் தரிசிக்க உலகில் பலரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.
* பிறர் துன்பம் கண்டு மகிழ்வது பெரும்பாவம். பிறர் இன்பம் கண்டு மகிழ்வது பெரும்புண்ணியம்.
* பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவி செய்யுங்கள். வாழ்வின் நெருக்கடி நேரத்திலும் விவேகமாக நடந்து கொள்ளுங்கள்.
ஷீரடி பாபா
''உமது புத்தியில் அகங்காரம் ('நான்ஃ என்னும் செருக்கு) அமர்ந்திருக்கிறது. அதனால்தான், நீர் உம்மை அபராதியாகக் (குற்றவாளியாகக்) கருதுகிறீர். 'செயல் புரிபவன் நானில்லைஃ என்னும் மனப்போக்கை ஏற்றுக்கொள்ளுங்கள். உம்முடைய உபாதிகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். --
''புண்ணியங்கள் அனைத்தும் தமதாக இருக்கவேண்டும் என்றும், பாவங்கள் எதுவும் தமதாக இருக்கக்கூடாது என்றும் மக்கள் ஏன் நினைக்கின்றனர்? அவை இரண்டின் பிரதாபமும் (வீரமும்) சரிசமானமே. ஆகவே, 'நான் செய்கிறேன்ஃ என்னும் எண்ணத்தை விடுக.--
''நீர் என்னைப் பேட்டி காணவேண்டும் என்று என்னுடைய மனத்தில் எண்ணம் விழுந்ததால்தான், அந்தத் தேங்காய் உம்முடைய கைகளில் வந்து விழுந்தது. இச் சொல் முக்காலமும் ஸத்தியம்.--
''நீங்களும் எனது குழந்தைகளே. உங்களுடைய வாய்களில் இடப்பட்ட தேங்காயை உங்களுக்குத் தெரியாமலேயே எனக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள்õ அது என்னிடம் வந்துசேர்ந்துவிட்டது என்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்ளுங்கள்.ஃஃ
இவ்வாறு பாபாவால் சமாதானப்படுத்தப்பட்ட பின்பே புண்டலீக ராவின் மனம் சாந்தமடைந்தது. சோகம் கொஞ்சங்கொஞ்சமாக விலகியது.
தேங்காய் நஷ்டம் என்னவோ ஒரு சாக்குப்போக்குதான். பாபாவின் உபதேசத்தால், அவருடைய நடுங்கிக்கொண் டிருந்த மனம் மலர்ச்சி அடைந்தது. 'நான்ஃ என்னும் செருக்கால் சூழப்பட்டருந்த ஐவரும் அச் செருக்கை விடுத்து, தோஷம் (குற்றம்) நீங்கியவர்கள் ஆயினர்.
'நான்ஃ என்னும் செருக்கை மனம் விடுத்தால், அதற்கு ஆன்மீகவாழ்வில் முன்னேற அதிகாரம் கிடைக்கிறது. பிறவிக்கடலையும் இயல்பாகக் கடந்துவிடலாம். இதுவே இக் கதையின் சாரம்.
==============================
வீடாயிரம் நாள்...
பள்ளிக்கூடாயிரம் நாள்....
நான் போகும்
நாடாயிரம் நாள்....
எனதிந்த பாடு
இன்னும்
என்னாயிரம் நாள்....?
நானறியேன் பராபரமே....................இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் . இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.................. .......சகோ
கடவுள் 🙏
கடவுள் அனைவரிடத்திலும் இருக்கிறார்.அவர் நமக்கு கொடுப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து கடவுள் கொடுப்பதை பக்தி சிரத்தையோடும் அடக்கத்தோடும் வாங்கிக் கொள்ளவேண்டும்.
---ஷீரடி சாய்பாபா
அன்புறவுகள்... எல்லோர்க்கும்.... என்றென்றும் அன்புடன்.! இனிய காலை மதிய மாலை இரவு வணக்கம்! உரித்தாகுக…ஓம் நமோ சச்சிதானந்த
சாய்நாதாய நமக.
சாய்நாதாய நமக.
🌹Om Sri Sairam... 🌹
================================
Control your desires. Do not waste money, time, food and energy. - Baba
===================================
No comments:
Post a Comment